மணவாட்டி மரம் திரும்ப அளிக்கப்படுதல் Jeffersonville, Indiana, USA 62-0422 1நன்றி சகோதரன் ஆர்மன் அவர்களே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. காலை வந்தனம், நண்பர்களே. விலையேறப் பெற்ற நமது ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மகத்தான உயிர்த்தெழுதலை ஆராதிக்கும் பொருட்டு, இந்த அருமையான ஈஸ்டர் காலையன்று மீண்டும் கூடாரத்திற்கு வந்துள்ளதை சிலாக்கியமாகக் கருதுகிறேன். 2இதை நான் கூற விரும்புகிறேன்... இதுவரை நான் கேட்ட நமது மேய்ப்பரின் செய்திகள் அனைத்திலும், இன்று அதிகாலை அவர் அளித்த செய்தி மிகச் சிறந்தது. நான் வீடு திரும்பி என் மனைவியிடம், “அன்பே, நீ நேரத்தோடு படுக்கையை விட்டு எழுந்திருக்காததனால், அதை இழந்துவிட்டாய்” என்றேன். உயிர்த்தெழுதலைக் குறித்து என் வாழ்க்கையிலேயே நான் கேட்ட சிறந்த பிரசங்கமாகும் அது. இன்று காலை நமது மேய்ப்பர் உயிர்த்தெழுதலைக் குறித்து அளித்த பிரசங்கத்தைக் காட்டிலும் சிறந்த பிரசங்கத்தை இதுவரை நான் கேட்டதேயில்லை. அது திகைக்க வைக்கும் ஒரு பிரசங்கமாக இருந்தது. எல்லாமே சரியாக அமைந்திருந்தது. தேவனுடைய அபிஷேகம் ஒரு மனிதனை ஆட்கொள்ளும்போது (பாருங்கள்?) அது ஏதோ ஒன்றைச் செய்கிறது என்பதையே இது காண்பிக்கிறது. இவ்வளவு அருமையான மேய்ப்பரை தேவன் நமக்குத் தந்தருளினதற்காக நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். 3உங்கள் ஒவ்வொருவருக்கும். இப்பொழுது நன்றி கூற விரும்புகிறேன். நாங்கள் சிறிது காலம் இங்கு இருந்து வந்திருக்கிறோம் (வெவ்வேறு சமயங்களில்; சென்று மீண்டும் வந்து). இப்பொழுது நான் ஊழியத்திற்காக வெளிநாடு செல்லப் போகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த வாரம் நான் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள க்ரீ இந்தியர்களிடம் சென்று, அங்கிருந்து ஃபோர்ட் செயின்ட் ஜானுக்கு செல்லவிருக்கிறேன். கர்த்தருக்குச் சித்தமானால் இந்தக் கோடையில் மேற்கு கடற்கரைக்குச் சென்று, அலாஸ்காவிலுள்ள ஆன்கரேஜுக்கு செல்வேன். அங்கிருந்து, வரும் குளிர் காலத்தில், ஆப்பிரிக்காவுக்கும் உலகிலுள்ள மற்ற இடங்களுக்கும் போக முடியுமா என்று அங்குள்ளவர்கள் என்னிடம் ஜாடையாக தெரியப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறேன். எனவே மீண்டும் இக்கூடாரத்திற்கு திரும்ப வருவதற்கு எனக்கு சிறிது காலம் பிடிக்கும். அது ஆகஸ்ட் மாதம், அல்லது இலையுதிர் காலத்தில் எப்பொழுதாவது இருக்கும். உங்களுடைய அருமையான ஒத்துழைப்புக்காகவும், நீங்கள் செய்த எல்லாவற்றிற்காகவும் உங்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். இந்த காலை நேரங்களில், ஜனங்களைக் கொள்ளும் அளவிற்கு போதுமான இடம் இராதபடியால் வருந்துகிறோம். நாங்கள் கட்டிடப் பணியில் தற்பொழுது ஈடுபட்டு, ஒரு பெரிய கூடாரத்தைக் கட்ட முயன்றுவருவது உங்களுக்குத் தெரியும், அப்பணியை ஒருக்கால் அவர்கள் உடனடியாக ஆரம்பித்து, அதை கட்டத் தொடங்கலாம். 4உங்களுடைய வெகுமதிகளுக்காகவும், பிறந்த நாள், ஈஸ்டர் வாழ்த்துக்களுக்காகவும், நீங்கள் பில்லிக்கும், எனக்கும் சகோ. உட் அவர்களுக்கும் கொடுத்த வெகுமதிகளுக்காகவும், நன்றி சொல்ல விரும்புகிறேன். அதை நான் பாராட்டுகிறேன். ஒவ்வொருவரும் இங்கு வந்து, “நாங்கள் சகோதரன். பிரன்ஹாமைக் காண விரும்புகிறோம்” என்றோ, அல்லது பில்லியிடம், “உங்கள் தந்தையைக் காண விரும்புகிறோம்” என்றோ கூறுகின்றனர்... அது எவ்வளவு பிரயாசமாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியவில்லை. “அதெல்லாம் ஏற்கனவே முடிந்து விட்டது” என்று அவர்களிடம் கூறப்படுகின்றது. ஒரு சிலரை மாத்திரமே காண முடிகின்றது. அவ்வளவுதான் முடிகின்றது என்பது நம்மை சங்கடமான நிலையில் ஆழ்த்திவிடுகின்றது. ஒவ்வொருவரிடமும் நிம்மதியாக அமர்ந்து அதிக நேரம் அளவளாவ தருணம் கிடைத்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! என்றாவது ஒரு நாளில் அப்படி செய்வேன். ஏனெனில் ஜனங்கள் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்த வண்ணம் இருக்கின்றனர். (பாருங்கள்?) இந்த வாரம் பல்வேறு நாடுகளிலிருந்து ஜனங்கள் வந்திருந்து என்னைப் பேட்டி கண்டனர். நான் அவர்களுக்காக ஜெபம் செய்தேன். 5ஜெபர்ஸன்வில்லில் இருக்கும் இந்த சிறு சபையுடன் மாத்திரமே எனக்குத் தொடர்பிருந்தால், உங்கள் ஒவ்வொருவருடனும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் செலவழித்து, வேண்டாதவைகளை உங்களிடமிருந்து அகற்றுவது மகிழ்ச்சியாயிருக்கும். ஆனால் உள்ளூர் சபையிலிருந்து இரண்டு அழைப்புகள் வந்தால், அதே சமயத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. எனவே ஆயிரக்கணக்கானோர் இருப்பதால், என்னால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. மக்கள்... உலக முழுவதிற்கும், இங்கே போவதற்கும் அங்கே செல்வதற்கும், ஒவ்வொரு இடத்திற்கும் சென்று நோயாளிகளுக்காக ஜெபிக்க விமான டிக்கெட்டுகள் அனுப்பப்படுகின்றன; என்னால் முடியவேயில்லை. 6எனவே ஜனங்கள் ஏமாந்து போகின்றனர். அவ்விதம் செய்ய முடியவில்லையே என்று எனக்கும் ஏமாற்றம்தான். எனவே, என்ன செய்வதென்றே தெரியவில்லை என்பதை இந்த ஈஸ்டர் காலையில் உங்களிடம் அறிக்கையிட விரும்புகிறேன். அவர்கள் அநேகராயிருக்கின்றனர் - உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் நான் ஏழாவது முறை உலகப் பயணம் செய்து முடித்துவிட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். உலகெங்கிலும் ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுடன் நான் தனிப்பட்ட விதத்தில் தொடர்பு கொண்டுள்ளேன். அது எவ்வளவு பிரயாசமாக இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். 7எங்களுக்கு சிறு சிறு பிரயாசங்கள் ஏற்படுகின்றன. உங்களுக்கும் கூட சிறு சிறு பிரயாசங்கள், உண்டாகின்றன என்று நானறிவேன். ஆனால் உலகெங்கிலுமுள்ள வியாதியுற்ற தாய்மார்கள் என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டு, ஒரு நிமிடம் சகோ. பிரன்ஹாம்! கர்த்தராகிய இயேசுவே, அவரை எங்களிடம் அனுப்பும் என்று தேவனிடம் முறையிடும்போது, அது எனக்கு எவ்வளவு ஏமாற்றத்தை விளைவிக்கிறது என்று சற்று யோசித்துப் பாருங்கள். ஒருவர் தொலைபேசியை கீழே வைத்தவுடன், வேறொருவர்; இப்படி தொடர்ச்சியாக உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டுக் கொண்டே இருக்கின்றனர். அது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். யாராவது ஒருவர் தொலைபேசியின் அருகில் வியாதிப்பட்ட குழந்தையையோ, கணவனையோ அல்லது மரணத்தருவாயிலிருக்கும் மனைவியையோ வைத்துக் கொண்டு, அங்கு செல்ல வேண்டுமென்று என்னை வேண்டிக் கொள்ளும்போது, அது அவ்வளவு எளிதல்ல. அதை கற்பனை செய்து பாருங்கள். எனக்கு நரம்பு தளர்ச்சி இருப்பதில் வியப்பொன்றுமில்லை அது யாரையும் அந்நிலைக்கு கொண்டு வந்துவிடும். ஆனால் ஒன்றை மாத்திரம் நான் செய்து வருகிறேன். இதன் விளைவாக ஒரு தன்மையை (Complex) உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக என் கண்களை கல்வாரியில் வைத்து, நிலையாக இருக்க முயன்று, முன்னேறிச் செல்லுகிறேன். இதையே நான் செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறார். என் தவறுதல்களை தேவன் மன்னிக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். ஒருக்கால் அழைப்பு வந்த ஓரிடத்திற்கு நான் சென்றிருக்க வேண்டும். நான் மனிதனானபடியால் நானும் தவறு செய்கிறவனாயிருக்கிறேன். 8அதிகாலை ஆராதனை முடிந்து நான் வெளியே சென்றபோது ஒரு சுவையான சிறு காரியம் பழக்கடையில் கூறப்பட்டது. எனக்கு ஒரு அருமையான வயோதிப நண்பர் உள்ளார், (அவர் இங்கு எங்காவது அமர்ந்திருக்கக் கூடும். அவர் சிக்காகோவை சேர்ந்தவர்). அவருடைய பெயர் ஸ்டூவர்ட் (அவருக்கு ஏறக்குறைய எழுபத்தைந்து வயதிருக்கும், அல்லது சற்று அதிகமாக இருக்கலாம்). பழக்கடையில் அவர் என்னை சந்தித்தார். அவர் தமது தசமபாகத்தை சில்லறையாக சேமித்து வைத்து, ரொக்கமாக என்னிடம் கொடுப்பது வழக்கம். அது வெளிநாட்டு ஊழியத்திற்கென அனுப்பப்படுகின்றது. அவருடைய நல்நண்பர்... அவர் என், நண்பரும் கூட இந்தியானாவிலுள்ள லோவலைச் சார்ந்த சகோதரன் லெனார்ட் ஸ்காக்ஸ் என்பவரும் அங்கு நின்று கொண்டிருந்தார். அவர் 'மேசன்' வகுப்பைச் சேர்ந்தவர் என்று எனக்கு அதற்கு முன்பு தெரியாது. அவர் மேசன் பொத்தான் ஒன்றை அணிந்திருந்தார். நாங்கள் மேசன் ஒழுங்கைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது அந்த வயோதிப சகோதரன் ஸ்டூவர்ட் என்னிடம், “சகோதரன். பிரன்ஹாமே, உங்களை நான் நேசிக்கிறேன். உங்களிடம் பேசுவதற்கு எனக்கு விருப்பம். ஆனால் துருக்கிய அந்தப்புரப் பெண்களை (harem) காட்டிலும், நீர் கிடைப்பதற்கு அரிதாயிருக்கிறீர்” என்றார் (அவ்விதம் கூறினதற்கு மன்னிக்கவும்). அண்மையில் ஒருவர் என்னிடம், “தேவன் கிடைப்பது அவ்வளவு கடினமாயிராததால் மகிழ்ச்சியுறுகிறேன்” என்றார். 9நான் அவ்விதம் இருக்க விரும்பவில்லை. நான் ஜனங்களை நேசிக்கிறேன். நாங்கள் உணவு அருந்தும் சமயத்தில் என் மனைவியிடம், துருக்கிய அந்தப்புரப் பெண்களை அணுகுவது எவ்வளவு கடினம் என்பதைக் குறித்து நான் கூற, நாங்கள் வாய்விட்டு சிரித்தோம். எனவே சகோ. ஸ்டூவர்ட், நீங்கள் இங்கிருப்பீர்களானால், அது அவ்வளவு கடினமல்ல என்று நான் நம்புகிறேன். அந்த சிறு நகைச்சுவை எங்கள் அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைத்தது. எனவே, எல்லோரையும் காண முடிந்தால் நலமாயிருக்கும். உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன் (அது உண்மை). நண்பராயிருந்தாலும் சத்துருவாயிருந்தாலும், எல்லாம் எனக்கு ஒன்றுதான். 10இனிவரப் போகும் கூட்டங்களுக்காக உங்கள் ஜெபங்களைக் கோருகிறேன். நான் இந்தியர்களின் மத்தியில் போகின்றேன் என்பது உங்களுக்குத் தெரியும் நாம் ரோமாபுரியிலுள்ள போது ரோமரைப் போலவே இருக்கவேண்டும்; இந்தியர்களுடன் இருக்கும் போது, இந்தியர்களைப் போலவே நாம் வாழ வேண்டியவர்களாயிருக்கிறோம். நான் அலாஸ்கா நெடுஞ்சாலையில் மேற்புறம் சென்றிருந்த போது ஒரு மிஷனரி நண்பரை சந்தித்தேன். அவர் என் வேட்டை கூட்டாளி அவர் ஒரு அருமையான வாலிபர். அவருடைய மனைவியும் கூட அருமையானவள். இருவரும் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவர்கள்... அவருடைய கரங்களும், காதுகளின் பின்னால் சுற்றிலுமுள்ள பாகங்களும் அரித்துப் போயிருந்தது, அவருக்கு என்ன நேர்ந்ததென்று நான் வியந்தேன். அவருக்குப் படை, சொறி ஏதாகிலும் இருக்குமா என்றெல்லாம் நினைத்தேன். அங்கு அவர் வாழ்ந்து வரும்போது, வண்டுகளும், பூச்சிகளும் அதை விளைவித்தன என்று பின்னர் கண்டுகொண்டேன். எனவே ஜனங்களை கிறிஸ்துவிடம் கொண்டு வருவதற்கென, அவர்கள் மத்தியில் வாழ வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அவர்களும் கிறிஸ்துவின் பிறப்புரிமை. அந்த ஜனங்களுக்காகவும் அவர் மரித்தார். யாராகிலும் அவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. 11அண்மையில் நான் வடபாகத்தில் நடத்திய கூட்டங்களுக்கு அந்த இந்தியர்களின் தலைவர் வந்திருந்தார். பயணிகளின் மைதானத்தில் நடந்த அந்த கூட்டத்தில் பரிசுத்த ஆவியானவர் அவருடைய பெயரை அழைத்து, அவர் யாரென்றும், அவர் என்ன செய்தார் என்றெல்லாம் வெளிப்படுத்தினார்... ஓ, அது அவரை முற்றிலும் கவர்ந்தது. மானிடப் பிறவிகள் இவைகளைச் செய்ய முடியாது என்றும், சர்வ வல்லமையுள்ள தேவனிடத்திலிருந்து மாத்திரமே அது வந்திருக்க முடியுமென்றும் அவர் அறிந்து கொண்டார். அந்த தலைவர் கரையோரங்கள் அனைத்திலும் இதை பிரசித்தப்படுத்தினார். எனவே நாங்கள் சிறு பாய்மரக் கப்பலில் பயணம் செய்து, கரையோரங்களில் உள்ளவர்களை அடைந்து, கூட்டங்களை நடத்தப் போகிறோம். அது மாத்திரமல்ல, இதுவரை அசட்டை செய்யப்பட்டிருந்த க்ரீ இந்தியர்களிடம் நாங்கள் செல்கின்றோம். பெரிய கூட்டங்கள் நடத்தும் அநேக சகோதரர்கள் அங்கு செல்ல முடியவில்லை 12இப்பொழுது இந்த இந்தியர்கள்... அங்கு ஒரு பைசா கூட இருக்காது. (நீங்கள் எல்லாரும் அறிந்துள்ளபடி, என் கூட்டங்களில் நான் காணிக்கை எடுப்பதில்லை. நான் பணமும் வாங்குவது கிடையாது). இங்குள்ள சபையானது இந்தியர்களிடையே நடக்கவிருக்கும் இக்கூட்டங்களின் செலவை ஏற்றுள்ளது. உங்களுடைய தசமபாகத்தின் ஒரு பாகம், இந்த இரட்சிப்பின் செய்தியை, எளிய, படிப்பறியாத இந்தியர்களிடம் கொண்டு செல்வதற்கு செலவிடப்படும். உண்மையைக் கூறினால் அவர்கள் தான் உண்மையான அமெரிக்கர். நாம் அயல் நாட்டார். நாம் உள்ளே நுழைந்து, இந்த நாட்டை அவர்களிடமிருந்து பறித்துக் கொண்டுவிட்டோம் ஆகவே நமக்கு... அவர்களுக்குச் சொந்தமான இந்நாட்டை என்னால் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க முடியாது. ஆனால் கிறிஸ்துவுக்குள் கிடைக்கப் பெறும் நம்பிக்கையை என்னால் அவர்களுக்கு அளிக்க முடியும். அது நம்மை என்றாவது ஒரு நாளில் சகோதரத்துவத்தில் ஒன்றாக இணைத்து, சண்டையேயிராத ஸ்தலத்தில் நம்மை சேர்க்கும். அங்கு ஒருவரிடத்திலிருந்து மற்றவர் நாட்டைப் பிடுங்கிக் கொள்ள முடியாது. அந்த நாட்டில் எல்லோருக்கும் போதிய இடம் இருக்கும். நான் நேசிப்பவர்கள் இரட்சிக்கப்பட்டு, அந்நாளுக்கென ஆயத்தமானால், அந்த நேரம் வரும்போது நான் தேவனுக்கு நன்றியுள்ளவனாயிருப்பேன். 13நான் பேசிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், என் நண்பர்கள் அநேகர் இங்கு அமர்ந்துள்ளதைக் காண்கிறேன். நான் சகோதரி (அவர்கள் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை) அவர்கள் 'லீ' (Lee) பிள்ளைகளா? நீங்கள் திருமதி. லீ தானே? இது உங்கள் பெண்? அவர்கள் தானே தெய்வீக சுகமடைந்தார்கள்? ஒரு பெண் 'நல்ல மேய்ப்பன்' விடுதியில்... இல்லை. அதன் பெயர் என்ன? ஏதோ ஒரு கத்தோலிக்க பள்ளியில்... சமாதான பெண்மணி (Lady of Peace), அதுதான். எல்லா கத்தோலிக்க பெயர்களும் என்னை குழப்பமடையச் செய்கிறன. அவளுக்கு மூளை கோளாறு, நரம்பு தளர்ச்சி ஏற்பட்டிருந்தது. அருமை கர்த்தராகிய இயேசு... நான் அவளுடைய படுக்கையின் கால்பாகத்தில் அமர்ந்திருந்தேன். அவளுடைய அருமை பெற்றோர் அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது கர்த்தராகிய இயேசு அவள் சுகம் பெற்றுவிட்டதாகக் கூறினார். அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது. அதோ அவள். அது போய்விட்டது. அந்த சகோதரி இன்று காலை கர்த்தருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறார்கள் என்று நமக்கு தெரியும். 14நான், சமீபத்தில் புற்றுநோயால் இறந்து கொண்டிருந்தவர்களைப் பார்க்கிறேன். அவர்கள் சக்கர நாற்காலிகளிலும் கக்கதண்டம் (Crutches) பிடித்துக் கொண்டும், இங்கு வந்திருந்தனர். அவர்கள் சுகமடைந்து, இன்று காலை இங்கு வந்துள்ளனர். உலகம் முழுவதிலும் அவ்விதம் சம்பவித்துள்ளது. அது என்னால் அல்ல, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த நமது ஆண்டவரால் மாத்திரமே. அவர் என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறார். ஆண்டவர் தாமே என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்படுவாராக என்பதே என் உத்தமமான ஜெபமாயுள்ளது. எனக்காக ஜெபிப்பீர்களா, நீங்கள் எல்லோரும் எனக்காக ஜெபிப்பீர்களா? அதின் பேரில் தான் நான் சார்ந்திருக்கிறேன். நான் அங்கு செல்லும்போது... பாருங்கள், நமது சொந்த இடத்தில் அவ்வளவு மோசமில்லை. ஆனால் நீங்கள் உண்மையாகவே போர்க்களத்துக்கு செல்லும்போது... அது ஒரு பயிற்சி. 15நமது சபை ஒரு 'ஸ்டேஷன் வாகன்' மோட்டார் வாகனம் எனது உபயோகத்திற்கென வாங்கியுள்ளது என்று நேற்று கேள்விப்பட்டேன். (எனது மற்றைய வாகனம் பழுதடைந்துவிட்டது). நான் ரேடியோவைத் திருப்பி செய்திகளைக் கேட்டேன். நானும் ஜோசப்பும், நான் ஜெபத்திற்காக சென்றவிடத்திலிருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்தோம் நாங்கள் 'கிரீன் மில்' என்னுமிடத்திலிருந்து திரும்பி வந்தோம். நான் ரேடியோவைத் திருப்பினேன். அது ஒரு வாலிபன் போருக்காக பயிற்சி பெறும் விசேஷ செய்தியாயிருந்தது. அவன் எப்படி தன் ஜேபிகளை (Pockets) மண்ணினால் நிறைத்து, குனிந்து கொண்டிருந்தான் என்றும், மெஷின் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட குண்டுகள் எப்படி அவன் தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்தன என்றும், அவன் எவ்வாறு தவழ்ந்து முள் கம்பிகளை கடந்து சென்றான் என்றும் அது விவரித்தது. இப்படியாக அவன் கடினமான பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தான். 16அதைத்தான் நாம் இங்கு செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் போர்க்களம் செல்லும்போது, அது அதிக வித்தியாசமாயுள்ளது. பயிற்சியின் போது, அந்த மெஷின் துப்பாக்கி குறித்த நேரத்தில், ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் (level) சுடும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் போர்க்களத்தில் அவ்விதம் கிடையாது. அது அந்த மட்டத்தின் மேல் அல்லது கீழே சுடக்கூடும். பாருங்கள்? அங்கு அதிக வித்தியாசமாயுள்ளது. இங்கு நாம் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அங்கோ நாம் போர்க்களத்திற்கு செல்கிறோம். 17எனவே நாம் சத்துருவை சந்திக்கப் போகிறோம். “யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது” என்னும் சிறு பாட்டை நாம் பாடுவது வழக்கம், அந்த பாட்டு உங்கள் யாருக்காவது ஞாபகமிருக்கிறதா? யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது, ஓ கிறிஸ்தவ வீரர்களே முகமுகமாக, கடுமையாக போர்க் கருவிகள் பளபளக்கின்றன, நிறங்கள் பளிச்சிடுகின்றன நன்மைக்கும் தீமைக்கும் இன்று போர் நடக்கின்றது. (அது உண்மை. பாருங்கள்?) யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் சோர்வடையாதீர் பெலனடைந்து, அவர் பெலத்தில் உறுதியாய் நில்லுங்கள் தேவன் நமது பட்சத்திலிருந்து, அவர் கொடி நம்மேல் பறந்தால் முடிவில் நாம் வெற்றி பெற்றோரின் பாட்டைப் பாடுவோம் 18(அது உண்மை). இன்று காலை அநேக காரியங்களை உங்களிடம் கூற வேண்டியவனாயிருக்கிறேன். ஆனால் அதை நான் குறைத்துக் கொள்கிறேன். ஏனெனில் ஜனங்கள் நிரம்பி வழிந்து, நின்று கொண்டிருக்கின்றனர். வெளியே சிறு ஒலி பெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு சிறு ஒலிபரப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன்... காரில் அமர்ந்துள்ளவர்கள் அதன் வாயிலாக செய்தியைக் கேட்கலாம். இந்த ஒலிபரப்பு, செய்தியை இக்கூடாரத்திலிருந்து சில கெஜம் தூரம் கொண்டு செல்ல உதவும். இன்று காலை இங்கு வருகை தந்துள்ள ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன். 19இப்பொழுது வேறெதையும் கூறுவதற்கு முன்பு, இதைக் கூற விரும்புகிறேன்... ஆராதனை முடிந்தவுடன் ஞானஸ்நான ஆராதனை இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படித்தானே? ஆனால் முதலாவதாக ஜெபவரிசை இருக்கும். இன்று காலை நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம். தேவன் காட்சியில் வருவதுதான் நாம் பேசிக் கொண்டிருப்பதன் நிரூபணமாயுள்ளது - அவருடைய உயிர்த்தெழுதல். அவர் உயிரோடிருக்கிறாரா இல்லையா என்பது பிரச்சினை. அது கட்டுக்கதையா அல்லது உண்மையா? அவர் உயிரோடிருப்பாரானால், “உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடன் கூட இருக்கிறேன்” என்று அவர் வாக்களித்தது உண்மையாயிருக்க வேண்டும். 20அவர் இப்பொழுது நம்மத்தியில் வந்து, அவருடைய பிரசன்னத்தை நிரூபிப்பாரானால், அவர் உயிரோடிருக்கிறாரா இல்லையா என்னும் ஊகத்திற்கு இடமேயில்லை. பாருங்கள்? உலகிலுள்ள எல்லா மதங்களுக்கும் பரிசுத்த நாட்களும் விடுமுறைகளும் உள்ளன. ஆனால் அவைகளில் ஒன்றும்கூட, அதை நிறுவினவர் உயிரோடிருக்கிறார் என்று நிரூபிக்க முடியாது. மரணம் அவர்களைக் கொள்ளை கொண்டுவிட்டது. அவ்வளவுதான். ஆனால் நாம் பின்பற்றும் கிறிஸ்தவ மார்க்கத்திலோ, நம்முடைய நிறுவனரோ மரித்து, பின்பு உயிரோடெழுந்துவிட்டார். 21அண்மையில் மெக்ஸிகோவில், மரித்துப் போன ஒரு குழந்தை உயிரோடெழுந்ததைக் குறித்து என்னைப் பேட்டி கண்டனர். அன்று காலை 9.00 மணியளவில் அது மரித்துப் போய், இரவு 10.30 அல்லது 11.00 மணியளவில் அந்த மேடையில் ஆயிரக்கணக்கானவர் முன்னிலையில், தன் தாயின் கரங்களிலிருந்து அது உயிரோடெழும்பினது. அன்றிரவு 30,000 பேர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர் (பாருங்கள்?). அது எப்படி இருந்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமல்லவா? அந்த சிறுவனைக் குறித்து எனக்கு ஒரு தரிசனம் உண்டானது. அவன் பெயர் என்னவென்றும் இன்னும் மற்ற விவரங்களையும் அது என்னிடம் கூறினது. தாயார் மிகவும் பின்னால் இருந்தாள். அவள் ஜெப அட்டையைக் கூட பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் உள்ளே நுழையவும் முடியவில்லை. ஆனால் ஜெப வரிசையில் வர வேண்டிய அவசியம் அவளுக்கு இருக்கவில்லை. அந்த குழந்தையை அவள் கொண்டு வந்தபோது, பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. 22அவர்களைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்! இரவு 9.00 மணிக்கு நடக்கவிருக்கும் கூட்டத்திற்கு காலை 9.00 மணிக்கே அங்கு வந்து கடும் வெயிலில் நின்று கொண்டு, நிழலுக்காக ஒருவர்மேல் ஒருவர் சாய்ந்துகொள்வார்கள் நின்று கொண்டு; உட்கார்ந்து கொண்டல்ல. அப்படித்தான் அவர்கள் செய்கிறார்கள் ஆப்பிரிக்காவிலும் மற்றவிடங்களிலும் கூட. இந்தியாவில் ஒரே நேரத்தில் ஐந்து லட்சம் பேர் கூடினார்கள். 23இப்பொழுது இந்த சிறு தாயார் ஜெப அட்டையைக் கூட பெற்றுக் கொள்ளவில்லை. (முன்னூறுக்கும் அதிகமான வாயில் காப்போர் (Ushers) அவளை பிடித்து வைக்க முயன்றனர்). அவள் ஜெப வரிசையை சேர்ந்து கொள்ளவும் முடியவில்லை. அவள் அங்கு நின்றுகொண்டு தன் குழந்தைக்காக ஜெபம் செய்து கொண்டிருந்தாள் - அவள் ஒரு கத்தோலிக்க பெண்மணி. பரிசுத்த ஆவியானவர் என்னிடம், “அந்தக் குழந்தையை இங்கு கொண்டு வரும்படி கூறு” என்றார். 24அந்த குழந்தையைச் சுற்றியிருந்த துணி ஈரமாயிருந்தது (காலையிலிருந்து அவள் அங்கு நின்று கொண்டிருந்தாள்). அந்தக் குழந்தை மரித்துப் போய்விட்டது என்று மருத்துவர் உறுதியாகக் கூறிவிட்டார். (அந்த மருத்துவர் கையொப்பமிட்ட உறுதிமொழி எங்களிடம் உள்ளது). அது காலை 9.00 மணியளவில். ஆனால் அப்பொழுது நள்ளிரவாகியிருந்தது. தரிசனம் எனக்குக் கட்டளையிட்டபடியே, என் கரங்களை அக்குழந்தையின் மேல் வைத்தேன். அது உயிர்பெற்று எழுந்தது. அதைக் குறித்து மருத்துவர் சாட்சி பகன்றுள்ளார். 25செய்தியாளர்கள் என்னைப் பேட்டி கண்டனர். (நான் யாருடைய மார்க்கத்துக்கும் விரோதமாக இதை கூறவில்லை. அது வேதத்துடன் இணங்குமானால், அதுவே எனக்குத் தேவை). என்னைப் பேட்டி கண்டவர் ஒரு கத்தோலிக்கர், அவர் என்னிடம், “எங்கள் பரிசுத்தவான்கள் இதைச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். “அவர்கள் உயிரோடிருந்தால்” என்று விடையளித்தேன். (மரித்த பின் மாத்திரமே ஒருவர் பரிசுத்தவானாக முடியும் என்பது கத்தோலிக்க சபையின் கருத்து என்று எனக்குத் தெரியும்). அப்படியானால், நான் சொன்னேன், “அவர் உயிரோடிருந்தால், ஆம்”. அவரோ, “ஒருவர் மரிக்காமல் பரிசுத்தவானாக முடியாதே” என்றார். நான், “பவுல் மரிக்கும் முன் பரிசுத்தவானாயிருந்தானா, மரித்த பின் பரிசுத்தவான் ஆனானா? 'எபேசு சபையிலுள்ள பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது...' என்று அவன் எழுதினபோது, மரித்தவர்களுக்கா அதை எழுதினான்? குறிப்பிட்ட ஸ்தலங்களில் வாழ்ந்து வந்தவர்களுக்கல்லவா அவன் எழுதினான்? மரித்தவர்களுக்கு அவன் அவ்விதம் எழுதியிருக்க மாட்டானே!” என்றேன். 26அவரோ, “உங்கள் வியாஜ்ஜியத்தை நீங்கள் வேதத்தைக் கொண்டு தீர்ப்பு கூறப் பார்க்கின்றீர்கள். நாங்கள் தான் சபை” என்றார். நான் சொன்னேன், “சரி ஐயா, பாரவாயில்லை”. அவர், “நாங்கள் தான் சபை” என்றார். நான், “அப்படியானால், சபை இத்தகைய செயல்களைப் புரியட்டுமே பார்க்கலாம்” என்றேன். கிறிஸ்து மாத்திரமே அதை செய்ய முடியும். அது உங்களுக்குத் தெரியும். அவர்,“கத்தோலிக்க சபையைக் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டார். “அந்தக் கேள்வியை என்னிடம் கேட்காதிருப்பது நலம்” என்றேன். அவர், “இருப்பினும் உம் அபிப்பிராயத்தை அறிய விரும்புகிறேன்” என்றார். “அது மரித்தோரின் ஆவிகளை ஆராதிப்பதன் (Spiritualism) உச்ச நிலை” என்று விடையளித்தேன். அவர், “மரித்தோரின் ஆவிகளை ஆராதிப்பதா?” என்று வியப்புடன் கேட்டார். நான், “ஆம், ஐயா” என்றேன். “எதற்காக அப்படி கூறுகின்றீர்?” என்றார். “மரித்தோருடன் தொடர்பு கொள்ளும் எதுவும் அதுதான்” என்றேன் - பரிசுத்தவான்களுடன் தொடர்பு கொள்ளுதல், பாருங்கள். அவர், “நீங்கள் கிறிஸ்துவினிடம் உங்கள் ஜெபத்தை ஏறெடுக்கிறீர்களே; அவர் கூட மரித்தார்” என்றார். நான், “ஆனால் அவர் மறுபடியும் உயிரோடெழுந்தார்'' என்று விடையளித்தேன். அதுதான் நாம் அறிந்துள்ள நல்ல காரியம். அவர் மறுபடியும் உயிரோடெழுந்தார். அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம் அல்லவா? இப்பொழுது நாம் தலைவணங்கி அவருக்கு நன்றி செலுத்துவோம். ஏனெனில் நாம் நீதிமான்களாக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர் உயிரோடெழுந்தார். 27பரலோகப் பிதாவே, இயேசு கிறிஸ்துவினிமித்தம் நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அவருடைய மகத்தான உயிர்த்தெழுதலின் ஞாபகார்த்தமாக இந்த ஈஸ்டர் காலையிலே அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, மரணம், நரகம், பாதாளம் இவைகளின்மேல் வெற்றி சிறந்தார்... அவர் இவ்வுலகிலிருந்தபோது, எல்லா வியாதிகளின் மேலும், பிசாசின் வல்லமைகளின் மேலும் அவர் வெற்றி சிறந்தார் என்பதைக் காண்பித்தார். அதன் பின்பு மரணம் அவருக்கு முன்னால் படுத்துக் கிடந்திருந்தது வல்லமையுள்ள கடைசி சத்துரு. ஆனால் ஈஸ்டர் காலையன்று அவர் தேவன் என்பதை நிரூபித்தார். அவர் உயிரோடெழுந்தார்... கடைசி சத்துருவும் கூட அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. கல்லறை அவரை ஒப்புவித்தது; பாதாளமும் அவரை ஒப்புவிக்க வேண்டியதாயிருந்தது. பரலோகம் அவரை ஏற்றுக் கொண்டது. ஓ, தேவனே, இன்றைக்கு எங்கள் இருதயம் பரிசுத்த ஆவியின் வல்லமையில் அவரை ஏற்றுக்கொண்டு, இவ்வுலகில் நாங்கள் சஞ்சாரிகளாய் திரியும் நாட்களில், நாங்கள் அவருடைய பிரதிநிதிகள் என்பதற்கும் அவருடைய உண்மையான ஊழியக்காரர் என்பதற்கும் எடுத்துக்காட்டாக இருக்க அருள் புரிவீராக. 28இங்குள்ள அனைவரையும் நீர் ஆசீர்வதியும். இங்கு நின்று கொண்டிருக்கும் அருமையானவர்கள், காலை முதற்கொண்டு திரளான கூட்டத்தில் நெருக்கமாக நின்று கொண்டிருக்கின்றனர். பரலோகப் பிதாவே, நாங்கள் கேட்கிறதற்கும் நினைக்கிறதற்கும், அதிகமாக ஆசீர்வாதங்களை இன்று அவர்கள் மேல் பொழிந்து, அவர்களுடைய இருதயத்தின் வாஞ்சைகளை அவர்களுக்கு அருள்வீராக. எந்த நோக்கத்திற்காக ஒவ்வொருவரும் இன்று காலை இங்கு வந்துள்ளனரோ, அதைப் பெற்றுக் கொண்டு திருப்தியடைந்தவர்களாய் இவ்விடம் விட்டுச் செல்வார்களாக. நீர் யாரையும் புறக்கணிக்கமாட்டீர் என்றும், அவர்களை நன்மையினால் திருப்தியாக்கி, மகிழ்ச்சியுடன் திரும்ப அனுப்புவீர் என்றும் நீர் வாக்கருளியிருக்கிறீர் ஆண்டவரே, அதை அருள்வீராக. எங்களுடைய நம்பிக்கை நீதியுள்ள இயேசுவின் இரத்தத்தின் மேல் கட்டப்படும் வரைக்கும், உம்முடைய சர்வ வல்லமையை உயிர்த்தெழுதலின் வல்லமையை கொண்ட உம்முடைய பரிசுத்த ஆவியானவர் எங்களுடன் இடைபடுவாராக. பிதாவே, இதை அருளும். 29நாங்கள் வாசிக்கப்போகும் வார்த்தைகளை ஆசீர்வதிப்பீராக. இன்று அதிகாலை எங்களுக்கு அருளின உயர் ரக செய்திக்காக உமக்கு துதிகளை ஏறெடுக்கிறோம். இந்த அருமையான சகோதரனை நீர் உபயோகித்து (ஒரு சில நொடிகளில் அவரில் அவ்வளவு மாறுதல் ஏற்பட்டுவிட்டது), இந்த மரித்துப் போகும் சந்ததிக்கு ஒரு செய்தியை அளிக்கச் செய்தீர். அந்த சந்ததியின் ஒரு பாகமாக நாங்கள் இருக்கிறோம். அதற்காக நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! கர்த்தாவே ஓ, தேவனே, இவைகளை நினைத்துப் பார்க்கும்போது, எங்கள் இருதயம் மகிழ்ச்சியினால் துள்ளுகின்றது. இப்பொழுது ஆண்டவரே, அவரை நீர் வரப்போகும் நாட்களுக்கென்றும் ஆசீர்வதியும். இந்த சிறு சபையை ஆசீர்வதியும். ஆண்டவரே, செய்தியை மற்ற ஜனங்களுக்கு கொண்டு செல்லும்போது, எனக்குதவி செய்யும். நாங்கள் ஒருமித்து, ஒரே குடும்பமாக ஜெபத்தை ஏறெடுத்து, இயேசு எங்களை ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்ளும் வரைக்கும், பரிசுத்த ஆவியானவருடைய பரிசுத்த ஐக்கியத்தில் நிலைத்திருக்க அருள்புரியும். அவருடைய நாமத்தினாலும் அவருடைய மகிமைக்காகவும் இவைகளை வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 30சகோ. நெவில்: சகோ. பிரன்ஹாமே, இப்பொழுது நான் குறுக்கே பேசலாமா? சகோ. பிரன்ஹாம்: நிச்சயமாக, சகோதரனே. சகோ. நெவில்: எங்கள் மத்தியிலுள்ள ஒரு வாலிபர் தீட்டிய இந்த படத்தை அன்புடனும் பாராட்டுதலுடனும் அன்பளிப்பாக உமக்களிக்கிறோம். சகோ. பிரான்ஹாம்: சகோதரன். நெவில் உங்களுக்கும் உங்கள் கூடாரங்களுக்கும் நன்றி. சகோ. நெவில்: இளம் வாலிப்ன், ஜெர்ரி ஸ்டெஃப்பி தான் இப்படத்தை வரைந்தான். சகோ. பிரன்ஹாம்: ஜெர்ரி ஸ்டெஃப்பியா இதை வரைந்தான்? கர்த்தர் அவனை ஆசீர்வதிப்பாராக. ஜெர்ரி, இன்று காலை நீ இங்கிருக்க நேர்ந்தால், அந்த ஓவியம் மிகவும் அழகாயுள்ளது. அவனை ஓவியனாக்க ஓவியப் பள்ளிக்கு அனுப்ப என்னிடம் போதிய பணம் இருந்திருந்தால் நலமாயிருக்கும். தேவன் கலையில் இருக்கிறார் என்பது என் கருத்து. நீங்களும் அப்படி எண்ணுகிறீர்கள் அல்லவா? தேவன் இசையில் இருக்கிறார்; கலையில் இருக்கிறார். அத்தகைய திறனை அபிவிருத்தி செய்யாமலிருத்தல் நல்லதல்ல. அவன் அதிகம் வரைந்தால், அவன் திறன் அதிகம் விருத்தியாகும். ஜெர்ரி, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறேன். சகோதரன். நெவிலுக்கும் இந்த சபையோருக்கும், இந்த ஓவியத்திற்காகவும், அதனடியில் எழுதியுள்ள செய்யுளுக்காகவும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அந்த செய்யுளை சற்று பின்பு படித்துக் காண்பிக்கிறேன். சகோ. நெவில்: நான் படிக்கட்டுமா? சகோ. பிரான்ஹாம்: சரி, ஐயா. சகோ. நெவில் இந்த செய்யுளைப் படிப்பார். அது எப்படியிருக்குமென்று ஓரளவு எனக்குத் தெரியும். (சகோ. நெவில் செய்யுளைப் படிக்கிறார் - ஆசி) அவர் உயரமானவருமல்ல தன் வழிகளில் கர்வம் கொண்டவருமல்ல அவர் தம் வெற்றியை பறை சாற்றுவதில்லை தன் அன்றாடக வாழ்க்கையில் அவருக்கு பணம், புகழ் பேரில் நம்பிக்கையில்லை யாரும் அவருக்கு ஈடாக முடியாது எங்கள் அருமை சகோதரன் பில் நாங்கள் அவரை விரும்பும்படியே வாழ்ந்து வருகிறார் உத்தமத்துடன் அவர் எங்களுக்கு கலப்படமற்ற வார்த்தையை போதித்து வருகிறார் எந்த பகட்டான வழியையும் புகழ்ச்சியையும் விரும்பாமல் தேவனை அவர் பின்பற்றுகின்றார் அவர் பேச்சு மிருதுவாகவும் இனிமையாகவும் உள்ளது அவர் குரலை உயர எழுப்பியதேயில்லை ஆனால் தவறைக் கண்டித்துணர்த்தும் போது குரலை உயர்த்துவதை விட அவருக்கு வேறு வழியேயில்லை அவருக்கு படிப்பு அதிகம் கிடையாது கல்லூரியிலும் பள்ளியிலும் அவர் படிக்கவில்லை ஆனால் முக்கியமானது எதுவென்று அவரறிவார் அந்த விஷயத்தில் அவர் யாருக்கும் மூடனல்ல அவர் நமக்களித்துள்ள ஞானம் பரத்திலிருந்து வந்த நித்தியமாம் நமது கிறிஸ்துவேயன்றி வேறுகோட்பாடு அவருக்கில்லை சுயாதீன அன்பேயன்றி வேறு பிரமாணம் அவருக்கில்லை அவருடைய எளிய, தாழ்மையான பிறப்பின்போது எந்த மகத்தான அறிவிப்பும் இருக்கவில்லை ஆனால் எங்களுக்கோ உலகில் வாழ்பவர் அனைத்திலும் அவரே மிகவும் மகத்தானவர் அவரை நண்பராக அடைந்திருப்பதை மிகப் பெரிய சிலாக்கியமாகக் கருதுகிறோம் அவர் உறுதியாய் நிற்கும் அனைத்தையும் விரும்பி முடிவு வரை அதில் நிலைத்திருப்போம் அவர் தாம் பிரசங்கியல்ல என்கிறார் அவர் மிகவும் பணிவுள்ளவர் ஆனால் பிரசங்க மேடையில் ஏற்றிப் பாருங்கள் அவர் பிரசங்கியெனக் கண்டு கொள்ளல் கடினமல்ல அவர் தீர்க்கதரிசியாக முன் குறிக்கப்பட்டார் தங்கள் விருப்பப்படி மனிதர் என்னவும் கூறட்டும் தேவன் எங்களுக்கு சகோதரன் பில்லைத் தந்தபோது ஒரு மகத்தான ஆதரவையே எங்களுக்களித்தார் கையொப்பம்: சிறு மந்தை 31சகோ. பிரான்ஹாம்: நன்றி, நன்றி. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. யார் இதை இயற்றியது? சகோ. நெவில்: அவனுடைய தாயார் என்று நினைக்கிறேன். சகோ. பிரான்ஹாம்: இப்புகழ்ச்சிக்கு நான் பாத்திரவானல்ல. ஆனால் தேவ ஊழியனாயிருப்பதை உலகிலுள்ள செல்வத்தைக் காட்டிலும் பெரிதாக மதிக்கிறேன். மக்கள் என்னை தேவ ஊழியனாகக் கருதுகின்றனர். அதற்கு நான் என்றென்றும் உண்மையாக வாழ்வேனாக என்பதே என் ஜெபமாயுள்ளது. தேவன் உங்களை என்றென்றும் ஆசீர்வதிப்பாராக! என் சிந்தனைகள் எப்பொழுதுமே உங்களுடன் இருக்கும். உங்களை மிகவும் நேசிக்கிறீர்கள். 32இப்பொழுது... ஓ, எத்தனையோ காரியங்கள் நாம் பேச வேண்டியுள்ளது. நாம் தேவனுடைய வார்த்தைக்கு வராமலேயே நாள் முழுவதும் மற்ற காரியங்களை பேசிக் கொண்டே போகலாம். நீங்கள் அநேக அருமையான காரியங்களை நான் பார்க்கிறேன். தேவனிடத்திலிருந்து எனக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. அதைக் குறித்து நான் உங்களிடம் பேசலாமென்று இருக்கிறேன். யாரோ ஒருவர் கர்த்தருடைய வருகையைக் குறித்த சொப்பனம் ஒன்றைக் கண்டிருக்கிறார். அது மிகவும் முக்கியம் வாய்ந்தது என்று எண்ணுகிறேன். ஆகவே நான்... 33என் சிறு பெண் ரெபேக்கா (சற்று முன்பு கூட அவளை நான் கேலி செய்தேன்) பெரிய தொப்பியை ஒன்றை அணிந்து என்னிடம் வந்தாள். நான் “அன்பே அது பறவைக் கூடு போல் உள்ளது அதனுள் குச்சிகள் மற்றும் அதைப் போன்ற எல்லாம் இருக்கின்றது. அதை கழற்றிவிடு” என்றேன். அவள் போய் சில நிமிடங்களில் என்னிடம் திரும்பி வந்தாள், ஒரு பெரிய பாக்கெட் புத்தகம் அவளிடமிருந்தது. “எங்கு கிடைத்தது?” என்று அவளைக் கேட்டேன். அவள் கேலியாக, “அப்பா, எனக்கு பெரிய கால்கள் உள்ளன. அதற்குப் பொருத்தமாக இதை எடுத்துக் கொள்ளலாமென்று எண்ணினேன்” என்றாள். நானும், அவளும் காரில் சென்று கொண்டிருப்பதைப் போலவும் நான் அவளிடம் கர்த்தருடைய வருகை சமீபமாயுள்ளது என்று கூறினதாகவும் அவள் இருமுறை சொப்பனம் கண்டிருக்கிறாள் ஒரே சொப்பனம், இருமுறை, மூன்றாவது சொப்பனத்திற்காக நான் காத்திருக்கிறேன். ஒருக்கால் அதன் அர்த்தத்தை ஆண்டவர் அப்பொழுது வெளிப்படுத்தித் தரலாம். 34அநேக காரியங்களை உங்களிடம் கூற வேண்டும். ஆனால் இப்பொழுது தேவனுடைய வார்த்தைக்குச் செல்வோம். எல்லோரும் நலமாக உணர்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி இல்லையானால், இந்த ஆராதனை முடிவதற்குள் பெலவீனமுள்ள ஒருவராவதும் நம் மத்தியில் இருக்கக் கூடாது என்று ஜெபிக்கிறேன். இப்பொழுது கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக (ungodly) மரித்தார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் தான் அந்த அக்கிரமக்காரர். (பாருங்கள?) அது நாம் தான். நம்மை இரட்சிக்க அவர் நமக்காக மரித்தார். 35எல்லாவிடங்களிலும் நன்றாகக் கேட்கின்றதா? பின்னால் இருப்பவர்கள் சரியாக கேட்க முடிகின்றதா? அங்கு சத்தம் சரியாக வருகின்றதா? சரி. 36இப்பொழுது அவருடைய வார்த்தையிலிருந்து ஒரு பாகத்தை படிக்க விரும்புகிறேன். இப்பொழுது யோவேலின் புத்தகம் முதலாம் அதிகாரத்திலிருந்து முதல் நான்கு வசனங்களையும் 2-ம் அதிகாரம் 25-ம் வசனத்தையும், பின்னர் ஆதியாகமம்: 20:7-ஐயும் படிக்கலாம். 37இப்பொழுது நான்... நீங்கள் களைப்பாயிருந்து போக விரும்பினால் போகலாம். இந்த சபைக்கு சில காலத்திற்கு இது என்னுடைய கடைசி செய்தியாக இருக்கும். இன்று காலை ஆராதனை முடிவில் சுகமளித்தல் ஆராதனை இருக்கும். இந்த செய்தியை தேவன் ஆசீர்வதித்து அதன் அர்த்தத்தை உங்கள் மனதில் பதியச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். நாம் விசுவாசிப்பதை வெளிப்படையாக அறிவித்து, வேதவசனம் இவ்வாறு கூறுகின்றது என, அதை வேத வாக்கியங்களைக் கொண்டு நிரூபிக்கவே நாம் இங்கு கூடி வந்துள்ளோம். அது உண்மையென்பதை தேவன் தாமே நமக்கு நிரூபித்து காண்பிப்பாராக! உதாரணமாக, “இது சூரிய காந்தி விதை” என்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை நீங்கள் விதைக்கும் போது, சூரிய காந்தி வளருகின்றது. அதுதான் அது சூரியகாந்தி விதை என்பதன் நிரூபணம். பார்த்தீர்களா? அவ்வளவுதான். 38கூடுமானால், இருக்கையில் அமர்ந்துள்ளவர்கள் அவ்வப்பொழுது எழுந்து, நின்று கொண்டிருப்பவர்களுக்கு உங்கள் இருக்கைகளைத் தாருங்கள். இயன்றவரை சுருக்கமாக முடித்து விடுகிறேன். 39இப்பொழுது எனக்காக ஜெபிக்க மறக்க வேண்டாம். சபைக்கு உத்தமமாக இருங்கள். சகோதரன். நெவிலுடன் இச்சபையில் நிலைத்திருங்கள். வெளியிலிருந்து இச்சபைக்கு வருகை தந்துள்ளவர்கள் மீண்டும் வாருங்கள். இப்பொழுது தேவனுடைய ஸ்திரமான அழைப்பைப் பெறாமலேயே நான் வெளிநாட்டு கூட்டங்களுக்குச் செல்ல எத்தனித்துள்ளேன். உலகம் மரித்துக் கொண்டிருக்கும் போது என்னால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. பவுலுக்கும் அத்தகைய அனுபவம் ஒரு முறை இருந்தது. அவன் ஏதோ ஒரு தேசத்துக்கு சென்று கொண்டிருந்தான். அப்பொழுது வழியில் மக்கதொனியா அழைப்பை அவன் பெற்றான். இப்பொழுது, அத்தகைய மக்கதோனியா அழைப்பை ஆண்டவர் தருவாரானால், மற்றெல்லாவற்றையும் நான் ரத்து செய்து விடுவேன். கூடுமானவரை நான் ஒவ்வொரு இடத்திற்கு சென்று, இங்கு கொஞ்சம் விதை அங்கு கொஞ்சம் விதையைத் தெளிப்பேன், ஆகாயத்துப் பறவைகள் பெரும்பாலான விதைகளை பட்சித்து போடும் என்று எனக்குத் தெரியும். வேறு சில விதைகள் நெருக்கிப் போடப்படும். ஆனால் அங்கு நல்ல நிலத்தில் விழுந்த சில விதைகள் முளைத்தெழும்பும். எனவே நாம்... விதையை விதைப்பதுதான் முக்கியமான காரியம். 40ஈஸ்டர் செய்திக்கு இது வினோதமான ஒரு வேதபாகம், யோவேல்: 1-ம் அதிகாரம். “பெத்துவேலின் குமாரனாகிய யோவேலுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்: முதியோரே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, செவி கொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா? இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக் கடவர்கள். பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப் பூச்சி தின்றது.“ யோவேல்: 1:1-4 இப்பொழுது 2-ம் அதிகாரம் 25 வசனம் “நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக் கிளிகளும்,பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்தவருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் (Restore)” நீங்கள்சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து உங்களை அதிசயமாய் நடத்தி வந்த உங்கள்தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுபோவதில்லை.“ யோவேல்.2:25-26 41இப்பொழுது ஆதியாகமம்: 20-ம் அதிகாரம் 7-ம் வசனம், நான் பேசப் போகும் பொருளுக்கு முன்னுரையாக இதைப் படிக்க விரும்புகிறேன். 6-ம் வசனத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். “அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடு நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால் நீ அவளைத் தொட உனக்கு இடங்கொடுக்கவில்லை. அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பி விடு (Restore). அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்கு சொன்னார்.“ ஆதி. 20: 6-7. இப்பொழுது இதிலிருந்து 'திரும்ப அளிக்கப்படுதல்' (Restoration) என்னும் பொருளைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். 42இப்பொழுது சகோதரன். நெவில் இன்று காலை அந்த சிறந்த செய்தியைப் பிரசங்கித்த போது, கடைசியாக 'திரும்ப அளிக்கப்படுதல்' என்னும் கருத்தைத் தெரிவித்தார். அவரது சொற்கள் எனக்கு இக்கருத்தையளித்தது. நான் வீட்டுக்குச் சென்று என் அதிகாரதியில் அதன் அர்த்தத்தைக் கண்டு, சில வேத வாக்கியங்களையும் குறிப்புகளையும் எழுதிக் கொண்டேன். வெப்ஸ்டர் அகராதியில் அந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தத்தை நோக்கினபோது, 'பழைய உரிமையாளருக்கு திரும்ப அளிக்கப்படுதல்' அல்லது 'பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரப்படுதல்' என்று எழுதப்பட்டிருந்தது. அதைத் திரும்ப பெற்றுக் கொள்ள நமது உரிமையை நாம் வற்புறுத்திக் கேட்கலாம் (enforce). தேவன் தாமே இந்த தாழ்மை மிகுந்த வார்த்தைகளை ஆசிர்வதிப்பாராக அப்படித்தான் வெப்ஸ்டர் அகராதி கூறுகின்றது. 'பழைய உரிமையாளருக்கு திரும்ப அளிக்கப்படுதல்' அல்லது 'பழைய நிலைக்குத் திரும்ப கொண்டு வரப்படுதல்'. 'நீங்கள் ஒன்றின் மேல் உரிமை கோரும்போது, அது திரும்ப அளிக்கப்பட நீங்கள் வற்புறுத்த வேண்டும் - அது சரியான இடத்திற்கு கொண்டு வரப்பட இந்த என் பெலவீனமான வார்த்தைகளை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக! 43“திரும்ப அளிக்கப்படுதல்” - உரிமை வற்புத்தப்பட வேண்டும். எந்த ஒரு பொருளையும் அதற்குரிய உரிமையாளரிடம் கொண்டு வர வேண்டுமானால்... எப்படியோ அது உரிமையாளரை விட்டுசென்று, எல்லாவிடங்களிலும் சுற்றித் திரிந்தது. அதற்கு சொந்தமானவர்களிடம் அதை திரும்ப அளிக்க வேண்டுமானால் அல்லது அதன் பழைய நிலைக்கு அதைக் கொண்டு வர வேண்டுமானால், அதை வற்புறுத்த சட்டப்படி நமக்கு உரிமையுண்டு. இதை செய்வதற்காக நமக்கு அதை வற்புறுத்திக் கேட்க (ஒரு சட்டம் இருக்குமானால்) அதிகாரம் உண்டு, இந்த திருப்பி அளித்தல் திரும்ப அளித்தலின் சரியான நிலைமையை வற்புறுத்திக் கேட்டல். 44யாரோ ஒருவர் நமது சொத்தை களவாடிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அந்த சொத்தை தன் வசமாகவே வைத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் சட்டத்தைக் கொண்டு அந்த நபரிடம் செல்லலாம். சட்டமும் அதை திரும்ப அதன் உரிமையாளரிடம் கொடுக்க அவரை வற்புறுத்துகின்றது. அதனுடைய...?... அல்லது முதல் இருந்த நிலைக்கு. வற்புறுத்தல்... ஓ, என்னே பொருள்! 'வற்புறுத்தல்' என்பதன் பேரில் இரண்டு நாட்கள் பிரசங்கம் செய்ய எனக்கு எவ்வளவு விருப்பமாயுள்ளது! சகோதரன். நெவில் இன்று அதிகாலை நமக்குப் பிரசங்கம் செய்தார். நான் ஞாயிறு பள்ளி பாடத்தை மாத்திரமே உங்களுக்குக் கற்பிக்கப் போகிறேன். அது சகோதரன். நெவிலின் பிரசங்கத்திற்கு தொடர்ச்சியாக அமைந்திருக்கும். 45அப்படியானால் தேவன் நமக்கு அளித்துள்ள உரிமைகளைக் கோரி சாத்தானை வற்புறுத்த நமக்கு அதிகாரம் உண்டு. தேவன் ஒரு பிரமாணத்தை (Law) வைத்திருக்கிறார். அவருடைய வார்த்தையே பிரமாணம். தேவன் சபைக்கு சில உரிமைகளை தமது வார்த்தையில் வைத்துள்ளார். எனவே நாம் சாத்தானிடம், 'அதை திரும்பத் தா' என்று நமது உரிமைகளைக் கோரி அவனை வற்புறுத்த நமக்கு அதிகாரம் உண்டு. அவனும் அதைத் திருப்பிக் கொடுத்தே ஆகவேண்டும். ஏனெனில் நாம் தேவனுடைய பிரதிநிதியாயுள்ள பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டு; முழங்கால்படியிட்டு, “அது கர்த்தர் உரைக்கிறதாவது” என்று நாம் கூற உரிமை பெற்றுள்ளோம். அவன் அதைக் கொடுத்தே தீர வேண்டும். அவ்வளவுதான். ஏனெனில் அவனை அவ்விதம் செய்ய வைக்க பரிசுத்த ஆவியானவர் இருக்கின்றார். 46தேசத்தின் சட்டமானது, தேசத்தினாலே, தேசத்திற்காகவே வற்புறுத்தும்படியாகத் தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய ஆவியின் பிரமாணம், சாத்தான் அநியாயமாக, வஞ்சகமாக தேவனிடத்திலிருந்து பறித்துக் கொண்டதை கொடுத்துவிடும்படியாக அவனைக் கட்டாயப்படுத்துகின்றது. தேவன், அவர்களை தம்மைப் போலவே இருக்கத் தக்கதாக அவர்களை தம்முடைய சாயலின்படியே உண்டாக்கினார், அவனோ தேவனிடமிருந்து எடுத்துக் கொண்ட மனிதருடைய ஆத்துமாக்கள், பெண்களுடைய ஆத்துமாக்கள், பிள்ளைகள் மீது சரீர வியாதிகளை வைத்தான். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு சாத்தானை வற்புறுத்த, வேதாகமம் சபைக்கு உரிமையளித்துள்ளது. 47இதை நான் சென்ற கூட்டத்தில் கூறினேன் என்று நினைக்கிறேன். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஜார்ஜியாவிலிருந்து ஒரு சகோதரன் லூயிவில்லுக்கு வந்திருந்தார். அவருடைய காரை யாரோ ஒருவன் திருடிவிட்டான். அவருடைய துணிகளும், அவருடைய மனைவியின் துணிகளும் அவருடைய பிள்ளைகளின் துணிகளும் அதிலிருந்தன... அது சகோதரன். இவான்ஸ்... (அவர்கள் வழக்கமாக இங்கு இருப்பார்கள்), ஆராதனைக்கு வர அவர்கள் 1500 மைல்கள் காரில் பிரயாணம் செய்து வருவார்கள். அவர் ஒன்றுமில்லாமல் வீட்டிலிருந்து சுமார் 700 மைல் தொலைவில் இங்கு இருந்தார். என்ன செய்வதென்றே அவருக்குத் தெரியவில்லை. அவர் போலீஸாரிடம் புகார் செய்தார். லூயிவில்லில் இப்படிப்பட்ட ஒரு திருடு நடந்து கொண்டிருந்தது. அவர்கள் கார்களைத் திருடி அவைகளுக்கு வேறு வர்ணம் அடித்து விற்றுக் கொண்டிருந்தார்கள். சில நிமிடங்களில் அவர்கள் கள்ள உரிமைப் பத்திரத்தை உண்டாக்கி, அதற்கு எந்த நெம்பர் பிளேட்டையும் வைத்து விடுவார்கள். 48எனவே சகோ. இவான்ஸிக்கு அது ஒரு பயங்கர நேரமாயிருந்தது. நாங்கள் முழங்கால்படியிட்டு ஜெபித்தோம். இயேசுவுக்கு அவ்விதம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவரே வார்தையாயிருந்தார், நாம் வார்த்தையல்ல. கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்தில் வந்தது; அவர்கள் வார்த்தையல்ல. ஆனால் இயேசுவோ வார்த்தையாயிருந்தார். பாருங்கள். அவருக்கு ஜெபிக்க வேண்டிய அவசியமில்லை. அவரே தேவன். பாருங்கள்? ஆனால் நாமோ கர்த்தருடைய வார்த்தையானது வருகின்ற, அவருடைய தீர்க்கதரிசிகளாக, ஊழியர்களாக, இருக்கிறோம். அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தையோ அல்லது இல்லாவிட்டாலும், அந்த தீர்க்கதரிசியானவன் கூறினது நடந்தேறுவதைக் கொண்டு அவன் உறுதிபடுத்தப்படுகிறான். 49“இரண்டுஅல்லது அதிகமான பேர் என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன். அவர்கள் வேண்டிக் கொள்ளப் போகிற எந்தக் குறிப்பிட்ட ஒரு காரியத்தைக் குறித்தாகிலும் ஒருமனப்பட்டு கேட்டு, அதை சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அது அவர்களுக்கு உண்டாகும்”, என்று இயேசு மொழிந்த வேத வசனம் ஒன்று உள்ளது. இப்பொழுது பிரமாணம் அங்கு உள்ளது. பரிசுத்த ஆவியானவர் தாமே அந்த பிரமாணத்தை அமுல்படுத்துகிறார். அப்படியிருக்க பரிசுத்த ஆவியானவரின் மீது விசுவாசம் கொள்ளாமல் அவரைப் புறக்கணிக்கிற மக்களின் கதி என்னவாயிருக்கும்? நீங்கள் - நீங்கள் உங்கள் சமாதானத்தையும் இரக்கத்தையும் நீங்கள் புறக்கணிக்கிறவர்களாவீர்கள். 50நாங்கள் நான்கு அல்லது ஐந்து பேர் (சகோ. ஃபிரட் சாத்மனும் மற்றவர்களும்) முழங்கால்படியிட்டு இந்த விவகாரத்தைக் குறித்து தேவனிடம் மன்றாடினோம். அப்பொழுது நான் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் வார்த்தையை எடுத்துக் கொண்டு அதன் பேரில் உரிமை கோரினேன். பரிசுத்த ஆவியானவர் தமது வார்த்தையை அங்கீகரித்து, கட்டளை கொடுத்தபோது, எனக்கு ஒரு தரிசனம் உண்டானது. அதில் மஞ்சள் நிற சட்டை அணிந்திருந்த ஒருவன் அந்த மோட்டார் வாகனத்தை கென்டகியிலுள்ள 'போலிங் கிரீன்' (Bowling Green) என்னும் இடத்தை நோக்கி ஓட்டிச் செல்வதைக் கண்டேன். பரிசுத்த ஆவியானவர் அவன் மேல் வந்து அவனைக் குற்றஞ் சாட்டினார். பாதி வழி சென்ற அவன் திரும்பி வந்து, அந்த நதிக்கு அப்புறமாயுள்ள ஒரு குறிப்பிட்ட தெருவில் காரை நிறுத்துவதை நான் தரிசனத்தில் கண்டேன். நான் முழங்காலிலிருந்து எழுந்து நின்று, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று இதை சகோதரர்களுக்கு அறிவித்தேன். அவர்கள் புறப்பட்டு அந்த தெருவுக்குச் சென்றபோது, அந்த காரைக் கண்டனர். அதில் பெட்ரோல் பாதி டாங்கு மாத்திரமே நிறைந்திருந்தது. அவன் போலிங் கிரீனை நோக்கி பாதி வழி சென்று திரும்ப அந்த இடத்தை அடைய சரியாக பாதி டாங்கு பெட்ரோல் செலவழிந்திருந்தது. இதற்கு சாட்சியாக அந்த மனிதர்கள் இங்கு அமர்ந்துள்ளனர். அது என்ன? “திரும்பக் கொடுத்துவிடு” என்று வற்புறுத்தல். அதைக் குறித்துதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் - “திரும்ப உரிமையாளரிடம் அளித்துவிடுதல்”. 51நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கும் உரிமையை பிசாசு கொள்ளை கொண்டிருந்தால், பரிசுத்த ஆவியானவரின் மூலம் இன்று காலை தேவனுடைய உரிமையை வற்புறுத்திக் கேட்க நமக்கு அதிகாரம் உண்டு - அதை தா என்று. உங்களை அவன் வியாதிக்குட்படுத்தியிருந்தால், “அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்'' என்னும் தேவனுடைய பிரமாணத்தை தேவனுடைய சமுகத்தில் நாம் உச்சரிப்போமாக. ஆமென். ”அவனை மீண்டும் கொண்டு வா. உன் பிடியைத் தளர்த்து. அவனை நீ மரணத்திற்கு கொண்டு செல்கிறாய். நாங்கள் அவனை உரிமை கோருகிறோம். அவனை மீண்டும் கொண்டு வா“ என்று? இப்பொழுது அதுதான் வற்புறுத்தல், பழைய நிலைக்கு திரும்ப கொண்டு வருதல். ஒரு மனிதன் வியாதியாயிருக்கும் போது, ஒரு பெண் வியாதியாயிருக்கும்போது, அல்லது ஒரு குழந்தை வியாதியாயிருக்கும்போது, அவர்கள் இயற்கை நிலையில் இல்லையெனலாம். அப்பொழுது நமது உரிமையை நாம் வற்புறுத்தலாம். அந்த உரிமை நம்முடையதல்ல. ஆனால் தேவன், “நமது மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார். அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்” என்னும் வாக்குறுதியை நமக்கு அளித்துள்ளதால், அந்த உரிமை நம்முடையதாகிவிடுகின்றது. இப்பொழுது அந்த பிரமாணத்தை வற்புறுத்த நமக்கு அதிகாரம் உண்டு. பிரமாணத்தை அளித்த பரிசுத்த ஆவியானவர் தாமே, தேவனுடைய பிரநிதியாக இங்கிருந்து கொண்டு, அது நிறைவேற கருத்தாய் கவனித்துக் கொண்டிருக்கிறார். ஆமென். அவர் கிரியை செய்யக் கூடிய ஒரே ஒரு வழி, அவர் கிரியை செய்ய நீங்கள் அனுமதித்தலாகும். பாருங்கள்? அதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். 52பிரமாணம் ஒன்றுண்டு. (ஓ, என் பொருளுக்கு எப்பொழுது வரப் போகிறேனோ?) ஒவ்வொன்றுக்கும் ஒரு பிரமாணம் அளிக்கப்பட்டுள்ளது. மீனுக்கு ஒரு பிரமாணம் உண்டென்று உங்களுக்குத் தெரியுமா? அந்த மீனானது இங்கே தண்ணீரில் நிற்கும், அது தன்னுள் ஒரு பிரமாணத்தைக் கொண்டிருக்கிறது. அதை உபயோகித்து அது கடலின் அடிப்பாகம் வரை சென்றாலும் எவ்வித பாதகமுமில்லை. அதன் ஒரு உறுப்பும் கூட சேதமடையாது. ஆனால் நீங்கள் அப்படி செய்து பாருங்கள்! அந்த பிரமாணம் உங்களுக்கல்ல. உங்களால் அப்படி செய்ய முடியாது. ஆனால் மீனில் முடியும். அது தனக்குள் இருக்கும் காற்றையெல்லாம் வெளியே அகற்றிவிடுவதால், அது வெடித்துப் போக அதற்குள் ஒன்றுமில்லை. அதன் அமைப்பு அப்படிப்பட்டது என்று அந்த மீனுக்குத் தெரியும். எனவே அந்த பிரமாணத்தைக் அமல்படுத்தி அது கடலின் அடிவரை சென்று, மீண்டும் மேலே எழும்பி வரமுடியும். 53ஓ, அதுபோலவே கிறிஸ்துவின் பிரமாணம் ஒன்றுண்டு. அது மனிதனுக்குள் இருக்கிறது. அவனை ஆழமான குழியிலோ அல்லது ஆழமான கடலிலோ அல்லது ஆழமான பாதாளத்திலோ நீங்கள் புதைக்கலாம். ஆனால் தேவனுடைய ஆவியின் பிரமாணம் அவனை மீண்டும் உயிரோடு கொண்டு வரும். பாருங்கள்? 54ஒரு பறவைக்கு ஒரு பிரமாணம் உண்டு. இப்பொழுது, அதன் சரீரம் பொருளாகும், அது பூமியைச் சார்ந்திருக்கும் ஒன்று, அதன் உடல் பூமியின் மேல் உட்காரலாம். ஆனால் அதற்குள் இருக்கும் பிரமாணத்தின் விளைவால் அது இறக்கைகளை விரித்து பறந்து சென்று நமது பார்வைக்கு மறைந்துவிடும். இந்த சாதனை விஞ்ஞானத்திற்கு விரோதமாயுள்ளது. புவிஈர்ப்பு சக்தி அதை பூமிக்கு இழுக்க வேண்டும். ஆனால் அது புவிஈர்ப்பு சக்தியையும் எதிர்த்து, தன்னை மேலே உயர்த்தி, உயர பறந்து செல்கின்றது. ஏனெனில் அதற்குள் இருக்கும் பிரமாணத்தை அது இயங்கச் செய்ய வேண்டும். அந்த பிரமாணத்தை அது இயங்கச் செய்ய வேண்டும். அந்த பிரமாணத்தைப் பெறுவதற்கென, அதற்கேற்ற உடலமைப்பை அது பெற்றுள்ளது. இப்பொழுது நான் பக்திவசப்படுகிறேன் 55இப்பொழுது நமக்கு ஒரு பிரமாணம் உண்டு. அதுதான நமக்குள்ளிருக்கும் ஜீவனின் பிரமாணம்... நாம் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று நாம் மறுபடியும் பிறந்து, கிறிஸ்துவின் சரீரத்தில் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் பொருத்தப்பட வேண்டியதாகும். நீங்கள் பிசாசுக்கு அடிபணிய அவசியமில்லை. நமக்கு ஒரு பிரமாணம் உண்டு. அதுதான் பரிசுத்த ஆவியின் பிரமாணம். நாம் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, தேவனை முற்றிலுமாக அனுமதிப்பதாகும். அவ்வளவுதான். ஆனால் நீ அதனுடன் சண்டையிட்டுக் கொண்டிருப்பாயானால் அது கிரியை செய்யாது. நீ தேவன் கிரியை செய்ய விடுவாயென்றால், இவ்வளவே போதுமானது... பாருங்கள்? 56மீன், “சற்று பொறுங்கள் நான் வேண்டிய அளவுக்கு பிராண வாயுவை உட்கொண்டு, கடலின் அடியில் செல்ல முடியுமா என்று பார்க்கிறேன்” என்று கூறுமா என்ன? இல்லவே இல்லை. அப்படி செய்தால் அது வெடித்துவிடும். பாருங்கள்? பறவை “ஆகாய விமானத்தைப் போல் நான் வேகமாக பூமியில் சிறிது தூரம் ஓடி, அங்கிருந்து எழும்பி பறக்க முடியுமா (Take off) என்று பார்க்கிறேன்” என்று கூறுமா? ஒருக்காலும் இல்லை. அப்படி செய்ய முயன்றால் அது விழுந்துவிடும். அந்த பிரமாணம் அதை எவ்விதம் செயல்படுத்துகிறது என்பதை அது அறிந்திருக்க வேண்டும். 57அது போன்று தான் நாமும் இருக்கிறோம். நாம் முயற்சி செய்து, “இப்படி செய்யாவிட்டால், அப்படி செய்யாவிட்டால்” என்பதல்ல. அது ஜீவனுடைய பிரமாணம் உனக்குள் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதே முக்கியம். உன்னைப் பூரணமாக அர்ப்பணித்து தேவனை அனுமதித்தலே காரியம். அப்பொழுது அவர் உன்னைச் சுகமாக்குதலுக்கு கொண்டு செல்வார்; உன்னைப் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்கு கொண்டு செல்வார்; அவர் வாக்குத்தத்தம் செய்துள்ள எதற்கும் உன்னைக் கொண்டு செல்வார். அவர் அளித்துள்ள வாக்குத்தத்தம் ஒவ்வொன்றும் உனக்கே உரியது. உன்னைப் பூரணமாக அர்ப்பணித்து, தேவனை அனுமதிக்கும்போது... 58உன் பொருளைத் திருடினவனை அதிகாரி நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் போது, அவரைப் பின்னால் இழுத்து, “அப்படி செய்ய வேண்டுமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லையே” என்று கூறுவாயானால், அந்த அதிகாரி அவனை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லவே முடியாது. அவனைக் கொன்டு செல்ல நீ அனுமதிக்க வேண்டும். அப்படித்தான் நீ செய்ய வேண்டும். சாத்தான் உன்னை விட்டுப் போகட்டும். அப்பொழுது எல்லா சந்தேகங்களும் மற்றவைகளும் உன் மனதை விட்டு அகலும். அப்பொழுது தேவன் உன்னை உயர்த்துவார். நல்லது. 59இப்பொழுது ஈஸ்டர் காலம். ஓ, ஈஸ்டர் என்றால் எனக்கு அதிக பிரியம். ஆம், ஐயா! ஆனால் இன்றைக்கு ஈஸ்டருடன் முயல் குட்டிகள், வாத்துக்கள், கோழிக் குஞ்சுகள், அழகான தொப்பிகள், புது ஆடைகள் போன்றவை சம்பந்தப்பட்டுள்ளன. ஈஸ்டர் என்பது அதுவல்ல, ஈஸ்டர் என்பது உயிர்த்தெழுதல், திரும்ப அளித்தல் - திரும்ப அளிக்கப்படுதல். அது தேவன் திரும்ப அளிக்கும் காலமாகும். நீங்கள் பூமியைப் பாருங்கள். தேவன் அதற்கு இயற்கையைத் திரும்ப அளிக்கிறார்; அது உண்மை. அவர் பூக்களை திரும்ப அளிக்கிறார். இலைகளை திரும்ப அளிக்கிறார். வயலின் பலன்களை திரும்ப அளிக்கிறார். 'ஈஸ்டர்' என்றால், 'திரும்ப கொண்டு வருதல்' என்று அர்த்தம். அது என்ன? ஒவ்வொன்றும் உரிமை கொண்டாடுகிறது. ஈஸ்டர் கோருகிறது - அல்லது அந்த பூ தான் மறுபடியும் எழும்ப உரிமையுண்டு என்று கோருகிறது. பாருங்கள்? தேவனின் இயற்கை விதி, ஒரு ஈஸ்டரை - உயிர்த்தெழுதலை - தோற்றுவிக்கிறது. அது மிகவும் அழகாயுள்ளது. சூரியன் மறுபடியும் தோன்றி, குளிர்காலம் பூமியில் கொன்று போட்டவைகளை திரும்ப அளிக்கிறது. 60பூமி சூரியனைச் சுற்றி வரும்போது, அது சூரியனை விட்டு தூரம் செல்கிறது என்று நாம் கற்பிக்கப்பட்டுள்ளோம் - பூமி சூரியனை (S-U-N) விட்டு தூரம் செல்கிறது (பாவியும் அதையே செய்கிறான். அவன் குமாரனை (S-O-N) விட்டு தூரம் செல்கிறான்). பூமி அவ்விதம் தூரம் சென்றுள்ள சமயத்தில், மரணம் நேரிடுகிறது - குளிர்காலம், ஜீவனோடுள்ள எவைகளையெல்லாம் கொல்ல முடியுமோ, அவைகளையெல்லாம் அது கொன்று போடுகிறது. அப்பொழுது விதைகள் பூமிக்கடியில் உறைந்து போயிருக்கும். சதை பாகம் (Pulp) அவைகளினின்று போய்விடுகிறது - எல்லாமே போய்விடுகிறது. ஆனால் சிறிது ஜீவன் அதில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. பூமியைப் பொறுத்த விஷயத்தில் சூரியன் மீண்டும் தன் ஸ்தானத்தை வகித்துக் கொண்டவுடனே, ஒரு ஈஸ்டர் உண்டாகின்றது - திரும்ப அளிக்கப்படுதல். பூக்கள் மீண்டும் தோன்றுகின்றன; எல்லாமே மேலெழும்பி வருகின்றன. குளிர் காலம் சேதப்படுத்தின அனைத்தையும் ஜீவனாகிய சூரியன் திரும்ப அளிக்கின்றது. 61அது போன்றே ஜனங்களிடையேயும் காணப்படுகிறது; பாரம்பரிய மார்க்கம் என்னும் குளிர்காலம் கொன்றுவிட்ட அனைத்தையும் இந்த கடைசி நாட்களில் தம்முடைய சபைக்கு வருகின்ற மனுஷ குமாரனின் நெருங்குதல், அதை மறுபடியுமாக ஜீவனுக்கு திரும்ப அளிக்கிறது. “நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” பாருங்கள்? தேவன் தமது பூக்களையும், தமது இலைகளையும், தமது இயற்கையையும், பூமியிலுள்ள தமது விதைகளையும் திரும்ப அளிக்கிறார். அவைகளைக் காணும் போது, தேவன் தமது வாசஸ்தலத்தையும் திரும்ப அளிப்பார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவர் தமது ஏதேனை திரும்ப அளிப்பார்; மரணம் சேதப்படுத்தின யாவையும் அவர் திரும்ப அளிப்பார். அது உண்மை. இப்பொழுது அது மரித்துப்போன நிலையிலேயே இருக்க வேண்டுமானால், அதற்கான ஒரே வழி அதை தவறான இடத்தில் வைப்பதேயாகும். அது சரியான இடத்தில் இருக்குமானால், அது திரும்ப ஜீவனைப் பெற வேண்டும். எனவே நாம் இழந்து போனவைகளை மீண்டும் பெறுவதற்கென, தேவன் நம்மை சரியான வாய்க்காலில் (Channel) வைத்திருக்கிறார். அது உண்மை. 62குளிர் காலம் சேதப்படுத்தின யாவையும் சூரியன் திரும்ப அளிக்கிறது. அது வற்புறுத்துகிறது (கவனியுங்கள்) சூரியன் திரும்ப வரும்போது என்ன செய்கிறது? கவனியுங்கள்; அது மரணத்தை வற்புறுத்துகிறது... வசந்த காலத்தில் சூரியன் பூமியின் நேர்க்கோட்டிற்கு வரும்போது, மரணம் தான் கொன்று வைத்திருக்கிற மரணத்தை (ஆமென்) உயிர்த்தெழுதலுக்கென்று ஒப்புவிக்க கட்டாயப்படுத்துகிறது. எதற்காக? ஒரு திரும்ப அளித்தல் - மறுபடியுமாக திரும்ப அளித்தல். எது அப்படி செய்கிறது? சூரியனின் வருகை. அது தேவனுடைய பிரமாணமாயுள்ளது. தேவன் சில விதிகளை பூமிக்கு அளித்திருக்கிறார் - புவிஈர்ப்பு விதி போன்றவை. இயற்கையிலுள்ள அனைத்தும் தேவனுடைய விதிகளை அனுசரித்து இயங்குகின்றன. பூ அதன் காலத்தை கழிக்கிறது; விதை அதன் காலத்தைக் கழிக்கிறது; பின்பு அது செத்து பூமிக்குள் செல்கிறது. அதன்பின்பு அது மீண்டும் தோன்றுகிறது. இப்பொழுது அது பூமிக்கடியில் செத்து கிடக்கின்றது. அதற்கு ஒன்றுமே நேரிடுவதில்லை. இங்குள்ள ஒரு விளக்கை எடுத்து அதன்மேல் வெளிச்சம் காட்டினாலும் எவ்வித பயனுமில்லை. நாம் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் தேவன் சில விதிகளை வைத்திருக்கிறார். சூரியன் மீண்டும் தோன்றி அதன் வெளிச்சம் விதையின் மேல் பட்டவுடனே, அது விதையிலுள்ள ஜீவனை கட்டாயப்படுத்தி வெளியே கொணர்கிறது. மரணம் இனி இன்னுமாக அதை பிடித்துக் கொண்டிருக்க முடியாது. 63சூழ்நிலைகளை பொருட்படுத்தாத, தம்முடைய பிரமாணங்கள், விதிகள் யாவும் தம்மை சேவிக்கும்படியாகத் தான் தேவன் வைத்திருக்கின்றார், இயற்கை மற்றும் ஆவிக்குரிய இரண்டும். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதைக் குறித்த வேத வாக்கியம் ஒன்றை இங்கு எழுதி வைத்துள்ளேன். ஆம், ஐயா! தேவன் தமது விதிகள் அனைத்தும் இயங்கும்படி செய்துள்ளார், அதை சற்று யோசித்து பாருங்கள். அது உங்கள் இருதயங்களில் பதியட்டும். ஏனெனில் இன்னும் சில நிமிடங்களில் நாம் சுகமளிக்கும் ஆராதனையை நடத்தப் போகிறோம். பாருங்கள்? தேவன் தமது விதிகள் அனைத்தும் இயங்கும்படி செய்துள்ளார். அவை அவருடைய வார்த்தையின்படி இயங்க வேண்டுமென்று அவர் கட்டளையிட்டிருக்கிறார் (உங்களுக்குப் புரிகிறதா? பாருங்கள்?) - அவருடைய வார்த்தை. அவருடைய வார்த்தையின் படியே அவருடைய விதிகள் இயங்க வேண்டும். அவர் சூரியனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவர் சந்திரனுக்கு கட்டளையிட்டிருக்கிறார். அவர் பூமிக்கு கட்டளையிட்டிருக்கிறார். அவர் இயற்கைக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அவையனைத்தும் கீழ்ப்படிகின்றன. எல்லா விதிகளும் தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தைக்கு கீழ்ப்படிந்து ஒருங்கே செயல்படுகின்றன. நமக்குள் இருக்கும் ஜீவனுடைய பிரமாணமும் நம்மை உயிரோடெழச் செய்யும், அது செய்யத்தான் வேண்டும். அப்படி செய்யாமலிருப்பது என்பது கூடாத காரியம். 64ஆகவே தான் கிறிஸ்துவுக்குள்ளிருந்த ஜீவனுடைய ஆவியின் பிரமாணமும்... “என்னுடைய பரிசுத்தவானை அழிவைக் காண வொட்டேன். அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடேன்” என்று தேவனுடைய வார்த்தை உரைக்கப்பட்டது. எனவே அவருடைய சரீரத்தை கல்லறையில் அழிப்பதற்கு போதிய காலங்களும், பிசாசுகளும், மற்றவைகளும் இருக்கவேயில்லை. ஏனெனில் தேவனுடைய பிரமாணம் அவருடைய வார்த்தையை நிறைவேற்ற வேண்டியதாயுள்ளது. சூழ்நிலை என்னவாயிருந்தாலும் தேவனுடைய பிரமாணம் பரிசுத்த ஆவியானவரின் மூலம் எந்த வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்றுகிறது. (உங்களுக்கு விளங்குகின்றதா?) 65யோபு, “இந்த தோல் புழுக்கள் என் சரீரத்தை அழித்துப் போட்டாலும் நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்” என்றான் (யோபு: 19:26). நாம் எவ்வளவு சிறியவராகவும், தாழ்ந்தவராகவும், அசுத்தமுள்ளவர்களாகவும், பரிசுத்தமற்றவர்களாகவும், வியாதியுள்ளவர்களாகவும், துன்பப்படுகிறவர்களாகவும், இருந்தாலும், தேவனுடைய ஆவியின் பிரமாணம், தம்முடைய வார்த்தையின் மூலம் எல்லாவற்றையும் வற்புறுத்தி அவைகளைக் கீழ்ப்படியச் செய்து, அதை 'திரும்பத் தா' என்கிறது. ஆமென். ஓ, சூழ்நிலை என்னவாயிருந்த போதிலும், அதை கட்டாயப்படுத்துகிறது என்பதை ஒரு நிமிடம் சிந்தனை செய்து பாருங்கள்! சூழ்நிலை என்னவாயிருப்பினும், தேவனுடைய வார்த்தையின் பிரமாணம் சூழ்நிலையை கட்டாயப்படுத்தி, தேவனுடைய வார்த்தைக்கு இணங்கும்படி செய்கிறது. பாருங்கள்? நிச்சயமாக அது அப்படித்தான் செய்ய வேண்டும். இப்பொழுது இங்கு ஒரு பூ அழுகிக் கிடக்கிறது. அது மரித்துப் போயிருக்கிறது. விதைகள் அழுகிப்போயின. அதன் சதை (Pulp) போய்விட்டது. அதனால் பரவாயில்லை. அது மறுபடியும் முளைத்தெழும்புகிறது. ஏனெனில் அது முளைத்தெழும்ப வேண்டுமென்று தேவன் ஒரு பிரமாணத்தை வைத்துள்ளார். 66யோபு பூமியில் புதைக்கப்பட்டபோது... இயேசு இங்கே வருவதற்கு நாலாயிரம் ஆண்டுகள் முன்னரே அவன் இயேசு வருவதைக் கண்டான். நாலாயிரம் ஆண்டு காலத்தில் மரித்துப்போன ஒரு சரீரத்திற்கு என்ன நேரிட்டிருக்கும் என்று சற்று சிந்தனை செய்து பாருங்கள். அது அழுகிப்போய் ஒரு கரண்டி நிறைய சாம்பலும் கூட இராது. ஆயினும் யோபு , “என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்'' என்றான். அவருடைய மரணம், அடக்கம் பண்ணப்படுதல், மற்றும் உயிர்த்தெழுதலிற்கு பிறகு பூமியின் தூளில் நித்திரை செய்து கொண்டிருந்த அநேக பரிசுத்தவான்கள் தூளிலிருந்து வெளியே எழுந்து வந்தனர் என்று மத்தேயு: 27-ல் கூறப்பட்டுள்ளது. ஏன்? அந்த தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தையை உரைத்தான். வார்த்தை உரைக்கப்பட்டுவிட்டது. எனவே தேவனுடைய பிரமாணம் பரிசுத்த ஆவியானவரின் உதவியினால் அவர்களை உயிரோடெழுப்பினது. “அவர்கள் நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்'' என்று வேதம் கூறுகிறது. இயேசு மாத்திரம் உயிரோடெழவில்லை, ஆனால் பரிசுத்தவான்களும் அவருடனே உயிரோடெழுந்தனர். 67ஏன்? “வாசல்களே உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்” என்று சங்கீதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஏன்? அவர் மரணம், பாதாளம், கல்லறை, வியாதி இவைகளின் மேல் வெற்றி சிறந்து, மூன்றாம் நாள் உயிரோடெழுந்து, உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கினார். அது என்ன? சிறைப்பட்டவர்கள் இப்பொழுது நமக்குள்ள வாக்குத்தத்தம் நிறைவேற எதிர்நோக்கியிருந்தனர். ஓ, சகோதரனே, அவர்களுக்குப் பரிசுத்த ஆவி கூட கிடையாது. ஆனால் அவர்கள் விசுவாசத்தினால் நற்சாட்சி பெற்றிருந்தனர். விசுவாசத்தினால் அவர்கள் சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள். அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள்; ஸ்திரீகள் சாகக் கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள் - வாக்குத்தத்தம் இல்லாமலேயே! ஓ, ஒரு ஆட்டுபலியின் கீழ் அவர்கள் இருந்து கொண்டு எதிர் நோக்கியிருந்தனர். அந்த பலி பாவத்தைப் போக்கவில்லை. அது பாவத்தை மூடினது. ஆனால் ஒருவர் வரப் போகிறார் என்று அவர்கள் விசுவாசித்தனர், நிழலாயிருக்கும் ஒன்றை அவர்கள் ஆதாரமாகக் கொண்டு (ஆமென்!) விசுவாசத்தினாலே அவர்கள் உரிமை கோரினார்கள். அவர்கள் உறுதி கொண்டு செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும், போர்த்துக் கொண்டு, வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள். ஓ, இந்த ஜனங்கள் உயிர்த்தெழுதலை எதிர்நோக்கினவர்களாய், விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்று மரித்தார்கள். யோபின் மூலமாகவும் மற்ற தீர்க்கதரிசிகள் மூலமாகவும் உரைக்கப்பட்ட வார்த்தையின் நிறைவேறுதலாக, தேவனுடைய பிரமாணம் ஈஸ்டர் காலையன்று அவர்களை உயிரோடெழுப்பியது. ஓ, என்னே! 68பார்த்தீர்களா? உயிரோடெழவில்லை, ஆனால் பரிசுத்தவான்களும் அவருடனே... மரிப்பதென்பது கடினமான காரியமல்ல. சிலர் சிந்தை இழந்தவர்களாய் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். சிலர் தீரமான செயல்களில் ஈடுபட்டு மரித்து, அவர்களுடைய சடலங்கள் தகனம் செய்யப்பட்டு, அதன் அஸ்தி நான்கு திசைகளிலும் தூவப்படுகின்றது. ஆனால் அத்தகைய செயல்கள் நியாயத்தீர்ப்பை தடுத்துவிட முடியாது. எப்படியாயினும் நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு வரத்தான் வேண்டும். ஆம், ஐயா! 69பாருங்கள்? சூழ்நிலை என்னவாயிருந்தாலும், நீங்கள் தேவனை ஒரு நாளில் சந்தித்தே ஆகவேண்டும். அவரிடம் நீங்கள் வரத்தான் வேண்டும். பாருங்கள்? ஏன்? அவர் ஒரு வார்த்தையை உரைத்து, அதனுடன் ஒரு பிரமாணத்தையும் வைத்திருக்கிறார். பிரமாணமானது அவருடைய சொந்த பிரமாணமாகும், தம்முடைய சொந்த ஜீவனை அதற்கு பின்னால் வைத்திருக்கிறார். ஆகவேதான், தம்மைக் காட்டிலும் பெரியவர் இல்லாதபடியால், தம்மில் தாமே அவர் ஆணையிட்டார். பாருங்கள்? அவர் ஒரு ஆணையைச் செய்ய வேண்டியிருந்தது. ஏனெனில் ஆணையின்றி எந்த ஒரு உடன்படிக்கையும் உறுதிப்படுத்தப்படாது. எனவே அதை நிறைவேற்ற அவர்தாமே அதை தம்மேல் சுமந்து, அவரே அந்த ஆணையானார் (ஓ, சகோதரனே). தேவன் மனிதனான போது, அவரே தம்மை அந்த ஆணையாக்கிக் கொண்டார். அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் இவைகளின் மூலமாய் அவருடைய பிரமாணங்கள் உண்மை என்பதை அவர் நிரூபித்தார். அவர், “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்” என்றார். நான் (தனிப்பட்ட பிரதிப் பெயர் - Personal Pronoun) “மூன்று நாளைக்குள்ளே நான் இதை எழுப்புவேன். அதை இடித்துப் போட்டுவிட்டு, என்ன நேரிடுகிறதென்று பாருங்கள்”, அவர் தேவனுடைய பிரமாணத்தை அறிந்திருந்தார். அது என்னவென்று அவருக்குத் தெரியும். தேவனுடைய வார்த்தையின் படிதான் அது கிரியை செய்ய வேண்டும் என்று அவர் அறிந்திருந்தார். ஒரு தீர்க்கதரிசியின் மூலம், “என் பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டேன்'' என்று உரைக்கப்பட்டுவிட்டது என்று அவருக்குத் தெரியும். அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது. அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது! 70அப்படியானால் தேவனுடைய பிரமாணம் அந்த வார்த்தையின்படி கிரியை செய்ய வேண்டும் (இன்னும் சில நிமிடங்களில் ஒரு பெரிய காரியத்திற்கு நாம் வரப் போகிறோம். பாருங்கள்? பாருங்கள்? நாம்...) தேவனுடைய வார்த்தையின் பிரமாணமானது அவருடைய வார்த்தையுடன் இருக்கிறது. இப்பொழுது நீதிமன்றம், “இதைச் செய்தால் இந்த தண்டனை” என்று தீர்ப்பு கூறினால், அது நீதிமன்றத்தின் தீர்ப்பானதால், அதன் சட்டம் அந்த தீர்ப்பை அமுல்படுத்துகின்றது. தேவன் ஒன்றைப் பேசுகிறார், அது ஒரு பிரமாணம் ஆகும்; அந்த பிரமாணத்தை ஒரு விசுவாசிக்கு அமல்படுத்த (ஆமென்) பரிசுத்த ஆவி இங்கே இருக்கிறது. அவ்விதமாக செய்யப்பட நீங்கள் முன்குறிக்கப்பட்டவர்களாய் இருக்க வேண்டும். அது விசுவாசிக்கு மாத்திரமே உரியது. நீங்கள் விசுவாசியின் சின்னத்தை (badge) அணிந்து கொண்டிருப்பது அவசியம். “உங்களிடம் வல்லமை உள்ளதா?” என்று சிலர் கேட்கலாம். இல்லை, ஆனால் எங்களிடம் அதிகாரம் உள்ளது - வல்லமையல்ல, அதிகாரம். எதைச் செய்யவும் எங்களிடம் போதிய வல்லமை கிடையாது. 71சில நாட்களுக்கு முன்பு, லூயிவில்லில் நின்று கொண்டிருக்கும் போலீஸ்காரனைக் குறித்து உங்களிடம் கூறினேன், அவன் உருவத்தில் என்னைக் காட்டிலும் சிறியவன். அவனுடைய தொப்பி அவனுடைய காதுகளை மூடியிருக்கும். அவனுடைய உடுப்பு பாதிக்குமேல் வெளியே தொங்கிக் கொண்டிருக்கும். அவன் தொப்பியை அணிந்து, கையில் ஒரு சிறு கோலுடனும் ஒரு சிறு ஊதலுடனும் நின்று கொண்டிருக்கிறான். சக்தி வாய்ந்த கார்கள் ஜும், ஜும் என்று மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன. (அவைகளில் சிலவற்றிற்கு முன்னூற்று ஐம்பது குதிரைகளில் சக்தி கொண்டதாய் இருக்கும்) அந்த சிறு உருவம் படைத்தவன் தன் சொந்த பெலத்தினால், ஓடும் ஒரு சிறு குதிரையைக் கூட பிடித்து நிறுத்த முடியாது. நிச்சயமாக முடியாது. ஆனால் பளபளக்கும் காவற்படை சின்னத்தை (badge) அணிந்தவனாய், அவன் தெருவில் நின்றுகொண்டு, ஊதலை ஊதி கையைக் காட்டும் மாத்திரத்தில், சக்திவாய்ந்த அந்த பெரிய கார்கள் (சில கார்களுக்கு 300 குதிரை சக்திகள் உள்ளன) உடனே நின்றுவிடுகின்றன. அது மனிதனுடைய வல்லமையல்ல, அவன் பெற்றுள்ள அதிகாரம். சபையும் அவ்வாறேயுள்ளது. அது பரிசுத்த உருளுபவர் கொண்ட கூட்டமாயிருக்கலாம். நீங்கள் கேலியாக அதை என்ன வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால் அது அதிகாரத்தைப் பெற்றுள்ளது. ஹூ - ஹூம். அது தான் அதன் பின்னால் இருக்கின்ற அதிகாரமாகும். அதுதான் அதை கிரியை செய்ய வைக்கிறது. சூழ்நிலை என்னவாயிருப்பினும், தேவனுடைய பிரமாணம் அவருடைய வார்த்தையுடன் இணைந்து செயல்படுகின்றது. உங்கள் ஸ்தாபனக் கோட்பாடுகளுடன் அது இணைந்து செயல்பட முடியாது. தேவனுடைய வார்த்தையுடன் மாத்திரமே அது இணைந்து செயல்படும். ஆம், வார்த்தையுடன் மாத்திரமே. அவ்வளவுதான். இப்பொழுது சூழ்நிலைகள் என்னவாயிருப்பினும்... 72நாம் சற்று முன்பு வாசித்தோமே, ஆபிரகாமின் மனைவி ஆபிரகாமிடம் திரும்ப அளிக்கப்பட வேண்டியதாயிருந்தது. ஏன்? ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம் ஒன்றை அருளியிருந்தார். ஆனால் இந்த ராஜாவோ அவளை மனைவியாக அடைய, அவளைக் கொண்டு சென்றுவிட்டான். என்ன நேர்ந்திருக்கும்? ஆபிரகாமை ஒரே நிமிடத்தில் அவர்கள் கொன்று போட்டிருப்பார்கள். ஆபிரகாம் அப்படித்தான் சொன்னான். அபிமெலேக்கு ராஜா (அங்கே இருந்த அந்த பெலிஸ்திய ராஜா) அவளைப் பிடித்ததை அவன் கண்ட போது, அவன் “இப்பொழுது நீ... நான் உன்னைக் கேட்டுக் கொள்வதென்னவெனில், நான் உன் சகோதரன் என்று கூறிவிடு, ஏனெனில்... நீ ஒரு அழகான பெண், இப்பொழுது நீ அழகாயிருப்பதை அவன் காண்பானானால் நான் - நான் - நான் கொல்லப்படுவேன், பிறகு அவன் உன்னை கொண்டு போய் உன்னை மணந்து கொள்வான்” என்றான். 73அபிமெலேக்கின் ஆள் சாராளை அபிமெலேக்கினிடம் கொண்டு சென்றான். அவள் மிகவும் அழகாயிருந்தாள். அவளுக்கு நூறு வயதுதான் ஆகியிருந்தது! ஆகவே அவள், அவள்... தேவன் நாம் எல்லோருக்கும் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர்கள் மூலமாக காண்பித்தார், அதை நான் என் செய்திகளிலும், ஒலி நாடாக்களிலும் தேவனுடைய வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு நிரூபித்திருக்கிறேன். அது உண்மை. மானிடவர்க்கத்திற்கு அவர் என்ன செய்யப் போகின்றார் என்பதை அவர் ஆபிரகாம், சாராள் இவர்களின் மூலம் நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். அது உண்மை. 74இப்பொழுது, அதோ அவள், ஆகவே அபிமெலேக்கு சாராளை மனைவியாகக் கொண்டான் - அபிமெலேக்கு. ஆகவே அவளை அவன் தன்னுடைய மனைவியாக இப்பொழுது ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தான். தேவன் ஆபிரகாமிடம், “சாராளின் மூலம் உனக்கு ஒரு மகன் பிறப்பான்'' என்று வாக்குரைத்திருந்தார். ஆனால் இங்கு ஒரு வாலிபன் அவளை மனைவியாக அடைகிறான். ஆபிரகாம் நூறு வயதுள்ளவனாய் அங்கு இருக்கிறான். ஆனால் அதனால்... தேவன் அபிமெலேக்கிடம் என்ன கூறினார் என்று கவனித்தீர்களா? “ஆம், உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன். அதனால் தான் நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன். அவளை அவளுடைய புருஷனிடத்திற்கு திரும்ப அளித்துவிடு. அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் உனக்காக வேண்டுதல் செய்வான். நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், உன்னை நான் பூமியிலிருந்து நிர்மூலமாக்குவேன்” என்றார். பார்த்தீர்களா? என்ன? தேவனுடைய வார்த்தை நிலை நிற்க வேண்டும். எந்த மனிதனும் சாராளைத் தொட முடியாது. தேவன் வாக்குத்தத்தம் ஒன்றைச் செய்திருந்தார். 75சாராள் சபைக்கு முன்னடையாளமாயிருக்கிறாள். உண்மையான சபை, சுயாதீனமுள்ள ஸ்திரீ, சுயாதீனமுள்ள பிள்ளை, வாக்குத்தத்தத்தைப் பெற்று மறுபடியும் பிறந்த சபைக்கு எடுத்துக் காட்டு. அவர்கள் என்ன வேண்டுமானாலும் நம்மை அழைத்து பரிகாசம் செய்யட்டும் - பரிசுத்த உருளுபவர் என்றோ, மூட நம்பிக்கையுள்ளவர்கள் என்றோ, பெந்தெகொஸ்தே நாள் தொடங்கி அவர்கள் இதை தடுத்து நிறுத்த முயன்று வந்துள்ளனர். அவர்களால் முடியவே முடியாது. இல்லை, ஐயா! அவளுக்கு எதையும் செய்யாதே; அவ்வளவுதான். நான் இங்கு நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாய் தேவன் அந்த உண்மையான சபைக்கு ஏதோ ஒன்றைச் செய்யப் போகின்றார். அந்த காலத்திற்குத் தான் நாம் வந்திருக்கிறோம். இன்னும் சில நிமிடங்களில், நாம் எங்கு வந்துள்ளோம் என்பதை தேவனுடைய உதவியைக் கொண்டு நிரூபிப்பேன். அவர்கள் அதை அழிக்கப் போவதில்லை, அது அழிக்கப்படவும் முடியாது. அது உண்மை. 76“உன் கையை அவளிடமிருந்து விலக்கு”. ஏன்? மாம்சத்துக் குரிய அந்த சந்ததி தோன்ற வேண்டியதாயிருந்தது. சாராள் வேறொருவனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தால், அந்த சந்ததி தோன்றியிருக்காது. மாம்சத்துக்குரிய சந்ததியையே தேவன் அவ்விதம் பாதுகாத்திருப்பாரானால், ஆவிக்குரிய ராஜரீக சந்ததியை அவர் இன்னும் எவ்வளவு அதிகமாக பாதுகாப்பார்! சாத்தானே, அவர்களைத் திரும்பக் கொடுத்துவிடு; அவர்களை அவிழ்த்துவிடு. ஸ்தாபனங்களில் அவர்களை ஒடுக்கி வைத்திருக்காதே. அவர்கள் சுயாதீனமுள்ளவர்கள். அவர்களை தனியே விட்டுவிடு. அந்த ராஜரீக சந்ததியை அவிழ்த்துவிடு. 77இப்பொழுது தேவன் திரும்ப அளிப்பதைக் குறித்து யோவேல் புத்தகத்தில் பேசுகிறார்...(முன்னொரு நாள். இதே பொருளின் பேரில் வேறொரு கோணத்தில் பிரசங்கித்தேன்... இன்று நான் செய்ய எத்தனித்துள்ளது போல், அன்று விவரமாக பேசவில்லை. இன்றைக்கும் விவரமாக பேச வேண்டிய அளவுக்கு சமயமிராது). தேவன் நட்ட கனிதரும் மரத்தைக் குறித்து அவர் யோவேலில் பேசுகின்றார். தேவன் கனிதரும் மரம் ஒன்றை பெந்தெகொஸ்தே அன்று நட்டார். ஒரு நோக்கத்திற்காக அவர் அதை நட்டார். அவருடைய வார்த்தை என்னும் கனியை அது தர வேண்டுமென்பதற்காக அவர் அதை நட்டார். காலங்கள்தோறும் அவருடைய வார்த்தையைப் பின்பற்றும் சபை ஒன்று இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். ஏவாள் அதைப் பின்பற்ற தவறிவிட்டாள். யூதர்கள் அதைப் பின்பற்ற தவறிவிட்டனர்; நியாயப்பிரமாணமும் தவறிப்போனது. எல்லாமே தவறிப் போயின. எனவே தேவன் தமக்கென ஒரு மரத்தை நட்டார். 78இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள். ஏதேன் தோட்டத்தில் இரண்டு மரங்கள் இருந்தன என்று நமக்குத் தெரியும், அதைக் குறித்த எந்தவிதமான கருத்தையும் உங்கள் விருப்பத்திற்கேற்ப நீங்கள் கொண்டிருக்க உரிமையுண்டு. ஆனால் எனக்கு ஒரு கருத்து உண்டு. அது எப்படியாயினும், அதில் ஒன்று பழுதடைந்த மரம். அது பழுதுபட்டது. மற்றது பழுதடையவில்லை. அதுதான் பரலோகத்திலிருந்து வந்த ஜீவ விருட்சம். அவர், “உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்; ஆனால் இந்த மரத்திலிருந்து புசிக்கிறவன் என்றென்றைக்கும் ஜீவித்திருப்பான்” என்றார். ஏதேன் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த ஜீவ விருட்சத்தை தேவதூதன் காவல் புரிந்தான். ஆவிக்குரிய விதமாகக் கூறினால், அந்த ஜீவ விருட்சம் ஏதேன் தோட்டத்தில் உள்ளது. கவனியுங்கள், தேவன் நட்ட மரம் ஒன்பது வகை கனிகளைத் தரவேண்டும் - அதாவது ஒன்பது ஆவியின் வரங்கள். ஒன்பது ஆவியின் கனிகள், ஒன்பது ஆவியின் வரங்களுடன் இணைகின்றது. அது தேவனுடைய மரம், அவர் அதை பெந்தெகொஸ்தே நாளன்று நட்டார். 79இங்கு நாம் நிறுத்திக் கொள்வோம். நமக்கு எப்பொழுதுமே அளவான சமயம் தான் உள்ளது. நான் எழுதி வைத்துள்ள சில வேத வாக்கியங்களை படிக்காமல் விட்டுவிட்டு, முதலாம் சங்கீதத்துக்கு செல்வோம். அனேக ஆண்டுகளுக்கு முன்பே தாவீது இந்த மரத்தைக் கண்டான். மகிழ்ச்சியளிக்கும் கீதங்களை அவன் எழுதத் தொடங்கினபோது, இதைத்தான் அவன் முதலாவதாக எழுதினான். அவன் அந்த மரத்தைக் கண்டான். அது நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டிருந்தது. “அவன்... மரத்தைப் போலிருப்பான்.” தேவனுடைய மரம் எங்கு நடப்பட்டிருந்தது? நீர்க்கால்களின் (பன்மை) ஓரமாய். நீரின் (ஒருமை) கால்கள் (பன்மை) மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன் என்றல்ல, இல்லை, இல்லை! (ஒரே நீரின் வெவ்வேறு ஆறுகள் (Rivers of water) என்று ஆங்கில வேதாகமத்தில் எழுதியுள்ளது; நீர்க்கால்கள் என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) ஒரே ஆவியின் ஒன்பது வரங்கள்; ஒரே வாய்க்காலின் மூலம் வரும் ஆவியின் ஒன்பது கனிகள். “அவன் ஆறுகளின் தண்ணீ ர் ஓரமாய் நடப்பட்ட மரத்தைப் போலிப்பான்”. 80தாவீது அதைக் கண்டு, அதைக் குறித்து பேசினான். “அந்த மனிதன் பாக்கியவான்'' என்று. கவனியுங்கள், அவன் மரிக்க முடியாது என்று தாவீது கூறினான்; அவனுடைய இலைகள் உதிர்வதில்லை. இல்லை, இல்லை! அவர்கள் என்ன செய்ய முயன்றாலும், அந்த மரத்தைக் கொல்ல முடியாது. ஏன்? அது நடப்பட்டுள்ள இடம் அப்படிப்பட்டது. அதுதான் முக்கியமான காரியம். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டிருக்கிறான். இப்பொழுது கவனியுங்கள், ”அதன் வேர்கள் சாவதில்லை“ என்று தாவீது கூறினான். 81நீங்கள் பழமையான பெரிய மரத்தைக் காண்பீர்களானால்... நான் சிறுவனாயிருந்தபோது, மற்ற பையன்களுடன் வெளியே செல்வது வழக்கம். அங்கு பழமையான பீச் மரம் (Peach Tree) ஒன்றின் கீழ் உட்காருவோம். மரத்தை வேரோடு பிடுங்கிவிடும் அளவிற்கு காற்று பலமாக அடிக்கும். ஆனால் ஒவ்வொருமுறை காற்று பலமாக அடிக்கும் போதும், அது மரத்தை அசைத்து, வேர்களைத் தளரச் செய்து, அந்த வேர்கள் இன்னும் ஆழமாகச் சென்று மரத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ள உதவும். அப்படித்தான் கிறிஸ்தவனைப் பார்த்து மற்றவர்கள் கேலி செய்தலும் அமைந்துள்ளது.துன்புறுத்தல் கிறிஸ்தவனை அசைத்து, அவன் அதிகமாக ஜெபிக்க அவனை ஊக்குவித்து, புயல்களையும் தாங்கும் அளவிற்கு அவனை ஆழமாகப் பதியச் செய்கிறது. 82இப்பொழுது ஒன்பது நீரூற்றுக்கள் தண்ணீர் பாய்ச்சுகின்ற இடத்தில் அவன் நடப்பட்டிருக்கும் போது, அது எவ்விதமாயிருக்கும் என்று சிந்தனை செய்து பாருங்கள். ஓ, என்னே! எவ்விதம் நிறுவப்பட்டிருக்கிறான்! ஆறுகளின் நீரில் (ஒரே நீர், ஒரே ஆவி) நடப்பட்ட ஒரு மனிதன். அதே ஆவியினால் சுகமாக்கும் வரங்களையும், அதே ஆவியினால் தீர்க்கதரிசன வரங்களையும் பெற்றிருக்கிறான். ஒரே ஆவி, ஆனால் அநேக வரங்கள்; அவைகளை அளிப்பவர் ஒருவரே. இப்பொழுது தாவீது அவனை நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரமாகக் கண்டான். அவன் மரிக்க முடியாது. ஏன்? அந்த வேர்களில் ஜீவன் இருந்தது. ஒரு மரத்தின் சத்து அல்லது ஜீவன் எங்குள்ளது? அது வேர்களில் தங்கியுள்ளது. நிச்சயமாக. அது மேலே எழும்பி கனிகளைத் தருகிறது. அது சரி. கவனியுங்கள், காலங்களில் அவருடைய கனியைத் தரத் தக்கதாக அவனுடைய வேர்களில் ஜீவன் இருந்தது. 83இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், இந்த மரமானது தன்னுடைய கனியை உதிரச் செய்யாது. இப்பொழுது, நீங்கள் ஒரு மரத்தை எடுத்து அதை தண்ணீருக்கு அப்பால் நட்டுப் பாருங்கள்! முதலாவதாக என்ன சம்பவிக்கும் என்று தெரியும். அதில் சிறு ஆப்பிள் பழங்கள் தோன்றும். ஆனால் அவை முடிச்சாகவும் புழுக்கள் தின்றதாகவும் இருக்கும். ஆனால் அதுவோ தன்னுடைய - தன்னுடைய - தன்னுடைய விளைச்சலைக் கீழே உதிரச் செய்துவிடும். இன்றைய சபைகள் அத்தகைய நிலையில்தான் உள்ளன. நீங்கள் அந்த நீர்க்காலிற்கு அப்பாலே சென்றுவிட்டீர்கள். ஆவியின் வரங்களுக்கு அப்பாலே சென்றுவிட்டீர்கள்; அவர்கள் ஒரு மாமிசப் பிரகாரமான சபையை மாத்திரமே உடையவர்களாக இருக்கின்றனர். மேலும் ஆவியின் வரங்களிலிருந்தும் ஆவிக்குரிய காரியங்களிலிருந்தும் அவர்கள் அதிக தூரம் சென்றுவிட்டனர். அவர்கள் தங்களுடைய கனியை உதிரச் செய்துவிட்டனர். அவர்கள் என்ன செய்கின்றனர்? அவர்கள் விசுவாசிகளென்று தங்களை அழைத்துக் கொண்டு, அதே சமயத்தில் உலகத்துடன் வாழ்ந்து, உலகத்தாரைப் போல் வாழ்க்கை நடத்தி, திருடி, ஏமாற்றி, பொய் சொல்லி, புகை பிடித்து, மது அருந்தி, சூதாடி, போதகருக்கு சம்பளம் கொடுப்பதற்கென, 'பங்கோ' (Bunco) விருந்துகள், சூப் இரவு ஆகாரம் விருந்துகள் (Soup Suppers) போன்றவைகளை வைத்து, நடனமும் ஆடுகின்றனர். பாருங்கள்? அவர்கள் தங்கள் கனிகள் உதிரும்படி செய்துவிட்டனர். உலகத்தில் நடப்பது போன்றே அங்கேயும் நடக்கிறது. அவிசுவாசிகள் அதைக் கண்டு, “எனக்கும் அவர்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை” என்கின்றனர். 84அதன் விளைவாகவே கம்யூனிஸம் ருஷியாவில் எழும்பினது. அதன் காரணமாகவே அவர்கள் மெக்ஸிகோவில் கத்தோலிக்க ஆலயம் ஒன்றை எரித்துப் போட்டனர். கத்தோலிக்க கன்னியாஸ்திரீகள் தவறான முறையில் பெற்றெடுத்த குழந்தைகளைக் கொன்றுபோட்டு, சடலங்களை சுண்ணாம்புக் குழிகளில் எறிந்துவிட்டிருக்கின்றனர். அந்த சுண்ணாம்புக் குழிகளை நான் அங்கு கண்டேன். முழு வளர்ச்சி பெற்றிருந்த குழந்தைகளின் சடலங்கள் அந்த சுண்ணாம்புக் குழிகளுக்குள் இருந்தன. அவர்கள் என்ன செய்தனர்? தங்கள் கனிகளை உதிரும்படி செய்துவிட்டனர். தேவன் அந்த மரத்தைக் குலுக்கி, அவைகள் உதிரும்படி செய்தார். அவ்வளவுதான். பாருங்கள்? 85ஆனால் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட (நீட்டிக் கொண்டிருப்பதல்ல, நடப்பட்டது) மனிதனோ தன் காலத்தில் அவருடைய கனியை (கவனியுங்கள்) அவருடையது, கனியைத் தருவான். நீங்கள் அதைப் படித்துக் கொண்டிருக்கிறீர்களா? சங்கீதம்: 1: “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் அவருடைய கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். (பார்த்தீர்களா? கவனியுங்கள்!). துன்மார்க்கரோ அப்படியிராமல்...” துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பில் நிலை நிற்பதில்லை. பார்த்தீர்களா? 86அவன் தன் காலத்தில் அவருடைய கனியைத் தருகிறான். (ஆங்கிலத்தில் HE shall bring forth HIS fruit என்றிருக்கிறது. இரண்டாம் 'His' ஐ 'தேவனுடைய' என்பதாக தீர்க்கதரிசி அர்த்தப்படுத்துகிறார் - தமிழாக்கியோன்) அது அவருடைய கனி. தேவனுடைய கனி அந்த காலத்தில் அந்த, அந்த தீர்க்கதரிசி அதைத் தருகின்றான். அது அந்த தீர்க்கதரிசியின் காலத்தில் இருக்கும்; தேவனுடைய நேரத்தின்படியான தீர்க்கதரிசியின் காலத்தில் தேவனுடைய கனி. “தன் காலத்தில் அவர் கனியைத் தருவான்.” அங்கே இரண்டு (his, அவனுடைய) என்பதாக இருக்கிறதா. அவன் அவருடைய, தேவனுடைய கனியைத் தருகிறான். பாருங்கள்? செய்தியாளன் வர வேண்டுமென்று நியமிக்கப்பட்டிருக்கும் காலத்தில்... தேவனுடைய கனியை, தூதுவன், அவன் அவைகளை... இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், தேவனுடைய கனியைக் கொண்டு வருகின்ற செய்தியாளன் அதை தேவனுடைய காலத்தில் கொண்டு வருகிறான், கனியைக் கொண்டு வருகிறவனுடைய காலத்தில். பாருங்கள், பாருங்கள்? “அவன் தன் காலத்தில் தேவனுடைய கனியைத் தருகிறான்.” அது உலர்ந்து போகாது. ஏன்? முன்குறிக்கப்பட்ட கனி அதில் உள்ளது. எனவே அது அழிந்து போகாது. ஏனெனில் அது முன்குறிக்கப்பட்டுள்ளது. 87இப்பொழுது, எபேசியர்: 5:1-5 கூறுகிறது, “நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் அவரோடே கூட உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்” என்று வேதம் கூறுகிறது. என்ன நேர்ந்தது?“ அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டு, நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவீகார புத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்”. தேவன் தமது முன்னறிவின்படி, நிகழவிருக்கும் ஒவ்வொன்றையும் முன்குறித்திருக்கிறார். அவர் தமது முன்னறிவினால் அதை முன்னமே பார்த்தார். எனவே, தொடக்கத்திலிருந்து முடிவுவரை என்னென்ன நிகழும் என்று அவரால் கூற முடியும். ஆதலால் அந்த மரத்தின் கனிகள் முன்குறிக்கப்பட்டவை. எனவே அந்த மரம் அத்தகைய முன்குறிக்கப்பட்ட கனிகளைப் பெற்றுள்ளதால் உலர்ந்து போக முடியாது. 88இந்த மரத்தைக் குறித்துதான் யோவேல் கூறியிருக்கிறான். பாருங்கள்? அது சாக முடியாது. புழுக்கள் அதை தின்றபோதிலும் அது சாவதில்லை. அதன் வேர்களில் முன்குறிக்கப்பட்ட சத்தியம் இருந்தது. அது தேவனுடைய வார்த்தையை கொண்டிருந்தது, இந்த மரம் கொண்டிருந்தது. இந்த மரம் ஏதேன் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஸ்திரீயின் மூலம் தோன்றின எல்லா மரங்களும் செத்துப் போயின. நாம் ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்கள். எனவே நாம் அனைவரும் மரிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். ஸ்திரீயின் மூலமே மரணம் தோன்றினது. அது சரி. பாவத்தின் காரணமாக இந்த சரீரம் மரிக்கின்றது. ஆனால் கிறிஸ்துவின் மூலம் கிடைக்கும் மறுபிறப்பு - அது மரிப்பதில்லை. அது ஒரு மரம், மற்றது வேறு மரம். பாருங்கள்? ஏதேன் தோட்டம் தொடங்கி இந்த மரம் துன்புறுத்தப்பட்டு, கேலி செய்யப்பட்டாலும், அது மரிப்பதில்லை. ஏனெனில் அது முன் குறிக்கப்பட்டது. அதை தடியால் அடித்தார்கள், சித்திரவதை செய்தார்கள், எல்லாம் செய்தார்கள். ஆனால் என்ன நிகழ்ந்தது? அது சாக முடியாது. அவரால் மரிக்க முடியாது. ஏனெனில் முன் குறிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையை அவர் தனக்குள் கொண்டிருக்கிறார். அது வரவேண்டும். ஏனெனில் அவருடைய கனியானது அவருடைய சொந்த காலத்தில் முன்குறிக்கப்பட்ட காலத்தில் வருகின்றது, அது... 89அந்த மரம் அடிமரம் வரை தின்று போயிருப்பதை யோவேல் கண்டான். அவன், “அவைகளைத் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்கிறான். தேவனுடைய முன்குறித்தல் மரத்தின் வேர்களில் உள்ளது. அது வளர வேண்டும். ஏனெனில் அது முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையைக் கொண்டுள்ளது. ஓ, என்னே ஒரு மரம். என்னே, அந்த மரம். அது ஏதேன் தோட்டத்தில் வளர்ந்து வந்தது. ஆனால் என்ன நேர்ந்தது? “காயீனின் பிள்ளைகள்” என்னும் புழுக்கள் தோன்றி தண்டுவரை அதை தின்றுபோட்டன. ஆனால் தேவன் அதன் கனிகளை எடுத்து, பேழைக்குள் வைத்து காப்பாற்றினார். அது உண்மை. 90இஸ்ரவேலர், நியாயாதிபதிகள் தொடங்கி எல்லா காலங்களிலும் அவ்வாறே சம்பவித்துள்ளது, பின்பு பெந்தெகொஸ்தே நாளில் மணவாட்டி மரத்தை... அவர் பெந்தெகொஸ்தே நாளன்று அந்த மரத்தை நிறுவினார். காலங்கள்தோறும் அவருடைய கனிகளைத் தரும்படியாக முன்குறிக்கப்பட்டிருந்த அந்த மரத்தை பெந்தெகொஸ்தேவில் அவர் நிறுவினார். அதில் கனிகள் நேர்த்தியாக வரத் தொடங்கின. பெந்தெகொஸ்தே நாளன்று அது பூ பூத்தது. பெந்தெகொஸ்தே நாளில் என்ன நேர்ந்தது என்று பார்க்கலாம். இயேசு, “நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்றார். அவர்கள் பிணியாளிகளை சுகப்படுத்தினர். அது எப்படி தொடங்கினது என்று பார்க்கலாம். 91பெந்தெகொஸ்தே நாளிலே இயேசு உயிர்த்தெழுந்த சில நாட்கள் பின்னர் (ஈஸ்டருக்கு ஐம்பது நாடகள் கழித்து) சடுதியாக வானத்திலிருந்து பலத்த காற்று இறங்கி வந்தது. ஆனால் இன்றைக்கோ அதை நாம் வித்தியாசப்படுத்திவிட்டோம். போதகர் நின்று கொண்டு, “உங்கள் பெயரை நான் புத்தகத்தில் எழுதிவிடுகிறேன்” என்கிறார். பாருங்கள்? அல்லது பட்டம் பெற்று கழுத்து பட்டை அணிந்துள்ள ஒருவர், “இங்கு வந்து இந்த அப்பத்தை புசியுங்கள். அப்பொழுது நீங்கள், சபையின் அங்கத்தினராகிவிடலாம்” என்கிறார். அது வினோதமாயுள்ளது அல்லவா? போதகர், “எங்கள் குழுவைச் சேர்ந்து கொள்ளுங்கள்” என்கிறார். அவர்களிருவரும் தவறு. பெந்தெகொஸ்தே நாளன்று வானத்திலிருந்து பிரசங்க பீடத்திலிருந்தல்ல - வானத்திலிருந்து - அது என்ன? போதகரா? இல்லை! ஊழியக்காரரா?இல்லை! அது என்ன? பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அக்கினிமயமான நாவுகள் அவர்கள் மேல் வந்து அமர்ந்தது. அவர்கள் திக்கினார்கள். அவர்களால் பேச முடியவில்லை. அவர்கள் மகிமையினால் நிறைந்தார்கள். பரிசுத்த ஆவி அவர்களை நிரப்பினது. அவர்கள் உளறிக் கொண்டே தெருக்களில் சென்று, மது அருந்தினவர்களைப் போல் உளரிக் கொண்டிருந்தனர், அதை... அதைப் போன்று செய்தனர்... அங்கே உயர்ந்தோர் வரிசையில் எண்ணப்பட்ட மதிப்பு மிகுந்த சபை மக்கள் அங்கே வெளியே நின்று கொண்டு, “என்ன, இந்த மனிதர் புது திராட்ச ரசத்தினால் நிறைந்திருக்கிறார்கள்; அவர்கள் முழுவதும் குடித்து வெறித்திருக்கிறார்கள். இந்த மனிதரையும் ஸ்திரீகளையும் பாருங்கள், எப்படி அவர்கள் தள்ளாடிக் கொண்டு உளறிக் கொண்டிருக்கின்றார்,” என்றனர். 92இப்பொழுது, அது ஆவியானவர் உரைக்கிறதாவது என்பதாகும்; அதுதான் வேத வசனம். அந்தவிதமாகத் தான் சபையைானது ஸ்தாபிக்கப்பட்டது, ஸ்தாபிக்கப்பட்டது அல்ல, ஆனால் நிறுவப்பட்டது. இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. கவனியுங்கள், அங்கே அவர்கள் இருந்தனர். இப்பொழுது... கத்தோலிக்கர்களே, கவனியுங்கள். உங்களுக்குத் தெரியுமா? ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாளும் அப்பொழுது அங்கிருந்தார்கள். ஆம்! பரிசுத்த ஆவியைப் பெறாமல் பரலோகத்திற்கு வர தேவன் மரியாளை அனுமதிக்கவில்லை என்னும்போது, அதைப் பெறாமல் நீங்கள் எப்படி பரலோகம் செல்லமுடியும்? சற்று யோசித்துப் பாருங்கள். மரியாள் அங்கிருந்தார்கள் என்பது உண்மை. அவளும் தன்னுடைய கௌரவமும் பெருமையும் போகும் வரை அங்கு காத்திருந்து, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டாள். 93அவர்கள் குடிகாரரைப்போல் நடந்து கொண்டனர். வேதம் அவ்விதம் கூறுகின்றது. “இவர்கள் மதுபானத்தில் நிறைந்திருக்கிறார்கள்'' என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால் அந்த குழுவில் பேச்சாளனான, போதகரான பேதுரு எழுந்து நின்று “நீங்கள் நினைக்கிறபடி அவர்கள் வெறி கொண்டவர்களல்ல. பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது (அந்த புத்தகத்திலிருந்து தான் இன்று நான் படித்தேன்). கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; மேலே வானத்தில் மற்றும் பூமியில் அதிசயங்களையும், அடையாளங்களையும் காட்டுவேன். அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று அவன் கூறியதின் நிறைவேறுதல் அது” என்றான். இன்று நான் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் அதே தீர்க்கதரிசி உரைத்ததைக் குறித்து பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் பிரசங்கித்து இந்த மரத்தை நட்டான். அங்கேதான் அதை அவன் நட்டான். ஓ, அது மிகவும் நன்றாயிருந்தது. அவர்கள் ஆவியின் வரங்களைக் கொண்டவர்களாய் வெளியே சென்று, பிணியாளிகளை சுகப்படுத்தினர், பிரசங்கமும் செய்தனர். இதன் விளைவாக அவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். தேவனுடைய வார்த்தையின் நிமித்தம் துன்பம் அனுபவிக்க அவர்கள் ஆயத்தமாயிருந்தனர். 94நீங்கள் வழவழப்பான தன்மையுடைவர்களாயிருந்து வேறொரு நாட்டிற்குச் செல்ல நேர்ந்தால், ஒரு நல்ல அமெரிக்கனாக உங்களால் வாழ முடியாது. நீங்கள் ஜப்பானுக்கு சென்று அவர்களுடைய சேனையில் சேர்ந்துகொண்டு, “பாருங்கள், நான் உங்கள் சார்பில் இருக்கிறேன். எனினும் நான் மற்ற சேனையை ஆதரிப்பேன்” என்று கூறுவீர்களானால், நீங்கள் தேசத் துரோகியாகக் கருதப்படுவீர்கள். உங்களைச் சுட்டு வீழ்த்த வேண்டும். அது சரி. நீங்கள் ஒரு தேசத் துரோகி தான். நிச்சயமாக. இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. தேவனுடைய வார்த்தையை அறிந்த ஒருவன், எதோ ஒரு ஸ்தாபனம் அந்த விதமாகத் தான் செய்ய வேண்டுமென்று அவனிடம் கூறி, அவன் தேவனுடைய வார்த்தையின் பேரில் சமரசம் செய்வானென்றால், அவன் ஒரு துரோகி ஆவான். அது சரி. ஆனால் இந்த மனிதர்களோ அத்தகைய துரோகிகளல்ல. அவர்கள் எதைக் குறித்தும் கவலை கொள்ளாமல், கூச்சலிட்டு, அழுது, வெவ்வேறு பாஷைகளை உளறித் தள்ளினர், அவர்கள் பேசுவதை ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முடியவில்லையென்றாலும், கூட்டத்திலிருந்த, அனேக ஜாதிக்காரரும் பாஷைக்காரரும் தங்கள் தங்கள் பாஷைகளில் அவர்கள் பேசுவதைக் கேட்டு, அதை புரிந்து கொண்டனர். அவர்கள் என்ன பேசினார்களென்று அவர்களுக்கே தெரியவில்லை. அவர்கள் உளறிக் கொண்டிருந்தனர். ஆனால் கூட்டத்திலிருந்தவர்களோ அவர்கள் என்ன பேசினரென்று புரிந்து கொண்டனர். மற்றவர்கள், “இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்'' என்றனர். ஆனால் பேதுருவோ, “அவர்கள் மதுபான வெறிகொண்டவர்களல்ல, ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருக்கிறர்கள்” என்றான். ஆதலால் யோவானைத் தவிர மற்ற சீஷர்கள் அனைவரும் இரத்த சாட்சிகளாக மரித்தனர். யோவானை தொட்டி நிறைய கொழுப்பில் முழுக்கி, இருபத்து நான்கு மணி நேரம் அதை கொதிக்க வைத்தனர். அவனுக்குள்ளிருந்த ஆவியையும் கூட அவர்களால் எரித்துவிட முடியவில்லை. யோவான் ஒருவன் மாத்திரமே இயற்கை மரணம் எய்தினான். அது உண்மை. திவ்யவாசனாகிய யோவான். 95இப்பொழுது, அது சரியே. இப்பொழுது என்ன நிகழ்ந்ததென்று கவனியுங்கள். ஒன்பது ஆவிக்குரிய வரங்களைத் தோன்றப் பண்ண தேவன் ஒரு மரத்தை நட்டார். கிறிஸ்துவுக்குள்ளிருந்த அதே ஜீவன் - அந்த நித்திய ஜீவன் - சபையின் மேல் வந்தது. ஆவியின் வரங்கள் சபையில் காணப்பட்டு, அது வளர்ந்து, எல்லாவிடங்களிலும் கனி கொடுக்கத் தொடங்கினது. அவர்கள் தங்களைக் குறித்து சிந்திக்கவேயில்லை. அவர்கள் ஸ்தாபனம் எதுவும் உண்டாக்கிக் கொள்ளவில்லை. அவர்கள் சகோதரராக ஒருமித்து செயல் புரிந்தனர். அவர்களுக்கு கிறிஸ்துவைத் தவிர வேறெந்த கோட்பாடும் இருக்கவில்லை; அன்பைத் தவிர வேறு பிரமாணமும், வேதத்தைத் தவிர வேறு புத்தகமும் அவர்களுக்கு இருக்கவில்லை. (அந்த சிறு காரியம் அங்கு இருந்ததற்காக நான் மகிழ்ச்சி கொள்கிறேன்) அதைத் தான் நான் விசுவாசிக்கிறேன். பாருங்கள்? அவ்விதமாகத் தான் அவர்கள் செய்தனர். உலகம்தான் நம்முடைய சபை (பாருங்கள்?) எவ்விடமும். 96ஆகவே இந்த ஆட்களை கவனியுங்கள், இவர்கள் அதைச் செய்து கொண்டிருந்த போது, அந்த சபையானது எவ்வளவாக மிகவும் மகிமையுள்ளதாயிருந்தது. தேவன் அவர்களுடன் இருந்தார். வேதாகமம் கூறுகிறது... இயேசு தம்முடைய மேலேறுதலுக்கு முன்னர் அவர்களை சந்தித்தார். அவர் கூறினார். இயேசு பரமேறுவதற்கு முன்பு அவர்களை சந்தித்து: ...நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிகளை இந்த அடையாளங்கள் பின் தொடரும்; என் நாமத்தினாலே... இப்பொழுது இந்த அடையாளங்கள்... இப்பொழுது, இன்றைக்கு, எந்த விதமான அடையாளத்தை ஆதாரமாகக் கொண்டு ஒருவனை விசுவாசியென்று அழைக்கிறோம்? அவன் போதகருடன் கைகுலுக்கினால்; ஒரு சபையைச் சேர்ந்து கொண்டால். அவனுடைய தாய் அல்லது தந்தையின் பெயர் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தால், அவனுடைய பெயரும் புத்தகத்தில் எழுதப்படுகின்றது. 97ஆனால் இயேசு கூறினது அதுவல்ல. இயேசு கூறினார், இந்த அடையாளங்கள்... முன்பு கூறின அடையாளங்களைக் கொண்டுள்ளவர்கள் மாம்சப் பிரகாரமான சபையாகும். ஆனால் நாமோ ஆவிக்குரிய சபையைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் ஒரு ஆவிக்குரிய மரத்தைக் குறித்து பேசி வருகிறோம் - இயற்கை மரமல்ல (அந்த இரண்டு மரங்களுக்கு இன்னும் சில நிமிடங்களில் நாம் வரப்போகிறோம்) ஆவிக்குரிய மரம். இயேசு, “இந்த மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். இந்த மரத்திலிருந்து ஜீவனைப் பெற்றுக் கொள்பவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள் (வ்யூ)? நவமான பாஷைகளைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள்; அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்றார். விசுவாசியைப் பின் தொடரும் என்று அவர் கூறினது இந்த விதமான அடையாளங்கள் தான். அந்த அடையாளங்கள் இன்று எங்கே? விசுவாசியின் அடையாளம் என்னவாயிருக்கும் என்பதின் உதாரணத்தை அவர் உலகத்திற்கு அளித்துள்ளார். “இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக் கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகின்றது அவனுக்கு நலமாயிருக்கும்... இந்த சிறியருக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரம பிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள்” என்றார் அவர் - தேவ தூதர்கள். 98கவனியுங்கள். இப்பொழுது, அவர்கள் அங்கே இருந்தனர். ஆகவே கவனியுங்கள், அந்த மரம் நடப்பட்டு மகத்தான கிரியை செய்து கொண்டு வந்தது. அவர்கள் எல்லாவிடங்களிலும் சென்று அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்தனர் என்று நாமறிவோம். ஆண்டவர்... பெந்தெகொஸ்தே நாளில் மாத்திரம் மூவாயிரம் பேர் ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்க்கப்பட்டனர். எவ்வளவு மகத்தான ஐக்கியம் அவர்களுக்கு உண்டாயிருந்தது! அவர்களில் ஒருவருக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை, எல்லோரும் ஒருவருக்கொருவர் தயவாகவும், நல்லெண்ணம் கொண்டவர்களாகவும் நடந்து கொண்டனர். அவர்கள் ஒரே பெரிய குடும்பமாக வாழ்ந்தனர் - மிகவும் அருமையானது. அப்பொழுது யோவேல் கண்ட விதமாகவே, நான்கு வெவ்வேறு கட்டங்களில் வாழ்கின்ற அருவருப்பாக காணப்பட்ட பேராசை கொண்ட பற்களையுடைய வண்டு அங்கே வந்தது. அழிவுண்டாக்குகிற நான்கு கட்ட வளர்ச்சியுடைய புழுவானது அந்த அழகான தேவனுடைய மரத்தை அழித்துப் போட அங்கு வந்தது. சற்று யோசித்து பாருங்கள்! இப்பொழுது யோவேல் முதலாம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சில பாகங்களை வாசிக்கப் போகிறேன். 99முதலாவதாக... அங்கு நான்கு வெவ்வேறு பூச்சிகள் உள்ளன. உண்மையில் அது ஒரே பூச்சிதான்; நான்கு வெவ்வேறு கட்டங்களில் வளர்ச்சி பெறுகின்றது. இப்பொழுது, இந்த சிறிய பூச்சி, இந்த மகத்தான, அழகான தேவனுடைய மரத்திடம் நோக்கி அணுகுவதை கவனியுங்கள். (சபையை நாம் மரம் என்று அழைக்கலாம்). முதலாவதாக வருவது பச்சைப்புழு. அது ஒரு சிறிய புழு. அந்த பச்சைப்புழு, அது என்ன செய்தது? மரத்தின் கனியை நிர்மூலமாக்க அது வருகின்றது. அதுதான் நடந்த முதல் காரியம். இப்பொழுது நாம் சரித்திரத்திற்கு சென்று, முதலாவதாக நிகழ்ந்தது என்னவென்று பார்ப்போம் - கௌரவமுள்ள குழு ஒன்று சாதாரணமான மனிதர்களைச் சேர்ந்து கொண்டது. அந்த கௌரவமுள்ளவர்கள், “நீங்கள் வியாதியஸ்தரை சுகப்படுத்தி, மற்ற அற்புதங்கள் செய்வதெல்லாம் நல்லதுதான். ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? மேலான நிலைமையிலுள்ளவர்கள் - உதாரணமாக, நகராண்மைக் கழக மேயர், நீதிபதி போன்ற கௌரவமுள்ளவர்கள் மற்றும் நகரத்தை சேர்ந்த பிரசித்தி பெற்றவர்கள் - இதை அறிந்து கொள்ளும் அளவிற்கு இதை மாற்றி அமைக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் செய்து வருவதுபோல் கூச்சலிட்டுக் கொண்டேயிருப்பீர்களானால், அவர்கள் உங்களைச் சேரவே மாட்டார்கள். உங்களைக் கண்டாலே அவர்களுக்கு பயமாயிருக்கிறது” என்றனர். யாரோ ஒருவர், “அவர்கள் இப்பொழுதும் பயப்படுகின்றனர்” என்று கூறினார். நான் யூகிக்கிறேன் அது சரியே. ஆகவே அது சரிதான். அவர்கள் பரிசுத்த ஆவியைக் குறித்து பயப்படுகின்றனர் (என்னை மன்னிக்கவும்). 100நான் “பண்டை காலத்து மார்க்கம்'' என்னும் பாட்டைப் பாடுவதுண்டு. நீங்கள் யாராகிலும் அந்த பாட்டை கேட்டிருக்கிறீர்களா? அது பண்டைய காலத்து மார்க்கம்... ”நான் இந்த விதமாக அநேக ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பாடலை பாடுவது வழக்கம்; நான் கூறினேன், அது பண்டைய காலத்து பரிசுத்த ஆவி பிசாசு அதை நெருங்கமாட்டான் அதனால் தான் ஜனங்கள் அதற்கு பயப்படுகின்றனர் ஆனால் எனக்கோ அதுமிகவும் நன்று. வேறொன்றும் எனக்கு வேண்டாமென்பது நன்று ஏனெனில் அது என் சகோதரனை நேசிக்க செய்கிறது மூடியிருந்தவைகளை அது வெளியே கொணர்கிறது எனவே எனக்கு அது மிகவும் நன்று (அது உண்மை). நீங்கள் பொய் சொல்வதை அது தடுத்து விடும் உங்கள் மரணத் தருவாயில் உங்களை இரட்சிக்கும் அது பிசாசு ஓடும்படி செய்யும் அது எனக்கு மிகவும் நன்று. அது உண்மை. அதன் காரணமாகத்தான் ஜனங்கள் அதை விரும்புவதில்லை. 101இப்பொழுது, இப்பொழுது, அது தேவனாயிருந்தது. அவர்களுக்கோ இயேசு தேவனாயிருக்கவில்லை; அவர்கள் “இந்த மனிதனா?” என்றனர். அந்த சபை, அந்த பெரிய கௌரவமிக்க சபை. அவர்கள், “நாங்கள் யாரென்று அறிவிக்க நீ வந்துவிட்டாயா? நாங்கள் டாக்டர் பட்டம், இன்னும் Ph. D, L.L, Q.U.S போன்ற அநேக பட்டங்களைப் பெற்றவர்கள். ஏன், நான் ஒரு பிரதான ஆசாரியன் ஆயிற்றே. நாங்கள் இது, நாங்கள் அது. நீ எங்களுக்குப் போதிக்க வந்துவிட்டாயா? நீ பாவத்தில் பிறந்தவன்; முறை தவறிப் பிறந்தவன். உன் தாயார் மற்றும் தந்தை விவாகமாவதற்கு முன்னதாகவே உன்னைப் பெற்றெடுக்க வில்லையா?” என்றெல்லாம் கூறினர். அவரோ, “என்னில் பாவமுண்டென்று உங்களில் யார் சொல்லக் கூடும்?” என்றார், சரி, பாவம் என்பது தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிப்பதே தான். வேறு விதமாகப் பார்ப்போமானால் அவர், “நான் வார்த்தையை அப்படியே முற்றிலுமாக, சரியாக எப்படி அது இருக்க வேண்டுமோ அந்த விதமாகவே எங்கே நான் நிறைவேற்றாமல் இருக்கிறேன் என்று எனக்கு காண்பியுங்கள். வேத வசனத்தில் எனக்கு காண்பியுங்கள். என்னுடைய நாளானது... என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. நீங்கள் இப்பொழுது டாக்டர் பட்டம் பெற்றவர்களென்று அவ்விதமாக உரிமை கோரிக் கொள்கிறீர்களே; இந்தக் கிரியைகளை நீங்கள் செய்யுங்கள் பார்க்கலாம்'' என்றார். ஓ, என்னே? அன்று முதல் ஒருவனும் அவரைக் கேள்வி கேட்க துணியவில்லை (பாருங்கள்) அவரை சும்மா விட்டுவிட்டார்கள். பிசாசு பறந்து சென்று, எப்படியாகிலும் அவர்மேல் உட்கார விரும்பினான். ஆனால் அந்த மின்சாரக் கம்பியில் பத்து லட்சம் வோல்ட் (volts) மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதை அவன் அறிந்து கொண்டான். மிக விரைவாக அந்த ஒன்றிலிருந்து அவன் கீழே குதித்துவிட்டான் (உங்களுக்கு புரிகின்றதா?) ஏனெனில், அவனால் அதைக் கையாள முடியவில்லை. ஆகவே அந்த ஒன்றுதான் நிச்சயமானதாயிருந்தது. 102இந்த பச்சை புழு அங்கு அடைந்து, மரத்திலிருந்து கனிகளை நாசம் பண்ணத் தொடங்கியது (கனிகளைக் குறித்து இரண்டு பக்கங்கள் எழுதி வைத்துள்ளேன். ஒரு சிலவற்றை மாத்திரம் இப்பொழுது படிக்கிறேன்). அவன் எடுத்துப் போட்ட முதலாம் கனி, சகோதர அன்பு, அது உண்மை. சபையை அந்த இடத்திலேயே கொன்று போடுகின்ற காரியங்களில் அது ஒன்றாகும், சகோதர அன்பானது... ஆம் ஐயா! பிறகு அவன் அடுத்தப்படியாக மரத்திலிருந்து எடுத்துப் போட்ட கனி... மரத்திலுள்ள கனிகளில் முதன்மையானது அன்பு என்று உங்களுக்குத் தெரியும். அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், விசுவாசம், சாந்தம், பொறுமை (அது சரி) பரிசுத்த ஆவியில். இப்பொழுது, மரத்தின் ஒன்பது கனிகளுடன் ஒன்பது ஆவிக்குரிய வரங்கள் இன்னும் மற்றவை... சரி. இவை ஆவியின் கனிகள் - ஒன்பது ஆவியின் வரங்கள்; மரத்தின் ஒன்பது கனிகள். 103இப்பொழுது முதலாவதாக அந்த புழு மரத்தின் கனியைத் தின்னத் தொடங்கினது. இப்பொழுது ஒரு பெரிய மரத்தை, தேவனுடைய மரத்தை கற்பனை செய்து பார்ப்போம், அது ஒன்பது விதமான ஆவியின் வரங்களை ஈன்று வந்தது. அவர்கள் பிணியாளிகளை சுகப்படுத்தினர்; அவர்கள் அன்னிய பாஷைகளைப் பேசினர்; அவர்கள் பிசாசுகளைத் துரத்தினர்; அவர்கள் மகத்தான கிரியைகளைச் செய்து, கலப்படமற்ற தேவனுடைய வார்த்தையை பிரசங்கித்து வந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த எந்தவித ஸ்தாபனமும் இல்லாமலிருந்தது. அவர்கள் சுயாதீனமுள்ளவர்களாய், மகத்தான கிரியைகளைச் செய்துவந்தனர். அப்பொழுது இரண்டு கொம்புகளையுடைய பிசாசு வெட்டுக் கிளியைப்போல் அங்கு தாவி வருகிறான். அவனுடைய பேராசை கொண்ட பற்களைக் குறித்து நீங்கள் நன்கு அறிவீர்கள். அதுதான் முதலாம் கட்டம் - பச்சைப் புழு. சகோதர அன்பைத் தின்றுவிட அவன் அங்கே வந்தான். அவன், “இன்னார், இன்னார் சபையில் இன்னின்ன கிரியைகளைச் செய்தாராமே, உங்களுக்குத் தெரியுமா? அந்த கூட்டம் மக்களை நான் நம்புவதில்லை,” என்றான், பாருங்கள்? அதோ அவன், முதலாவது காரியம். 104அடுத்தபடியாக அவன் விசுவாசம் என்னும் கனியைத் தின்று போட விரும்பினான்; வார்த்தையிலுள்ள விசுவாசம்; “இப்பொழுது பாருங்கள், அது தேவனுடைய வார்த்தையென்று உனக்கு எப்படித் தெரியும்? அதை அநேகமுறை மொழி பெயர்த்துள்ளனரே” என்றது அது. அந்த சிறு பிசாசு இன்னமும் தின்று கொண்டிருக்கிறான். பாருங்கள்? அது சரி. “அந்த வார்த்தையானது அநேக முறை அவர் இது அல்லது மற்றது அல்லது அந்த வேறொன்று என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளதே. ஓ, அவன் அந்த எல்லாம் இது தான்” பாருங்கள்? இப்பொழுது வேறொரு கனியையும் அதிலிருந்து அவன் தின்றுவிட்டான் இரட்சிப்பின் சந்தோஷம். “உஷ், நீங்கள் அதிகமாக கூச்சலிடுகிறீர்கள்” ஓ, என்னே, என்னே! 105ஒரு நாள், ஒரு ஸ்திரீ என்னிடம் வந்து ஸ்திரீயல்ல, மனிதன் (அவர் இங்கிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் வேறொரு சபையை சேர்ந்தவர்). அவர் என்னை அணுகி, “அன்றொரு நாள் உங்கள் பிரசங்கத்தைக் கேட்க வந்திருந்தேன். அந்த ஜனங்கள் போட்ட கூச்சலில் உங்கள் பிரசங்கம் காதில் விழவேயில்லை. உங்களால் எப்படி பிரசங்கம் பண்ண முடிகிறது?'' என்று கேட்டார். “அவர்கள் அதை ரசிக்கவில்லையென்றால், நான் பிரசங்கம் செய்திருக்கவே மாட்டேன்” என்று விடையளித்தேன். அது சரி! 106எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் ஜிம் பூல் (Jim Poole). எங்களிடம் ஒரு நாய் இருந்தது. அதை நாங்கள் ஃபிரிட்ஸ் (Fritz) என்று அழைப்போம். அந்த நாய் எங்கு வேண்டுமானாலும் செல்லும். ஆனால் 'ஸ்கங்க்' (Skunk) கைக் கண்டால் அதற்கு பயம் (ஸ்கங்க் என்பது அமெரிக்காவிலுள்ள துர்நாற்றமுள்ள ஒரு மிருகம். அது காண்பதற்கு பூனையைப் போல் இருக்கும் - தமிழாக்கியோன்). அதன் துர்நாற்றத்தை அதனால் சகிக்கமுடியாது. நான் 'ஸ்கங்க்' ஒன்றை புதரிலிருந்து பிடித்து அங்கு நிறுத்தி நாயைத் தடவிக் கொடுத்து, 'பையா, அதைப் பிடித்துக் கொண்டுவா' என்பேன். அது சென்று அதை கவ்வி என்னிடம் கொண்டு வரும். (பாருங்கள்?) ஏனெனில் நான் அதை தட்டிக் கொடுத்து, “அதைப் பிடி” என்று கூறிக் கொண்டிருந்தேன். நல்லது, அது அந்த விதமாகத்தான் இருக்கிறது, நாம்... அது தான்... எனக்கு தெரிந்ததிலேயே மிகவும் துர்நாற்றம் பிடித்தவன் பிசாசு தான். ஆகவே நான் இந்த வார்த்தையை கொண்டுவரும் போது யாராவது ஒருவர், “ஆமென்” என்கிறார். அது “பையா அவனைப் பிடி” என்பதேயாகும். அது அவனைக் கவ்வுகின்றது. 107ஆகவே அவன் சந்தோஷத்தை எடுத்துப் போட்டான் என்று பார்க்கிறோம். உங்களுக்குத் தெரியுமா? ஒருமுறை தாவீது இரட்சணியத்தின் சந்தோஷத்தை இழந்துவிட்டான். அவன் இரட்சிப்பை இழந்து போகவில்லை, அதன் சந்தோஷத்தை மாத்திரமே இழந்துவிட்டான். அவன், “உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் திரும்பத் தாரும்” என்று கதறினான். பார்த்தீர்களா? சந்தோஷம். ஆகவே இந்த பச்சைப்புழு சந்தோஷம் என்னும் கனியையும் தின்று போடத் துவங்கியது: “இதோ பார், நீங்கள் மிக அதிகமான கூச்சல் போடுகிறீர்கள். நான் உங்களுக்கு கூறுகிறேன், இந்த எல்லா கூச்சல் போடுதல் 'ஆமென்' என்று கூறுதல் மற்றும் இந்தவிதமாக சத்தம் போடுதல், இது அர்த்தமற்றதாகும். அவைகளால் எவ்வித உபயோகமுமில்லை” என்கின்றனர். பார்த்தீர்களா? முதலாவதுதாக காரியம் என்னவென்றால் நீங்கள் ஒரு பெரிய மரித்தவர்களின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ள சவ அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிவீர்களா? உங்களுக்குத் தெரியும், அங்கே இருப்பவைகளெல்லாம் மரித்து போனவைகள்தான். அந்த சவங்களில், பரிசுத்த ஆவியானவர் இரத்தக் குழாய்களின் வழியாக பாய்வதற்குப் பதிலாக, ஸ்தாபனக் கோட்பாடுகள் என்னப்படும் சவத்தைக் கெடாமல் பாதுகாக்கும் தைலம் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் விரைத்துப்போய், மரித்துப்போன நிலையில் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஆவிக்குரிய வெப்ப நிலையை அளக்கும் கருவியானது பூஜ்யத்துக்குக் கீழே 90 டிகிரி காட்டுகிறது. ஆம், யாராகிலும் 'ஆமென்' என்று சொல்லிவிட்டால், அவர்கள் எல்லோரும் 'கூஸ்' (Goose) வாத்தைப் போல் கழுத்தை நீட்டி, யார் சொன்னது என்று அறிய விரும்புகின்றனர். தேவனுடைய ஆவியானவர் சந்தோஷம், சமாதானம், அன்பு என்பவைகளை அளிக்கும்போது, இப்படி செய்வது அவமானமாகும். இந்த சிறு புழு சிறிது சிறிதாக தின்ன ஆரம்பித்தது, சந்தோஷம் முழுவதையும் எடுத்துப் போட்டது. 108ஆகவே பிறகு, மரத்திலுள்ள அடுத்த கனி 'சமாதானம்' மனச் சமாதானம், நீங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை அறிந்திருக்கையில், அவர்கள் உங்களிடம், “எங்கள் ஸ்தாபனக் கோட்பாடுகளை நீங்கள் திரும்பத் திரும்ப உச்சரித்தால் இரட்சிக்கப்படுவீர்கள்” என்று கூறுவார்கள். “எங்கள் சபையை சேர்ந்து கொண்டால் இரட்சிக்கப்படுவீர்கள்” மற்றொருவர், “அந்த சபைக்குச் சென்றால் நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது. எங்கள் சபையை சேர்ந்து கொண்டால் மாத்திரமே இரட்சிக்கப்படலாம்” என்கிறார். “வாழ்க மரியாளே,” என்று நீங்கள் கூற வேண்டும். “உங்கள் பெயர் எங்கள் புத்தகத்தில் எழுதப்பட்டிருத்தல் அவசியம்” “நீங்கள் இப்படியாக...” ஓ, என்னே! இவை அனைத்தும் எல்லா சந்தோஷத்தையும் எடுத்துப் போட்டுவிடும். அது தேவனுடைய மரம் அல்லவே அல்ல. நீங்கள் எங்கிருக்கின்றீர்கள் தெரியுமா? அது கலப்படமுள்ளது. கோவேறு கழுதையைக் குறித்து நான் கூறியது ஞாபகமிருக்கிறதா? அது ஒரு கலப்பு இனம். அதன் தாய், தகப்பன் யாரென்று அதற்கு தெரியாது. பாருங்கள்? அது ஒரு கலப்பு இனமாகும். ஆனால் நல்ல இனக் குதிரைக்கோ, வம்சங்கள் கணக்காக அதன் தாய், தந்தையாரென்று தெரியும். அது போன்றுதான் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ள நல்ல இனக் கிறிஸ்தவனும் இருக்கிறான். பரிசுத்த ஆவி பெந்தெகொஸ்தே நாளில் விழுந்தது என்பதை அவனறிவான், அவன் எங்கிருக்கிறான் என்பதை அறிந்தவனாயிருக்கிறான். அவனுடைய வம்ச வரலாறு எங்கிருந்து தொடங்குகிறது என்று அவனுக்குத் தெரியும். பேதுரு அதைப் பெற்றிருந்தான். அநேக நாடுகளிலுள்ளவர், வெவ்வேறு ஜாதியார் அதை வழி வழியாகப் பெற்று வந்துள்ளனர். அது எங்கு தொடங்கினது என்று நல்ல இனக் கிறிஸ்தவன் எவனுக்கும் தெரியும். 109நீங்கள், “ஊம், நான் லூத்தரன், நான் பிரஸ்பிடேரியன்“ எனலாம். ஓ, கலப்படமுள்ளவனே , நீ ஏன்... நீ ஏன்... நீங்கள், “அப்படியானால் நீ யார்?” என்று கேட்கலாம். “மறுபடியும் பிறந்தவன்.” “எதனால் மறுபடியும் பிறந்தவன்?” “தேவனுடைய ஆவியினால்.” அதனால் தான் நீங்கள் கலப்புள்ளவர்களல்ல. நீங்கள் சரியானபடி பிறந்திருக்கிறீர்கள். சபை கோட்பாடுகளினாலல்ல, தேவனுடைய ஆவியினால் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். தேவன் உங்களில் வாசம் செய்கிறார். 110இப்பொழுது, கவனியுங்கள், இந்த சிறு புழு தின்னத் தொடங்கி, மனச் சமாதானம் அனைத்தையும் தின்றுவிட்டது. ஓ, அது மேலும், மேலும், மேலும், மேலும் தின்றுகொண்டே சென்றது. அது தின்றுவிட்ட கனிகளைக் குறித்து ஒரு பக்கம் எழுதி வைத்திருக்கிறேன். பிறகு இந்த சிறு புழு வெட்டுக்கிளியாக மாறுகின்றது. அதுதான் அதன் வளர்ச்சியில் அடுத்த கட்டம். இப்பொழுது வெட்டுக்கிளி என்ன செய்யும்? இலைகளைத் தின்றுவிடும். அது உண்மை. வெட்டுக்கிளி இலைகளைத் தின்னும். பச்சைப்புழு விட்டதை (அது இலைகளை விட்டுவிட்டது; ஆனால் மரத்திலுள்ள கனிகள் அனைத்தையும் தின்றுவிட்டது) எது தின்றது? வெட்டுக்கிளி. பச்சைப்புழு விட்டதை, வெட்டுக்கிளி அங்கு வந்து தின்று போட்டது. இப்பொழுது வெட்டுக்கிளி என்ன செய்தது? இலைகளை நாசம் செய்தது. இலைகள் நாசம் பண்ணினது ஏன்? தெய்வீக ஐயக்கியத்தை நாசம் பண்ணுவது. அது உண்மை. “இப்பொழுது அவன் - அவன் - அவன் பிரஸ்பிடேரியன். ஆகவே அவனுடன் நான் எந்த ஐக்கியமும் கொள்ளமாட்டேன். அவன் நசரீன் குழுவைச் சேர்ந்தவன், அவன் பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன். அவன் இதைச் சேர்ந்தவன், அதைச் சேர்ந்தவன். அவன் எங்கள் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவனல்ல. எனவே அவனுடன் நாங்கள் ஐக்கியங் கொள்ள மாட்டோம்'' என்கின்றனர். “வியாதியஸ்தர்களுக்கு சுகமளித்தல் கூட்டமா? ஊ ஹும். எங்கள் சபைக்கு அதில் நம்பிக்கை கிடையாது” என்கின்றனர். 111பாருங்கள், அந்த வெட்டுக்கிளி என்ன செய்ததென்று! அது ஐக்கியம் அனைத்தையும் முறித்துப்போட்டது. அது சரி ஐக்கியம் என்பது என்ன? இலைகள் என்ன செய்கின்றன? அவை குளிர்ச்சி தருகின்றன. பறவைகள் இலைகளின் நிழலில் வந்தடைந்து இளைப்பாறுகின்றன (சகோ. பிரன்ஹாம் மூச்சுவிடுவதைப் போல் சத்தம் உண்டாக்குகிறார் - ஆசி), அதோ மறுபடியும் உங்கள் மரம்: “அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்தைப் போலிருப்பான்”. அங்கு ஜனங்கள் பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஒருமித்து அமர்ந்து, சற்று இளைப்பாறலாம். ஆனால் நீங்களோ ஏமாந்து போய், என்ன நடக்கிறதென்றும் அறியாமல், நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்களோ இல்லையோ என்பதையும் கூட அறியாதவர்களாய், இந்த சபை சரியா, அந்த சபை சரியா என்று ஆலோசித்து குழப்பமடைந்து, எதையுமே தெரியாதவர்களாயிருக்கிறீர்கள். இலையுள்ள மரத்தின் கீழ் நீங்கள் சற்று இளைப்பாறி அங்கே உட்கார்ந்து பாருங்கள்! பரலோகத்திலிருந்து பலத்த முழக்கம் போன்ற காற்று இறங்கி வந்து இலைகளையசைத்து உங்கள் மேல் இறங்கட்டும்! அப்பொழுது உண்மையிலே நீங்கள் இளைப்பாறுவீர்கள். “அந்த பரிசுத்த உருளுபவர்களைக் குறித்து நான் கொண்டுள்ள கருத்தை அவர்களிடம் அறிவிக்கப் போகின்றேன்”. மரத்தினடியில் சற்று அமருங்கள். அப்பொழுது நீங்கள் இளைப்பாறுவீர்கள். அது சரி. உங்கள் ஸ்தாபனத்தில் நீங்கள் இளைப்பாற முடியாது. ஏன் தெரியுமா, ஏனெனில் வெட்டுக்கிளி அதிலிருந்த இலைகள் அனைத்தையும் தின்றுவிட்டது. அங்கு உட்காருவதும், வெயிலில் உட்காருவதும் ஒன்றுதான். ஏனெனில் அங்கு குளிர்ச்சியில்லை. அது சரி. 112இப்பொழுது ஒன்று... நாம் செய்ய வேண்டியது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? வேதம் கூறுகிறது தேவனால் முன்குறிக்கப்பட்ட குமாரரும் குமாரத்திகளும்... அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அது என்ன? அங்கு குளிர்ச்சி, சௌகரியம், சொந்த வீட்டில் உள்ளது போன்ற உணர்ச்சி அனைத்தும் உள்ளன. ஆமென். அங்கே எல்லோரும் விலையுயர்ந்த ட்ச்செடோ கோட் அணிந்திருக்கையில், அடுத்த மனிதனோ இந்தவிதமாக சாதாரணமாக உடுத்தியிருந்தால், யாராவது ஒருவர் திரும்பி பார்த்து “ஹூம்ம்ம், இதோ பார். இவள் தலை சரியாக கூட அலங்காரம் செய்யப்படவில்லை. இவள் பார்ப்பதற்கே மிக பயங்கரமாக காட்சியளிக்கிறாளே? இவள் ஈஸ்டர் பிரௌன் (frown) கவுன் (gown) ஆடை கூட அணியவில்லையே (அது என்னவாயிருந்தாலும்) (உங்களுக்கு தெரியுமா, ஆமாம், ஈஸ்டர் பிரௌன் (frown) பாருங்கள், அங்கே உட்கார்ந்து பாருங்கள் உங்களுக்குத் தெரியும். பாருங்கள்?) அந்த மனிதனைப் பாருங்கள்? சென்ற ஆண்டு அணிந்திருந்த அதே 'சூட்'டைத் தான் இந்த ஆண்டும் உடுத்தியிருக்கிறார்'' என்றெல்லாம் கூறும் போது, உங்களுக்கு அவர்களிடையே நல்லுணர்ச்சி ஏற்படுவதில்லை. 113நான் ஏழ்மையான ஒரு ஸ்திரீயை அன்றொரு நாள் சந்தித்தேன். அவர்கள் கௌரவமுள்ள ஒரு சபையின் அங்கத்தினராயிருந்தார்கள். அவர்கள் புற்று நோயால் மரித்துக் கொண்டிருந்தார்கள். ஜெபிப்பதற்காக அவர்களிடம் சென்றிருந்தேன். இங்குள்ள தர்மகர்த்தாக்களில் ஒருவரான சகோ. ராய் ராபர்ஸன் என்னை அங்கு அனுப்பினார். நான் அவர்களிடம், “நீங்கள் கிறிஸ்தவர்களா?” என்று கேட்டேன். அவர்களோ, “எனக்கு - எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் இன்னின்ன சபைக்கு செல்கிறேன்” என்று கூறிவிட்டு, அழத் தொடங்கினார்கள். நான், “என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். “எனக்கு நல்ல ஆடைகள் அணிய முடியவில்லை. அதற்காக அவர்கள் என்னை அவமதித்தார்கள்” என்றார்கள். 114ஓ, பார்த்தீர்களா? அங்கு நீங்கள் அசௌகரியமான நிலையில் இருக்கிறீர்கள். ஆனால் நாம் உன்னதங்களில் ஒன்று கூட வேண்டுமென்று வேதம் நமக்குப் போதிக்கின்றது. ஓ, என்னே! என்ன? எல்லாரும் சரிசமமாக ஒத்த நிலையில். என்ன, இது என்ன செய்யும் என்று நான் உங்களுக்கு கூறுகிறேன். இது விலையுயர்ந்த டக்செடோ கோட் அணிந்துள்ளவர்களையும் சாதாரண மேலாடை அணிந்தவர்களையும் அது ஒருங்கே இணைத்து ஒருவர் தோளில் ஒருவர் கைப்போட்டு, ஐக்கியங் கொள்ளச் செய்து, சகோதரர் என்று ஒருவரையொருவர் அழைத்துக் கொள்ளச் செய்யும். நிச்சயமாக செய்யும். அது ஒரு பழைய சொர சொரப்புள்ள பருத்தித் துணி அணிந்துள்ள ஒருவர் பட்டு துணி, ஒரு பக்கம் பளபளப்பாயுள்ள ஆடை அணிந்துள்ள ஒருவரைத் தழுவி “சகோதரியே! இக்காலை எப்படி இருக்கிறாய்? கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று கூறச் செய்யும். நிச்சயமாக. அது அன்பு, சந்தோஷம், சமாதானம், தேவனுடைய வார்த்தையில் விசுவாசம், நீடிய பொறுமை, தயவு, பொறுமை இவைகளைக் கொண்டதாக இருக்கும். கிறிஸ்து இயேசுவோடு கூட உன்னதங்களில் உட்கார்ந்து சற்று இளைப்பாறுங்கள்! அந்த இலைகள் அத்தகைய குளிர்ச்சியையே அளித்திருந்தன. ஆனால் வெட்டுக்கிளி என்ன செய்தது? அது வந்து இலைகளைத் தின்று போட்டது. “நீங்கள் எங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும், நீங்கள் வேறு யாரையும் சேரக் கூடாது” என்றது அது. எனவே அது பரிசுத்த ஆவியின் குளிர்ச்சி அனைத்தையும் எடுத்துப் போட்டு, தனக்கென ஒரு கோட்பாட்டை நியமித்துக் கொண்டது. அது சரி. 115நாம் இன்னும் கடந்து செல்ல வேண்டியது இருக்கின்றது. அந்த வெட்டுக்கிளியைப் பற்றி பேசிக் கொண்டே அதிக நேரம் செலவழிக்கலாம். ஆனால் நாம் தொடர்ந்து செல்ல வேண்டும். அதன் மூன்றாம் கட்டம் பட்டைப் புழு (Canker worm) (தமிழ் வேதாகமத்தில் 'பச்சைக் கிளி' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). அதற்கு மோசமான பெயர் உள்ளது. பட்டைப்புழு, பட்டைப்புழு என்ன செய்கிறது? அது பட்டைக்குள் செல்கின்றது. அங்குதான் ஜீவநாடி உள்ளது. ஆம், ஐயா! அது பட்டைக்குள் சென்று, மரத்தை மூடியிருக்கும் அந்த பட்டையை தின்று விடுகிறது. 'மதம்' (Religion) என்பது என்ன? அது மூடிக் கொண்டிருக்கும் ஒன்று. மதம் என்ற வார்த்தை “ஒரு மேற்போர்வை” என்று அர்த்தங்கொள்ளும். எனவே, இந்த பட்டைப்புழு, அது சபையோர் மத்தியில் சென்றடைந்து அவர்களை கௌரவமுள்ளவர்களாகச் செய்து, அதன் பின்னர் வெட்டுக்கிளி என்னும் உருவத்தில் அவர்களிடையே இருந்த எல்லா ஐக்கியத்தையும் அவர்களிடமிருந்து எடுத்துப் போட்டுவிட்டது. இப்பொழுது அது வந்தடைந்து அவர்களுடைய மார்க்கத்தையே எடுத்து, அதிலிருந்து கோட்பாடுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. அது உண்மை. அது வைதீகமற்ற சொற்களைப் புகுத்தி, தனக்கென ஒரு தனிப்பட்ட மார்க்கத்தை உண்டாக்கிக் கொண்டு, ஒரு கூட்டம் ஜனங்கள் அதை சேரும்படி செய்து, அதற்கு கோட்பாடுகளை நியமித்துவிடுகின்றது. அது அந்த அதே மார்க்கத்தை எடுத்து, தேவனுடைய மரத்திலிருந்து அதை உரித்துப் போட்டுவிடுகின்றது - உயிர்ச்சாற்றை கொண்டிருக்கின்ற அதே பட்டையிலிருந்து உறிஞ்சிவிடுகிறது, எடுத்துப் போடுகிறது. பட்டைப் புழு! அந்த பூச்சியை உங்களால் காணமுடிகிறதா? சரியாக அதுவே தான். 116ஆதிசபையில் இருந்த அந்த பட்டைப்புழு, ரோமாபுரியாகும். முதலாவதாக, அந்த பெந்தெகொஸ்தேயினர் குழு, பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்கள் அல்ல... இல்லை, ஐயா! ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ளும் எதுவும் மரித்துவிடுகின்றது. இன்னும் சில நிமிடங்களில் வேத வாக்கியங்களைக் கொண்டு அதை நிரூபிக்கிறேன். பாருங்கள்? ஆனால் அது... ஆனால் அந்த பெந்தெகொஸ்தே அனுபவம், யாருக்காக அது இருந்தது? அது கத்தோலிக்கர்களுக்குத் தான். வேறு யாருக்கு? வேறு யாருக்கு? அது மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், அதை விரும்பும் அனைவருக்கும் உரியது. நீங்கள் விரும்ப வேண்டும். அவ்வளவுதான். நீங்கள் அதில் சேர்வதில்லை. நான் ஐம்பத்து மூன்று ஆண்டுகளாக பிரன்ஹாம் குடும்பத்தில் இருந்து வருகிறேன். அந்த குடும்பத்தை நான் சேரவில்லை. என்ன? தொடக்கத்திலிருந்தே நான் பிரன்ஹாமாகவே இருக்கிறேன். நான் பிரன்ஹாமாகப் பிறந்தேன். கிறிஸ்தவர்களாகிய நாமும் அப்படித்தான். ஒரு ஸ்தாபனத்தில் சேருவதன் மூலம் நாம் கிறிஸ்தவர்களாகிவிட முடியாது. பரிசுத்த ஆவி நம்மைப் புதுப்பித்து மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாக ஆக்குகின்றது. 117இப்பொழுது கவனியுங்கள். இந்த பட்டைப்புழு பட்டையில் துளையுண்டாக்கி உள்ளே செல்கிறது. அது என்ன செய்தது? அது அதன் மதத்தை, அதனுடைய மூடிக் கொண்டிருக்கிற மேற்போர்வையை, அதனுடைய போதகத்தை மரத்திலிருந்து அகற்றத் துவங்கினது. மதம் என்பது ஒரு போதகமாகும், எந்த ஒன்றையும் மூடிக் கொண்டருக்கிற ஒரு மேற்போர்வையாகும். அதன் காரணமாகத் தான் நம்முடைய மதமும் இரத்தத்தினாலான ஒன்றாயிருக்கிறது, அந்த இரத்தம் - அந்த ஜீவன் வார்த்தையை மூடிக் கொண்டிருக்கிற இரத்தத்தில் இருக்கின்றது; ஆகவே இரத்தத்தில் இருக்கின்ற ஜீவன் தான் காரியங்களை நேரிடும் படியாகச் செய்கின்றது. நீங்கள் அதைக் காண்கிறீர்கள் அல்லவா? 118நமது மார்க்கம் அத்தி இலைகளினால் மூடப்பட்ட ஒன்றல்ல. ஆதாமும் ஏவாளும் அதை ஒருமுறை செய்து பார்த்தனர். காயீனும் அதே காரியத்தை தான் செய்தான், நீங்கள் அதை கவனித்தீர்களா? காயீன் தாவர ஜீவன் சிலவற்றையுங் கூட கொண்டு வந்தான். ஆனால் அது எந்த ஒரு பலனையும் பிறப்பிக்காது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் எந்த ஒரு பலனையும் பிறப்பிக்கவில்லை, இன்னுமாக இன்றைக்கும் அது எந்த ஒரு பலனையும் பிறப்பிக்காது. ஆதியிலே தேவன் அதை ஏற்க மறுத்தாரென்றால், அது என்றென்றுமாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதே. மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கோட்பாடுகளும் கருத்துக்களும் அதன் இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது. தேவனுடைய வார்த்தைதான் அதை செய்ய முடியும். கிறிஸ்துவின் பலியாகிய அந்த இரத்தத்தினாலே தான் வார்த்தையானது இருக்கிறது. அது உண்மை. 119ஜனங்கள் (இன்று காலை சகோ. நெவில் கூறின விதமாக) சிராய்களை (Splinters) பிடுங்குகின்றனர்... உங்களுக்குத் தெரியுமா? இயேசுவை சிலுவையிலறைந்த ஆணி தங்களிடம் உள்ளதென்று இந்நாட்டிலுள்ள பத்தொன்பது ஸ்தாபனங்கள் கூறிக் கொள்கின்றன. அப்படியானால் பத்தொன்பது வெவ்வேறு ஆணிகள் அவர்களிடம் உள்ளன. எல்லோருமே தங்களிடம் உள்ளது தான் உண்மையான ஆணி என்கின்றனர். அது உண்மையான ஆணியாக இருந்தால் மாத்திரம் என்ன? அதனுடன் எவ்வித சம்பந்தம் கொள்ளவும் நான் விரும்புவதில்லை. நிச்சயமாக தேவன் நினைவுச் சின்னமாக எதையும் வைத்துவிட்டுப் போகவில்லை. அவர் பரிசுத்த ஆவியைத் தான்அனுப்பினார். அது ஜீவனுள்ளது. எனவே அதை யாரும் நிர்மூலமாக்க முடியாது. அந்த ஆணியினால் எனக்கு என்ன பயன்? அவர் தொங்கின சிலுவை என்னிடமிருந்தால், அதனால் என்ன பயன்? ஒன்றுமேயில்லை. அவர் கடாவப்பட்ட ஆணியை அறிவதனாலோ அல்லது அவர் அறையப்பட்ட சிலுவையை அறிவதனாலோ ஒன்றுமேயில்லை. அவரை அறிவதே ஜீவன்! பாருங்கள்! 120எனவே, நமது ஸ்தாபனங்கள் ஆணிகளைக் கொண்டிருக்கின்றன; அவர்கள் நினைவுச் சின்னங்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்கின்றனர். இன்றைக்கு ஜனங்கள் எருசலேம் நகரத்தில் மேலும் கீழுமாக நடக்கின்றனர், மற்றும் - மற்றும் பல்வேறு இடங்களில் மேலும் கீழுமாக நடந்து, நினைவு சின்னங்களையும் மற்றவைகளையும் வைத்துள்ளனர். அதற்கும் இரட்சிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. அது ஒன்றுமற்றது, அழுகிப்போனது. ஆயினும் அது தொடர்ந்து நீடிக்கின்றது. 121நான் ரோமாபுரியிலுள்ள ஒரு ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அவர்கள் அந்த தோட்டத்தில் மரித்துப் போன சபை குருக்களைப் புதைத்துள்ளனர். மாமிசம் எலும்புகளிலிருந்து பிரிந்த பின்பு, அவர்கள் அந்த எலும்புகளை வெளியே எடுத்து, விளக்குகள் பொருத்தும் தண்டுகளை அந்த எலும்புகளில் உண்டாக்கி, அதைச் சுற்றிலும் மண்டை ஓடுகளை வைத்துள்ளனர். ஜனங்கள் அங்கு வந்து, ஆசீர்வாதம் பெறுவதற்கென அந்த மண்டை ஓடுகளை கைகளினால் தேய்க்கின்றனர். அவ்விதம் செய்து செய்து, அந்த மண்டை ஓடுகள் தேய்ந்து வெள்ளையாகக் காணப்படுகின்றன. நீங்கள் பரி. பேதுரு ஆலயத்திற்கு செல்வீர்களானால், ஒரு சொரூபம் அங்குள்ளது. அதன் பாதம் பேதுருவின் பாதம் என்று அவர்கள் கூறுகின்றனர். ஒரு சிலை, அந்த பாதத்தை முத்தம் செய்வது போல் அவர்கள் அநேக முறை அதை கடித்தெடுத்து, ஒன்பது அல்லது பத்து முறையாகிலும் வேறொரு பாதம் அதன் மீது மீண்டும் வார்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்தகைய அர்த்தமற்ற செயல்கள் - மூடநம்பிக்கை, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கோட்பாடுகள், போதகங்கள், அந்த தேவனுடைய ஜீவனாகிய பரிசுத்த ஆவியை தேவன் உங்களுக்குள் இருக்கத் தக்கதாக அனுப்பினாரேயன்றி, ஒரு விக்கிரகத்துக்குள் அல்ல - தேவன் வாசம் செய்ய விரும்பும் ஆள் நீ தான், ஒரு சிலைக்குள் அல்ல, ஆனால் உனக்குள்ளாகத் தான். ஜனங்கள் அவைகளைப் “பரிசுத்த சொரூபங்கள்” என்றழைக்கின்றனர். “பரிசுத்த சொரூபங்கள்” என்பது கிடையாது. நீங்களே தேவனுடைய பரிசுத்த சொரூபம். வேதம் அவ்வாறு கூறியுள்ளது. அது உண்மை. “ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்”. 122இப்பொழுது இந்த சிறு புழு சேதப்படுத்தத் தொடங்கினது. எதை சேதப்படுத்தினது?பட்டைப்புழு பட்டைக்குள் புகுந்து கொண்டது. அது என்ன செய்ததென்று கவனியுங்கள். அது பட்டையை சேதப்படுத்தத் தொடங்கினது. அது என்ன செய்தது? ஆவிக்குரிய சபைக்குப் பதிலாக மாம்சப்பிரகாரமான சபையை அது ஏற்படுத்தினது. ஆம், ஐயா! அது உண்மையான ஒன்றை எடுத்துப் போட்டு தவறான ஒன்றை அளித்தது. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். பச்சைபுழு கனியைத் தின்றுபோட்டது. இலைகளை வெட்டுக்கிளி தின்றது. இப்பொழுது, அந்த பட்டையை, அந்த மேற் போர்வையை, அந்த மார்க்கத்தை, அந்த போதகத்தை, அந்த பட்டைப்புழு அழித்தது. 123வேதத்துக்குப் புறம்பான போதகம் முதலாவதாக எங்கு தோன்றினது? சரித்திரக்காரரே, அது எங்கிருந்து வந்தது என்று உங்களுக்குத் தெரியும். அது ரோமாபுரியிலிருந்து வந்தது. சரியாக அங்குதான் அது தொடங்கினது. அங்குதான் அவர்கள் மனிதரின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர். யோவானின் மரணத்திற்குப் பிறகு ஐரேனியஸ், பரி. மார்டின், பாலிகார்ப் இவர்கள் எல்லோரும்... தேவனுடைய வார்த்தை எழுதப்பட வேண்டுமெனும் நோக்கத்திற்காகவே யோவான் பத்மு தீவிற்கு நாடு கடத்தப்பட்டான். அவர்கள் அவனைக் கொழுப்பில் இருபத்து நான்கு மணி நேரம் கொதிக்க வைத்தும் அவன் சாகவில்லை. அவனை அவர்கள் கொழுப்பிலிருந்து வெளியே கொணர்ந்தனர். எப்படியாகிலும் அவன் வேதத்தை எழுதினான். எப்படியாகிலும் அந்த வேதம் எழுதப்பட வேண்டுமென்று தேவன் உறுதி கொண்டிருந்தார். அது தேவனுடைய வார்த்தையாயுள்ளது. அதனுடன் நாம் ஒன்றையும் கூட்டவும் கூடாது அல்லது அதிலிருந்து எடுத்துக் போடவும் கூடாது. அந்த வார்த்தையானது அது எழுதின விதமாகவே இருக்க வேண்டும். 124கவனியுங்கள், அவர்கள் அதை திரும்ப... இந்த தேவனுடைய பரிசுத்தவான்கள் தேவனுடைய வார்த்தையை உறுதியாய் பற்றிக் கொள்ள முயன்று கொண்டிருந்த போது, ரோமாபுரி அங்கு தோன்றி தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக மனிதரின் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டது. இப்பொழுது, அவள் என்ன செய்தாள் என்றும், அவளுடைய கள்ள போதகங்கள் சிலவற்றையும், என்ன நடந்தது என்றும் நாம் பார்ப்போம். தண்ணீர் ஞானஸ்நானம்: அவர்களுக்கு கட்டளை கொடுக்கப்பட்டப்போது... பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு பரிசுத்த ஆவியின் ஏவுதலினால், “நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினான். ஆனால் ரோமாபுரி அதை என்ன செய்தது? அதை மாற்றி அமைத்து, “நீங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறி வேத போதகத்திற்குப் பதிலாக தனது சொந்த கோட்பாட்டை உண்டாக்கிக் கொண்டது. அவன் என்ன செய்தான்? அதுதான் பட்டைப்புழு தின்பதாகும் - தண்ணீரில் முழுகுவதற்குப் பதிலாக பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் தண்ணீர் தெளித்தல். 125பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது நாமமல்ல, அப்படியான ஒன்று இல்லவேயில்லை. பிதா என்பது நாமமல்ல, குமாரன் என்பது நாமமல்ல, பரிசுத்த ஆவி என்பது நாமமல்ல. இயேசு, “பிதா, குமரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுங்கள்” என்று கூறினபோது, அது “கர்த்தராகிய இயேசு கிறிஸ்து” என்பதாக இருந்தது; சரியாக பேதுருவும் மற்றும் அவர்களும் அதைச் செய்தனர், மற்றும் எல்லாரும் - ஒவ்வொருவரும் வேதாகமத்தில் அங்கே இருந்தனர்... யாருமே... ரோமன் கத்தோலிக்க சபை தோன்றும் முன்னர், யாராகிலும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயன்றி வேறெந்த முறையிலாகிலும் ஞானஸ்நானம் பெற்றனர் என்பதற்கு வேதத்திலிருந்து அல்லது சரித்திரத்திலிருந்து சான்றுகளை காணபிக்க நான் சவால்விடுகிறேன். 126அப்படி செய்யுங்கள் பார்க்கலாம்! இந்த ஒலிநாடா உலகம் முழுவதிலும் செல்கின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் நூற்றுக் கணக்கான போதகர்களுக்கும், பேராயர்களுக்கும் இப்படிப்பட்ட ஒரு சவாலை விட்டு, “எழுந்து நில்லுங்கள்; வேதத்துடன் என்னிடம் வந்து இதற்கு விடை கூறுங்கள், இல்லையேல் அதைக் குறித்து பேசாதிருங்கள்” என்று கூறினதுண்டு. அப்பொழுதெல்லாம் அவர்கள் ஒன்றுமே பேசாமல், எனக்குப் பின்னால் பேசுகின்றனர். என் முகத்திற்கு நேராக பேச அவர்களுக்கு துணிவு இல்லை. அவர்கள் பயப்படுகின்றனர். ஏனெனில் அது தவறென்று அவர்களுக்கு தெரியும். அதைத் தான் பட்டைப்புழு தின்ன ஆரம்பித்தது (பாருங்கள்?), உண்மையான காரியத்தை தின்று கொண்டிருக்கிறது. “அந்த முறையில்தான் நான் ஞானஸ்நானம் பெற வேண்டுமென்பது அவசியமில்லை. எந்த முறையில் நான் பெற்றிருந்தாலும் அது போதும்” என்று நீங்கள் கூறலாம். 127அப்படியா? அப்போஸ்தலர் 19-ல் பவுல் என்ன கூறினான் என்று கவனியுங்கள் - பவுல் மேடான தேசங்கள் வழியாக எபேசுவுக்கு வந்தபோது, அங்கே சில சீஷர்களைக் கண்டான் என்று வேதம் கூறுகின்றது. அப்பொல்லோ என்னும் பாப்டிஸ்டு போதகர், யோவான் ஸ்நானனின் போதகத்தை பின்பற்றி. அவர்களுக்கு வார்த்தையைப் போதித்து வந்தான். அவர்களிடையே மிகுந்த சந்தோஷம் உண்டாயிருந்தது. அவர்களைக் காண பவுல் அங்கு சென்றிருந்தான். அவன் அவர்களை நோக்கி, “நீங்கள் விசுவாசிகளான போது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். அவர்கள், “ஓ, நான் ஒரு விசுவாசி” என்றனர். அவன், “அதை நான் கேட்கவில்லை. நீங்கள் விசுவாசிகளான போது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று தான் கேட்கிறேன்” என்றான். அதற்கு அவர்கள், “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்றனர். அப்பொழுது அவன், “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ் நானம் பெற்றீர்கள்?'' என்றான். பாருங்கள்? வேறுவிதமாகக் கூறினால், ”நீங்கள் எந்த விதத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள்?“ என்பதே அவர்கள் “நாங்கள் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறோம்” என்றனர். அவன், “எந்த முறையில்?” என்று கேட்டான். அவர்கள், “யோவான் ஸ்நானன் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம். அவன்தான் இயேசுவுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தவன். அது போதாதா?” என்றனர். பவுல், “இல்லை, இல்லவே இல்லை. நீங்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெறவேண்டும்” என்று கூறி, அவர்களுக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான். அவர்கள் மேல் அவன் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் இறங்கினார். பவுல் என்ன சொன்னான் தெரியுமா? “ஏதோ ஒரு பிரசங்கி மாத்திரமல்ல, வானத்திலிருந்து வருகிற தூதனும் கூட (இந்த பட்டைப்புழு மாத்திரமல்ல) - ஒரு தூதனுங் கூட நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன்” என்றான். அது உண்மை. எனவே, பட்டைப்புழு எதைத் தின்றது என்று நீங்கள் காண்கிறீர்கள்? அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கொடுக்கும் தண்ணீர் ஞானஸ்நானத்தை எடுத்துப் போட்டது. 128பட்டைப்புழு அடுத்ததாக செய்தது என்னவென்றால், அது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை எடுத்துப் போட்டது. ஏனெனில் பரிசுத்த ஆவி உள்ளவரை, அது வார்த்தையின் மேல் வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும். அவர்கள் வித்தியாசமாயிருக்க எண்ணினர். இன்று காலை இங்குள்ள எத்தனை லூத்தரன்கள், பிராடெஸ்டெண்டுகள், கத்தோலிக்கர்கள், 'திடப்படுத்துதலை' (அவர்கள் 'முதலாம் நற்கருணை' என்று அழைக்கின்றனர்) பெற்றிருக்கின்றனர்? அவர்கள் 'பரிசுத்த யூகாரிஸ்ட்' என்று அதை அழைக்கின்றனர். அது லத்தீன் மொழியில் “பரிசுத்த ஆவி” என்று பொருள்படும். 129ஒரு கத்தோலிக்கன் அவனுடைய ஆலயத்தைக் கடந்து செல்லும்போது, இப்படி செய்வதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? (சகோ. பிரான்ஹாம், கத்தோலிக்கன் ஒருவன் எப்படி சிலுவை அடையாளத்தை தன் சரீரத்தின் மேல் போடுகிறான் என்பதை செய்து காண்பிக்கிறார் - ஆசி.) ஏன்? அந்த ஆலயத்திலுள்ள தேவனுக்காக அவன் அப்படி செய்கின்றான். அந்த தேவன் யார்?அந்த சிறு ரொட்டி துண்டு, அது சூரிய தேவனின் வடிவில் வட்டமாக செய்யப்பட்டு, அதைத்தான் அவர்கள் தெய்வமாக வழிபடுகின்றனர். அது பீடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளது. இரவில் எலிகளும் கரப்பான்களும் அதை சூழ்ந்திருக்கும். என் தேவன் அதுவல்ல என்பதை இப்பொழுது உங்களிடம் தெளிவாக்க விரும்புகிறேன். 130முதலாம் நற்கருணை - சபையில் திடப்படுத்துதல் - இது அர்த்தமற்றது! ஆனால் அதைத்தான் அவர்கள் செய்தனர். பட்டைப் புழு அதைத்தான் செய்தது. பரிசுத்த ஆவியை எடுத்துப் போட்டு, அதற்கு பதிலாக சபைகுரு, அல்லது கன்னியாஸ்திரீ அல்லது யாரோ ஒருவர் உண்டாக்கின ரொட்டித் துண்டை அவர்களுக்களித்தது. அவர்கள் அதைத்தான் செய்தனர். வேண்டுமானால் அவர்களைக் கேட்டுப் பாருங்கள். சரித்திரத்தை படித்துவிட்டு, அது உண்மை என்று தெரிந்து கொள்ளுங்கள். அந்த ரொட்டித் துண்டு உங்கள் தொண்டையில் திணிக்கப்படுவதை நீங்கள் அனுமதிக்கிறீர்கள். கத்தோலிக்கர்கள் மாத்திரமல்ல, பிராடெஸ்டெண்டுகளாகிய நீங்கள் அநேகரும், இம்முறையையே கையாளுகின்றீர்கள். சரி, அங்குதான் அவர்கள் அதை மாற்றிப் போட்டனர். பின்பு பிராடெஸ்டெண்டுகளும், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்கு பதிலாக என்ன செய்தனர் தெரியுமா? அவர்கள் சபையில் அங்கத்தினராக சேர்ந்து கொண்டு கை குலுக்குகின்றனர். பெந்தெகொஸ்தே நாளில் யாரும் அங்குவந்து கைகுலுக்கவில்லை. ஆனால் பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல் வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று, அது உண்மை. அது மரத்தின் இலைகளின் வழியாக வந்து, பட்டையின்மேல் ஊற்றப்பட்டது. அது உண்மை. 131இப்பொழுது, இப்பொழுது, ஆனால் இக்காலத்திலோ, மறுபிறப்புக்குப் பதிலாக (“ஒருவன் மறுபடியும் பிறக்கவேண்டும்” என்று இயேசு கூறியுள்ளார்) சபையில் சேர்ந்து கொள்வதை அவர்கள் நியமித்துள்ளனர். “வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.” தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக பட்டைப்புழு அவர்களுக்கு கோட்பாடுகளை அளித்துள்ளது. உங்களால் அதை காண முடியவில்லையா? அது என்ன செய்துள்ளது என்று பாருங்கள். ஆவிக்குரிய ஒன்றிற்கு பதிலாக மாமிசப் பிரகாரமான ஒன்றை அது அளித்துள்ளது. உங்களால் அதை காண முடிகிறதா? இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, நாம் - நாம் - நாம் கத்தோலிக்க சபையைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது பிராடெஸ்டெண்டு சபைகளிலும் கூட நுழைந்துவிட்டதல்லவா? பரிசுத்த ஆவியின் கிரியைகள் இப்பொழுது எங்கே பிராடெஸ்டெண்டு சபைகளில் காணப்படுகின்றன? பெந்தெகொஸ்தே கிரியைகள் இப்பொழுது எங்கே பிராடெஸ்டெண்டுகளிடையே காணப்படுகின்றன? லூத்தரன்களின் மத்தியில் அது உள்ளதா? அப்படியானால் நான் அங்கு சென்று, புசித்து, மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்க விரும்புகிறேன். பிரஸ்பிடேரியன் சபையில்? அங்குள்ளதா என்பது எனக்கு சந்தேகம். பாருங்கள்? நீங்கள் மாம்சப் பிரகாரமான ஒன்றை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களை விட்டு கடந்து செல்ல வேண்டும். அது உங்களுக்கு தெரியும். ஆனால் நான் கூறுவது மாத்திரம் உங்கள் இருதயத்தை விட்டு அகல வேண்டாம். மாம்சத்துக்குரியவைகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். அது மரணத்தைப் பிறப்பிக்கும். ஆனால் ஆவியோ உயிர்ப்பிக்கிறது. ஆவியே ஜீவனையளித்து உயிர்ப்பிக்கிறது. ஆவிதான் முக்கியம் வாய்ந்தது. 132ஆகவே நீங்கள் பாருங்கள், அவர்கள் செய்தது, (அவர்கள் என்ன செய்தார்களென்று கவனியுங்கள்) அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தை அகற்றி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் பட்டப் பெயர்களில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தை நியமித்துக் கொண்டனர். அவை பட்டப் பெயர்களேயன்றி, நாமமல்ல. “அதனால் என்ன வித்தியாசம்?” என்று நீங்கள் கேட்கலாம். சரி, இப்பொழுது, நீங்கள் அதை கொடுக்க... உங்கள் சம்பள காசோலையை சனிக்கிழமைன்று உங்கள் எஜமான் உங்களுக்குத் தருகிறார். அவருடைய பெயரை காசோலையில் கையொப்பமிடுவதற்குப் பதிலாக 'எஜமான்' என்று எழுதினால் எப்படியிருக்கும்? அது தான். உங்கள் சம்பளக் காசோலை “ஜான் டோவுக்கு 150 டாலர்கள் தாருங்கள். இப்படிக்கு எஜமான்” என்று அவர் காசோலையை எழுதித் தந்தால், அதை வங்கியில் போட்டுப் பாருங்கள்! அது செல்லாது. நிச்சயமாக அது திரும்ப உங்களிடமே அனுப்பப்படும். ஆம், ஐயா! 133அது எவ்வித வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லையென்றால், பின்னை ஏன் பவுல், தேவனைத் துதித்து மகிழ்ச்சி கொண்டு, அநேக மகத்தான செயல்கள் அவர்களிடையே காணப்பட்டிருந்த கிறிஸ்தவர்களை நோக்கி, “நீங்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினான்? தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறதோ அதிலே நிலைத்திருங்கள். வித்தியாசமான ஒன்றை கூறாதீர்கள். அது என்ன கூறுகிறதோ அதையே கூறுங்கள். பாருங்கள்? தேவனுடைய வார்த்தையைக் கொண்டுதான் நாம் நியாயந்தீர்க்கப்படுவோம். 134இப்பொழுது கவனியுங்கள், அதைத்தான் அவர்கள் செய்தனர். மறுபிறப்புக்கு பதிலாக சபையில் சேர்ந்து கொள்வதை அவர்கள் நுழைத்தனர். தேவனுடைய வார்த்தையை பேசுவதற்கு பதிலாக அவர்கள் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். 'மரியாளே, வாழ்க!' என்று அவர்கள் கூறினதாக வேதத்தில் எங்கேயாவது காட்டுங்கள் பார்க்கலாம்! அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணத்தை (Apostles Creed) அவர்கள் உச்சரித்ததாக பிராடெஸ்டெண்டுகள் காட்டுங்கள் பார்க்கலாம்! அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணத்தில் 'பரிசுத்தவான்களின் ஐக்கியம்' (Communion of Saints) என்று கூருகிறதே; அது வேதத்துக்கு விரோதமானது (மரித்த பரிசுத்தவான்களுக்கு ஜெபங்கள் ஏறெடுப்பதை சகோ. பிரன்ஹாம் இங்கு குறிப்பிடுகின்றார் - தமிழாக்கியோன்). பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்ததாக வேதத்தில் எங்காவது காட்டுங்கள் பார்க்கலாம்! அது அங்கு இல்லை. ஆயினும் நீங்கள் அதை பின்பற்றுகிறீர்கள் இப்பொழுது, இப்பொழுது, சகோதரரிடையே சகோதரத்துவத்தையும் ஐக்கியத்தையும் நிலைநாட்டுவதற்கு பதிலாக அவர்கள் குருக்களாட்சியை (Heirarchy) நியமித்துக் கொண்டனர். என்ன செய்யவேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை உங்களுக்கு அறிவிக்க, போப்பாண்டவரையும் பேராயரையும் அவர்கள் நியமித்துக் கொண்டனர். பெந்தெகொஸ்தராகிய உங்களுக்கு, நீங்கள் யாரை அழைக்கலாம் என்று போதிக்க, மாவட்டப் போதகர் இருக்கிறார். ஆனால் சபைக்கோ கிறிஸ்து இருக்கிறார். ஆமென்... 135அந்த நிலையைத்தான் நாம் அடைந்துவிட்டோம். பாருங்கள்? தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக அவர்கள் மனிதரால் ஏற்படுத்தப்பட்ட கோட்பாடுகளை அளிக்கின்றனர். தேவனுடைய வார்த்தையை அவர்கள் அகற்றிவிட்டனர். பட்டைப்புழு என்ன செய்தது? மரத்திலிருந்து அதை எடுத்துப் போட்டு, இதை உங்களுக்கு அளித்துவிட்டது. நாம் எந்நிலைக்கு வந்திருக்கிறோம் என்பதைப் பார்த்தீர்களா? நீங்கள் கூறலாம், “சரி, சகோதரன் பிரன்ஹாமே...” மற்றெல்லாம் எங்கிருந்து... பிராடெஸ்டெண்டு சபை எதிலிருந்து தோன்றினது? கத்தோலிக்க மார்க்கத்திலிருந்து. அப்படித்தான் வெளிப்படுத்தல் 13... அல்லது வெளிப்படுத்தல் 17 கூறுகிறது அது ஒரு வேசி என்றும் அது 'வேசிகளின் தாய்' என்றழைக்கிறது. எனவே இருவரும் ஒருவரே. ஒரு பானை, கைப்பிடி வைத்த வெந்நீர் கொதிக்க வைக்கும் பாத்திரத்தை (Kettle) நீ கறுப்பாக இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியுமா என்று கூற முடியாது. ஆகவே அப்படிச் செய்யாதீர்கள். அதைச் செய்யாதீர்கள். ஆகவே அது -அது சரி. 136சகோதரத்துவம். நாம் ஒருவருக்கொருவர் சகோதரராய் இருக்க வேண்டியவர்களாயிருக்க, அவர்கள் சகோதரத்துவத்தை எடுத்துப் போட்டு, நம்மை வேறு பிரித்து, வித்தியாசமுள்ளவர்களாக்கினர். சரி, இப்பொழுது கவனியுங்கள். இது ஒரு நல்ல கருத்து. இதைக் கூறிவிட்டு நான் மற்றவைகளுக்கு சென்றுவிடுகிறேன். 137நாம் தவறு செய்திருந்தால் நாம் நம்முடைய ஆத்துமாக்களை பரிசுத்த ஆவியால் சுத்திகரிக்க வேண்டுமென்று வேதம் நமக்கு போதிக்கிறது. நீங்கள் முழங்கால்படியிடுங்கள்; நாம் தவறு செய்கிறோம் என்பதை பரிசுத்த ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்தும்படிக்கு; நீ மரித்துப்போகும் படியான அளவிற்கு, நம்முடைய ஆத்துமாக்களை சுத்திகரிக்கும்படியாக அவருக்கு முன்பாக அப்படியே தரித்திருங்கள். இதுதான் நாம் கடைபிடிக்கும் முறை. ஆனால் கத்தோலிக்கர்களோ அதை அகற்றி, அதற்கு பதிலாக பாவ விமோசன ஸ்தலம் (Purgatory) என்னும் ஒன்றை அளித்துள்ளனர். ஒருவன் மரித்தால், அந்த ஸ்தலத்திற்கு செல்கின்றான் என்றும், சபை குரு அதிக பணத்தை வசூலித்து, ஜெபம் செய்து, அவனை அங்கிருந்து வெளியே கொணர்கிறார் என்றும் கூறப்படுகிறது. அது அர்த்தமற்ற நம்பிக்கை! “பட்டைப்புழு அதைத்தான் செய்தது. நிச்சயமாக! ஜெபம் செய்து, பாவ விமோசன ஸ்தலத்திலிருந்து உங்களை மீட்டுக் கொள்ளுதல் என்பது. அந்த ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டுமானால் நூற்றுக்கணக்கான டாலர்கள் செலவாகும். பாவ விமோசன ஸ்தலத்தைக் குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ளதா என்று காண்பியுங்கள்!அப்படியொன்றும் வேதத்தில் கிடையாது. இல்லை, ஐயா! நீங்கள் மரித்த பின்பு பாவ விமோசன ஸ்தலத்தை அடைவதாக அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட னர். ''பரி. போனிஃபேஸ் (St. Boniface) அப்படி கூறியுள்ளார்'' என்று நீங்கள் கூறலாம். அவர் என்ன கூறியிருந்தாலும் அதைக் குறித்து எனக்கு கவலையில்லை. 138“நல்லது, இன்னார் - இன்னார் அவளிடம் கூறவில்லையா, அவள் அவளுடைய கணவனுக்காக ஜெபித்தாளே, அந்த பெரிய சகோதரி, பரிசுத்த இன்னார் - இன்னார்...'' கத்தோலிக்க மார்க்கம் எதை செய்தாலும் எனக்கு கவலையில்லை. அது அதிகாரப்பூர்வமான தேவனுடைய வார்த்தையாக அமைந்திருக்கவில்லை. அப்போஸ்தலர்களின் அதிகாரப்பூர்வமான போதகங்களுக்கு இது முரணாயுள்ளது. சபையை ஒழுங்குக்குள் வைக்க தேவன் அப்போஸ்தலர்களுக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். எனவே சபையானது அப்போஸ்தலர்களின் போதகங்களின் மேல் கட்டப்பட்டுள்ளதேயன்றி, பரி. போனிஃபேஸின் போதகங்களின் மேலோ அல்லது வேறு யாருடைய போதகங்களின் மேலோ கட்டப்படவில்லை... அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாயுள்ளது. பரி. போனிஃபேஸ் என்ன கூறியிருந்தாலும், அல்லது பரி. சுசி, பரி. மரியா போன்றவை அது அர்த்தமற்றதாகும். மற்ற பரிசுத்தவான்கள் அல்லது பரிசுத்தவாட்டிகள் என்ன கூறியிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, மற்ற பொய்களைப் போலவே இவைகளும் பொய், தேவனுடைய வார்த்தைக்கு அது முரணாயிருக்குமானால் அது பொய்தான். அதிகாரப்பூர்வமில்லாத வார்த்தைகளை நான் நம்புவது கிடையாது. எனவேதான் நான் பிராடெஸ்டெண்டுகளின் ஸ்தாபனப் பிரமாணங்கள் போன்றவைகளை நம்புவதில்லை. அது முழுவதும் கத்தோலிக்கரிலிருந்து தோன்றினதாகும். அவை ஸ்தாபனக் கோட்பாடுகளேயன்றி வேறல்ல. பிராடெஸ்டெண்டுகளாகிய நீங்கள் ஸ்தாபனக்கோட்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது, கத்தோலிக்கரைப் பார்த்து நீங்கள் எவ்வாறு ஏளனம் செய்யலாம்? (பிராடெஸ்டெண்டுகள் அநேகர் இக்கூட்டத்தில் இல்லை. ஆனால் இச்செய்தி ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டு உலகெங்கிலும் செல்கின்றது). 139கவனியுங்கள், அவர்களைப் போலவே நீங்களும் வேதத்திற்கு முரணான, மனிதரால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனப் பிரமாணங்களை கைக் கொண்டு வரும்போது, கத்தோலிக்கர்கள் தவறென்று நீங்கள் எங்ஙனம் கூற முடியும்? அந்த பழைய வேசியின் குமாரத்தியாய் அமைந்துள்ள ஸ்தாபனத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள். நாம் யாரை வேசியென்று அழைக்கிறோம்? தன் கணவனுக்கு உண்மையாயிராத ஒருத்தியை - கிறிஸ்தவ சபை என்று அவள் உரிமை கோரி, தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, தவறான போதகங்களை அவள் அளிக்கிறாள். ஏவாள் செய்த விதமாக. அவள் பிசாசுக்கு செவி கொடுத்ததால், அதினால் எல்லா மரணமும் துயரமும் பூமியை அடித்தன - ஏவாள் மூலமாக வந்தன, ஏனெனில் அவள் அவருடைய வார்த்தையை அவிசுவாசித்ததினாலே தேவனுக்கெதிராக ஆவிக்குரிய விபச்சாரம் செய்தாள். ஸ்தாபனங்களும் இன்று சரியாக அதையே செய்து கொண்டிருக்கின்றன. அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக ஆவிக்குரிய விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய உபதேசங்களுக்கு நீங்கள் இணங்காவிடில், உங்களை அவர்களுடைய ஸ்தாபனங்களுக்குள் அனுமதிக்கமாட்டனர். அவர்கள், “இதை நீங்கள் விசுவாசித்து, இது சரியென்று கூறினால் மாத்திரமே நீங்கள் வரலாம்” என்று எனக்கு கடிதங்களை அனுப்புகின்றனர். நான், “என்னால் வரமுடியாது” என்று பதில் எழுதிவிடுவேன். இல்லை, ஐயா! வேதம் கூறுவதையே நான் போதிப்பேன்; வேறெதையும் நான் போதிக்கமாட்டேன். அது சத்தியம். 140தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருங்கள். சகோதரரே, அதைத் தான் நாம் செய்ய வேண்டும். அதில் நிலைத்திருங்கள். நாம் கடைசி நாட்களுக்கு வந்து கொண்டிருக்கிறோமென்று நாமறிவோம். அந்த மணி நேரம் இங்கே இருக்கிறது. அவர்கள் இது, அது, மற்றது என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் அவை அதிகாரப்பூர்வமாய் இல்லாதவரை, அவைகளை நம்ப வேண்டாம். அதை யார் கூறியிருந்தாலும் எனக்கு கவலையில்லை. 141அண்மையில் ஒரு சகோதரி என்னிடம் வந்தார்கள் முன்னூறு போதகர்களைக் கொண்ட ஒரு குழுவிற்கு நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தைக் குறித்து போதித்தேன். அக்கூட்டத்திலிருந்த அநேகர் இப்பொழுது இங்குள்ளனர். சிக்காகோ போதகர் சங்கத்தை சார்ந்த அனைவரும் அங்கு என்னை சந்தித்தனர். ஆண்டவர் எனக்கு ஒரு தரிசனம் அருளி, அவர்கள் எங்கு கூடுவார்களென்றும், அப்பொழுது என்ன நிகழுமென்றும் முன்கூட்டியே எனக்கு அறிவித்தார் (நீங்கள் கேட்க விரும்பினால், அந்த ஒலிநாடா எங்களிடம் உள்ளது). அங்கு பேராயர்களும், கார்டினல்களும், வேதத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்களும் குழுமியிருந்தனர். நான், “இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தை ஆட்சேபிக்கிறவர்கள் உங்கள் வேதாகமத்தை கையிலேந்தி இங்கு வாருங்கள்” என்று சவால்விட்டேன். எல்லோரும் மௌனமாயிருந்தனர். யாரும் ஒன்றும் பேசவில்லை. ஏன்? தேவனுடைய வார்த்தைக்கு அவர்கள் நடுங்கினர். “உங்கள் ஆட்சேபனைக்கு சான்றளிக்க உங்களால் முடியவில்லையென்றால், பின்னை ஏன் என்னைக் குற்றப்படுத்துகிறீர்கள்? நீங்கள் ஒன்றும் பேசாமல் இருக்க வேண்டியதுதானே! உங்கள் கருத்தை தேவனுடைய வார்த்தையைக் கொண்டு ஆதாரப்படுத்த முடியவில்லையென்றால் ஒன்றும் பேசாமலிருங்கள்” என்றேன். 142அதே குழு ஒரு ஸ்திரீயை என்னிடம் அனுப்பினது. அவர்கள், “சகோ. பிரன்ஹாமே, கர்த்தருடைய தூதன் உங்களிடம் கூறியிருப்பாரானால்..., (கர்த்தருடைய தூதனை உங்களுக்குத் தெரியும். அவருடைய படம் அங்குள்ளது உங்களால் காணமுடிகிறதா?) ”கர்த்தருடைய தூதனாவர் உங்களிடம் கூறியிருந்தால், நல்லது, நாங்கள் அதை விசுவாசிப்போம்“ என்றாள். நான் அவர்களிடம், “இந்த போதகக் குழு வேத போதனையில் இவ்வளவு பலவீனமாயிருக்குமென்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. முதலாவதாக, அந்த தூதன் வேதத்திற்கு முரணானவைகளைக் கூறுவாரானால், அவர் கர்த்தருடைய தூதனாகவே இருக்க முடியாது” என்றேன். கர்த்தருடைய தூதன் தேவனுடைய வார்த்தையை ஊர்ஜிதப்படுத்த வேண்டும். ஒவ்வொரு காலத்திலும் அவர் அங்ஙனமே செய்து வந்துள்ளார். இக்காலத்திலும் அதையே அவர் செய்து வருகிறார். அவர் தேவனுடைய வார்த்தையில் எப்பொழுதும் நிலைத்திருக்கிறார். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ள எந்த ஒரு போதகரும் அதே வார்த்தையில் நிலை கொண்டிருப்பார். ஏனெனில் வேதாகமம் முழுவதுமே பரிசுத்த ஆவியினால் எழுதப்பட்டது என்று வேதாகமமே நமக்கு அறிவிக்கிறது. அப்படியிருக்க, நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தால், வேதத்தை எவ்வாறு மறுதலிக்க முடியும்? உங்களிலுள்ள பரிசுத்த ஆவியே ஸ்தாபனக் கோட்பாடுகள் தவறென்று அறிவிக்க வேண்டுமே! அந்த பட்டைப்புழு தின்று கொண்டேயிருந்தது (அவ்வளவுதான். பாருங்கள்?) தேவனுடைய உண்மையான காரியங்களை தின்கிறது. ஆம் ஐயா. 143அப்போஸ்தலர்களுடைய போதகத்திற்கு முரணாயுள்ள அதிகாரப்பூர்வமற்ற வார்த்தை. ஓ, என்னே! இதுதான் அப்போஸ்தலருடைய உபதேசம்; இதுதான் வேதாகமம்; இதுதான் பரிசுத்த ஆவி. இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம், நீங்கள் மாத்திரம் அதை விசுவாசித்து ஏற்றுக் கொண்டால், அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் நிறைவேறுவதைக் காணலாம். சரியாக இப்பொழுதே தேவன் பிரசன்னமாகுதல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரவேல் புத்திரர் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தபோது அவர் தேவனாயிருந்த விதமாகவே இக்காலத்திலும் அவர் தேவனாயிராமல் போனால், அவர் தேவனாகவே இருக்கமுடியாது. பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியாக இறங்கின அதே தேவன் இன்று இங்கிராமலிருந்தால், அவர் தேவனல்ல. அப்படியானால் அவர் உயிர்த்தெழவில்லை என்றுதான் அர்த்தம். இன்றைக்கும் அதே தேவனாயிராவிட்டால், சரித்திரப் பிரகாரமான தேவனால் இன்று நமக்கு என்ன உபயோகம்? அவர் தேவனே இல்லையென்றால், போதகர்களை வேதப் பள்ளிகளுக்கு அனுப்பி, அடைகாக்கும் இயந்திரத்தின் மூலம் பொறித்த கோழிக் குஞ்சுகளைப் போல் அவர்களை ஆக்கி, வெளியே அனுப்புவதால் என்ன பயன்? 144நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தேவனுடைய வாரத்தையிலிருந்து எடுத்துப் போடுகிறீர்கள். உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? 'சபை'யென்று நீங்கள் கூறலாம். சபையா?ஆக மொத்தம் 969 ஸ்தாபனங்கள் உள்ளனவே! அவைகளில் எது சரி? இதன் காரணமாக யாருக்கும் என்ன செய்வதென்றே தெரிவதில்லை. இதைக் காணும்போது அவர்கள் குழப்பமடைகின்றனர். அது உண்மை, ஆனால் தேவன் இந்த ஸ்தாபனங்களைக் கொண்டு நியாயந்தீர்க்கப் போவதில்லை. அவர் கிறிஸ்துவைக் கொண்டு நியாயந்தீர்க்கப் போகின்றார். கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார். “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார்” என்று வேதம் உரைக்கின்றது. 145அவர் சபையையும் மக்களையும் வார்த்தையைக் கொண்டு நியாயந்தீர்த்தார். (அது சரி) ஜீவிக்கின்ற, உயிர்த்தெழுந்த வார்த்தை அந்த ஜீவனுள்ள, உயிர்த்தெழுந்த வார்த்தை, இந்த வார்த்தைக்கு முரணான ஏதாவதொன்றைக் கூறுமானால், அவர் ஜீவனுள்ள, உயிர்த்தெழுந்த வார்த்தையேயல்ல. ஏனெனில் அவர் சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்க வேண்டியவராயிருக்கிறார். அவர் ஒன்றை இங்கு கூறிவிட்டு, வேறொன்றை அங்கு கூறமுடியாது. நான் ஒருக்கால் இங்கு ஒன்றைக் கூறிவிட்டு வேறொன்றை அங்கு கூறலாம். ஏனெனில் நான் மனிதன். நீங்களும் அப்படி செய்யக் கூடும். நீங்கள் உங்கள் அறிவையும் புரிந்து கொள்ளுதலையும் அபிவிருத்தி செய்து கொள்ள வழியுண்டு. ஆனால் தேவன் அப்படியல்ல, அவர் முடிவற்றவர் (infinite). பாருங்கள்? அவருடைய முதல் தீர்மானம் அவர் முதலில் எதை கூறினாரோ, அது நித்திய காலமாய் மாறாததாய் இருக்க வேண்டும். அவர் ஒன்றை இங்கு கூறிவிட்டு அதை மாற்றி வேறொன்றை அங்கு கூற முடியாது. அவர் தேவனாயிருக்கும் படியாக, அவர் ஒவ்வொரு காலத்திலும் அதே காரியத்தைத் கூற வேண்டும். எனவே, உங்கள் மேல் தங்கியுள்ள ஆவி தேவனுடையதாயிருக்குமானால், இதில் காணப்படும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமென்று அது சாட்சி பகரும். அது நேற்றும், இன்றும், என்றும் மாறாதது. வேதம் அப்படித்தான் கூறுகிறது. ஆம், ஐயா! சரி, 146இந்த சிறு புழுவின் அடுத்த கட்டத்திற்கு நாம் விரைந்து செல்வோம். முதலாவதாக, பச்சைப்புழு. அது தேவனுடைய மரத்திலுள்ள எதை தின்றது? கனிகளை. அடுத்த கட்டத்தில் (அது முதலாம் கட்டத்தில் மரித்து பிறகு அடுத்த கட்டத்துக்கு மாறினது) அது என்ன செய்தது?இச்சமயம் அது வெட்டுக்கிளியாக வந்து இலைகள் அத்தனையும் தின்று போட்டது. அதுதான் வெட்டுக் கிளியின் பழக்கம். அடுத்தபடியாக அது என்ன செய்தது? அடுத்த கட்டத்தில் அது பட்டைப்புழுவாக வந்து, பட்டைக்குள் நுழைந்து கொண்டது. இப்பொழுது அது முசுக்கட்டைப் பூச்சியாக (Caterpillar) நான்காம் கட்டத்தில் வருகிறது. முசுக்கட்டைப் பூச்சி என்ன செய்யும்? அது ஜீவனை - ஆவியை அந்த ஜீவனை உறிஞ்சிவிடும். அது சதை பாகத்திற்குள் சென்று சத்து அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றது. அதை நாம் என்னவென்று அழைக்க வேண்டும்? ஸ்தாபனம் என்று. அதுதான் அதன் சரியான பெயர். ஏன்? அது சேதப்படுத்தும் ஒன்று. அது ஜீவனை உறிஞ்சிவிடுகிறது. 147ஒவ்வொருமுறையும் தேவன் தமது மக்களிடையே ஒரு அசைவை அனுப்பும் போதும், ஒவ்வொரு முறையும் அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்கின்றனர், அங்கேயே அவர்கள் மரித்தும் விடுகின்றனர். சபையின் வரலாற்றை அறிந்துள்ள யாராகிலும் நான் கூறுவதை ஆட்சேபிக்கட்டும் பார்க்கலாம். ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்ட அப்பொழுதே மரிக்காமலிருந்த ஏதாகிலும் ஒரு ஸ்தாபனத்தை ஒரு முறையாவது எனக்குக் காண்பியுங்கள்! பட்டைப்புழு அதைப் பற்றிக் கொண்டு மார்க்கத்தை எடுத்துப் போட்டுவிட்டது. பிறகு உறிஞ்சும் பூச்சி தோன்றி மரத்திலுள்ள சத்து (ஜீவன்) அனைத்தையும் உறிஞ்சிவிட்டது. அதில் எந்த ஜீவன் இருந்தது? பரிசுத்த ஆவி. அது என்ன செய்தது? அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்து, அதே சமயத்தில் ஸ்தாபனக் கோட்பாடுகளையும் வைத்துக் கொள்ள முடியாது. பரிசுத்த ஆவி அதை பொறுத்துக் கொள்ளாது. எனவே அது மரத்திலிருந்து ஜீவனை எடுத்துப் போட்டு, அதற்குப் பதிலாக ஸ்தாபனக் கோட்பாடுகளை அளித்து, அதை ஒரு ஸ்தாபனமாக ஆக்கிவிட்டது. “அது என்ன கூறினாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்கள் ஸ்தாபனம் இப்படி சொல்கிறது” என்கின்றனர். 148பார்த்தீர்களா? அது தன்னை ஸ்தாபித்துக் கொண்ட உடனேயே மரித்துவிடுகிறது; அது மறுபடியும் எழும்புவதில்லை. முதலாவதாக தோன்றிய ஸ்தாபனம் கத்தோலிக்க ஸ்தாபனமாகும். அது உடனே மரித்துவிட்டது. தொடக்கத்திலேயே அது ஸ்தாபனக் கோட்பாடுகளைக் கொண்டிருந்தது. அதிலிருந்து முதலாம் சீர்திருத்தம் தோன்றினது - லூத்தர். அதுவும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு மரித்துப்போனது, அடுத்ததாக வெஸ்லி வந்தார் - அதுவும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு மரித்துப்போனது. அடுத்ததாக பெந்தெகொஸ்தேயினர் - அவர்களும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு மரித்துப் போயினர். பிரஸ்பிடேரியன், லூத்தரன், இன்னும் மற்றவர்களான நசரீன்கள், யாத்திரீக பரிசுத்தர் இன்னும் அவர்களைத் தொடர்ந்து வந்த ஸ்தாபனங்கள் ஒவ்வொன்றும் மரித்துப் போயின, அவர்களைப் பாருங்கள்! அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டதால், அது அவர்களைக் கொன்றுவிட்டது! அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஸ்தாபனக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டனர். நசரீன்களாகிய நீங்கள் மிகவும் அருமையானவர்கள் - அவர்கள் பெந்தெகொஸ்தேயினருக்கு அடுத்தவர்கள். நீங்கள் “பரிசுத்தமாக்கப்படுதல்” என்பதில் நம்பிக்கைக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் பரிசுத்த ஆவியின் வரங்களுக்கு நீங்கள் வரும்போது, அன்னிய பாஷை பேசுதல், தேவனுடைய வல்லமையான கிரியைகள் போன்றவைகளை நீங்கள் பிசாசு என்று கூறினீர்கள். அப்பொழுதே நீங்கள் மரித்துவிட்டீர்கள். நசரேயர் இன்று எங்கே? மரித்துவிட்டனர். அந்த ஸ்தாபனத்தில் அநேக அங்கத்தினர்கள் இருக்கின்றனர். ஆயினும் அது எங்கே? அதுவெறும் சவமாயுள்ளது. முந்தின இரவு நான் அவளைக் கண்டேன். அது சரி. அந்த முழு காரியமும்... அவளுடைய மேய்ப்பன், மேலே படுத்து ஒரு சவத்திற்கு முத்தங் கொடுத்துக் கொண்டு, அதனோடு காதல் செய்து கொண்டிருந்தார். “எப்படியாயினும் அவர்களுக்கு போதுமான நேரம் இல்லை; இது தான் அதனுடைய எல்லாம்” என்றார். ஆகவே ஒலிநாடாவில் ஒரு நாள் உன்னிடம் நான் பேசுவேன். பாருங்கள்? அது சரி. 149ஆவியின் கனிகளைத் தருவதற்காக தேவன் தமது மரத்தை நட்டார். அது சரியா? ஆனால் மனிதன் என்ன செய்தான்? அதை செயற்கையாக ஆக்க மனிதன் எப்பொழுதுமே முயன்று வந்துள்ளான். முந்தின காலங்களிலும் அவன் அப்படி செய்தான்; இப்பொழுதும் அங்ஙனமே செய்து வருகிறான். (நாம் சீக்கிரம் முடித்துவிடலாம்). எப்பொழுதுமே மனிதன் ஆவிக்குரிய சபையை எடுத்து அதை செயற்கையாக மாற்றப் பார்க்கிறான். லூத்தர் ஆவிக்குரிய சபை ஒன்றைக் கொண்டிருந்தார். என்ன நேர்ந்தது? லூத்தர் மரித்தவுடனே அவர்கள் அதை செயற்கையாக மாற்றி அமைத்தனர். ஜான் வெஸ்லி என்ன செய்தார், ஜான் வெஸ்லி தேவனுடைய மகத்தான மனிதனாக இருந்தார். அவர் அப்படி இல்லை என்று யார் சொல்லக்கூடும்? ஜான் வெஸ்லியும், சார்லஸும், மரித்தபின்பு, அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அப்படி செய்தபோது, அவர்கள் மரித்துப் போயினர். அது உண்மை. காலங்கள் தோறும், ஒவ்வொரு முறையும் அவ்வாறே நிகழ்ந்து வந்துள்ளது. அவர்கள் செயற்கையானவைகளை உள்ளே புகுத்தினர் - நற்கிரியைகள், மிகவும் பெரிய சபை, புத்தி கூர்மையுள்ள மக்கள் போன்றவைகள். “பட்டணத்திலுள்ள புகழ் வாய்ந்தவர் எங்களைச் சேர விரும்புகின்றனர்” என்கின்றனர். 150பெந்தெகொஸ்தராகிய உங்களிடையேயும் அதுவே தான் நிகழ்ந்து வருகிறது. அது முற்றிலும் உண்மை . நீங்கள் பரிசுத்த ஆவி உள்ளே நுழையாதபடி கதவை அடைத்துவிட்டீர்கள். பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நீங்கள் அகன்று சென்றுவிட்டீர்கள். நீங்கள் பிரம்மாண்டமான கட்டிடங்கள் அழகான பொருட்கள் போன்றவைகளை விரும்பினீர்கள். உங்களுக்கு கௌரவம் வாய்ந்த போதகர்கள் இருக்கின்றனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? தாய்மார்களே, உங்கள் பிள்ளைகளைப் போதகர்களாக்க அவர்களை இங்கே இருக்கின்ற வேதாகம கலாசாலைகளுக்கு அனுப்புகிறீர்கள். அவர்களுக்கு அங்கு என்ன போதிக்கப்படுகின்றது? மனிதரால் ஏற்படுத்தப்பட்ட வேத தத்துவம் போன்ற சரக்கு. அவர்கள் 'ரிக்கிகள்' மற்றும் 'எல்விஸ்'களாக (Elvis - எல்விஸ், பிரபல அமெரிக்க பாப் இசைப் பாடகன் - தமிழாக்கியோன்) குழுக்களாக வேத பள்ளியிலிருந்து திரும்பி வருகின்றனர்: அது முற்றிலும் உண்மை. உங்களிடம் இன்று என்ன உள்ளது? வடிக்கட்டிய முட்டாள்தனம் (tommyrot) ஒன்றுக்கும் உதவாதவை - தேவ பக்தியின் வேஷம். கடைசி நாட்களில் அவர்கள் தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை - அதின் ஜீவனை - மறுதலிப்பார்கள் என்று வேதம் கூறியுள்ளது. ஏன் முசுக்கட்டைப் பூச்சி அதை உறிஞ்சிவிட்டது. ஸ்தாபனங்கள் அதை அகற்றிவிட்டன. 1511தீமோத்தேயு 3-ல் பவுல், “மேலும் கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெல்லாம் மனுஷரில் தற்பிரியராயும், அகந்தையுள்ளவர்களாயும், வீம்புக் காரராயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்கு கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும் இச்சையடக்கமில்லாதவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்” என்று கூறியுள்ளான். முசுக்கட்டைப் பூச்சி அதை உறிஞ்சுவிட்டது. அதற்கு அநேக ஆண்டுகட்கு முன்னரே பட்டைப்புழு அதில் ஏறிக் கொண்டது. கர்த்தருக்கு சித்தமானால் நாம் சரியாக அந்த மரத்தை கொண்டு வந்து பார்ப்போம். 152“எங்களுடைய சபை மிகவும் விஸ்தாரமான இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் அது அவ்வளவு சேர்த்தது'' என்று உங்களுக்குத் தெரியுமா என்கின்றனர். ஓ, நிச்சயமாக. உங்களைக் காட்டிலும் கத்தோலிக்கர்கள் அந்த விஷயத்தில் சிறந்தவர்கள். ருஷியாவிலும் கூட அவர்கள் அதிகம் சேர்த்திருந்தனர். ஆனால் அவர்கள் அதை விரட்டியடித்துவிட்டு, கம்யூனிஸத்தை நிலைநாட்டினர். மெக்ஸிகோவிலும் அவர்கள் அவ்வாறே செய்தனர். அவள் உலகெங்கிலும் எங்கெல்லாம் இருக்கின்றாளோ அங்கேயும் அவளுக்கு அவ்விதமாகவே அவர்கள் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர். அவ்விதம்தான் நடக்கும். அது உண்மை. 153கம்யூனிஸத்துக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். அது தேவனற்ற ஒரு இயக்கம். இந்த போதகர்களில் சிலர் பிரசங்க பீடத்தில் நின்று கொண்டு கம்யூனிஸத்தைக் கண்டனம் செய்வதை நாம் கேட்டிருக்கிறோம். எனக்கும் கம்யூனிஸத்தில் நம்பிக்கை கிடையாது. ஆனால் இவர்கள், “ஓ நாமெல்லாரும் விழுங்கப்படுவோம். முழு உலகமே கம்யூனிஸ்டாக மாறப்போகிறது'' என்கின்றனர். அவர்களின் கருத்து தேவனுடைய வார்த்தைக்கு முரண்பட்டது. அவ்விதம் நடக்கும் என்று சொல்லும் எந்த ஒரு பகுதியும் வேதாகமத்தில் கிடையாது. ஆனால் ரோமானியக் கொள்கை - கத்தோலிக்க சபை - முழு உலகத்தையும் விழுங்கிவிடும் என்று வேதம் உரைக்கிறது தானியேலின் புத்தகத்தைப் படித்து அறிந்து கொள்ளுங்கள். பொன்னினால் செய்யப்பட்ட தலை - நெபுகாத் நெச்சார் அரசன். பாபிலோனிய சாம்ராஜ்யம். மேதியரும் பெர்சியரும் அதற்குப் பின் தோன்றுகின்றனர்; அதையும் தொடர்ந்து கிரேக்க சாம்ராஜ்யம் தோன்றினது. பின்பு தோன்றிய ரோம சாம்ராஜ்யம் கடைசி வரைக்கும் நின்றது! அந்த பத்து விரல்களும் பூமியிலுள்ள ராஜ்யங்கள் அனைத்திற்குள்ளும் சென்றுவிட்டன. 154இரும்புத்திரை (Iron Curtain) என்று ஒன்றுள்ளது; மூங்கில் திரை என்று ஒன்றுள்ளது (Bamboo Curtain); இந்திர நீலத்திரை (Purple Curtain) என்று ஒன்றுள்ளது. சகோதரரே, நீங்கள் இந்திர நீலத் திரையைத் தவிர மற்றொன்றிற்கும் பயப்பட வேண்டாம். இந்திர நீலத் திரையைத் தவிர மற்றொன்றிற்கும் பயப்பட வேண்டாம். இந்திர நீலத் திரையை மாத்திரம் கவனித்துக் கொண்டு வாருங்கள். அது இன்றைக்கு இந்நாட்டிலேயே சிம்மாசத்தில் அமர்ந்துள்ளது. யேசபேல் எவ்வாறு ஆகாபைத் தூண்டிவிட்டாள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கத்தோலிக்க சபையை வேதம் யேசபேல் என்னும் வேசி என்று அழைக்கிறது. ஆகாப் ஒரு கெட்ட ஆள் அல்ல. திரு. கென்னடி நல்லவரல்ல என்று நான் சொல்ல வரவில்லை. அவரைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. அவர் ஒரு மனிதன்; எனக்குத் தெரிந்தது அவ்வளவே தான். அவர் இந்நாட்டின் அதிபர். அவரால் ஒரு சிறந்த அதிபராக செயலாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவரையல்ல, அவரை ஆதரிக்கும் கத்தோலிக்க முறைமையைத் தான் கூறுகிறேன். அது புழுவைப் போல மந்திரி சபையிலும் கூடுமான மற்றெல்லாவிடங்களிலும் நுழையும் வரை காத்திருந்து, பின்பு என்ன நிகழுகிறதென்று பாருங்கள். ஏனைய நாடுகளில் அது என்ன செய்துள்ளது என்பதையும், எக்காலத்திலும் அது என்ன செய்துள்ளது என்பதையும் ஆராய்ந்து பாருங்கள். 155வேதம் வெளிப்படுத்தல் 13-ல் கூறவில்லையா?... இந்த நாட்டின் எண் 13 ஆகும். அதன் கொடியில் 13 நட்சத்திரங்களும், 13 கோடுகளும் உள்ளன. எல்லாமே 13 ஆக அமைந்துள்ளன - 13 குடியேற்றங்கள் (Colonies) போன்றவை. இந்த நாடு வெளிப்படுத்தல் 13-ல் காணப்படுகின்றது. அது ஒரு ஆட்டுக்குட்டியைப் போல் எழும்பினது என்று வேதம் கூறுகின்றது - வழிபாட்டின் உரிமை. அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன - ஒன்று அரசாங்கம், மற்றொன்று மத சம்பந்தமானது. சற்று பின்னர் அவையிரண்டும் ஒன்றாக இணைந்து, அந்த ஆட்டுக்குட்டி வலுசர்ப்பத்தைப் போல் பேசினது. அதற்கு முன்பிருந்த வலுசர்ப்பம் செய்த அனைத்தையும் அது செய்தது. அவர்கள் மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணினார்கள் என்று வேதம் கூறுகிறது - சபைகளின் சங்கம் (Confederation of Churches). இப்பொழுது நியூயார்க் பட்டணத்திலேயே அது உருவாகிவிட்டது. அந்த பெரிய சவ அறை அங்குள்ளது. மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தெகொஸ்தெயினரான உலக சபை அங்கத்தினரான நீங்கள் அனைவரும் அத்தகைய இணைப்பை உண்டாக்கிக் கொண்டு, பாபிலோனை சேருவதற்காக உங்கள் சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப் போட்டீர்கள். உங்களுக்கு என்ன நேர்ந்தது? நிச்சயமாக ஏசாவைப் போல் ஒரு பானை கூழுக்காக உங்கள் சேஷ்ட புத்திர பாகத்தை நீங்கள் விற்றுப் போட்டீர்கள். அது உண்மை. ஒரு பானை கூழ்தான் உங்களுக்கு அங்கு கிடைக்கும். நீங்கள் மிருகத்திற்கு சொரூபம் உண்டாக்குகின்றீர்கள். அது உண்மை. எனவே நீங்கள் கம்யூனிஸத்திற்கு அஞ்ச வேண்டாம்; கத்தோலிக்க மார்க்கத்திற்கு அஞ்சுங்கள். 156அது ஆட்டுக்குட்டியைப் போல் கபடற்ற புகழ்ச்சியுடன் வரும், அதை கவனித்துக் கொண்டேயிருங்கள். ஆனால் அது உள்ளில் ஓநாயாகும், அது தந்திரமாக உள்ளே நுழைந்துவிடும். நீங்கள் அதை கவனியுங்கள் (ஆம், ஐயா). ஏனெனில் அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்கும். தேவனுடைய வார்த்தை கூறியுள்ள அத்தனையும் நிறைவேற வேண்டும். கம்யூனிஸம் ஒன்றும் செய்யாது. அது தேவனுடைய கரங்களில் ஒரு கருவியாக அமைந்துள்ளது. அது உண்மை. கம்யூனிஸம் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்? தேவனுடைய வார்த்தை நிறைவேறுவதற்காக தேவன் கம்யூனிஸத்தை அனுமதிக்க வேண்டியவராயிருக்கிறார். உங்களால் அதை காண முடிகிறதா? அப்படி நீங்கள் எப்பொழுதாகிலும் யோசித்ததுண்டா? தேவன் தமது வார்த்தையை நிறைவேற்ற வேண்டியவராயிருக்கிறார். 157ஒரு நாள், ஆகாபுக்கும் யோசபாத்துக்கும் முன்னால் நானூறு தீர்க்கதரிசிகள் நின்றனர். ஒரு நீதிமானாக இருந்த யோசபாத், “சரி, நாம் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு செல்லும் முன்பு கர்த்தருடைய ஆலோசனையை அறிய வேண்டாமா?” என்றான். ஆகாப், “ஆம், நிச்சயமாக” என்றான். பாருங்கள்? (யேசபேல் பின்னால் இருந்து கொண்டு செயல் புரிகிறாள், உங்களுக்குத் தெரியும்). அவன், “என்னிடம் இங்கு நானூறு தீர்க்கதரிசிகள் இருக்கின்றனர். அவர்களைக் கொண்டு வருவோம்” என்றான். அவர்கள் எல்லோருமே அருமையான ஜனங்கள், அவர்கள் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் அனைவருமே, “போங்கள், கர்த்தர் உங்களுடனே கூட இருக்கிறார்” என்று தீர்க்கதரிசனம் உரைத்தனர். ஆனால் அது இஸ்ரவேலின் ராஜா... அல்லது அங்கே இருந்த இஸ்ரவேலின் ராஜாவாகிய, இந்த தேவனுடைய மனிதனுக்கு சரியாக அது தொனிக்கவில்லை. அது அவனுக்கு சரியென்று தென்படவில்லை. அவன், “வேறு யாராகிலும் இங்கு இல்லையா?” என்று கேட்டான். நானூறு போதகர்கள் ஒருமனதுடன், “கர்த்தர் எங்களுடன் பேசி, 'நீங்கள் போகலாம்' என்று கூறினார்” என்றனர். அப்படியிருந்தும் அவன், “வேறொருவன் எங்காவது இருக்க வேண்டும்” என்றான். ஆகாப், “இன்னும் ஒருவன் இருக்கிறான். நான் அவனைப் பகைக்கிறேன். நிச்சயமாக, முற்றிலுமாக. ஆமாம் அவன் என்னைக், குறித்து தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுவான்” என்றான். தேவனுடைய வார்த்தை ஆகாபுக்கு விரோதமாயுள்ளபோது அந்த தீர்க்கதரிசி வேறென்ன செய்ய முடியும்? 158ஆகவே அவர்கள் ஆள் அனுப்பி மிகாயாவை அழைத்து வந்தனர். மிகாயா, “போங்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்தது சரியே. ஆனால் இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்'' என்றான். அப்பொழுது அந்த மகத்தான பிரசங்கி, பேராயர் கிட்டே வந்து அவனுடைய வாயில் அடித்து, “கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னை விட்டு உன்னோடு பேசும்படி வந்தது!” என்றான். மிகாயா, “அது தொடக்கத்திலேயே உனக்குள் இல்லையே” என்று சொல்லியிருப்பான் என்று நினைக்கிறேன். ஆகவே அப்பொழுது - ஆகவே அப்பொழுது அவன், “ஒரு நாளிலே அதைக் காண்பாய்” என்று விடையளித்தான். அவன் கூறினான். ஆகாப், ''இவனைச் சிறைச் சாலையிலே வைத்து, வருத்தத்தின் அப்பத்தையும் வருத்தத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள். நான் சமாதானத்துடன் திரும்ப வரும்போது இவனை கவனித்துக் கொள்வேன்“ என்றான். மிகாயா, “நீர் சமாதானத்தோடே திரும்பி வருகிறது உண்டானால், கர்த்தர் என்னைக் கொண்டு பேசினதில்லை” என்று பதிலளித்தான். 159ஏன்? ஏன்? அவன் தேவனுடைய வார்த்தையில் நிலை நின்றான், சரியாக வார்த்தையுடன் நின்றான். தேவனுடைய வார்த்தையுடன் இணங்காத எந்த ஒரு தீர்க்கதரிசனமும்... அதனால் தான் நான் இன்றைக்கு உங்களிடம் கூறுகிறேன்: அது எவ்வளவு நல்லதாக தென்பட்டாலும், எத்துணை போதகர்கள் இது, அது, மற்றது என்று கூறினாலும் “கம்யூனிஸம் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி, அதைக் கவிழ்த்து விடும்” என்று அவர்கள் கூறினாலும், நீங்கள் கம்யூனிஸத்தை எதிர்த்து போராட முயலாதீர்கள். ரோமானியக் கொள்கைகளுக்கு எதிர்த்து போராடுங்கள்! ஏனெனில்,அது “கர்த்தர் உரைக்கிறதாவது”! ரோம மார்க்கம ஆளுகை செய்யும் என்று கர்த்தர் கூறியிருக்கிறார் கம்யூனிஸம் அல்ல. அது தேவனுடைய கரங்களில் ஒரு பொம்மை. அவர் அவ்விதம் செய்ய வேண்டியவராயிருக்கிறார். 160கர்த்தர் மிகாயாவிடம், “ஆகாபை நான் அங்கே அனுப்ப வேண்டியதாயிருக்கிறது. எலியாவின் வார்த்தைகள் நிறைவேற வேண்டுமென்பதற்காகவே, அந்தப் பிரசங்கிகளை அவ்விதம் கூறச் செய்து, ஆகாபை போர்ப் பாளயத்திற்கு அனுப்ப வேண்டியவராயிருக்கிறேன்” என்றார். கம்யூனிஸம் தலைதூக்க தேவன் அனுமதிக்க வேண்டியதாயிருந்தது. அது என்ன செய்தது? இங்கே இருக்கின்ற பிண அறைகளையெல்லாம் ஒன்றுக் கூடச் செய்து, சபை ஐக்கியம் ஒன்றை ஏற்படுத்தி, மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை அவர்கள் உண்டாக்கிக் கொள்ளச் செய்தது. அப்படி அவர்கள் ஒரு சொரூபத்தை உண்டாக்குவார்கள் என்று வேதம் கூறுகின்றது. கம்யூனிஸத்தைக் குறித்து கவலைப்பட வேண்டாம். சபை ஐக்கியம் என்னும் பேரில் இவர்களெல்லாரும் ஒன்றாக இணைவதை கவனித்து வாருங்கள். 161நான் உங்களைக் களைப்புறச் செய்கிறேன் என்று நினைக்கிறேன், நான் கூறுவது முற்றிலும் உண்மை. மறுபடியுமாக உங்கள் மத்தியில் பிரசங்கம் செய்ய எப்பொழுது சமயம் வாய்க்கும் என்று எனக்குத் தெரியாது. மறுபடியும் நாம் சந்திக்காமலேயே போய்விடலாம். எது உண்மை என்று நீங்கள் அறிய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். கவனியுங்கள், இந்த வசனமே சத்தியம். நான் அல்ல, இந்த வார்த்தை. இது தான் அது. என் வார்த்தை இதற்கு முரணாக இருக்குமானால், என்னை நீங்கள் நம்ப வேண்டாம்; இந்த வார்த்தையை விசுவாசியுங்கள். நீங்கள், “எங்களுக்கு இந்த கோட்பாடுகளெல்லாம் உள்ளன. அதற்கு விரோதமாக நீர் பிரசங்கிக்கிறீர்'' என்று கூறுவீர்களானால் என்னிடம் வந்து அதைக் குறித்து வினவ நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். என்னிடம் வருவது உங்கள் கடமையாயுள்ளது. பாருங்கள்? நீங்கள் வாருங்கள். தேவனுடைய வார்த்தை கூறுவது என்னவென்று நாம் ஒன்று சேர்ந்து பார்ப்போம். 162இப்பொழுது, இப்பொழுது கம்யூனிஸம் தான் சபைகளை ஒன்று கூட்டியது என்று பார்த்தோம். கோகும் மாகோகும் ஒன்றிணைந்து (நிச்சயமாக) அந்தப் போரைத் தொடங்கும் என்று தேவன் கூறியுள்ளார். அது முற்றிலும் உண்மையாகும். ஏனெனில் இந்த சக்திகள் வேதம் கூறியுள்ளபடியே ஒன்று சேரும். அது நடந்தே தீர வேண்டும்; அவ்வாறு நடக்கும் என்று வேதாகமம் கூறியிருக்கிறது. 163ஆவியின் கனிகள் தர வேண்டுமெனக் கருதி தேவன் இம்மரத்தை நட்டார். ஆனால் மனிதனோ எல்லா காலங்களிலும் ஒரு செயற்கை முறையை உண்டாக்கிக் கொண்டவனாய், தேவ பக்தியின் வேஷத்தை தரித்தவனாய், லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள, நகரத்திலேயே பெரிய கட்டிடங்கள், (நிச்சயமாக) அட என்னே, இயேசு வரப் போகிறார் என்று பிரசங்கம் செய்து, அதே சமயத்தில் அறுபது, எண்பது லட்சம் டாலர்கள் மதிப்புள்ள கட்டிடங்களை கட்டுகின்றனர். ஆனால் பாவம், ஒரு ஜதை காலணிகளும் கூட இல்லாமல், வாரம் இரண்டே முறை உணவு உண்டு சுவிசேஷத்தை பிரசங்கித்து வரும் மிஷனரிமார்களை அதே சமயத்தில் நான் அறிந்திருக்கிறேன். உன்னால் அதைக் காணமுடிகிறதா சகோதரனே, ஏன், நாம்... ஜனங்களுக்கு என்ன ஆயிற்று? அவர் வரப் போகிறார் என்று அவர்கள் கூறுகின்றனரே அப்படி விசுவாசிக்கின்றார்களோ என்று நான் ஐயப்படுகிறேன். உங்கள் - உங்கள் - உங்கள் வார்த்தைகள் பேசுகின்றன... நல்லது உங்களுடைய - உங்களுடைய ஜீவியம் உங்கள் வார்த்தைகளை விட அதிக சத்தமாக பேசுகிறது; நீங்கள்... பாருங்கள்? அவன்... அந்த எளிய மிஷனரிமார்கள் கால்களில் காலணி ஒன்றும் அணியாமல், ஒரு பழைய கால்சட்டையை போட்டுக் கொண்டு, என் கூட்டங்களுக்கு வருவதைக் காணும் போது - அவர்கள் வண்டுகள், கிருமிகள், மற்றும் இரத்தம் உரிஞ்சுகின்ற மூட்டுப் பூச்சிகள் மற்றும் பயங்கரான வியாதிகள் இவைகளினிடையே வாழ்கின்றனர். அவர்களுடைய கைகள் பூச்சிகளால் அரித்துப் போயுள்ளன. அப்படிப்பட்டவர்கள் என்னிடம் வந்து, “நீங்கள் தான் சகோ. பிரன்ஹாமா?” என்று கேட்கின்றனர். 164நான், “ஆம்” என்பேன். “கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. உங்களுக்காக நான் ஜெபித்துக் கொண்டுவருகிறேன்” என்பார்கள். நான், “ஓ, தேவனே அந்த மனிதன் எனக்காக ஜெபிக்கட்டும்; ஆம், அவன் தான் தகுதியானவன். அவன் தான் சரியான ஆள்” என்று நினைத்தேன். “சகோ. பிரான்ஹாமே, உங்கள் செய்திகளை நான் படித்திருக்கிறேன். நீங்கள் சத்தியத்தையே எடுத்துரைக்கிறீர்கள். நாங்கள் உங்கள் சார்பில் இருக்கிறோம்''. ஓ, சகோதரனே, அந்த எளியவர் தான் உண்மையான ஊழியன். மற்றவர்கள் கூறுவர், “அவர் யார் என்று உனக்குத் தெரியுமா?” “ஓ, தெரியுமா, அவர் எங்கள் ஸ்தாபனத்தைச் சார்ந்தவர் அல்ல” என்பர். நான் கேட்டேன், “அவர் யார்?” “ஏன், அவர் எங்களோடு இல்லை”. “சரி, அவர் யார் தான்?” “ஓ, அவர் ஒரு சுயாதீனமானவர்.” “ஓ, அவர் அப்படிப்பட்டவரா? ஹூ... ஹூம். நல்லது, அவர் என்ன செய்கின்றார்? “ஓ, அவருக்கு அங்கே ஒரு சிறு வேலை இருக்கிறது. அவர் அவர் எங்களோடு சேரவேமாட்டார்” “அப்படிப்பட்டவரை நான் அறிய விரும்புகிறேன்'' என்பேன். 165உங்களுக்குத் தெரியும், நான் சிறுவனாயிருந்த போது, ஆப்பிள் பழத் தோட்டத்திற்கு சென்று ஆப்பிள் பழங்களைப் பறிப்பது வழக்கம். நல்ல ஆப்பிள் பழங்கள் தரும் மரங்களைச் சுற்றிலும் தடிப்பான கொம்புகள் கட்டப்பட்டிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். தேவன் அதை தடிப்பாக நன்றாக கட்டியிருக்கிறார்; அங்கே தான் நல்ல ஆப்பிள் பழங்கள் இருந்தன. அவர்கள், “சரி அவன் ஒரு பரிசுத்த உருளையன் மாத்திரமே” என்றனர். உங்களுக்குத் தெரியுமா? நல்ல மரம் உள்ள இடத்தில் தான் பறவைகளை பயமுறுத்த சோளக்கொல்லை பொம்மை (scare crow) வைக்கப்பட்டிருக்கும். பிசாசும் அதையே செய்கிறான். சத்தியத்திலிருந்து உங்களை விலக்க எண்ணி அவன் உங்களை பயமுறுத்துகிறான். கவலைப்பட வேண்டாம். சோளக் கொல்லை பொம்மையைக் கடந்து அதன் பின்பாகத்தில் சென்று விடுங்கள். 166ஒரு நாள் குழிமுயல் ஒன்று நான் நட்டு விளைந்திருந்த அவரையை தின்று கொண்டிருப்பதைக் கண்டேன். ஒவ்வொரு முறையும் நான் நடும்போதும், அந்த குழிமுயல் அதிலுள்ள அவரையைத் தின்றுவிடும். “சரி, நான் அதை பயமுறுத்துகிறேன் பார்” என்று எண்ணிக் கொண்டே, ஒரு பெரிய காகிதப் பையை எடுத்து, பயமுறுத்தக் கூடிய உருவம் ஒன்றை அதன்மேல் வரைந்தேன். (நீங்கள் அதைக் கண்டிருந்தால், என்னை ஒரு ஓவியன் என்றே நினைத்துவிடுவீர்கள். நான் வரைந்த படம் அவ்வளவு பயமுறுத்தக் கூடியதாக இருந்தது). நான் சில அவரை விதைகளை அதில் திணித்து, அதை கம்பத்தில் தூக்கி தைத்தேன். காற்று அடிக்கும் போதெல்லாம் அது இப்படி அசைந்தது. குழியிலிருந்து குழிமுயல் அவரையைத் தின்பதற்காக வெளியே வந்தபோது, அந்த காகிதப் பையை கண்டது, அதில் வரையப்பட்டிருந்த உருவத்தைப் பார்த்தவுடன் சற்று பயந்து பின்வாங்கி, அங்கிருந்து அதை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தது. (சகோதரன் பிரன்ஹாம் சில விளக்க சத்தங்களை செய்கிறார் - ஆசி) அது பின்புறம் சென்று அவரை செடி வரிசையாக வளர்ந்திருப்பதை கண்டது. காண்பதற்கு அது மிகவும் அழகாயிருந்தது. அங்கிருந்து அது பொம்மையை முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தது. சற்று பின்னர் அதன் பயம் தெளிந்தது. அது பொம்மையின் அருகே சென்று அதை பயமுறுத்தப் பார்த்தது. ஆனால் பொம்மையோ அசையவேயில்லை. அதற்கு உயிரில்லையென்று அதற்கு தெரியவந்தது. எல்லா சோளக் கொல்லை பொம்மைகளும் அப்படித்தான். ஆகவே அது அப்படியே... 167காகிதப் பையை தட்டிக் பார்த்தது. அப்பொழுது அது கலகலவென்று ஓசையுண்டாக்கினது. அது பின்பக்கம் தாவி அதை உற்று பார்த்தது, மீண்டூம் அதனருகே சென்று காலால் தட்டியது. மறுபடியும் கலகலவென்று ஓசையுண்டானது. அவ்வளவுதான் கலகலவெனும் ஓசை. 'ஐயர்லாந்துகாரனுடைய ஆந்தையைப் போல்' என்னும் ஒரு பழமொழி உண்டு. அதில் அழகான சிறகுகள் இருக்கும். ஆனால் அது ஆந்தையல்ல. அது போன்றுதான் இந்த சோளக் கொல்லை பொம்மையும், ஐந்து ஆறு முறை அந்த குழிமுயல் தட்டிப் பார்த்தது. ஒவ்வொறு முறையும் கலகலவென்ற ஓசை மாத்திரமே உண்டானது. அது என்ன செய்தது தெரியுமா? அதன் பின்புறம் சென்று, என்னுடைய அவரையை அது தின்னத் தொடங்கினது. என்னைக் காட்டிலும் அதற்கு அதிக அறிவு இருந்தது. அது என்ன? நீங்கள் பாருங்கள், சோளக் கொல்லை பொம்மை தடுத்து நிறுத்த அது இடம் கொடுக்கவில்லை. அந்த பொம்மைக்கு பின்னால் ஏதோ நல்லது உள்ளது. அவர்கள், “ஓ, பரிசுத்த உருளையர்கள்” என்று கூறும் போது, அந்த அச்சுறுத்தலைக் கடந்து அதன் பின்னால் செல்லுங்கள். நீங்கள் அங்கு சென்று அதை விசுவாசியுங்கள். அங்கு சிறிது பரிசுத்த ஆவி இருக்க வகையுண்டு; (நீங்கள் பாருங்கள்) நீங்கள் சொல்ல முடியாது, பாருங்கள். அது சரி. 168ஓ, அந்த ஸ்தாபன... இந்த ஸ்தாபன முசுக்கட்டைப் பூச்சி மாம்சப் பிரகாரமான சபை - பணியில் ஈடுபட்டுள்ளதை சற்று கவனிப்போம். சபை ஆவிக்குரியது... அந்த பட்டைபுழு ஸ்தாபனம் உண்டாக்கத் தொடங்கும் போது கூர்ந்து கவனியுங்கள். அது ஏற்கனவே பட்டையை தின்றுவிட்டது. அதிலுள்ள கனிகளும் தின்றுவிடப்பட்டன. ஓ, சகோதரனே, அவையெல்லாம் போய்விட்டன. பரிசுத்த ஆவியின் வரங்கள் போய்விட்டன. தெய்வீக சுகமளித்தல் கிடையாது, அன்னிய பாஷை பேசுதல் கிடையாது. தீர்க்கதரிசனம் உரைத்தல் கிடையாது. தீர்க்கதரிசிகளை விசுவாசிப்பதென்பது கிடையாது. இவையனைத்தையும் அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவைகளைக் குறித்து அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவைகளைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. அவர்களிடையே காணப்படும் எல்லாமே மனிதனால் ஏற்படுத்தப்பட்டவை - செயற்கையானவை. பாருங்கள்? சரி. 169இயற்கையான சபை. இயற்கையான சபை உள்ளது. அது மனிதனால் உருவாக்கப்பட்டது. ஆவிக்குரிய சபை. உங்களுக்கு தெரியுமா, வேதாகமம் அவ்விதமாய் கூறுகிறது. ஆம், ஐயா! இயற்கையான சபை மற்றும் ஆவிக்குரிய சபை. வேதாகமம் இவ்விதமாய் கூறுகிறது, ''அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும் (ஆகார்), அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று“ பாருங்கள். எனவே, மாம்சப்பிரகாரமான சபை எதை சுதந்தரிக்கப் போகிறது? சுட்டெரிக்கப்படுவதற்கென அது கட்டுகளாக கட்டப்படுகிறது. அது எதையும் சுதந்தரிக்கப் போவதில்லை. அவள் சுயாதீனமுள்ளவளுடன் சுதந்தரவாளியாய் இருக்க முடியாது. அடிமையானவள் தன்னுடைய ஸ்தாபன பிள்ளைகளுடன் ஒன்று சேர்ந்து அடிமையானவளாயிருக்கிறாள். அவள் சுயாதீனமுள்ளவளுடன் சுதந்திரவாளியாய் இருக்க முடியாது. சுயாதீனமுள்ளவளுடைய பிள்ளைகள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லப் போகின்றனர். ஆனால் அடிமையானவளின் பிள்ளைகளோ நியாயத்தீர்ப்பில் நிற்க வேண்டியவர்களாயிருக்கின்றனர். “புறம்பே தள்ளு...” ஆம் ஐயா! 170அந்த முசுக்கட்டைப் பூச்சி - ஸ்தாபனமாகிய ஏசா... ஏசாவும் யாக்கோபும் இரட்டையர்கள். இருவரும் பக்தியுள்ளவர்கள். ஏசா மாம்சப் பிரகாரமானவன். அவன் நல்லவன். அவன் திருடவில்லை மது, அருந்தவில்லை, அப்படிப்பட்ட ஒன்றையும் செய்யவில்லை. அவன் பக்தியுள்ளவன். ஆனால் அவன், “நான் பக்தியுள்ளவனாக இருக்கும் வரைக்கும், வேறென்ன எனக்கு அவசியம்?” என்று நினைத்தான். ஆனால் யாக்கோபோ, சேஷ்ட புத்திர பாகத்தை எப்படியாகிலும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று விழைந்தான். அதற்காக எந்த முறையை அவன் கடைபிடிக்க நேரிட்டாலும் பரவாயில்லை. கூக்குரவிட்டு “பூ - பூ” என்று அழுது மூக்கொழுகினாலும் (சற்று பொறுத்து கொள்ளுங்கள்) அதைப் பெற வேண்டும் என்றாலும், சென்று சரியாக அவன் கண்ணிற்குள் (அவ்வாறு நான் அர்த்தங்கொள்ளவில்லை) மற்றும் (என்னை மன்னியுங்கள்), ஆகவே அவன் பீடத்தினருகில் சென்று அவன் அதைப் பெற்றுக் கொள்ளும் வரை அழுதாலும் அவனுக்குப் பரவாயில்லை. எந்த முறையைக் கடைபிடித்தாவது அதைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று அவன் உறுதியாய் நின்றான். 171சிலர் என்னிடம், “சகோ. பிரான்ஹாமே. அவர்கள் பீடத்தண்டை பூ பூ - ஹீ ஹீ என்று அழுது கொண்டிருக்கின்றனர், அந்த விதமாக அதைப் பெற்றுக் கொள்ள நான் விரும்பவில்லை” என்கின்றனர். அப்படியானால், நீ பெற்றுக் கொள்ளவேமாட்டாய். தென்பாகத்தில் வாழ்ந்து வந்து கருப்பு நிறமுள்ள சகோதரன் ஒருவன் எப்பொழுதுமே மகிழ்ச்சியுடன் காணப்பட்டான். அவனுடைய எஜமான், “நீ எப்பொழுதுமே மகிழ்ச்சியுடன் இருப்பதின் இரகசியம் என்ன?” என்று கேட்டார். அவன், “என்னிடம் என் இருதயத்தை தொட்டுள்ள மார்க்கம் (heart - felt Religion) உள்ளது” என்று பதிலளித்தான். எஜமான், “அப்படி ஒன்றும் கிடையாதே” என்றார். அவனோ, “உமக்கு தெரிந்து மட்டில் அது கிடையாது தான்” என்றான். அவன் அதை அறிந்திருந்தான். ஆகவே தான் “உமக்குத் தெரிந்தமட்டில்” என்று கூறினான். 172ஒரு நாள் எஜமான் அவனிடம், “இருதயத்தை தொடும் அந்த மார்க்கத்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்றான். அவன், “உமக்கு எப்பொழுது வேண்டும்,” என்று கேட்க, எஜமான், “இப்பொழுதே” என்று விடையளித்தார். அவன், “சரி, நாம் போய் பெற்றுக் கொள்வோம்” என்று கூறி அவரை அழைத்துச் சென்றான். எஜமான், “இந்த வைக்கொல் போர் ஒரு நல்ல இடம். என் மனைவியும் நான் கூச்சலிடுவதை கேட்க முடியாது. இங்கு முழங்கால் படியலாம்” என்றார் (அப்படித்தான் அநேகர் இருக்கின்றனர். எவ்வித சிரமமும் இல்லாமல் ஒரு தட்டில் அதை வைத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டுமென்று விரும்புகின்றனர்). “நாம் இங்கு ழுழங்கால்படியிடலாம்” என்றான். ஆனால் அந்த கருப்பு சகோதரனோ, “இங்கு உங்களுக்கு கிடைக்காது” என்றான். அவர்கள் நடந்து சென்று குதிரை லாயத்தை அடைந்தனர். எஜமான் “இங்கு கிடைக்குமா?” என்று கேட்டார். அவன், “இல்லையென்றான்”. எஜமான், “அப்படியானால் அதை எங்கு பெற்றுக் கொள்ளலாம்?” என்று வினவினான். அவன், “என்னைப் பின் தொடருங்கள்” என்று கூறி, தன் கால் சட்டையை முழங்கால் வரை மடக்கிக் கொண்டு, பன்றி வளர்க்கும் இடத்திற்கு சென்று, அங்கிருந்த சேற்றில் அவனால் முடிந்தவரை வேகமாக நடக்கத் தொடங்கினான். அவன் எஜமானிடம், “இங்கு வாருங்கள், அதை பெற்றுக் கொள்ளக் கூடிய இடம் இதுதான்” என்றான். எஜமான், “எனக்கு அங்கு வர பிரியமில்லை” என்று கூற. அந்த சகோதரன், “எஜமானே, அதைப் பெற்றுக் கொள்ள உமக்கு பிரியமில்லை, உமக்கு அதைப் பெற்றுக் கொள்ளவே பிரியமில்லை” என்று கூறிவிட்டான். (அது உண்மை) 173உங்களுக்குத் தெரியுமா, நாகமான் கூட அப்படித்தான் நினைத்தான். நாகமான், நாகமான் அவன், “என் குஷ்ட்ட ரோகம் நீங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். எலியா அவனிடம், “யோர்தான் நதி மத்தியதரைக் கடலில் கலக்கும் இடத்திற்குச் செல், அங்கு மிகவும் சேறாயிருக்கும், அங்கு ஏழுதரம் முழுகி எழுந்திரு” என்றான். நாகமான், “ஓ, என்ன இது, இது என் தமஸ்குவில் இதனைக் காட்டிலும் சிறந்த நதிகள் இல்லையா என்ன? ஊ ஊ ஊ... அங்கு அவை மிக அழகாக, மிகத் தெளிந்து இருக்கின்றனவே! (என்னே, கடந்த இரவு இங்கே படக்காட்சியில் அதை நாம் பார்த்தோம், உங்களுக்குத் தெரியும்) ”ஓ“ என்றான்”, என்ன - என்ன, அங்கே செல்ல எனக்கு விருப்பம் இல்லை; என்னால் அங்கே போக முடியாது. நான்... நான் யார் தெரியுமா? “நான் பாதுகாப்பு படையின் கேப்டன்; நான் படைத் தளபதி” என்றான். “உன் குஷ்ட்டரோகம் நீங்க வேண்டுமானால், அங்கு நீ செல்லத் தான் வேண்டும். இன்னமும் குஷ்டரோகத்தை வைத்துக் கொள்ள விரும்பினால், உன் இடத்திற்கு செல்லலாம்.” அவன், “முழுகு” என்றான். அவன் நடந்து சென்று யோர் தான் நதியை அடைவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. உங்களால் முடிகிறதா? அது அவனுடைய கௌரவத்தை பாதித்துவிட்டது. அவன் இரகசிமாக யாரும் காணாமல், கால்விரல்களின் மேல் மெதுவாக நடந்து செல்வதை என்னால் காணமுடிகிறது. 174அப்படித்தான் சிலர் இயேசுவிடம் வர முயல்கின்றனர். “நான் சுகம் பெற விரும்புகிறேன். எனக்கு பரலோகம் செல்ல விருப்பமுண்டு. ஆனால் ஓ, என்னே, மற்றவர்கள் என்னைப் பார்த்துவிட்டால்!” என்கின்றனர். ஓ, மாய்மாலக்காரனே, நீ அங்கு செல்லவே முடியாது. அவ்வளவுதான். முடியவே முடியாது. கவலைவேண்டாம். அதை வேண்டிய அளவுக்கு பெற்றுக் கொள்ள நீ விரும்பவில்லை. அது உண்மை. அதை பெற்றுக் கொள்ள நீ ஆயத்தமாகும் போது, அதை நிச்சயம் பெற்றுக் கொள்வாய். அப்பொழுது தேவன் உனக்கு அதை அருளுவார். 175இப்பொழுது... முசுக்கட்டைப் பூச்சி என்னும் ஸ்தாபனம் எல்லாவற்றையும் தின்றுவிட்டது. இந்தபூச்சிகள் ஒவ்வொன்றாக மரத்தைத் தின்று, அடுத்த பூச்சி பின் தொடர்ந்து வந்து தின்பதற்கு அது வழிவகுத்து கொடுத்தது. அது மிகவும் சாமர்த்தியமுள்ளது. ஆம், ஐயா! பாருங்கள்? அது முதலில் கனிகளை - ஆவியின் கனிகளை - எடுத்துப் போட்டது. எதற்காக?ஐக்கியம் என்னும் இலைகளை எடுத்துப் போட்டது. எதற்காக? ஐக்கியம் என்னும் இலைகளை எடுத்துப் போட்டது. எனவே அடுத்த கட்டத்திலுள்ள புழு அங்கு தோன்றி, இலைகளைத் தின்று வாழ்ந்து, ஏன் அதைச் செய்தது? மக்கள் அங்கே கண்டுவிடுவார்களென அது இலைகளைத் தின்றுபோட்டு குளிர்ச்சியை புத்துணர்ச்சியையும் எடுத்துப் போட்டு, அதற்கடுத்த கட்டத்திலுள்ள புழு பட்டையைத் தின்ன வழி வகுத்தது. அந்த பட்டைப்புழு தோன்றி, பட்டைக்குள் துளையிட்டு சென்று, ஜீவனுக்கே ஆதாரமாயிருந்த உபதேசங்களை அவர்களிடமிருந்து எடுத்துப் போட்டது. அது பட்டைக்குள் அநேக துளைகளையிட்டு முடிந்த பின்பு, அடுத்த புழு - அந்த உரிஞ்சும் முசுக்கட்டைப் பூச்சி - தோன்றி சத்தை உறிஞ்சுவிட்டு, அது மீண்டும் கிடைக்காதபடி ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டது. அந்த ஜீவன் என்ன செய்தது? அது வேர்களுக்குள் பாய்ந்துவிட்டது. அது முற்றிலும் உண்மை - வேர்களுக்குள்ளே அது சென்றுவிட்டது. அது சரி. அதே பூச்சி அந்த மரத்தின் மையம் வரை சென்று அதன் ஜீவனையடைந்தது. அது கனியின் வழியாக, இலைகளின் வழியாக, பட்டையின் வழியாக அந்த ஜீவ நாடியாகிய மையத்தை அடைந்தது. 176நாசம் விளைவிக்கும் அது, பணியில் ஈடுபடுவதை நாம் கவனிப்போம். முதலாவதாக... (சில பக்கங்களை நான் கடந்து செல்லப் போகிறேன் என நம்புகிறேன். இல்லை, நான் செய்யவில்லை. கவனியுங்கள்) அது மரத்தின் மையத்தை அடைந்தவுடன், முதலாவதாக செய்தது... நாம் பின்னால் சென்று, அவன் வேகமாக வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன் முதலாம் கட்டத்தில் அது என்ன செய்ததென்று கவனிப்போம். இப்பொழுது, அவன் வேலை செய்து கொண்டிருப்பதை கவனிப்போமாக. தேவன் இப்பூமியில் நட்ட மரத்தில் தோன்றின அருமையான, விலையேறப் பெற்ற முதற் கனிகளை அது முதலாவதாக சேதப்படுத்தியது. 177இப்பொழுது இன்னும் சில நிமிடங்கள் நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களானால், இதை உங்களிடம் கூற விரும்புறேன். இப்பொழுது தான் உங்கள் ஈஸ்டர் செய்தி வரப்போகிறது, சரியாக இப்பொழுது. பாருங்கள். 178அவன் முதலாவதாக தேவனுடைய விலையேறப்பெற்ற முதலாம் மரத்தை - கிறிஸ்துவை - அழித்துப் போட்டான். அவர் தான் ஏதேன் தோட்டத்திலிருந்த மரம், அது உண்மை. கனிகளைத் தந்திருந்த முதலாம் மரத்தை அவன் சேதப்படுத்தினான். தேவன் பூமியில் நட்ட மரம் கிறிஸ்துவே. அவருடைய கனிகளைக் கொடுத்து வந்த அந்த மரத்தை அவன் அழித்து போட்டான். எல்லா விதமான ஸ்தாபனங்களும் தோன்றின. அவைகளின் மேல் அவன் ஆதிக்கம் கொண்டிருந்தான். ஆனால் உண்மையான கனி கொடுத்த அந்த மரத்தை அந்த ரோம மூட்டுப் பூச்சி அடைந்து அதை அழித்துப் போட்டது. அந்த மரமா? ஆம். இயேசு “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், அல்லது என் பிதாவின் கனிகளை நான் கொடாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை” என்று அவர் யோவான் சுவிசேஷத்தில் கூறியுள்ளார். அவர் தேவனுடைய கனிகளை கொடுத்தார். எத்தகைய கனிகளை அவர் கொடுத்தார். எத்தகைய கனிகளை! அதை சில நிமிடங்களில் நாம் அவரை பார்ப்போம். இதைக் குறித்து நாம் அநேக முறை பேசியிருக்கிறோம். ஆனால் ஜெபத்திற்காக காத்திருக்கும் இம்மக்களை ஆயத்தம் செய்ய இதை சற்று கவனிப்போம். 179அவரை மேசியாவென்று கண்டு கொள்ள, முதலாவதாக எது உபயோகமாயிருந்தது? பேதுரு முதலாவதாக அவரிடம் வந்த போது, (அந்திரேயா அவனை அழைத்து வந்திருந்தான்) அவர் பேதுருவை நோக்கிப் பார்த்து, “உன் பெயர் பேதுரு. நீ யோனாவின் மகன்”, என்றார். வேதாகமத்தின்படி அது மேசியா தான் என்று சரியாக அப்பொழுதே பேதுரு கண்டு கொண்டான்... வரலாற்றின் படி, உங்களுக்குத் தெரியுமா, இயேசுவுக்கு முன்பு எழும்பி தங்களை மேசியாவென்று அழைத்துக் கொண்ட அநேகம் பேர் இருந்தனர். ஆனால் யாருமே அவ்வாறாக இருக்கவில்லை, “ஏனெனில் அந்த மேசியா... என்னைப் போன்று ஒரு தீர்க்கரிசியாயிருப்பார்” என்று மோசே கூறினான் (என்றென்றும் தவறாத தேவனுடைய வார்த்தையை மோசே பேசினான்). எனவே இந்த அந்நியன் இயேசுவின் முன்னால் நின்றபோது, இயேசு, “இதோ, உன் பெயர் சீமோன். நீ யோனாவின் மகன்” என்றார். அவர் யாரென்பதை பேதுரு உடனே கண்டு கொண்டான். அது அவர் என்பதை அவன் அறிந்து கொண்டான். 180நாத்தான்வேல் சென்று பிலிப்புவை சந்தித்த போது... அல்லது பிலிப்பு நாத்தான்வேலைச் சந்தித்து அவனை இயேசுவினிடம் கொண்டு வந்தான். நாத்தான்வேல் ஒரு பெரிய மனிதன். பக்தியுள்ளவன் (சீமோனை எவ்விதம் பெயர் சொல்லி அழைத்தார் என்பதைக் குறித்து பிலிப்பு வழியெல்லாம் நாத்தான்வேலிடம் பேசிக் கொண்டே வந்தான்). நாத்தான்வேல் இயேசுவின் சமூகத்தில் நின்றபோது, இயேசு என்ன கூறினார், “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். அவன், “ரபீ, நீர் என்னை எப்படி அறிவீர்?” என்று கேட்டான். அவர், “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ மரத்தின் கீழிருக்கும் போது நான் உன்னைக் கண்டேன்” என்றார். அவன், “ரபீ, ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்றான். பாருங்கள்? என்ன? அதுதான் கனி, “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால்...” அவர்கள் இருதயத்திலுள்ள சிந்தனைகளை அவர் அறிந்து கொண்டார். ஒரு சமயம் ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்டு விட்டு போய் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டாள். இயேசு சுற்றுமுற்றும் பார்த்து விட்டு, “என்னைத் தொட்டது யார்” என்று கேட்டார். எல்லோரும் மறுத்தனர். அவர் அவளைப் பார்த்துவிட்டார். அவளுக்கு உதிரப்போக்கு இருந்தது. அவர் அவளைப் பார்த்து, “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது'' என்றார். 181ஓ, என்னே! அந்த சமாரியா ஸ்திரீ... அவர் அந்த விதமாக புறஜாதிகளிடம் செல்லவில்லை. இல்லை, ஐயா!புறாஜாதிகளிடம் போக வேண்டாமென்று அவருடைய சீஷர்களிடமும் அவர் கூறியிருந்தார். அதுதான் நாம்; இது தான் நம்முடைய நாள். அவர் கூறினவாறே நம்மிடம் அவர் பரிசுத்த ஆவியானவரின் ரூபத்தில் வந்தார். ஆனால் அவர் அவர்களிடம் சென்ற போது... என்ன நடந்தது? அவர் அந்த சமாரியா ஸ்திரீயிடம் சென்ற போது, அந்த ஸ்திரீ கூறினாள்... அவர் அவளிடம், “தாகத்துக்குத் தா” என்று கேட்டார். அவள், “நீர் யூதனாயிருக்க சமாரியா ஸ்திரீயாகிய என்னிடம் தாகத்துக்குத் தா என்று எப்படி கேட்கலாம்?” என்றாள். அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தனர். நம்மிடையே வேறுபாடு இல்லை என்றும், நாமனைவரும் ஒரே மரத்திலிருந்து வந்திருக்கிறோம் என்றும் அங்கேயே அவர்கள் அறிந்து கொள்ளும்படி செய்தார். நாமனைவரும் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம். அவள், “ஏன், நாங்கள் எங்கள் பிதாவாகிய யாக்கோபை வழிபடுகிறோம்” (பாருங்கள்? யாக்கோபு யூதரின் பிதாவாக இருந்தான்). “எங்கள் பிதாவாகிய யாக்கோபு இந்த கிணற்றை தோண்டினார். அவரைப் பார்க்கிலும் நீர் பெரியவர் என்று சொல்லிக் கொள்கிறீரே” என்றாள். அவர், “நான் உனக்குக் கொடுக்கும் தண்ணீர் நித்திய ஜீவனாயிருக்கும்” என்றார். பார்த்தீர்களா? 182அவள், “நாங்கள் இந்த மலையில் தொழுது வருகிறோம். நீங்கள் எருசலேமில் தொழுது கொள்கிறீர்களே?” என்றாள். அவர், “நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்து வா. அது இந்த பிரச்சினைக்கு முடிவை உண்டாக்கும்” என்றார். அவள், “எனக்குப் புருஷன் இல்லை” என்றாள். அவர், “நீ சொன்னது சரிதான். ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல” என்றார். அவள், “ஐயா, எங்களுக்கு நானூறு வருட காலமாக தீர்க்கதரிசி கிடையாது. நீர் தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். எனக்கு ஐந்து புருஷர் இருந்தார்கள் என்று எப்படி கண்டுகொண்டீர்? கிறிஸ்து என்னப்பட்ட மேசியா வருவதற்கு இது சமயம் என்று நாங்கள் அறிவோம். அவர் வரும் போது இத்தகைய காரியங்களை எங்களுக்கு அறிவிப்பார்“ என்றாள். ஓ, அதுதான் அவருடைய கனி, “நானே அவர்” என்றார். அவள் குடத்தை - ஸ்தாபனமாகிய குடத்தை - வைத்து விட்டு ஊருக்குள்ளே சென்றாள். யாக்கோபு எந்த விதமான கிணற்றை அவர்களுக்கு அளித்திருந்த போதிலும் அவள் புதிய நீருற்றைக் கண்டு பிடித்துவிட்டாள். அவள் ஊருக்குள் சென்று, “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனிதன் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் மேசியா அல்லவா? அவர் மேசியாவென்பதற்கு இதுதான் கனி - அல்லவா? அது தான் அந்த மேசியா என்பதற்கு இது தான்ஆதாரம்? - அல்லவா!” என்றாள். 183ஆனால் யூதர்களோ அவரை யாரென்று கண்டு கொள்ள முடியவில்லை. “அவன் குறிசொல்பவன், பெயல்செபூல்” என்றனர். இயேசு அவர்களை நோக்கி, “நான் உங்ளை மன்னித்துவிடுகிறேன். ஆனால் ஒரு காலத்தில் பரிசுத்த ஆவியானவர் வந்து அதே கிரியைகளைச் செய்வார். அதற்கு விரோதமாக நீங்கள் பேசினால், அது மன்னிக்கப்படாது” என்றார். “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை”. அந்த மரம் கனியைக் கொடுத்தது. இப்பொழுது கவனியுங்கள், அவர் என்ன கூறினார்... அவர் எந்த விதமான சபையை நிறுவினார்? இயேசு சபையை நிறுவினார் என்று கத்தோலிக்கர்களாகிய நீங்கள் கூறுகிறீர்களே! அவர் எத்தகைய சபையை நிறுவினார்? அவர் ஸ்தாபனத்தை குறித்தாகிலும், ஸ்தாபன பிரமாணங்களைக் குறித்தாகிலும் எங்காவது கூறியுள்ளாரா? அவர் எப்பொழுதும் அதற்கு விரோதமாகவே இருந்தார். அவர், “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே, மரித்தவனின் எலும்புகளே” என்று அவர்களை அழைத்தார். 184அவர் எப்படியெல்லாம் அவர்களை அழைக்க முடியுமோ அப்படியெல்லாம் அவர்களை அழைத்தார். அது உண்மை. அவர் ஸ்தாபனங்களை எதிர்த்தார். அதுதான் தேவனுடைய கனியாகும், நீங்கள் விரும்பினால், இரண்டும் இரண்டும் நான்கு என்பதை அறிந்து கொள்ளலாம். சரி. அவர் ஸ்தாபனங்களுக்கும், அவைகளுடைய உபதேசங்களுக்கும் விரோதமாயிருந்து, அவர்களை மாய்மாலக்காரர் என்றும், புல்லின் கீழ் பதுங்கியுள்ள பாம்புகள் என்றும், அவர்களை பிசாசுகள் என்றும் அழைத்தார். அவர், “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள். அவனுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள். எனக்கு முன் அனுப்பப்பட்ட எந்த தீர்க்கதரிசியை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்? பிறகு நீங்கள் அவர்களுக்காக கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். நீங்கள் தான் அவர்களைக் கல்லறைகளில் போட்டீர்கள்” என்றார். 185ஓ, சகோதரனே, அவர்களை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. அது உண்மை. அது தான் தேவனுடைய கனியாக இருந்தது. அது என்னவாயிருந்தது? தேவனுடைய வார்த்தையோடு தரித்திருந்து, தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்துதல். அவர், “மேசியாவாகிய நான் வரும் போது என்ன செய்வேன் என்று வேதம் கூறியுள்ளது! அந்த வார்த்தையின் கனியை நான் கொடுக்காவிட்டால், நான் மேசியாவல்ல. மேசியா என்ன செய்வார் என்று கூறப்பட்ட விதமாகவே அத்தகைய கனியை நான் கொடுத்தால், நானே அவர் (ஆமென்). என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்” என்று கூறினார், பார்த்தீர்களா, “உங்களில் எந்த ஸ்தாபனம் நான் செய்வதை செய்யமுடியும்?” என்றார். பார்த்தீர்களா?மேசியா இதை எல்லாம் செய்வார் என்று வேதம் கூறியுள்ளது. அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார், “உங்களுடைய மேலான கருத்துக்ககளையெல்லாம் கொண்ட உங்களால் செய்ய முடிகிறதா பார்க்கலாம்,” என்றார் அவர். அவர்கள் மௌனம் சாதித்தனர். சரி. அது என்ன? அவர் தேவனுடைய கனியை கொடுத்தார். பரிசுத்த ஆவியானவர் அவருக்குள் இருந்தார். அவர் தேவனுடைய கனியைக் கொடுத்தார். அவர் யார்? இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். கூடுமான வரை - நான் துரிதமாக முடிக்க முயல்கிறேன். அப்பொழுது நீங்கள், உங்கள் ஈஸ்டர் இரவு உணவை உண்ணலாம். உங்களுடைய ஈஸ்டர் இரவு உணவு உயிர்த்தெழுதலாக இருக்க வேண்டும். 186கவனியுங்கள், அவர் தேவனுடைய பரிபூரண தீர்க்கதரிசி மரமாக, திருஷ்டாந்தமுள்ள மரமாக, மணவாளன் மரமாக இருந்தார். ஆமென்! மகிமை! (இப்பொழுது நேரடியாக ஒன்றைக் கூறப் போகிறேன்). அவர் ஏதேன் தோட்டத்திலிருந்த மணவாளன் மரமாக இருப்பாரானால் (அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?) பெண்ணில்லாமல் மணவாளன் மரம் கனிகளைக் கொடுக்க முடியாது. எனவே அவருக்கு மணவாட்டி மரம் ஒன்று இருக்க வேண்டியது அவசியம். அவளும் அதே விதமான வஸ்துவினால் பிறந்திருக்க வேண்டும் - அதாவது, அந்த மரத்தில் வார்த்தை எவ்விதமாக மாம்சமானதோ, அதே விதமாக. (உங்களுக்கு விளங்குகிறது என்று நினைக்கின்றேன்) மணவாளன் மரத்திலுள்ள அதே ஜீவன் மணவாட்டி மரத்திலும் உள்ளது. “நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். அது சரியா? அவர் மணவாளனாயிருந்தார். நினைவில் கொள்ளுங்கள்... 187நீங்கள், “அது வேதத்துடன் பொருந்தவில்லை'' என்று நினைக்கிறீர்கள். அப்படி நினைக்கிறீர்கள் என்பதை இப்பொழுது பகுத்தறிந்தேன். இன்னும் சில நிமிடங்களில் நாம் சுகமளிக்கும் ஆராதனையை நடத்தப் போகிறோம். நான் அதை பகுத்தறிந்தேன். அதற்கு நிரூபணம் வேண்டுமா? ”நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்; (பரிசுத்த யோவான்) நானே திராட்சைசெடி, நீங்கள் கொடிகள். நீங்கள் கனி கொடுக்கிறீர்கள்“. பாருங்கள்! ஆண் மரமும், பெண் மரமும் ஒன்றுக்கொன்று மகரந்தத்தை உற்பத்தி செய்து கொண்டு, அதன் காரணமான கனி தோன்றுகிறது, திராட்சை செடியும் கொடியும் அதை தான் செய்கின்றன. பார்த்தீர்களா? அது முற்றிலும் உண்மை. 188ஆகவே அவர் கூறினார்... இந்த முதலாம் மரம் தீர்க்கதரிசி மரமாக, பரிபூரண மரமாக இருந்தது; தீர்க்கதரிசிகளின் தேவன். அவரே முக்கிய மரம். அவர் தேவனுடைய பரிபூரண செழிப்பு... தீர்க்கதரிசி மரமாக விளங்கினார். ஏன்? அவர் வார்த்தையாயிருந்தார். மற்றவர் அனைவரும் சிறிய தீர்க்கதரிசிகளாக விளங்கினர். வார்த்தை தீர்க்கதரிசிகளிடம் வந்தது. ஆனால் அவரோ ஒரு தீர்க்கதரிசியின் உருவில் அவர் தாமே வார்த்தையாக விளங்கினார். ஆமென்! (நாம் ஒன்றை அணுகிக் கொண்டிருக்கிறோம்). 189இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இதை இழந்து போக வேண்டாம். அது மிகவும் நன்றாக இருந்ததால், அதை இங்கு எழுதி வைத்துள்ளேன். (கார் ஹார்ன் சத்தம் கேட்கிறது - ஆசி). ஆமென்! யாரோ கார் ஹார்ன் முழக்குகிறார்கள்... உங்களுக்கு நல்ல நேரம் அங்கிருக்குமென்று எண்ணுகிறேன். நாங்கள் இங்கு உள்ளே அமர்ந்திருக்கிறோம். சரி. 190இப்பொழுது அவர் தேவனுடைய தீர்க்கதரிசி மரமாயிருந்தார். ஏன்? அவர் தேவனுடைய பரிபூரணமான வார்த்தையை பிரசங்கித்தார். ஏனெனில் அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனுடைய வார்த்தையாயிருந்தார். அவர் பரிபூரண தீர்க்கதரிசி மரமாயிருந்து, பரிபூரண தீர்க்கதரிசி வார்த்தையைப் பிரசங்கித்து, பரிபூரணமான தேவனுடைய வார்த்தையின் மூலம் பரிபூரணமான தீர்க்கதரிசி கனியைக் கொடுத்தார். ஓ சகோதரனே, அந்த மரத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் ஜீவ விருட்சமாக இருந்தார். ஆதாமும் ஏவாளும் அந்த மரத்தை அணுகாதபடி அந்த தூதன் கேரூபீன்களை காவல் வைத்தான். அதே கேருபீன்கள், ஜனங்கள் இன்று அந்த ஜீவவிருட்சத்தை அடைய வேண்டுமென்று முயன்று வருகின்றன. ஏனெனில் அவர்களுக்காக ஒரு வழி உண்டாக்கப்பட்டுவிட்டது. பார்த்தீர்களா? ஆயினும் ஜனங்கள் அதை அடைய விருப்பமின்றி பின் வாங்குகின்றனர். ஓ, மானிடரே, உம்ம்ம்! 191இப்பொழுது அவர் வார்த்தை அனைத்தையும் பிரசங்கித்தார். அவர் இங்கும் அங்கும் வார்த்தையை அகற்றிப் போடவில்லை. அந்த சிறந்த வேத பண்டிதனான சாத்தான் இயேசுவை அணுகி, “எழுதியிருக்கிறதே” என்ற போது, அவர், “இப்படியும் எழுதியிருக்கிறதே...'' என்றார். “ஆனால் எழுதியிருக்கிறதே...” ஆனால் அவரோ, “இது இப்படியும் எழுதியிருக்கிறதே...” என்றார். 192பரிபூரண தீர்க்கதரிசி மரம், பரிபூரண தீர்க்கதரிசி வார்த்தையை, பரிபூரண தீர்க்கதரிசியின் அடையாளங்களைக் கொண்டு பிரசங்கித்து, பரிபூரண தீர்க்கதரிசியின் பெலனைப் பெற்று, பரிபூரண ஆவியின் கனிகளை ஈன்றார். ஆனால் அவர்களோ (நான் - நான் சற்று சீக்கிரமாக இதினூடாக கடந்து செல்லப் போகிறேன், ஏனென்றால்....) அவரை பரியாசம் செய்து (அவர் வார்த்தையாயிருந்ததனால்), அந்த வார்த்தை மரத்தை மனிதனால் செய்யப்பட்ட ரோமருடைய மரத்தில் தூக்கி கொலை செய்தனர். ஹூம்ம்ம்... சகோதரனே, அது மனதில் பதிந்துவிட்டது என்று கருதுகிறேன். தேவனுடைய பரிபூரண ஆவிக்குரிய மரமாகிய அவரை, மனிதனால் செய்யப்பட்ட ரோமருடைய மரத்தில் தூக்கி கொலை செய்தனர். ஆமென்! இன்றைக்கும் அதுவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தேவனுடைய பரிபூரணமாகிய வார்த்தையை எடுத்துக் கொண்டு, அதைக் கலப்படமாக்கி, ஸ்தாபனக் கோட்பாடுகள் என்னும் மரத்தில் தூக்கிக் கொல்ல முயல்கின்றனர். மரணமும் ஜீவனும் ஒன்றுக் கொன்று சேராது. இயேசு எந்த அடக்க ஆராதனையிலும் பங்கு கொள்ளவில்லை. ஏன்? அவர் மரித்தோரை உயிரோடெழுப்பிவிட்டார். மரணமும் ஜீவனும் ஒன்றாகத் தங்க முடியாது. அவை ஒன்றுக்கொன்று முரணானவை. அவர் அடக்க ஆராதனை பிரசங்கம் எதுவும் நிகழ்த்தவில்லை. அவர் மரித்தோரை உயிரோடெழுப்பினார். ஆமென்! என்ன? ஜீவன் மற்றும் மரணம். 193கவனியுங்கள், அவரை மரத்தில் தூக்கினார்கள். அது சரியா! “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்”. அது சரியா? “மனிதனால் செய்யப்பட்ட மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்” என்று வேதம் கூறுகின்றது. எனவே, இன்றைக்கு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு விதமான மரத்தில் மற்றவர்களைத் தூக்க நீங்கள் முயன்றால் அதை நீங்கள் அவிழ்த்துவிடுங்கள். ஆம் முயற்சி வேண்டாம். ஏனெனில் அது மரித்தோரின் ஸ்தலமாயுள்ளது - மனிதனால் ஏற்படுத்தப்பட்ட லூத்தரன், பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்கள் போன்றவை; மனிதனால் செய்யப்பட்ட மரம் அங்கு நீங்கள் தூக்கிவிடப்பட்டு தொங்க வேண்டாம். உங்களை தூக்கிலிட நீங்கள் அனுமதிக்க வேண்டாம். அவர்களால் கூடுமானால், உங்கள் உயிர் போகுமட்டும் அவர்களுடைய உபதேசங்களை நீங்கள் அங்கீகரிக்கும் மட்டும், உங்களைத் தூக்கிலிடுவார்கள். அது உண்மை. 194அங்கு தான் இந்த பரிபூரண மரத்தை அவர்கள் தூக்கிலிட்டார்கள். தேவனுடைய பரிபூரணமான கனி கொடுக்கும் மரத்தை அவர்கள் ரோமரால் செய்யப்பட்ட மரத்தில் தூக்கினார்கள். மனிதனால் செய்யப்பட்ட மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன். அவர் கனிகளையெல்லாம் கொடுத்து தீர்ந்த பிறகு, அவரை அவர்களுடைய பார்வையினின்று ஒழிக்க அவர்கள் திட்டமிட்டனர். மகதலேனா மரியாள் முன்னால் ஓடி, ஊர்வலத்தை நிறுத்தி, “அவர் என்ன தீங்கு செய்தார்? அவர் தரித்திரருக்கு சுவிசேஷத்தை பிரசங்கித்தார்; வியாதியஸ்தரை சுகப்படுத்தினார்; மரித்தோரை உயிரோடெழுப்பினார்; ஜீவனுள்ள தேவனுடைய அடையாளங்கள் அனைத்தும் அவரில் காணப்பட்டன. இப்படிப்பட்ட நன்மைகளை அவர் செய்தாரேயன்றி, என்ன தீமை செய்தார்? அவரை ஏன் நீங்கள் குற்றஞ்சாட்ட வேண்டும்?” என்று மன்றாடினதாக வரலாறு கூறுகின்றது. அவர்கள் அவளை வாயிலடித்து, “இந்த நடத்தை கெட்ட ஸ்திரீ சொல்வதைக் கேட்பீர்களா? அல்லது நமது ஆசாரியர் பேராயர் - கூறுவதைக் கேட்பீர்களா?” என்றார்களாம். இன்றைக்கும் அப்படித்தான் நடந்து கொண்டு வருகிறது, அது சரி. ஆம். 195அவர் இவைகள் அனைத்தையும் செய்து அவர் யாரென்று நிரூபித்த போதிலும் - அவர், “நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் யாரென்பதை அது காண்பிக்கிறது. என்னில் பாவம் உண்டென்று நீங்கள் குற்றஞ்சாட்டினால் நான் வார்த்தையில் எங்கு தவறு செய்துள்ளேன் என்று எடுத்துக் கூறுங்கள். நீங்கள் எங்கு தவறு செய்திருக்கிறீர்கள் என்று நான் எடுத்துக் கூறுகிறேன்'' என்றார். பாருங்கள்?அவிசுவாசமே பாவம். அது நமக்குத் தெரியும். அவர்களுடைய பார்வையினின்று அவரை அகற்ற (அவர் ஸ்தாபனங்களை கிழித்தெறிந்தபடியால் அவரை அதிகமாக வெறுத்தனர்), அவர்களுடைய பார்வையினின்று அவரை அகற்ற, அவரை அவர்கள் அடக்கம் செய்து, அவர் உயிரோடெழுந்திருக்கக் கூடாது என்று நிச்சயப்படுத்திக் கொள்ள ஒரு பெரிய ஸ்தாபனக் கல்லைப் புரட்டிக் கொண்டு வந்து வாசலில் வைத்தனர். ஓ, என்னே! அந்த பரிபூரண மரத்தைக் குறித்து சற்று சிந்தித்து பாருங்கள். தாவீது திரும்பப் பார்த்து அதைக் கண்டான். அது நீர்க்கால்களின் ஓரமாய் நின்று கொண்டிருக்கிறது என்று கூறினான். “அவர் தம் காலத்தில் தம் இலைகளைத் தருகிறார். அவருடைய கனிகள் ஒருபோதும் உதிர்ந்து போவதில்லை. அவர் செய்வதெல்லாம் செழிக்கும் (Prosper).” அவர் செழிப்பின் குமாரன் (Son of Prosperity). யோசேப்பு அவருக்கு முன்னடையாளமாயிருந்தான். அவர் யோசேப்பின் நிறைவேறுதலாயிருந்தார். எங்கெல்லாம் யோசேப்பு சென்றானோ அது செழித்தது. அதே விதமாகத் தான் இயேசுவினிடமும் இருந்ததது. “என் வாயிலிருந்து புறப்படும் வசனம் வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும் (Prosper)” என்று அவருடைய வார்த்தை கூறுகின்றது (ஏசா. 55:11). பாருங்கள்? அவர் வார்த்தையாய் இருந்தார். வார்த்தை தேவனால் பூமிக்கு அனுப்பப்பட்டது. எதற்காக தேவன் அதை அனுப்பினாரோ சரியாக அந்த நோக்கத்தை அது நிறைவேற்றும். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்; அது மிகவும் ருசியாகிக் கொண்ட போகிறது. 196இப்பொழுது, கவனியுங்கள், இங்கே அவர் இப்பொழுது வருகிறார், மற்றும் அவர்களோ, ஏனெனில் தேவனுடைய அதே கிரியைகளைச் செய்ததன் நிமித்தமாக... அவர் அவர்களிடம், “நான் செய்வேன் என்று கூறப்பட்டுள்ள தேவனுடைய கிரியைகளை நான் செய்யாதிருந்தால் நான் அவரல்ல; நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. ஆனால் நான் அதைச் செய்தால் அந்த கிரியைகளை நீங்கள் விசுவாசியுங்கள். ஒரு மனிதனாக இருந்து, இதைச் செய்கையில், என்னை உங்களால் விசுவாசிக்க முடியவில்லை என்றால், நான் செய்யும் கிரியைகளையாவது விசுவாசியுங்கள். அவைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன. என் குரலைக் காட்டிலும் அவை உரக்கப் பேசுகின்றன” என்றார். அது உண்மை. இந்த அதே காரியம் எந்த ஒரு காலத்திற்கும் பொருந்தும். ஆம், ஐயா! நிச்சயமாக. கவனியுங்கள், “என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. அந்த கிரியைகளை செய்தேனேயானால் என்னை விசுவாசியுங்கள்'' அவர்கள் என்ன செய்தனர்? அந்த விலைமதிக்க முடியாத மரத்தை அவர்கள் கொண்டு போய் மனிதனால் உண்டாக்கப்பட்ட மரத்தில் அதை தொங்கவிட்டு பரிகாசம் செய்து, அதன் ஜீவனை களைந்து போட்டனர். அங்கு அநேகர் நின்று கொண்டு அழுது கொண்டிருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவரை அவர்கள் அந்த மரத்திலிருந்து இறக்கினர். 197அவர்கள் “பரிசுத்த உருளுபவர்கள் அங்கு நுழைந்து விடாதபடிக்கு அதை ஸ்தாபனம் என்னும் கல்லால் இறுக மூடுவோம்”, என்றனர். அவர்கள் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பின் கல்லறையில் அவரை வைத்து, ஒரு பெரிய கல்லினால் அந்த கல்லறையின் வாசலை அடைத்தனர் (ஒரு கூட்டம் போர் வீரர்களைக் கொண்டு அதை உருட்டிவந்து, அங்கு வைத்தனர். அந்தக் கல்லை உருட்டி வந்ததை அன்றிரவு அந்த படத்தில் கண்டீர்களா? அதன் எடை பல டன்கள் இருக்கும்). அவர்கள் ஸ்தாபனம் என்னும் தங்கள் பெரிய கல்லை உருட்டிக் கொண்டு வந்து கல்லறையை அடைத்து அவர் உயிரோடெழுத்திருக்கக் கூடாதபடி செய்துவிட்டதாக எண்ணினர். ஆனால் “கர்த்தர் சொல்லுகிறார், அவரை நான் திரும்ப அளிப்பேன்”. அந்த பொருளை சற்று தியானித்து, அதை ஆணித்தரமாக இருதயத்தில் பாய்ச்சிக் கொள்வோம். “கர்த்தர் சொல்லுகிறதாவது அவரை நான் திரும்ப அளிப்பேன். மூன்று நாட்களுக்குள் அவரை உயிரோடெழுப்புவேன்”. அவரை அந்த கல்லறையில் மறைத்து வைக்க முடியவில்லை. அவர்களுடைய பார்வையிலிருந்து அவரை மறைக்க முடியவில்லை. அவர்களுடைய கரங்களிலிருந்தும் அவரை உதற முடியவில்லை. “அவரை நான் திரும்ப அளிப்பேன்” என்று கர்த்தர் உரைத்திருந்தார். அது போன்றே அவர் மூன்று நாட்களில் உயிரோடெழுந்து திரும்ப அளிக்கப்பட்டார். 198அவர் உயிர்த்தெழுந்து, ஈஸ்டருக்கு பிறகு, அவர் “நீங்கள் உலகமெங்கும் போங்கள். நான் உங்களுடனே கூட செல்லப் போகிறன். என்னை அனுப்பின ஜீவனுள்ள பிதா எனக்குள் இருப்பது போல, நானும் உங்களை அனுப்பி உங்களுக்குள் இருப்பேன். உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுடனே கூட இருக்கிறேன். நான் யாரென்பதை நிரூபிக்கத் தக்கதாக நான் செய்த கிரியைகளை நீங்களும், நீங்கள் யார் என்பதை நிரூபிக்கத் தக்கதாகச் செய்வீர்கள்” என்றார். இது எனக்கு மிகவும் பிரியம், விசுவாசிகளை இந்த அடையாளங்கள் தொடரும் - பாவனை விசுவாசிகளையல்ல, உண்மையான விசுவாசிகளை பாருங்கள்? “நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். நீங்கள் விசுவாசிகள் என்பதை அது உறுதிப்படுத்தும். ஜீவனுள்ள பிதா எனக்குள் வாசம் செய்தபடியால், நான் அந்தக் கிரியைகளைச் செய்ய முடிந்தது. இக்கிரியைகளை நானாக செய்யவில்லை. எனக்குள் வாசமாயிருக்கிற பிதா அவைகளைச் செய்தார். அது போன்று, நீங்களும் தாமாக இக்கிரியைகளைச் செய்யமாட்டீர்கள். உங்களுக்குள் வாசமாயிருக்கும் நானே இக்கிரியைகளைச் செய்வேன். நீங்கள் உலகமெங்கும் போங்கள்... எனக்காக ஒரு மணவாட்டியை நீங்கள் உருவாக்குவீர்கள்” என்றார். பாருங்கள்? சரி. 199“நான் உங்களோடு கூட செல்வேன். மற்றும் நான் - நீங்கள் என்னில் ஒரு பாகமாயிருப்பீர்கள். நீங்கள் என் மணவாட்டியாயிருப்பீர்கள். என் ஜீவன் உங்கள் சரீரத்தில் வாசமாயிருக்கும். எவ்வாறு கணவனும் மனைவியும் ஒரே நபரோ, அவ்வாறே நீங்களும் நானும் ஒருவராக இருப்போம். நான் என் பிதாவிலும், பிதா என்னிலும், மற்றும் நான் உங்களிலும் மற்றும் நீங்கள் என்னிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்”, உம்ம்... அது எனக்கு மிகவும் பிரியம். அதைக் கேட்கும் போது சாத்தான் கோபமடைகிறான். பாருங்கள்? அங்கு தேவனின் ஒருத்துவத்தைப் பார்த்தீர்களா? தேவன் என்னவாயிருந்தாரோ, அது அனைத்தையும் அவர் கிறிஸ்துவுக்குள் ஊற்றினார். கிறிஸ்து என்னவாயிருந்தாரோ, அது அனைத்தையும் அவர் சபைக்குள் ஊற்றினார். பார்த்தீர்களா? இது அவர்கள் அனைவரையும் ஒன்றாக்கிவிடுகிறது. இப்பொழுது கவனியுங்கள்! இப்பொழுது, மணவாட்டி ஜீவவிருட்சத்துடன் ஒன்றாகிவிடுகிறாள், வேறு விதமாகக் கூறினால் எவ்வாறு கணவனும் மனைவியும் ஒருவரோ, அதே போன்று கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியும் ஒருவராகிவிடுகின்றனர். அதே காரியம், அதே ஆவி, அதே கிரியைகள், அதே அடையாளங்கள், மற்ற எல்லாமும், “நான் செய்கிற அடையாளங்கள், எல்லாம் அதுவே. நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்”, எவ்வளவு காலமாக? உலகத்தின் முடிவு பரியந்தம். எவ்வளவாக? உலகிலுள்ள சகல சிருஷ்டிக்கும். அது சரியா? இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். ஒரு முக்கியமான காரியத்தைக் கூறப் போகிறேன். 200ரோம முசுக்கட்டைப் பூச்சி மணவாட்டி மரத்தை வேர் வரைக்கும் தின்றது. அந்த அதே ரோம மரம் அந்த... கிறிஸ்துவை எந்த விதமான மரம் வெட்டிப் போட்டது? (சபையோர் 'ரோமர்' என்கின்றனர் - ஆசி). கிறிஸ்துவின் மணவாட்டி மரத்தை எந்த விதமான மரம் வெட்டிப் போட்டது? (சபையோர் 'ரோமர்' என்கின்றனர் - ஆசி). எப்படி? வார்த்தைக்கு பதிலாக வேறொன்றை புகுத்தி. தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளாத பிராடெஸ்டெண்டு சபை ரோம சபையின் குமாரத்தி. தேவன் எந்த காலத்திலும் சபையை ஸ்தாபனமாக்கியதில்லை. ரோமன் கத்தோலிக்க சபை தான் முதலாவதாக தோன்றின ஸ்தாபனம். அதன் பிறகு தோன்றின ஸ்தாபனங்கள் எல்லாம் அவளுடைய குமாரத்திகள். அவர்களும் அவளுடன் மரிக்கின்றனர். 201அவளுடைய பிள்ளைகளையும் அக்கினியால் சுட்டெரிக்கப் போவதாக அவர் வேதத்தில் கூறியுள்ளார். எத்தனை பேருக்கு அது தெரியும்? வேதம் அவ்வாறு கூறியுள்ளது. கடைசி நாள் வரைக்கும் கோதுமையும், களைகளும் ஒன்றாக வளருமென்றும் அதன் பிறகு அவர் களைகளை ஒன்றாகக் கட்டி அதை சுட்டெரிப்பார் என்றும் வேதம் கூறுகின்றது (அது சரியா?). அணுகுண்டினால் எரிக்கப்பட களைகள் சபைகளின் சங்கத்தில் ஒருங்கே கட்டப்படுகின்றன. அது உண்மை. ஆனால் உண்மையான சபையோ எடுத்துக் கொள்ளப்பட்டு களஞ்சியத்தில் சேர்க்கப்பட ஆயத்தமாயுள்ளது. உலகம் இருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அது நிகழும். சகோ. அந்தோணி! சுயாதீனமுள்ளவள் அடிமையானவளோடு சுதந்தரவாளியாய் இருப்பதில்லை. ஓ, அந்த மகிழ்ச்சியான ஆயிர வருட அரசாட்சியின் நாள் வருவதற்காக காத்திருக்கிறோம் அப்பொழுது ஆசீர்வதிக்கப்பட்ட நம் ஆண்டவர் வந்து காத்திருக்கும் மணவாட்டியை எடுத்துச் செல்வார் ஓ, நான் ஊழியம் செய்து விழித்திருந்து ஜெபிக்கும் இந்நேரத்தில் என் ஆத்துமா மகிழ்ச்சியால் பொங்குகிறது ஏனெனில் என் ஆண்டவர் மீண்டும் பூமிக்கு வருவார். அல்லேலூயா! ஆம், ஐயா! ஓ, அவர் களைகளை சுட்டெரிப்பார். கோதுமையையோ களஞ்சியத்தில் சேர்ப்பார். 202பவுலின் நாட்கள் முதற்கொண்டு ரோம பூச்சி மரத்திலுள்ளவைகளைத் தின்னத் தொடங்கினது. பவுல், “நான் (இங்கே வேத வசனம்) போன பின்பு, சகோதரரே, உங்களுக்குள் ஆட்டுத்தோல்கள் போர்த்தினவர்களாய் மனிதர்கள் எழும்புவார்கள், உள்ளத்திலோ ஓநாய்கள். அவர்கள் பின்னாக அநேகரைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்வார்கள்'' என்றான். ”வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக் கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே. அது இப்பொழுதும் உலகத்தில் இருந்து கொண்டு எந்த பிள்ளைகளிடத்தில் கிரியை செய்து வருகிறது? கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில். அவர்கள் எதற்கு கீழ்ப்படியாமல் இருக்கின்றனர்? தேவனுடைய வார்த்தைக்கு.“ பார்த்தீர்களா? ஸ்தாபனங்கள் அப்பொழுதே தோன்ற ஆரம்பித்தன. நண்பர்களே, நான் கூறுவது உங்களுக்குப் புரிகின்றதா? புரிந்தவர்கள் “ஆமென்” என்று சொல்லுங்கள். தின்னத் தொடங்கினது அது பச்சைப் புழுவில் தொடங்கினது... யோவேல் அதைக் கண்டான். கவனியுங்கள், நாம் முடிக்கும் தருணத்தில் இருக்கிறோம். யோவேல் அதைக் கண்டு, “பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பட்டைப்புழு தின்றது; பட்டைப்புழு விட்டதை முசுக்கட்டைப் பூச்சி தின்றது” என்றான். அப்படித்தான் அவன் சொன்னான். அவ்விதமாகவே அது நிறைவேறியது. அது தேவனுடைய மரம், பட்டைப் புழு அதைத் தின்றது. 203ரோம முசுக்கட்டைப் பூச்சி மணவாட்டி மரத்தை தின்னத் தொடங்கி, வேர் வரைக்கும் சென்றது (மணவாளனாகிய கிறிஸ்து இயேசுவுக்கு அது செய்த விதமாகவே, இது மரத்துக்கும் செய்தது). அது மணவாட்டியை அறவே தின்று ஸ்தாபனங்களையும், சொந்த பிரமாணங்களையும் ஏற்படுத்திக் கொண்டது. அதே பூச்சி. ஆனால் என்ன? ஓ, மகிமை! அந்த மணவாட்டி மரத்தின் வேர்களில் முன் குறிக்கப்பட்ட வித்து - ஆபிரகாமின் ராஜரீக சந்ததி - இருந்தது. அது சாக முடியாது. “நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்னும் வாக்குத்தத்தம் அதன் வேர்களில் இருந்தது. “வெட்டுக் கிளிகளும், பச்சைக்கிளிகளும் (பட்டைப் புழுக்களும்), முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்தவைகளை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்'', என்று ”கர்த்தர் சொல்லுகிறார்.“ 204நான் சென்ற ஞாயிற்றுக் கிழமையும் அதற்கு முந்தின ஞாயிற்றுக் கிழமையும் அளித்த செய்திகளை இதனுடன் ஒப்பிட விரும்புகிறேன். நாம் முடிக்கவிருக்கும் இத்தருணத்தில் கூர்ந்து கவனிக்கவும்; “பூச்சிகள் பட்சித்தவைகளை நான் திரும்ப அளிப்பேன்,” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் அதனுடைய ஒவ்வொரு பாகத்தையும் மீண்டும் அளிப்பேன்.” இப்பொழுது சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து கூர்ந்து கவனியுங்கள். தேவன் இதை உங்களுக்கு வெளிப்படுத்தித் தர வேண்டுமென்று உங்கள் முழுமனதுடன் ஜெபியுங்கள். 205திரும்ப அளிப்பதாக தேவன் வாக்களித்திருந்தார். ஏனெனில் தேவன் தாம் அதை திரும்ப அளிப்பாரென்றும், எப்படி அந்த மணவாட்டி மரத்தை - மணவாளன் மரத்தை எழுப்பினாரோ அதே விதமாக மணவாட்டி மரத்தை திரும்ப எழுப்புவார். ஏனெனில் அதைச் செய்வதற்கென உலகம் என்பது எப்படி நிச்சயமாக இருக்கிறதோ, அதே போன்று ஒருவர் நிச்சயமாக இருக்கிறார். எப்படி? சரி. ஆகவே தேவனுடைய வாக்குத்தத்தம் ஆரம்பித்தது, முதலாவதாக அவர் முதலாம் சபையை நிறுவினார். நான் சில உபதேசங்களை இப்பொழுது போதிக்கப் போகிறேன். அதை விசுவாசிக்க உங்களுக்கு மனதில்லாதிருந்தால், சரி; ஆனால் நான் - நீங்கள் - நீங்கள் அதை முதலில் சற்று ஆராய்ந்து பாருங்கள். கவனியுங்கள், முதலாவதாக அவர் அம்மரத்தை எப்படி வளர்த்தார்? ஊ, அது எனக்கு நல்லுணர்வைத் தருகின்றது. நான் பிரசங்கிப்பது, ஒரு போதகர் பிரசங்கிப்பது போல் இல்லையென்று எனக்குத் தெரியும். இங்கே இப்படி நின்று கொண்டிருப்பது, ஆனால் நான் - நான் - நான் என்ன பேசுகின்றேனோ, அதை அதிகம் விரும்புகிறேன். 206ஆகவே இப்பொழுது கவனியுங்கள், முதலாவதைப் போன்று, அவர் அந்த முதலாம் சபையை துவங்கின போது அந்த ரோம பச்சைப் புழு தின்றுபோட்டது, (பட்டைப் புழு, இன்னும் மற்றது). அவர், “விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல்” என்பதைக் கொண்டு தொடங்கினார் யோவான் ஸ்நானன். பரிசுத்த யோவான் 13-ஆம் அல்லது 17-ஆம் அதிகாரம் 17-வது வசனத்தில் இயேசு, “உம்முடைய சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கும். உம்முடைய வசனமே சத்தியம்” என்றார் “நீதிமானாக்கப்படுதல்” என்பதற்கு அடுத்தபடியாக “பரிசுத்தமாக்கப்படுதல்” அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்ட பின்னர், உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும், அவர்கள் எருசலேம் நகரத்தில் (லூக்கா. 24;48) இருக்க வேண்டுமென்று கூறினார். அங்கு தான் அந்த மரத்தை அவர் வளரச் செய்கிறார் பரிசுத்த ஆவி, பெந்தெகொஸ்தே. நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம். அது கனிகளைக் கொடுக்க வேண்டுமென்று கருதி கிறிஸ்து அதில் வாசம் செய்கிறார். ஆமென்! அது சரியா? 207யோவான் ஸ்நானன் “நீதிமானாக்கப்படுதல் என்பதை பிரசங்கித்தான். இப்பொழுது கவனியுங்கள். அது இயற்கை பிறப்புக்கு எடுத்துக்காட்டாயுள்ளது. ஒரு ஸ்திரீ குழந்தையைப் பெற்றெடுக்கும் போது (இதை கவனியுங்கள்) முதலாவதாக நேரிடுவது என்ன? முதலாவதாக தண்ணீர் வெளி வருகிறது. ”நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்“ ...நீதிமானாக்கப்படுதல், அடுத்ததாக வெளி வருவது என்ன? இரத்தம். அது சரியா?... பரிசுத்தமாக்கப்படுதல். அதற்கு அடுத்ததாக எது? ஜீவன்... தண்ணீர், இரத்தம், ஆவி. யோவான். 5:7 இப்படி கூறுகிறது; “பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை (அதாவது குமாரன்), பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே. இம்மூன்றும் (ஒன்றல்ல, ஆனால்) ஒருமைப்பட்டிருக்கிறது“ 208நீங்கள் பிதாவில்லாமல் குமாரனைப் பெற்றிருக்க முடியாது, பரிசுத்த ஆவியைப் பெறாமலும் நீங்கள் குமாரனைப்பெற்றிருக்க முடியாது. ஆனால் பரிசுத்தமாக்கப்படுதல் (Sanctification) இல்லாமல் நீங்கள் நீதிமானாக்கப்படலாம் (Justification); பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்காமலேயே; நீங்கள் பரிசுத்தமாக்கப்படலாம் (Sanctification). நசரீன் சகோதரனே, அதைக் குறித்து என்ன சொல்கிறாய்? பரிசுத்த ஆவி வருவதற்கு ஒரு வருடம் ஆறு மாதங்களுக்கு முன்பே அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டனர். அது சரியா? அவர்கள் இயேசு கிறிஸ்துவினால் பரிசுத்தமாக்கப்பட்டனர். 209இப்பொழுது முதலாம் மணவாட்டி மரத்தை அவர் தோன்றச் செய்தார். ஆனால் பச்சைப் புழு, வெட்டுக்கிளி போன்றவை அதை தின்றுவிட்டன. ஆனால் நீர்க்கால்களின் ஓரமாய் நின்று கொண்டிருக்கின்ற, முன்குறிக்கப்பட்ட மரிக்க முடியாத அந்த வேர்களிலிருந்து அந்த இரண்டாவது மரத்தை அவர் திரும்ப அளிக்கின்றார். அந்த வேர்கள் நீர்க்கால்களின் ஓரமாயுள்ளது, அதை வெளியே காண முடியாது. ஆயினும் அது அங்குள்ளது. இப்பொழுது அது ஆரம்பித்துள்ளது... அவர் அதே காரியத்தை அதே விதமாக திரும்ப அளிக்கையில், அந்த அதே பூச்சிகளை கவனியுங்கள். முதலாவதாக அந்த மரம் வளரத் தொடங்கின போது, கத்தோலிக்க மார்க்கத்திலிருந்து வெளிவந்தது மார்டின் லூத்தர். அவர் 'நீதிமானாக்கப் படுதல்' என்பதைப் பிரசங்கித்தார். பரிசுத்தமாக்கப்படுதலை பிரசங்கித்த ஜான் வெஸ்லி இரண்டாம் தூதன் ஆவார். லூத்தர் நீதிமானாக்கப்படுதலைப் பிரசங்கித்தார். “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதலைப் பிரசங்கித்தார், அது கிருபையின் இரண்டாம் கிரியையாகும். அதன் பின்பு பரிசுத்த ஆவியானவர் தோன்றுகிறார். இங்கே அவர் அதே விதமாக இரண்டாம் தடவை மறுபடியுமாக திரும்ப அளிக்கின்றார். அதைக் காண்கிறீர்களா? முதலாம் முறை எம்முறையைக் கடைபிடித்து அந்த மரத்தை வளரச் செய்தாரோ, இரண்டாம் முறை அதை திரும்ப அளிக்கும் போது, அவர் அதே முறையைக் கையாளுகிறார். 210கவனியுங்கள், அந்த அதே புழு (அந்த சின்ன அயோக்கியன்) தொடக்கத்தில் மரத்தைக் கொன்ற அதே புழுதான் இப்பொழுது லூத்தரன் கிளைகளிலும் காணப்படுகின்றது. ஆனால் என்ன? அது மரத்தைக் கொல்ல முடியாது. ஏனெனில் தேவன், “நான் திரும்ப அளிப்பேன்” என்று வாக்குரைத்திருக்கிறார். அந்த புழு லூத்தரன் கிளைகளையெல்லாம் கொல்லத் தொடங்கினது. பின்பு அது மெதோடிஸ்டு கிளைகளை அடைந்து, அவைகளைக் கொன்று போட்டது. ஆனால் மரத்தின் முக்கிய பாகம் வளர்ந்து கொண்டே வருகின்றது. இப்பொழுது கவனியுங்கள், தொடக்கத்தில் அந்த மரம் கொல்லப்பட்ட போது, அது கொல்லப்பட்டது. முன்னர் அங்கே அது அதைக் கொன்ற போது ஜீவன் (சத்து) வேர்களையடைந்தது. ஆனால் இம்முறை வார்த்தை முன் குறிக்கப்பட்டுள்ளதால் அதன் வளர்ச்சியை எதுவும் தடை செய்ய முடியாது. தேவன், 'நான் திரும்ப அளிப்பேன்' என்று கூறிவிட்ட பின்பு, எவ்வளவாக இதை, அதை மற்றதை செய்தாலும், அது திரும்ப அளிக்கப்பட்டே ஆக வேண்டும். அது தான் அதன் முடிவு. எல்லா விதமான பரிகாசமும், கேலியும், ''பரிசுத்த உருளுபவர்கள்'' என்று அழைத்தலும் அர்த்தமற்றவை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். தேவன் “நான் திரும்ப அளிப்பேன்” என்று வாக்களித்துவிட்டார். மூன்று நாட்களில் அவர் இயேசுவை எழுப்பினது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக சபை அவர் மூன்று யுகங்களில்... மூன்று பகுதிகளில்... அவருடைய வல்லமையின் நிறைவில் எழுப்புவார். “நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” 211என்ன நேர்ந்தது? அந்த முசுக்கட்டை பூச்சி மறுபடியும் மரத்தில் தின்னத் தொடங்கியது. ஆனால் அது லூத்தரன் கிளைகளை மாத்திரம் சேதப்படுத்தியது. ஆனால் லூத்தர் பெற்றிருந்த ஆவியை அது சேதப்படுத்தவில்லை. அது தொடர்ந்து ஜீவித்தது. பின்பு வெஸ்லி தோன்றினார். வெஸ்லியின் மறைவுக்குப் பிறகு என்ன நேர்ந்தது? அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அதைச் சார்ந்த எல்லா கிளைகளும் செத்தன. ஆனால் அவர் என்ன செய்தார்? ஆனால் சபையோ தொடர்ந்து ஜீவித்து பெந்தெகொஸ்தேவை அடைந்தது. பெந்தெகொஸ்தே ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டபோது என்ன நேர்ந்தது? அதன் கிளைகள் செத்தன. ஆனாலும் சபை தொடர்ந்து ஜீவித்தது. 212என்ன? அதே காரியத்தைத் தான் பெந்தெகொஸ்தேயினரும் செய்தனர், அதே பழைய கத்தோலிக்க ஸ்தாபன போதகம் அதை எடுத்து முதல் காரியமாக மரத்தை, முதலாவதாக மணவாட்டி மரத்தை அழிக்கத் தக்கதாக எடுத்தது, அதே போன்று இரண்டாவது மரத்திற்கும் பிசாசு அந்த அதே பழைய தந்திரமான முறைகளையே கையாண்டான். ஆனால் என்ன நேர்ந்தது? எப்படியாயினும் இது வளர வேண்டுமென்று தேவன் முன் குறித்திருந்தார். அப்படி இல்லையென்றால், லூத்தரன்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டபோது, அத்துடன் அதன் வளர்ச்சி நின்று போயிருக்கும். அது அப்படியே ஒன்றன் பின் ஒன்றாக... அது இரண்டாவது கத்தோலிக்க சபையாக ஆகியிருக்கும். ரோமன் கத்தோலிக்க சபை. பாருங்கள்? ஆனால் அது எப்படியாகிலும் வளர வேண்டுமென்று தேவன் தீர்மானம் கொண்டார். அதற்கான வார்த்தையை அவர் ஏற்கனவே உரைத்துவிட்டார். எனவே அது எப்படியாயினும் வளர வேண்டுமென்பதை அவருடைய பிரமாணம் (Law) கவனமாகப் பார்த்துக் கொள்ளும். எவ்வளவு தான் பனி பெய்தாலும் அது ஜீவிக்கத் தான் வேண்டும். எவ்வளவுதான் குளிர் காலம் விட்டுவிட்டு வந்தாலும், எவ்வளவு தான் ஸ்தாபன பேதங்கள் இருந்தாலும், ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக அந்த மரமானது வாழத்தான் போகிறது. ஆம், ஐயா! “நான் திரும்ப அளிப்பேன்” என்று அவர் வாக்குரைத்திருக்கிறார். 213நமக்கு வசந்த காலம் தாமதமாக வந்துள்ளது என்று நாமறிவோம். ஈஸ்டர் வருகின்ற பின் காலம். “கர்த்தர் அவருடைய வருகையைத் தாமதிக்கிறார்” மற்றும் அது போன்றவற்றை என்று சிலர் கூறுகின்றனர். அத்தகைய குளிர்ந்த காற்று ஸ்தாபனக் கிளைகளை கொன்றுவிட்டது. ஆனால் முன் குறிக்கப்பட்டுள்ள அந்த ஜீவனை அது கொல்ல முடியாது. “வானமும் பூமியும் ஒழிந்து போகும், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை” தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார். எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். எவர்களை நீதிமான்களாக்கினோரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்'' அல்லேலூயா! அது ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. எனவே அது மரிப்பதில்லை. 214பாதாளம் அவிழ்த்து விடும் பூச்சிகள் அனைத்தும் அதை தடுத்து நிறுத்த முடியாது. கம்யூனிஸமோ, கத்தோலிக்க மார்க்கமோ, வேறெதுவும் அதை நிறுத்த முடியாது. “நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” மனிதனால் செய்யப் பட்ட ரோம மரங்கள் எதுவும் அதை தூக்கிவிட முடியாது; கல்லறைகள் எதுவும் அதை அவைகளுக்குள் அடக்கி வைத்திருக்க முடியாது. கல்லறைகளின் வாசலிலுள்ள எந்தப் பெரிய ஸ்தாபன கற்களும் அதை அங்கு பிடித்து வைத்திருக்க முடியாது. “நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்”, “ஒரு ஈஸ்டர் வரும், அப்பொழுது நான் அதே சபையை அதே வல்லமையுடன் வெளியே கொண்டு வருவேன். முன்பு போலவே அதே அடையாளங்களுடனும், அதே கனிகளுடனும், அதே கிரியைகளுடனும் அந்த மணவாட்டியை வெளியே கொண்டு வருவேன். நான் திரும்ப அளிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். ஸ்தாபனங்கள் பட்சித்த அனைத்தையும் அவர் திரும்ப அளிப்பார். “அவையனைத்தையும் நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்'' 215“ஸ்தாபனங்களில் இருப்பவர்களைக் குறித்தென்ன?” என்று நீங்கள் கேட்கலாம். தேவன் ஒரு சிறந்த தோட்டக்காரர். அவர் மரத்திலுள்ள செத்த கிளைகளையெல்லாம் வெட்டி, மரத்தை சுத்தம் செய்துவிட்டார். அவர் என்ன செய்யப் போகிறார்? அந்த கிளைகளை சுட்டெரிக்கப் போகிறார். இந்த மரத்தின் தோட்டக்காரர் தேவனே. அவர் அதைப் பாதுகாக்கிறார். அவருடைய உரிமையை அவர் கவனமாகப் பாதுகாக்கிறார். அவருடைய உரிமை எது? அவருடைய சொந்த வார்த்தை. அதை உறுதிப்படுத்த அவர் அதை கவனித்துக் கொண்டே வருகிறார். அது எங்குள்ளது என்று அவர் தேடிக் கண்டு பிடிக்கிறார். இந்த ஸ்தாபனங்கள் ஒருங்கே இணைந்து ஒரு சங்கமாகும் இந்நேரத்தில் அவர் திரும்ப அளிப்பார். அந்த ஸ்தாபனக் கிளைகளை அவர் மரத்திலிருந்து வெட்டிப் போட்டு, மரத்தை சுத்தம் செய்துவிட்டார், சபை தொடர்ந்து செல்கிறது. லூத்தரன்கள், “நாங்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ளப் போகிறோம்; நாங்களும் கத்தோலிக்கரைப் போல் பெரிய ஸ்தாபனமாக ஆவோம்” என்ற போது, அவர் அந்த லூத்தரன் கிளையை வெட்டிப் போட்டார். அப்பொழுது தேவன் வெஸ்லியை எழுப்பினார். வெஸ்லி என்னும் அந்த மகத்தான தீர்க்கதரிசி மரித்தபோது, அவரைப் பின்பற்றினவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஸ்தாபனம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். அந்த கிளைகளையும் அவர் வெட்டிப்போட்டார். பின்பு பெந்தெகொஸ்தேயினர் தோன்றினர். அதுவும் மரித்தபோது, அந்தக் கிளைகளையும் அவர் வெட்டிப் போட்டார். ஆனால் மரமோ வளர்ந்து கொண்டே செல்கிறது. பாருங்கள்! அவர் திரும்ப அளிக்கப் போகிறார். 216கனிகள் மரத்தின் எந்த பாகத்தில் வளர்கின்றன? அவை மரத்தின் கீழ் பாகத்தில் வளருவதில்லை. அது மேல் பாகத்தில் தான் வளர்கின்றது. சூரிய வெளிச்சம் மரத்தின் எந்த பாகத்தில் முதலில் படுகின்றது? ஆ! மகிமை! சாயங்கால வெளிச்சம் மரத்தின் மேல் பாகத்தில் படுகின்றது. ஆமென்!கீழ்பாகத்திலுள்ள கிளைகளிலல்ல; ஆனால் மரத்தின் மேல் பாகத்தில். அங்குதான் கனிகள் சூரிய வெளிச்சத்தில் பழுக்கின்றன. ஆமென்! அவரை நேசிக்கின்றீர்களா? ஆமென் அவரைச் சேவிப்பீர்களா! ஆமென் அவரை விசுவாசிக்கிறீர்களா? ஆமென் நான் நிச்சயமாக முழு இருதயத்தோடும் அவரை விசுவாசிக்கிறேன். இப்பொழுது, அது என்ன? அந்த திராட்சை செடி வளர்ந்து உச்சியை அடையும் வரை, அவர் உலர்ந்த திராட்சை கொடிகளை, அந்த ஸ்தாபன திராட்சை கொடிகளை வெட்டி, அதை சுத்தம் பண்ணுகிறார். அந்த உச்சியில் தான் அவர் கனிகளைப் பெறப் போகிறார் 217இப்பொழுது கவனியுங்கள்! தேவன் அதை சுத்தம் செய்கிறார். சரி, வெட்டப்பட்ட கிளைகள் உலர்ந்து போனவை. எனவே அவர்கள் தேவனுடைய சமுகத்துக்கு முன்னால் வர முடியாது முதலாவது உயிர்த்தெழுதலில் அவர்கள் பங்கு கொள்ள முடியாது. அவர்கள் தேவனுடைய மூல திராட்சை செடியின் ஒரு பாகமாக இருந்தனர். ஆனால் அவர்கள் ஸ்தாபனங்களுடன் ஒன்றாக இணைந்து, திராட்சை பழங்கள் தோன்றும்போது அங்கிருக்க மாட்டார்கள் 218இப்பொழுது கவனியுங்கள்!, தேவன் ஒருபோதும் ஸ்தாபனங்களை ஏற்படுத்தவில்லை. சபைதான் ஸ்தாபனங்களை தானாகவே ஏற்படுத்திக் கொண்டது. தேவன் அதை ஜீவநாடியிலிருந்து வெட்டிப் போடுகிறார். அது ஸ்தாபனக் கனிகளையே கொடுக்கும். ஆனால் அந்த திராட்சை செடியிலிருந்து வேறொரு கொடி தோன்றுமானால் அது, அதிலிருந்து தோன்றிய முதலாம் கொடி கொடுத்த அதே பழங்களைத் தரும். ரோமாபுரி அதன் பூச்சிகளை அனுப்பி முதலாம் கொடியையும் அதன் பழங்களையும் தின்றுபோட்டது. ஆனால் தேவன் உயரத்தில் ஒரு கொடியைத் தோன்றச் செய்வார். எனவே அந்த பூச்சியினால் அதை எட்டிப் பிடிக்க முடியாது. அது உயரே தோன்றும். ஆமென்! நான்... நான் செல்வோம். 219மரம் வளர்ந்து கொண்டே வந்து, ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்குள் பிரவேசிக்கிறது. லூத்தரிலிருந்து அது வெஸ்லிக்குச் சென்றது; வெஸ்லியிலிருந்து அது பெந்தெகொஸ்தேவுக்குச் செல்கின்றது; பெந்தெகொஸ்தெயிலிருந்து அது வார்த்தைக்குச் செல்கின்றது. என்றென்றும் தவறாத அவருடைய வார்த்தையை விசுவாசிக்கும் உண்மையான விசுவாசிகளுக்கு அது மறுபடியும் ஈஸ்டராகும். அது ஈஸ்டர்; அது உயிர்த்தெழுதல். தேவனுடைய ஜனங்கள் எவ்லாவிடங்களிலும் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் அது ஈஸ்டராக இருக்கும். ஏன்? அவர்கள் உயர எழும்பிவிட்டனர் (ஆமென்!). ஸ்தாபனங்களிலிருந்தும் ஸ்தாபனப் பிரமாணங்களிலிருந்தும் அவர்கள் உயர எழும்பிவிட்டனர். அது மீண்டும் ஈஸ்டராக இருக்கும். ராஜரீக சந்ததி வேர்களில் வார்த்தையில் அநேக ஆண்டுகளாக மறைந்து கிடந்திருந்தது; அது இப்பொழுது வெளிப்படத் தொடங்குகின்றது. இது ஈஸ்டர் காலம், உலகத் தோற்றத்துக்கு முன்பு முன் குறிக்கப்பட்ட இந்த சபை மீண்டும் நிற்கத் தொடங்குகிறது 220தொடக்கத்தில் தேவன் எப்படி முன் குறித்தார் என்பதை சற்று கவனியுங்கள். அதை நான் எழுதி வைத்திருக்கிறேன். இப்பொழுது அதை நான் கூறப் போகிறேன். சரி, அவர் முதலாம் பரிபூரண மரத்தை அவருடைய மரணத்திற்குப் பின்பு, மூன்று நாட்களில் திரும்ப அளித்தார். முதலாம் மரத்தின் மரணத்திற்கு பிறகு, அது சரியா? அதே விதமாக மணவாட்டி மரமும் மூன்று காலங்களில், இல்லை, மூன்று கட்டங்களில் திரும்ப அளிக்கப்படும். மூன்று கட்டங்களில் அது திரும்ப அளிக்கப்படும். இப்பொழுது, கவனியுங்கள். அது என்ன?நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் ஆபிஷேகம்... ஒன்று, இரண்டு, மூன்று கட்டங்கள். 221இப்பொழுது கவனியுங்கள். மூன்று நாட்களுக்குப் பின்பு முதலாம் பரிபூரண மரம் தொடக்கத்தில் இருந்தவாறே திரும்ப அளிக்கப்பட்டு, அதே அடையாளங்கள், அதே அற்புதங்களை அது கொண்டதாயிருந்தது. அதே இயேசு மறுபடியும் வந்து அந்த அதே செயல்களை மீண்டும் புரிந்தார். மூன்றாம் நாள் முடிவில் அடையாளங்கள் தோன்றின முதலாம் நாள் முடிவில் அல்ல. ஓ, சகோதரனே, உமக்கு விளங்குகிறது என்று நம்புகிறேன். மூன்றாம் நாள் முடிவில், கிறிஸ்துவின் உண்மையான வெளிப்படுதல் உண்டாகிறது. பாருங்கள்? கவனித்தீர்களா? (உங்களுக்கு விளங்குகிறதா?) முதலாம் நாளில் அல்ல... மரித்த ரூபம்; இரண்டாம் நாளில் ஒரு வதந்தி உண்டாயிருந்தது (பாருங்கள்?) அல்லது, இரண்டாம் நாளிலும் அது மரித்திருந்தது... லூத்தர், வெஸ்லி, மூன்றாம் நாளில் துவக்கத்திலே ஒரு வதந்தி உண்டாயிருந்தது. முதலாம் நாள் ஒன்றுமில்லை (லூத்தர்); இரண்டாம் நாளிலும் ஒன்றுமில்லை (வெஸ்லி). ஆனால் மூன்றாம் நாளிலே (பரிசுத்த ஆவியின் யுகத்தில்) அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்னும் பிரஸ்தாபம் உண்டாகிறது. ஆனால் மூன்றாம் நாள் முடிவில் தான் அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார். அவர் சரியாக அவர்கள் மத்தியில் வந்தார். ஐனங்களின் மத்தியில் தோன்றி “என்னைப் பாருங்கள், நானே அவர்” என்றார். 222பெந்தெகொஸ்தேயினர் காலம் தோன்றும் வரைக்கும், மரித்துப் போனவைகள் தொடர்ந்து நீடித்தன. ஆனால் பெந்தெகொஸ்தேயினர் காலத்தில் அவரைக் குறித்து வதந்தி அடிபடுகிறது, இப்பொழுதோ, இங்கே, இந்தக் கடைசி நாளிலே இங்கே அவர் நம்முடன் இருந்து கொண்டு, நமது மத்தியில் நடமாடிக் கொண்டிருக்கிறார். மூன்றாம் நாள் முடிவில் அவர் தரிசனமாகி, அவர்களுக்கெல்லாம் உயிர்த்தெழுதலின் அடையாளங்களைக் காண்பித்து, அவர் ஜீவிக்கிறார் என்றும், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும் நிரூபித்தார். அவருடைய உயிர்த்தெழுதலினால் கிடைக்கப் பெற்ற அவருடைய சமுகத்தின் ஜீவிக்கின்ற கனிகளானது... அவருடைய சமுகத்தின் ஜீவிக்கின்ற கனிகளானது (உங்களால் கிரகிக்க முடிகின்றதா?) தம்முடைய சபையாகிய அவர்களெல்லாருக்கும் அந்த நாளின் முடிவில், அவர் தோன்றின போது, அது வெளிப்பட்டது. ஆமென். என்ன? அவர்களெல்லாம் ஒன்றாக கூடுவர். ஓ, ஆமென். மூன்றாம் நாளின் முடிவின் போது... 223கடைசி நாளில் சாயங்கால வெளிச்சம் பிரகாசிக்கும் என்று வேதம் கூறியுள்ளது. அந்த சாயங்கால வெளிச்சமானது மேற்கில் இருக்கின்ற அதே வெளிச்சம் தான், கிழக்கில் இருந்ததும் அதே வெளிச்சம் தான். கிழக்கில் பிரகாசித்த அந்த வெளிச்சம் முதலாம் சபையை தோன்றச் செய்தது. ஆனால் ரோமர்களோ, தங்கள் அஞ்ஞான வழிபாட்டினால் அதை வெட்டிப் போட்டனர். சாயங்கால வெளிச்சம் என்பது அதே வெளிச்சம் கவனியுங்கள், இப்பொழுது கவனியுங்கள், அதே வெளிச்சம். சாயங்கால வெளிச்சம் எதற்காக வெளியே வந்திருக்கிறது? சாயங்கால வெளிச்சம் எதற்காக தோன்றினது? திரும்ப அளிக்க. வியூ! உங்களுக்குப் புரிகின்றதா? காலை வெளிச்சம் தோன்றின அதே நோக்கத்திற்காகவே சாயங்கால வெளிச்சமும் தோன்றினது... இருளின் காலங்களில் ரோமாபுரி வெட்டிப் போட்டதை திரும்ப அளிக்க தேவன் சாயங்கால வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்து அதை திரும்ப அளிப்பார். தேவனுடைய வார்த்தை முழுவதையும் தம்முடைய சபையில் கிறிஸ்துவின் முழு வெளிப்படுத்தலையும் மறுபடியும் திரும்ப அளிக்கத் தக்கதாக அவர் முன்பு செய்த அத்தனை காரியங்களும், சரியாக மீண்டும் சாயங்கால வெளிச்சத்தில் காணப்படும். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? ஓ, அது மிகவும் அற்புதமல்லவா? அதைக் காண நாம் இப்பொழுது வாழுகிறோம் என்பதை நினைத்துப் பார்க்கும் போது! 224இப்பொழுது, அந்த சாயங்கால வெளிச்சமானது (சரியாக தீர்க்கதரிசனத்தின் படியாகவே), எதை திரும்ப அளிக்க அந்த சாயங்கால வெளிச்சம் வெளி வந்துள்ளது? தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட விதமாகவே சாயங்கால வெளிச்சம் தோன்றினது. எதை திரும்ப அளிக்க? பூச்சிகள் பட்சித்தவைகளை. அது வளர்ந்து கொண்டே வந்தது. அப்பொழுது அது என்ன செய்தது? அது ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டது. எனவே தேவன் அதை வெட்டியெடுத்து, அவைகளைக் கட்டாக கட்டி, ஒரு மூலையில் வைத்து, ஸ்தாபனம் ஒன்றை உண்டாக்கிக் கொள்ள அனுமதித்தார். அடுத்த ஸ்தாபனம் தோன்றிய போதும், அவர் அதே போல் அவைகளைக் கட்டாக கட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டார். ஆனால் மரமோ வளர்ந்து கொண்டே வந்தது. பெந்தெகொஸ்தே தோன்றினபோது, அவைகளையும் அவர் மீண்டும் கட்டாகக் கட்டி ஒரு பக்கம் வைத்துவிட்டார். “ஒருநாளில் இவையனைத்தும் சுட்டெரிக்கப்படும்” என்றார் அவர். அவர்களுடைய ஸ்தாபனங்களில் அவர்கள் கட்டப்பட்டனர். அடுத்தது என்ன? சரியாக மரத்தின் உச்சியில் கனிகள் பழுக்கின்றன (அது உண்மை) மரத்தின் உச்சியில். ஆதலால் இங்கே இருக்கின்ற இந்த மரத்தின் உச்சி பாகம் தான் சாயங்கால வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. 225நோவாவின் பேழையில் மூன்று தட்டுகள் இருந்தன. கீழ் அறை ஊரூம் பிராணிகளுக்கும், இரண்டாம் தட்டின் அறை ஆகாயத்துப் பறவைகளுக்கும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் மேல் தட்டில் மாத்திரமே வெளிச்சம் பிரவேசித்தது. அங்குதான் அது முதலில் பிரகாசித்தது. அது கீழ் அறையையோ அல்லது இரண்டாம் தட்டின் அறையையோ அடையவில்லை. மரமானது முதலில் கனியை கீழ்பாகத்தில் தருவதில்லை. அவ்வாறே இரண்டாவதிலும் அது தருவதில்லை. அவையெல்லாம் வெட்டப்பட்டு ஸ்தாபனங்களாகிவிட்டன. ஆனால் மேல் பாகத்தில், “நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் சாயங்கால வெளிச்சத்தை அனுப்புவேன். அது வார்த்தையை மறுபடியும் கொணர்ந்து அதை வெளிப்படுத்தும். நான் வாக்களித்த எல்லாவற்றையும் திரும்ப அளிப்பேன். நான் வாக்களித்த அனைத்தையும் அதே பரிசுத்த ஆவியானவர் அதே அடையாளங்களை உடையவராயிருந்து, கொண்டு வருவார். மணவாளனுக்கு நான் கொண்டிருந்த அதே உயிர்த்தெழுதலை, ஒரு ஈஸ்டரை, மனவாட்டிக்கும் நான் கொண்டிருப்பேன்” பாருங்கள்? காலை வெளிச்சத்தைப் போலவே மாலை வெளிச்சமும் பிரகாசிக்க வெளி வந்திருக்கிறது. அதே அடையாளங்கள், எல்லாம் அதே செயல்கள். அதே மரத்தின் மீது அந்த அதே வெளிச்சமானது பிரகாசித்துக் கொண்டிருக்குமானால், முன்னர் அவர்கள் கொண்டிருந்த அதே கனியை அந்த வெளிச்சமானது பிறப்பிக்கும். ஆமென். “நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்னும் வார்த்தை நிறைவேறிவிட்டது என்பதை அது நிரூபிக்கும். 226இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது, அங்கே... கவனியுங்கள். இப்பொழுது இதை கேட்கத் தவற வேண்டாம். அங்கே நான்கு மரணச் செய்தியாளர்கள் இருந்தனர்... (அல்லது நாம் முடிப்போமா? நீங்கள்...?...) இப்பொழுது மிகவுமாக கூர்ந்து கவனியுங்கள். நான்கு மரண செய்தியாளர் இருந்தனர். அந்த நான்கு மரணச் செய்தியாளர் அந்த மரத்தை கொன்றனர், அது சரியா? அது என்னவாயிருந்தது? பச்சைப்புழு, வெட்டுக்கிளி, பட்டைப்புழு, முசுக்கட்டைப் பூச்சி. அது சரியா? ரோம பிசாசுகளின் நான்கு செய்தியாளர்கள்... அவர்களின் போதகங்கள்... மரத்தை கொன்றன. ஒன்று கனியை சேதப்படுத்தினது, ஒன்று அதன் பட்டையைச் சேதப்படுத்தினது... அல்லது அதன் இலைகளை சேதப்படுத்தினது; ஒன்று அதன் பட்டையைச் சேதப்படுத்தினது, மற்றொன்று அதன் ஜீவனை சேதப்படுத்தினது. அது சரியா? போதகங்களின் நான்கு செய்தியாளர்கள் அந்த மரத்தின் வேர் தவிர மற்ற எல்லாவற்றையுமே கொன்றுபோட்டனர். ஆகவே அந்த நான்கு மரண செய்தியாளர்கள் அந்த மரத்தை கொன்று போட்டார்களென்றால், ஜீவனின் நான்கு செய்தியாளர்கள் அந்த மரத்தை திரும்ப அளிக்கின்றனர். 227உங்களுக்கு விளங்குகின்றதா? ஆமென்! “நான் திரும்ப அளிப்பேன்'' என்று தேவன் உரைத்தார், நான்கு மரண செய்தியாளர் அதை சேதப்படுத்தினர், அதன் பின்பு நான்கு ஜீவனின் தூதர்கள் அதை திரும்ப அளித்தனர், முதலாவது யார்? மார்டின் லூத்தர் - நீதிமானாக்கப்படுதல், இரண்டாவது யார்? ஜான் வெஸ்லி - பரிசுத்தமாக்கப்படுதல் என்பதின் மூலம், மூன்றாவது யார்? பெந்தெகொஸ்தேயினர் - பரிசுத்த ஆவியானவரின் வரங்கள் திரும்ப அளிக்கப்பட்டதன் மூலம்; பரிசுத்த ஆவியின் அபிஷேகம். நான்காவது என்னவாயிருந்தது? வார்த்தை. என்ன? வார்த்தை. 228நான்கு பெரிய தீர்க்கதிரிசிகள் இருந்தனர். அவர்களில் ஒருவரான மார்டின் லூத்தர் வெளிச்சத்தை பிரகாசிப்பித்தார். அது சிறிய வெளிச்சமாயிருந்தது... நீதிமானாக்கப்படுதல், பின்பு வெஸ்லி தோன்றினார்; வெஸ்லிக்குப் பிறகு அவரைக் காட்டிலும் பிரகாசமானது, பெந்தெகொஸ்தே, இன்னும் மற்றுமொரு மகத்தான பெரிய தீர்க்கதரிக்குள் பரிசுத்த ஆவியின் அபிஷேகம். பாருங்கள்? ஆனால் மல்கியாவின் கடைசி நாட்களில், அந்த அதே வார்த்தையுடன் எலியா வரவிருக்கின்றார். தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடம் வந்தது. சாயங்கால வெளிச்சத்தின் போது, எல்லாமே திரும்ப அளிக்கப்படும்; என்ன? பிள்ளைகளுடைய இருதயம் பிதாக்களிடத்திற்கு திருப்பப்படும்... நான்காம் வெளிச்சம். 229நான்கு கொலையாளிகள் நான்கு செய்தியாளர்கள் அதை சேதப்படுத்தினர். நான்கு மரண செய்தியாளர்கள் தங்கள் ஸ்தாபனப் பிரமாணங்களின் மூலம் அதை அகற்றிவிட்டனர். ஆனால் நான்கு நீதியின் செய்தியாளர்கள் அதை திரும்ப அளிப்பார்கள். “மனுஷ குமாரனே, (Son of Man) தீர்க்க தரிசனம் உரைப்பாயாக. இந்த எலும்புகள் உயிரடையுமா?” (அதைக் குறித்து பேசுவதற்கு நேரமிருந்தால் நலமாயிருக்கும். அதை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அதை நான் விட்டுவிட வேண்டும்). தீர்க்கதரிசனம் உரைப்பாயாக. இந்த எலும்புகள் உயிரடையுமா? சபை தோன்றும் நான்கு கட்டங்கள் அங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. எசேக்கியேலின் உலர்ந்த எலும்புகளின் நான்கு கட்டங்கள் யாவை? அவைகள் மேல் நரம்புகள் உண்டாயின; மாம்சம் உண்டானது; பின்பு அது தோலினால் மூடப்பட்டது. ஆனால் அவைகளுக்குள் உயிர் பிரவேசிக்கவில்லை. காற்று அவைகளின் மேல் பட்டபோது, அவை உயிரடைக்கின்றன. “நான் திரும்ப அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்'' அல்லேலுயா! மகிமை! கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 230நான்காம் வெளிச்சம் தோன்றி, அதே அடையாளங்களைச் செய்யும், கவனியுங்கள். நீதிமானாக்கப்படுதல் என்பது மரத்தின் சதை பாகத்தை (Pulp) கொண்டு வந்தது. பரிசுத்தமாக்கப்படுதல் என்பது பட்டையை மீண்டும் கொண்டு வந்தது. பரிசுத்த போதகம் இலைகளை மீண்டும் கொண்டு வந்தது. யார்? பெந்தெகொஸ்தேயினர். அது என்ன?பெந்தெகொஸ்தேயினர், இலைகள், தங்கள் கைகளைத் தட்டி, மகிழ்ச்சி கொண்டு, துதித்தனர்: பெந்தெகொஸ்தே. என்ன? நான்காவது வார்த்தை. தாமாகவே இருந்த அந்த வார்த்தை மாம்சமானது; நீதிமானாக்கப்படுதல் விதைக்கப்பட்ட பிறகு, பரிசுத்தமாக்கப்படுதல் விதைக்கப்படும்போது பரிசுத்த ஆவியின் அபிஷேகம், முடிவாக இயேசு கொண்டிருக்கிற உயிர்த்தெழுதலின் அடையாளத்தின் நிருபணமாயிருக்கிற கனிகள். இவைகளெல்லாம் தோன்றின பின்பு, ஸ்தாபனங்கள் மரித்துப் போயின. கிறிஸ்து மீண்டுமாக, அந்த கூர்நுனி கோபுரத்தின் தலைக் கல்லாக, தம்மை தாமே மீண்டும் மையபடுத்தியிருக்கின்றார். 231முதலாம் வரிசை, நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம். அதன் பின்பு தலைக்கல் வருதல். அது என்ன? அந்த பரிசுத்த ஆவியின் குழு சாணை தீட்டப்படுகின்றது, ஏனெனில் அவர் சென்றபோது, அவர் கொண்டிருந்த அதே விதமான ஊழியமானது பொருந்தும் விதத்தில் இருப்பதற்காகவே; அவர் மீண்டும் வரும்போது நீதிமானாக்கப்பட்டோர், பரிசுத்தமாக்கப்பட்டோர், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றோர் அனைவரையும், அது எடுத்துச் கொள்ளப்படுதலில் கொண்டு செல்லும். அந்த கூர்நுனிக் கோபுரம் மீண்டும் நிற்கும். தேவனுடைய வீடானது மறுபடியும் ஜீவிக்கும். ஜீவ விருட்சம் மீண்டும் வளருகிறது. நாடுகள் உடைகின்றன; இஸ்ரவேல் விழித்தெழும்பினாள் இவை தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்களாம் புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன திகில் எங்கும் சூழ்ந்துள்ளது சிதறப்பட்டோரே உங்கள் மந்தைக்குத் திரும்புங்கள் மனிதரின் இதயங்கள் பயத்தினால் சோர்ந்துள்ளன பரிசுத்த ஆவியால் நிறைந்து உங்கள் தீவட்டிகளை சுத்தப்படுத்தி மேல் நோக்குங்கள், உங்கள் இரட்சிப்பு சமீபமாயுள்ளது. கள்ளத் தீர்க்கதரிசிகள் பொய்யுரைக்கின்றனர் கிறிஸ்துவாகிய இயேசுவே தேவன் (ஆமென்!) என்னும் தேவனுடைய சத்தியத்தை அவர்கள் மறுதலிக்கின்றனர் நாமோ அப்போஸ்தலர் நடந்த பாதையில் நடப்போம்! ஏனெனில் மீட்பின் நாட்கள் சமீபித்திருக்கின்றன மனிதரின் இதயங்கள் பயத்தினால் சோர்ந்துள்ளன. (அணுகுண்டுகள் போன்றவைகளினால்) பரிசுத்த ஆவியால் நிறைந்து உங்கள் தீவட்டிகளை சுத்தப்படுத்தி மேல் நோக்குங்கள், உங்கள் இரட்சிப்பு சமீபமாயுள்ளது (ஆமென்)! 232எல்லா அடையாளங்களும் திரும்ப அளிக்கப்படும்... லோத்தின் காலத்தில் கொடுக்கப்பட்ட அடையாளம் கடைசி காலத்தில் திரும்ப அளிக்கப்படும். அதைக் குறித்து நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எப்படி லோத்து... இந்த யேகோவாவின் தூதன், ஜனங்களின் மத்தியில் தூதனாக மாம்சத்தில் தோன்றி, கூடாரத்துக்கு தன் முதுகைக் காட்டி, ஆபிரகாமிடம், “உன் மனைவியாகிய சாராள் எங்கே?” என்று கேட்டார். “உமக்குப் பின்னாலுள்ள கூடாரத்தில்” அவர், “நான் உன்னைச் சந்திப்பேன்” என்றார். அதைக் கேட்ட சாராள் நகைத்தாள். “சாராள் ஏன் நகைத்தாள்'' என்று அவர் கேட்டார். அவள் கூடாரத்திலிருந்தாள். ஆமென்! அவருடைய வருகையின் போதும் அவ்வாறே இருக்கும் என்று இயேசு கூறினார். ஓ, மல்கியா: 4-ன் சாயங்கால வெளிச்சம் இருளினூடாக பிரகாசித்து, (ஆமென்) முன்குறிக்கப்பட்ட அந்த வார்த்தையின் மேல் அந்த சாயங்கால வெளிச்சம் பிரகாசிக்கச் செய்கின்றது. அல்லேலூயா! 233நான்காம் செய்தி என்னவாயிருக்கும்? அந்த நான்காம் செய்தியாளன் என்ன செய்ய வேண்டும்? வார்த்தையின் மேல் அது சாயங்கால வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்தல். வார்த்தை ஏற்கனவே முன்குறிக்கப்பட்டுள்ளதால், அது வெளிப்பட வேண்டும். “நான் திரும்ப அளிப்பேன்'' என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். ”நான் திரும்ப அளிப்பேன்“ அது உண்மை. சாயங்கால வெளிச்சம் தோன்றி முன்குறிக்கப்பட்ட வார்த்தையின் மேல் பிரகாசிக்கின்றது. ஆம். ஐயா! ஓ, சாயங்கால நேரத்தில் வெளிச்சம் தோன்றும் மகிமையின் பாதையை நீ நிச்சயம் கண்டு கொள்வாய் விலையேறப்பெற்ற இயேசுவின் நாமத்தில் தண்ணீரில் அடக்கம் பண்ணப்படும் வழியில் இன்று வெளிச்சம் தோன்றுகிறது. வாலிபரே, வயோதிபரே, உங்கள் பாவங்களுக்காக மனந்திரும்புவீர் அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் உள்ளே வருவார் ஏனெனில் சாயங்கால வெளிச்சம் வந்துவிட்டது தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே என்பது சத்தியம் 234பார்த்தீர்களா? அவர்களிருவரும் ஒருவர். நமக்குள்ளே அந்த ஒருவர். மனிதரால் செய்யக் கூடாத அடையாளங்கள் இன்று வெளிப்படுகின்றன. முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை வேர்களிலிருந்து புறப்பட்டு மேலே எழும்பி வந்தது. ஆனால் ஸ்தாபனங்ளோ அதை ஏற்க மறுத்தன. ஆனால் ஒரு வெளிச்சம் தோன்றும். எங்கே? எருசலேமிலா? இல்லை, ஐயா! சாயங்கால வெளிச்சம் எருசலேமில் தோன்றாது. அப்படியானால் அது எங்கு தோன்றும்? மேற்கில், யூதர்களுக்கு அவர்களுடைய காலம் உண்டாயிருந்தது, அவர்களோ அதை புறக்கணித்தனர். சாயங்கால வெளிச்சம் மேற்கில் தோன்றும். எதற்காக? வார்த்தையின் மேல் பிரகாசிக்க. எதற்காக? கனிகளைப் பழுக்கச் செய்து, தொடக்கத்தில் அவர்கள் கொண்டிருந்த அதே அடையாளங்களும், அற்புதங்களும், கனிகளும் மணவாட்டி மரத்தில் காணப்படும்படி செய்ய. “சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்”. அது சரி. 235ஓ, வார்த்தையானது அதன் காலத்தில் அவர் கனியைத் தரும். அது உலர்ந்து போகாது. தாவீது கூறின வண்ணமாக, அதன் காலத்தில் அது அவர் கனியைத் தரும் (ஆமென்!)... தொடக்கத்தில் இருந்த அதே கனி. அவருடைய முன்குறிக்கப்பட்ட வார்த்தை இப்பொழுது வெளிப்படுவதை நாம் கண் கூடாகக் காண்கிறோம். அது எதைக் குறிக்கிறது? கர்த்தருடைய வருகை. அருகாமையிலுள்ளதென்றும், “பச்சைப்புழுக்களும் (மெதோடிஸ்டுகள் விட்டுவிட்டதை) முசுக் கட்டைப் பூச்சிகளும் மரத்தின் அடிவரை பட்சித்துப் போட்டன; அதை சாயங்கால நேரத்தில் திரும்ப அளிப்பேன்” என்று அவர் வாக்களித்தது நிறைவேறிவிட்டதென்றும் இப்பொழுது உறுதியாகின்றது. ஓ, என்னே! வ்யூ! என்னால் பிரசங்கிக்க முடியும் என்பதை நான் நம்புகிறேன் (நான் கூறுவது விளங்குகிறதா?) ஓ, நான் எவ்வளவாய் இயேசுவை நேசிக்கிறேன் ஓ, நான் எவ்வளவாய் இயேசுவை நேசிக்கிறேன் ஓ, நான்எவ்வளவாய் இயேசுவை நேசிக்கிறேன் அவர் என்னை முன்பு நேசித்ததால் அவரை, ஒருபோதும் புறக்கணிக்கமாட்டேன் அவரை ஒரு போதும் புறக்கணிக்கமாட்டேன் அவரை ஒருபோதும் புறக்கணிக்கமாட்டேன் அவர் என்னை முன்பு நேசித்ததால் ஆமென்! அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? என் முழு இருதயத்தோடும் அவரை நான் நேசிக்கிறேன். இப்பொழுது ஜெபவரிசை தொடங்கலாமா? 236பிதாவாகிய தேவனே, இச்செய்தியை உமது கரங்களில் சமர்ப்பிக்கிறேன். அதை முழுவதுமாக பிரசங்கிக்க என்னால் முடியாமற் போய் விட்டபோதிலும், பரிசுத்த ஆவியானவர் தாமே இந்த ஒலி நாடாக்களுடன் நாடுகள் தோறும் செல்ல வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். இவ்வுலகிலிருந்து நான் எடுக்கப்பட நேர்ந்தால், ஆண்டவரே, இச்செய்தி ஜீவிக்கட்டும். இது உம்முடைய வார்த்தை. ஆண்டவரே, சாயங்கால வெளிச்சம் பிரகாசித்து, மகிமையான இந்த கிறிஸ்துவின் மணவாட்டியை தோன்றச் செய்யட்டும். ஆண்டவரே, அதை ஆசீர்வதியும். அது வெறுமையாய் திரும்பி வராதிருப்பதாக! அதன் நோக்கத்தை அது நிறைவேற்ற அருள் புரியும். எல்லா துதியும் உமக்கே உரித்தாகுக! பிதாவே, நாங்கள் கூறும் யாவும் தேவனுடைய வார்த்தையாயுள்ளது என்று உணர்ந்து விசுவாசிக்கிறோம். ஆண்டவரே, அதை இந்த சபையோருக்கு, இந்த ஈஸ்டர் காலையில் நீர் நிரூபிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். சிலர் இங்கு முதன் முறையாக வந்திருக்கக் கூடும். நீர் இன்னும் இயேசுவாயிருக்கிறீர் என்றும், நீர் மரித்தவரல்ல; ஜீவனுள்ள, உயிரோடெழுந்த இயேசு என்றும், எங்கள் மத்தியில் இன்று உயிருள்ளவராக நீர் இருக்கிறீர் என்றும் நிரூபிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். பிதாவே, அதை அருளும். உம்மை இயேசுவின் நாமத்தில் துதிக்கிறோம். ஆமென். 237எத்தனை பேர் வியாதிப்பட்டிருக்கிறீகள்? உங்கள் கைகளை உயர்த்துங்கள் பார்க்கலாம். பில்லி பால் ஜெப அட்டைகளை கொடுத்தான் என்று நினைக்கிறேன், அல்லவா? (சபையோர் 'ஆம்' என்கின்றனர்... ஆசி.) அவைகளின் எண் என்ன? 'ஈ' (E) 1 முதல் 100. அவர்கள் எல்லோரையும் நாம் எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு சிலரை மாத்திரம் நாம் தெரிந்து கொள்வோம். அவர்களை வரிசையாக நிறுத்துங்கள். எண் 1 வைத்திருப்பது யார்? நான் பார்க்கட்டும் எண் 1. E எண் - 1, உங்கள் கரத்தையுயர்த்துங்கள். ஜெப அட்டை... உங்கள் அட்டையைப் பாருங்கள்... உங்களால் எழுந்திருக்க முடியுமானால், சரி இ எண் 1? நல்லது, சரியானதை நீங்கள் வைத்திருக்கிறீர்களா? சரி. சரி. நல்லது, நாம் எங்கேயாவது ஆரம்பிப்போமாக... ஓ, சரி, உங்களிடம் இருக்கிறதென்றால், சரியாக அங்கேயிருந்து நாம் ஆரம்பிப்போமாக, சரி, எண் 1, உங்களால் நடக்க முடிந்தால் இங்கே நீங்கள் வாருங்கள். உங்களால் முடியாவிட்டால், நாங்கள் உதவுவோம். சரியா? சரி. எண் 1, எண் 2, சீகிரமாக உங்கள் கையை இப்பொழுது உயர்த்துங்கள். எண் 2, சரியாக இங்கே வாருங்கள். எண் 3, சரியாக இங்கே, ஐயா. எண் 4? எண் 4, எண் 5. இப்பொழுது சற்று சில நிமிடங்களுக்கு அமர்ந்திருங்கள். எண் 5? எண் 6, சீக்கிரமாக உங்கள் கரத்தை உயர்த்துங்கள். எண் 6, 6, 6? தயவு செய்து நான் அதை பார்க்கட்டும். யாரோ தங்கள் கரத்தை காட்டுகிறார்கள். எங்கிருந்து... என்று எனக்குத் தெரியவில்லை. அவர் அங்கே அறையில் இருக்கின்றார். சரி. எண் 6, சரி, சற்று ஒரு க்ஷணம், 7, 7? சரி, அங்கிருக்கின்ற அம்மாள். எல்லோரும் அமைதியாய் அமர்ந்திருங்கள். இது நிரூபணமாக அமையப் போகின்றது. இதுவே நிரூபணம். 2386, 7... 1, 2, 3, 4, 5, 6, 7? நீங்கள் அங்கே செல்லுங்கள்? சரி? சரி 7, சரி, ஐயா. அது அருமையானது. 8, 8, சரி, சகோதரனே, 8, 9, 10, 10, 11? சரி நல்லது, சரி. ஜனங்கள் ஜெப வரிசைக்கு வருவதை நிறுத்திவிட்டனர் என்று நினைக்கிறேன். இங்கிருந்து நாம் தொடங்குவோம். அது சரி, இன்னும் சில நிமிடங்களில்... சரி, இப்பொழுது நாம் ஜெபிப்போம். பிதாவாகிய தேவனே, உம்மிடத்திலிருந்து ஒரே ஒரு வார்த்தை வந்தாலும் கூட, அது எங்களுக்கு மிகவும் முக்கியமானதாய் இருக்கும். ஆண்டவரே, நான் உத்தமமாக உமது வார்த்தையை கூற முயன்றேன் என்பதை ஜனங்கள் அறிந்து கொள்வார்களாக. ஆண்டவரே, உமது ஊழியனின் தவறுதல்களை மன்னிப்பீராக. ஆண்டவரே, நான் அநேக தவறுகளைச் செய்கிறேன். உமது ஊழியனின் தவறுகளைப் பாராமல், நான் பிரசங்கிக்க முயலும் உமது வார்த்தையை மாத்திரம் பார்ப்பீராக. அதற்காக உமக்கு நான் நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே, நான் இருதயப் பூர்வமாக மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன். உமது வார்த்தை என் ஜீவனைக் காட்டிலும் மேலானது. எந்த நேரமும் அதற்காக என் ஜீவனைக் கொடுக்கவும் நான் ஆயத்தமாயிருக்கிறேன். உமது வார்த்தை சத்தியம் என்று நானறிவேன். 239ஆண்டவரே, முட்டாள்தனமான என் வழிகளை மன்னிப்பீ ராக. அநேக முறை நான் கேலியாகப் பேசுகிறேன். அப்படி நான் செய்யக் கூடாது. ஆண்டவரே, அதற்காக நான் வெட்கப்படுகிறேன். அத்தகைய குடும்பத்திலிருந்து நான் வந்தவன். பிதாவே, தயவு கூர்ந்து அதை மறந்துவிடுவீராக. உமது இரத்தத்தினால் அதை மறைத்துக் கொள்ளும். அதை நீர் செய்ய வேண்டுமென்று உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்... அதை நான் அறிக்கையிடுகிறேன். நீர்அதை மறந்து விடமுடியாது. ஆனால் நான் அறிக்கையிடும் போது நீர் அதை மன்னித்து மறக்க முடியும். என் பாவங்களை இப்பொழுது நான் அறிக்கையிட்டேன். இங்குள்ள மக்களின் பாவங்களை நான் அறிக்கையிடுகிறேன். ஆண்டவரே, அவர்கள் ஒவ்வொருவரையும் நீர் மன்னிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். ஆண்டவரே, நாங்கள் இங்கு நாடகம் நடிக்கவில்லையென்றும், இப்பொழுது நான் கூறின வண்ணமாக, பரிசுத்த ஆவியானவர் இக்கடைசி நாட்களில் அவருடைய வார்த்தைக்கு சாட்சியாயிருக்கிறார் என்றும் ஜனங்கள் உணர்ந்து கொள்வார்களாக. பிதாவே, என்னவாயிருந்தாலும், நான் ஒரு சாதாரண மனிதன். நான் எதையாகிலும் கூறினால். “அது அவருடைய சொந்த வியாக்கியானம், அது அவருடைய சொந்த கருத்து” என்று கூறவகையுண்டு. ஆனால் பிதாவே, நீர் பேசி அது சரியென்று நிரூபித்தால், அவர்கள் என் பக்கம் சேர்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுது அது என் வியாக்கியானமாக இராமல், உம்முடைய வியாக்கியானமாக இருக்கும். ஆண்டவரே, நான் உம்முடைய ஊழியனாயிருந்து, என் பாவம் மன்னிக்கப்பட்டு, இவ்வூழியத்திற்கு என்னை நீர் அழைத்திருப்பீரானால், நீர் பேசும், ஆண்டவரே, இதை அருளுமாறு வேண்டிக் கொள்கிறேன். 240எல்லாவிடங்களிலுமுள்ள பிணியாளிகளையும் அவதியுறுகிறவர்களையும் சுகப்படுத்துமாறு இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். கிணற்றடியில் சமாரியா ஸ்திரீயிடம் நீர் பேசின போது உம்மை வெளிப்படுத்தின விதமாக, நீர் மாத்திரம் இப்பொழுது உம்மை வெளிப்படுத்தினால்... அவளிடம் என்ன தவறு இருந்தது என்பதை நீர் அறிவித்தீர். அவளுக்கு ஐந்து புருஷர் இருந்தார்கள். சாயங்கால நேரத்தில்... அதைச் செய்வீர் என நீர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர். கடைசி நாட்களில் அதை நீர் மறுபடியும் செய்வீரென்று வாக்கருளியிருக்கிறீர். நீர் கூறினீர், “மனுஷ குமாரனுடைய வருகையிலும் அவ்வாறிருக்கும். லோத்தின் நாட்களில் நடந்தது போல, அவ்விதமாகவே இருக்கும். ”தேவன் மானிட மாம்சத்தில், எங்கள் மத்தியில் பரிசுத்த ஆவியில் அவருடைய சபையின் ரூபத்தில் அசைவாடி அதே அடையாளங்களை செய்து கொண்டு வருகிறார். இன்றைக்கும் அதை அருளும், பிதாவே, அதை அருளமாட்டீரா? ஜனங்கள் அதைக் கண்டு, இங்குள்ள ஒவ்வொருவரும் தேவனுடைய மகிமைக்கென சுகமடையவும் இரட்சிக்கப்படவும் வேண்டிக் கொள்கிறேன். ஆமென். 241சில நிமிடங்கள் கூடுமானவரை பயபக்தியாய் இருங்கள். உங்கள் கவனத்தை சற்று செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். 242இங்கே, இப்பொழுது நான் எந்த ஸ்தானத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்களா? இங்கே நான் வார்த்தையைப் பிரசங்கித்தேன், தேவனுடைய வார்த்தையை, அது அனைத்தும் சத்தியம் என்று நான் உங்களுக்கு எடுத்துரைத்தேன். “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்று இயேசு கூறியுள்ளார். உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நீங்கள் நன்றாக கவனித்து அதற்கு 'ஆமென்' அல்லது இல்லையென்று கூறுங்கள். இயேசு தாமாகவே ஜனங்களை சுகப்படுத்தினதாக உரிமை கோரவில்லை. அது உண்மை. அவர், “நான் சுயமாய் கிரியைகளைச் செய்யவில்லை. என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்து வருகிறார்” என்றார். அது சரியா? மேலும் யோவான். 5:19-ல் இயேசு, “மெய்யாகவே, மெய்யாகவே முற்றிலுமாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பிதாவானவர் செய்யக் குமாரன் (அவர் ஒரு மனிதனாக... தேவன் வாசம் செய்யும் கூடாரமாகவே... இருந்தார்) காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார். அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப் படியே செய்கிறார்” என்றார். வேறு விதமாகக் கூறினால், “நான் என்ன செய்ய வேண்டுமென்பதை பிதா எனக்கு ஒரு தரிசனம் காண்பிக்கிறார். அவர் கூறுவதை மாத்திரம் நான் செய்கிறேன்” என்றார் அவர். 243ஒரு நாள் ஒரு ஸ்திரீ ஜெப வரிசைக்கு வர முடியாமல் போய்விட்டது என்று நாம் பார்க்கிறோம். அவளுக்கு அநேக ஆண்டுகளாக உதிரப்போக்கு இருந்தது. அவள் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்... அவள் ஒன்றுமில்லாதவள். அவள் எளிய ஸ்திரீ. அவளிடம் பணமில்லை. அங்கு ஆசாரியர்களும் மற்றவர்களும் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு அங்கு நிற்க உரிமையிருந்தது, இவள் அவர்கள் நிற்பதைக் கண்டு பயந்து, அவர்கள் காணாதவாறு மெல்ல தவழ்ந்து சென்று, அவரை அடைந்து, அவருடைய வஸ்திரத்தை தொட்டு, “அவர் சத்தியத்தை அப்படியே அறிவிக்கிறவர் என்று விசுவாசிக்கிறேன். அவர் ஜீவனை நமக்குக் கொண்டு வருகிறவர். அவர் தேவனுடைய வார்த்தையென்று நான் விசுவாசிக்கிறேன். நான் மாத்திரம் அவரைத் தொட்டால் சொஸ்தமாவேன்” என்று மனதில் கூறிக் கொண்டாள். 244அவள் விசுவாசித்தது போல் நீங்களும் விசுவாசிக்கிறீர்களா? அந்த ஸ்திரீ விசுவாசித்தது போலவே நீங்களும், அவர் தேவனுடைய வார்த்தையென்று, விசுவாசிக்கிறீர்களா? அவர் இப்பொழுது பிரதான ஆசாரியராயிருக்கிறார் என்று வேதம் உரைக்கிறது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் உயிர்த்தெழுந்த பின்பு உன்னதத்திற்கு ஏறி மனிதருக்கு வரங்களையளித்தார். அவர் இப்பொழுது தேவனுடைய வலது பாரிசத்தில்... உன்னதத்திலுள்ள மகத்துவமானவரின் வலது பாரிசத்தில்... வீற்றிருந்து, நாம் அறிக்கையிடும் பாவங்களுக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். அது சரியா? அவர் எப்படிப்பட்ட பிரதான ஆசாரியராயிருக்கிறார்? நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய பிரதான ஆசாரியராக அவர் இருக்கிறார். (ஆங்கிலத்தில் 'touched'... 'தொடப்படக்கூடிய'... என்று எழுதப்பட்டுள்ளது... தமிழாக்கியோன்) அவர் என்றென்றும் மாறாதவராயிருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர்... ஆசி.) 245கவனியுங்கள், நீங்கள் இங்கு வந்து, என்னை நாள் முழுவதும் தொட்டுக் கொண்டிருந்தால் ஒரு உபயோகமுமில்லை. நீங்கள் வேறு எந்த சகோதரனையோ சகோதரியையோ தொட்டுக் கொண்டிருந்தாலும் எவ்வித உபயோகமுமில்லை... கைகளை வைக்குதல் மாத்திரமே உண்டாகும். அவ்வளவுதான். ஆனால் அவரை நீங்கள தொடுவீர்களானால்... அவர்கள், “இந்த மகத்தான போதகர், தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறோம்” என்றனர். ஆனால் அவரோ ஒன்றும் கூறவில்லை. ஆனால் அந்த எளிய ஸ்திரீ விசுவாசத்துடன் அவரைத் தொட்டாள்... அவளுடைய விசுவாசம். அவருடைய வஸ்திரத்தை அவள் தொட்டபோது, அவர் “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். 246அன்றைக்கு இருந்தது போலவே இன்றைக்கும் அவர் பிரதான ஆசாரியராயிருக்கிறாரென்று வேதம் கூறியுள்ளதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நமது பலவீனங்களைக் குறித்து அவர் பரிதபிக்கிறவராயிருக்கிறார் (touched). நீங்கள் ஜெப வரிசையில் இருந்தாலும் இல்லாமற் போனாலும் அவரைத் தொட முடியும். நீங்கள் வியாதிப்பட்டிருந்தால், அல்லது உங்கள் இருதயத்தில் வேறெதாகிலும் இருந்தால், நீங்கள் பயபக்தியுடன் தேவனுடைய சமுகத்தில் வந்து, “தேவனே, அங்கு நின்று கொண்டிருக்கும் மனிதனைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. அவர் வழுக்கை தலையுடையவர். அவர் ஒன்றுமில்லை. அவர் என்ன பிரசங்கித்தாரோ அவர் பிரசங்கித்தது சத்தியம் என்று நான் விசுவாசிக்கிறேன். நீர் பிரதான ஆசாரியரென்று இவர் சத்தியத்தை கூறியிருப்பாரென்றால், அப்படியானால், அங்கே இருந்த அந்த சமாரிய ஸ்திரியுடன் நீர் பேசினது போல, இவருடைய உதடுகளை உபயோகித்து எனக்கு மறு உத்தரவு அருளி என்னிடம் கூறும்” என்று ஜெபியுங்கள். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களானால் அவ்விதம் செய்யுங்கள். அவர் அப்படிச் செய்தால், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை நிரூபிக்குமல்லவா? நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இடத்தில் நின்று கொண்டு பயபக்தியுடன் ஜெபியுங்கள். என்ன? ஹூம்? இப்பொழுது அங்கே பத்து, இருக்கிறார்களா? 10, 11, 12, 13, 14, 15... ஜெப அட்டைகள் 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25. இது ஒரு நல்ல வரிசையாக அமையும், நாம்... உங்களை நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டியதாயிராது என நான் நம்புகிறேன், ஆனால் இப்பொழுது... பத்துடன்... சரி; நாம்... 247அவர்கள் இங்கு கூடும் இந்நேரத்தில், “நம்பிடுவாய்” என்னும் பல்லவியை நாம் மௌனமாக இசைப்போம். நம்பிடுவாய் நம்பிடுவாய் யாவும் கைக் கூடிடும் நம்பிடுவாய் நம்பிடுவாய் நம்பிடுவாய் (எதை நம்ப வேண்டும்? அவர் வாக்களித்துள்ள வார்த்தையை. ஏன்?) யாவும் கைக் கூடிடும் நம்பிடுவாய் 248அவர் மலையிலிருந்து இறங்கி வந்தார். சீஷர்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். அந்த சந்திரரோகியை சுகப்படுத்த முடியாமல் அவர்கள் தோல்வி கண்டனர். அந்த பையனின் தகப்பனார் அவனைப் பார்த்துக் கொண்டே அழுது கொண்டிருந்தார். சீஷர்கள் என்னென்னமோ செய்து பார்த்தனர். ஒன்றும் நடக்கவில்லை, இயேசு அங்கு நடந்து வந்தார். அங்கிருந்த சிலர், “இதோ அவர் வந்துவிட்டார்” என்றனர். அந்த சிலர் ஆசாரியர்களிடமிருந்து அவர்களை விலக்கி, இயேசுவிடம் சுட்டிக் காண்பித்தனர். நானும் அவ்வாறே ஜனங்களை அவரிடம் கூட்டிக் காட்ட விரும்புகிறேன்; என்னிடமல்ல, ஒரு சபையிடமில்ல, இயேசுவிடம், “அவரால் முடியும் என்றனர்” அவர்கள். தகப்பன் ஓடி வந்து அவருடைய காலில் விழுந்து, “ஆண்டவரே, மகனுக்கு இரங்கும். அவன் பிசாசினால் பீடிக்கப்பட்டிருக்கிறான். சில நேரங்களில் அவனுடைய வாயிலிருந்து நுரை தள்ளுகிறது. அவனுக்கு அடிக்கடி அந்த காக்காய்வலி உண்டாகின்றது. அவனை எங்கெல்லாமோ கொண்டு சென்றேன். உம்முடைய சீஷர்களும் கூட அவனைச் சொஸ்தமாக்க முடியாமல் போயிற்று” என்றான். இயேசு அவனிடம், “நீ விசுவாசித்தால் என்னால் கூடும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” என்றார். நம்பிடுவாய் (அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். அவர்கள் எல்லோரும் வந்து விட்டார்களா? சற்று...) நம்பிடுவாய். யாவும் கைக் கூடிடும் (என்னே ஒரு நேரம்!) நம்பிடுவாய் நம்பிடுவாய், நம்பிடுவாய் யாவும் கைக்கூடிடும் நம்பிடுவாய் 249ஓ, ஆண்டவரே, வார்த்தை இங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டது. ஆண்டவரே, சாயங்கால வெளிச்சம் பிரகாசிக்கட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென். இப்பொழுது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, இங்குள்ள எல்லா ஆவிகளையும் அவருடைய மகிமைக்காக என் கட்டுக்குள் எடுத்துக் கொள்கிறேன்! நான் இந்த ஜெப வரிசையை நோக்கிப் பார்க்கிறேன். இந்த ஜெப வரிசையில் எனக்கு தெரிந்துள்ள நபர் ஒருவர் கூட கிடையாது, உங்களைக் குறித்தோ, உங்களுடைய தொல்லைகள் அல்லது எதைக் குறித்தும் எனக்குத் தெரியாது, ஜெப வரிசையில் உள்ள நீங்கள் எல்லாரும் எனக்கு அந்நியர்களாயிருக்கிறீர்கள், ஜெப வரிசையில் உள்ள எல்லாரும் உங்கள் கைகளையுர்த்துங்கள். இங்கு கூட்டத்தில் உள்ள எத்தனைப் பேர் எனக்கு அந்நியராயிருக்கிறீர்கள், உங்களைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாதே? உங்களுக்கும் வெளியே அதே அதிகாரம் இருக்கின்றது, இங்குள்ளவர்களுக்கு இருப்பது போல, ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நபருடன் நான் ஈடுபடுகிறேன். இங்கே இங்கே இதை நான் ஒரு நிமிடத்துக்கு எடுத்துச் செல்லட்டும். இப்பொழுது இதன் மூலமாக உங்களால் கேட்க முடிகிறதா? 250இங்கேயிருக்கின்ற அம்மாள்... இங்கே ஒரு மனிதனும் பெண்ணும் மறுபடியும் சந்திக்கின்றனர். இவர்களை எனக்குத் தெரியாது, இவர்களை நான் கண்டதும் இல்லை; இவர்கள் எனக்கு ஒரு அந்நியராயிருக்கின்றனர்; ஆனால் ஒரு முற்றிலுமான அந்நியர். அந்த வார்த்தையின் அடிப்படையில் தான் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றேன். அந்த வார்த்தை “நீங்கள் என்னில் விசுவாசித்தால், நான் செய்கின்ற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்” என்று கூறுகிறது. பாருங்கள்? அன்றொரு நாள் காலை, ஆயிரக்கணக்கான தரிசனங்களுக்குப் பிறகு, அந்த தரிசனம் மறுபடியும் வந்த போது, “நீ எங்கெல்லாம் செல்கிறாயோ, உன்னுடன் என்றென்றும் மாறாதிருக்கிற இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் இருக்கிறது...” என்றது. அதை என் முழு இருதயத்துடன் பயபக்தியுடன் நான் நம்புகிறேன். நான் உங்களை மறுபடியுமாகக் காணவில்லையெனில், அது உண்மையென நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 251என் வாழ் நாளில் நான் கண்டிராத ஒரு பெண் இங்கே இருக்கிறார்கள். ஒரு ஜெப அட்டையைப் பெற்றுள்ள பெண் தான் இவள். என் பையன் வழக்கமாகச் செய்வது தான், அவன் இங்கு வந்து, ஒரு ஜெப அட்டையை எடுத்து உங்கள் எல்லாருக்கும் முன்பாகக் குலுக்கி, யாரெல்லாம் கேட்கின்றனரோ அவர்களுக்கெல்லாம் ஒரு ஜெப அட்டையைத் தருகிறான். இந்த வரிசை எங்கிருந்து துவங்கப் போகிறது என்பதைக் குறித்து யாருக்குமே தெரியாது. ஆதலால் பையனால், “இப்பொழுது, இங்கே... நான்... நீங்கள் எனக்கு இவ்வளவு தருவீர்களென்றால், நீங்கள் நிச்சயமாக அங்கு செல்லத் தக்கதாக நான் உங்களை முன்னே வைப்பேன்” என்று கூற முடியாது. அவனுக்கே அது தெரியாது. பாருங்கள்? யாருக்குமே தெரியாது. பாருங்கள்? பரிசுத்த ஆவியானவர் எந்த இடத்திலிருந்து கூப்பிடு என்று கூறுகிறாரோ அங்கிருந்து தான் நாங்கள் துவங்குகிறோம், சரியாக அங்கிருந்து தான் நாங்கள் அழைக்கிறோம். ஆகவே சில சமயங்களில் அது யாருக்காவது, நான் இங்கே இருக்கையில், முக்கியமாக, ஒன்றுந்தெரியாத ஒருவர்... ஒரு அந்நியர் (பாருங்கள்) எனக்குத் தெரியாதவர்... 252இப்பொழுது, இங்கே நின்று கொண்டிருக்கின்ற இந்த பெண்... ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது. இவள் ஒருக்கால் வியாதிப்பட்டிருக்கலாம்; ஒருக்கால் வியாதிப்பட்ட வேறு யாரையாவது இவள் கொண்டிருக்கலாம், இவள் இவள் - இவள் இங்கே நின்று கொண்டு மாத்திரமே இருக்கலாம். ஒருக்கால் வியாதிப்பட்டது போல் இருக்காலம். ஒருக்கால் இங்கு ஏதோ ஒன்றை வெளியரங்கமாக்க இவள் இங்கே நின்று கொண்டிருக்கலாம். அப்படியானால், என்ன சம்பவிக்கப் போகிறதென்று சற்று கவனியுங்கள். பாருங்கள்? அப்படியும் முயற்சித்திருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம், அப்படித்தானே? ஆம் ஐயா. அவளை அவர்கள் மரித்தவளாக கதவிற்கு வெளியே செல்வதையும் நீங்கள் கவனிக்கலாம். பாருங்கள், பாருங்கள்? ஆகவே இப்பொழுது, அது சரியா அல்லது தவறா என்று நீங்கள் - நீங்கள் கண்டு கொள்ளுங்கள். பாருங்கள? இப்பொழுது, பாருங்கள்? இப்பொழுது, நண்பர்களே, நாம் விளையாடிக் கொண்டிருக்கிற சபை அல்ல. நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். மரத்தில் உச்சியில் இருக்கின்ற கனியானது பழுத்துக் கொண்டிருக்கிறது. அது சரி. கர்த்தர் வருகின்றார். இவளை எனக்குத் தெரியாது; (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) தேவன் இவளை அறிவார். உலகம் என்கின்ற ஒன்று இருப்பதற்கு முன்னதாகவே இவளை அறிந்திருந்தார், அவர் இவளை அறிந்திருந்தார். சரியாக அங்கே இவள் நிற்பாளென்று அவர் அறிந்திருந்தார். சரியாக நான் இங்கே நிற்பேனென்று அவர் அறிந்திருந்தார். ஏனெனில் அவர் முடிவற்றவர். அது சரியல்லவா? இப்பொழுது, அவர் முடிவற்றவராயிருந்து அதை அறிந்திருப்பாரென்றால், இந்த பெண் இங்கே எதற்காக நின்று கொண்டிருக்கிறாள் என்பதும் அவருக்குத் தெரியும். அப்படியானால் அந்த அதே தேவன். 253இயேசு, பூமியின் மேல் அவர் இருந்த பொழுது, அவருக்குள் இருந்து கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீயிடம் பேசி, அவளுடன் ஏதோ ஒரு தவறு உள்ளது என்று கூறின தேவன்... அது என்னவாயிருந்தது என்பதை நாமெல்லாருமே அறிவோம். அப்படித்தானே? ஆகவே அவள், “ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும்” என்றாள். அது தான் அவளுடைய முதல் உச்சரிப்பாயிருந்தது. “இப்பொழுது, கிறிஸ்து என்று அழைக்கப்படுகின்ற மேசியா இங்கிருக்க வேண்டிய காலமாயிருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். அவர் வரும்போது, இந்த விதமான காரியத்தை தான் அவர் செய்வார்” என்றாள். இப்பொழுது அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருந்து, சற்று முன்னர் நான் பிரசங்கித்த இந்த வார்த்தையின் படியாக, சாயங்கால நேரத்தில் அவர் இங்கே இருந்து அதே காரியங்களை செய்வார் என்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறாரே, அப்படியானால் நாம் அதற்காக எதிர்பார்த்திருக்கிறோம், அப்படித்தானே? நாம் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோமல்லவா? அந்த சபையின் உயிர்த்தெழுதலுக்காக... 254இப்பொழுது, அங்கே முன்பு அவர் செய்த விதமாகவே இந்த ஸ்திரீக்கும் செய்வாரென்றால், அது அந்த வார்த்தையை உறுதிப்படுத்துகின்றது, அது சரியே. இப்பொழுது, தன் கையை என்னிடம் அளித்திருக்கிற இந்த பெண், நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். இவளை எனக்குத் தெரியாது; நான் இவளைப் கண்டதில்லை. இங்கே ஒரு அந்நியப் பெண்ணாக இவள் நின்று கொண்டிருக்கிறாள். அதே போன்று தான் அங்கிருக்கிறவர்களும்... உங்களில் அநேகர். இங்கு அமர்ந்திருக்கின்ற சிலரை நான் அறிவேன். அநேகரை எனக்குத் தெரியாது. இங்கு திருமதி. காலின்ஸை நான் அறிவன். அதைக் குறித்து நிச்சயமுடையவனாக இருக்கிறேன். சகோதரி... சகோதரன் பெண் அவர்களின் மனைவி... சகோதரன் மற்றும் சகோதரி டௌவை இங்கே நான் கண்டேன். சகோதரன் ரைட், சகோதரன் மற்றும் சகோதரி டௌ, சகோதரன் ராட்னி, மற்றும் அவர்கள். இங்கேயிருக்கின்ற உங்களில் சிலரை நான் அறிவேன். ஆனால் உங்களில் அநேகரை எனக்குத் தெரியாது, ஏனெனில் இங்கே உங்கள் மத்தியில் அடிக்கடி நான் இருந்ததில்லை. இங்கே நம் மத்தியில் வெளியாட்கள் இருக்கின்றனர். ஆகவே நீங்கள் ஜெபியுங்கள். 255நான் உங்களுக்கு ஒரு அந்நியனாக இருப்பேனானால், சாயங்கால வெளிச்சம் வந்துவிட்டது என நான் பறைசாற்றுகிறேன். ஆவிக்குரிய விதமாக கூறுவோமானால், அது அந்த அதே தேவனுடைய பரம ரகசியமான கனிகளை வெளிப்படுத்தும். அது சரி. அன்று கிணற்றண்டையிலிருந்த அந்த ஸ்திரீக்கு அவர் செய்தது போன்று தான் நானும் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அவர், “தாகத்துக்குத் தா” என்றார். பாருங்கள்? அதே காரியத்தை தான் நான் கூறிக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது, இது நானல்ல; இது அவர் தான். ஆனால் நீங்கள் எதற்காக இங்கு நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர் எனக்கு வெளிப்படுத்துவாரென்றால் (பாருங்கள்?) நீங்கள் எதற்காக இங்கிருக்கிறீர்கள் என்பதை அவர் எனக்கு வெளிப்படத்துவாரென்றால், அப்பொழுது உங்களுடைய வாழ்க்கையைக் குறித்த எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் உங்களுக்கு ஏதோ ஒன்றை கூறுவாரானால் (பாருங்கள்?) அது சரியா அல்லது தவறா என்பது உங்களுக்குத் தெரியும். என்ன சம்பவித்துள்ளது என்பதை அவர் அறிந்திருக்கிறாரென்றால், உங்களுக்கு அதைக் கூறுவாரென்றால், நீங்கள் முன்பு செய்துள்ளதை அவர் உங்களுக்கு கூறியிருப்பாரென்றால், இனி நடக்கப்போவது என்னவாக இருக்கும் என்பதை அவர் நிச்சயமாக உங்களுக்கு கூற முடியும். நிச்சயமாக அது மேசியாவை வெளிப்படுத்தும். அவரை நிச்சயமாக அதனுடைய முன் பாகத்தையும், அதனுடைய பின் பாகத்தையும், அதற்கு முன்னர் இருந்ததையும், அதனுடைய எல்லாவற்றையும், அது வெளிப்படுத்தி, அதை சரியாக ஆக்கும். சபையார் அவர் மீது விசுவாசம் கொள்வீர்களா? சரி. அவர் அதைச் செய்தாரா இல்லையா என்று நீங்கள் விசுவாசிப்பீர்கள் என நான் நம்புகிறேன். இன்னுமாக நீங்கள் அதை விசுவாசிப்பீர்கள். ஆனால் இங்கே தான் அதை அவர் உறுதியாக்குகின்றார். 256இப்பொழுது, நான் இந்த ஸதிரீயை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், இவள் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறாள். இவள் எனக்கு அந்நியப் பெண்ணாவாள் என்பதை அறிந்திருக்கிறாள், இப்பொழுது உங்களுக்கு நான் அதைக் காண்பிக்கட்டும். அங்கே தொங்கிக் கொண்டிருக்கிற படத்தை உங்களில் அநேகர் பார்த்திருக்கிறீர்கள். அது அந்த - அந்த ஒளியினுடையது தான். அது தான் சரியாக இப்பொழுது இங்கே இந்த ஸ்திரீக்கும் எனக்கும் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கிற ஒளியேதான் அதுவும். அந்த பச்சை நிறம் போன்ற, மஞ்சள் - பச்சை, மரகதம் போன்ற ஒளி என்று நீங்கள் அழைக்கிற விதமாக உங்களால் அதைக் காணமுடிகிறதா, சரியாக அது இங்கே... அதுதான் இவளை... இப்பொழுது உங்களுக்கு ஒன்றை நான் காண்பிக்கட்டும். ஒரு மிகவும் இனிமையான, தாழ்மையான உணர்வை, நீங்கள் உணர்கிறீர்கள். அது சரிதான் என்றால், ஸ்திரீயே, மக்கள் காணத் தக்கதாக உங்கள் கையை உயர்த்துங்கள். அது - அது... அவளால்... பாருங்கள், இப்பொழுது, அது அவள் மீது விழுமானால், எனக்குத் தெரியாது. அது... அது தேவனாகத்தான் இருக்க முடியும்; என்னால் அதைச் செய்ய முடியாது; அது தேவன் தான். அப்படியாகத் தான் அது இருக்க வேண்டும். 257ஆம், இந்த ஸ்திரீக்கு உண்மையாகவே, அடுத்த கட்டமாக, ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியதாக இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறப் போகின்ற ஏதோவொன்று இவளிடம் இருக்கின்றது, ஆனால் இவளுக்கு இப்பொழுது அதைச் செய்து கொள்ள விருப்பமில்லை. அது சரி. இவளுக்கு... அது ஒரு சதை வளர்ச்சியாக இருக்கிறது. அந்த சதை வளர்ச்சியானது முதுகெலும்பின் வலது பக்கத்தில் இருக்கின்றது. அது சரி. அது சரியென்றால் உங்கள் கையையுயர்த்துங்கள், மக்கள் அதைக் காணட்டும்...?... இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது உங்களால் அதைக் காண முடிகின்றதா, ஆனால் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசித்தால், சரி. நீங்கள், “ஒருக்கால் நீங்கள் யூகித்துக் கூறலாமே வில்லியம் பிரன்ஹாம்” எனலாம். உங்களால் அதை எல்லா நேரத்திலும் யூகிக்க முடியாதே. இலட்சக்கணக்கான தடவைகள்... அது சரியே. இவள் இங்கே அப்படியே நிற்கட்டும். அது சரியாக இப்பொழுது என்னிடமிருந்து சென்றிருக்கிறது. அப்படியானால் சற்று நாம் பார்ப்போம். சரியாகிவிட்டாளெனத் தென்படுகிறது; கிறிஸ்தவன். இப்பொழுது நாம் பார்ப்போம். இப்பொழுது... அவர் நம்மிடம் ஏதோ ஒன்றை கூறியிருப்பாரானால் அது... ஆம், இதோ மறுபடியுமாக அவள் வருகிறாள். ஆம், ஐயா. இவளுக்கு... ஆமாம், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்ற இருந்த சதை வளர்ச்சியாகும், அது இவளுக்கு பிரச்சனை உருவாக்கக் கூடிய ஒன்று, ஆனால் அதற்காக இவள் கிறிஸ்துவை நம்பினாள். அது மாத்திரமல்ல, இவள் இந்த இடத்திலிருந்து வரவில்லை. இவளுடன் யாரோ வந்திருக்கிறார்; அது இவளுடைய கணவனாகும். அவருக்கும் தொல்லைகள் இருக்கிறது. அது சரி. நான் அந்த மனிதனைப் பார்க்கையில் அவருக்கு என்ன கோளாறு உள்ளது என்பதை தேவன் என்னிடம் கூறுவாரா? ஆம், சென்று அவருடைய இரவு ஆகாரத்தை உண்ணும்படிக்கு அவரிடம் கூறு; அவருடைய வயிற்றுக் கோளாறு அகன்றுவிட்டது. 258நீங்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கிறீர்களா, உங்களைக் குறித்து? நீங்கள் நாஷ்வில்லிலுள்ள, டென்னஸ்ஸியிலிருந்து வருகிறீர்கள். (அது சரியே) திருமதி. டெங்க்லி. சரி. நீங்கள் வீட்டிற்கு திரும்பி செல்லலாம், சுகமாகினீர்கள்... நம்முடைய கர்த்தராகிய இயேசுவை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கடந்த நாட்களில் இருந்த அதே கர்த்தராகிய இயேசுவாக அவர் இல்லையெனில், சாயங்கால வெளிச்சம் இங்கே...?... அந்த ஸ்திரீ அவளுடன் பேசி, அவர் கூறின அந்த காரியங்கள் எல்லாம் சரியா என்று அவளிடம் கேளுங்கள், இப்பொழுது, என்னால் அதைச் செய்ய முடியாதென்று உங்களுக்குத் தெரியும். நான் ஒரு மனிதன்; நான் உங்கள் சகோதரன். ஆனால் அவர் தேவன். இப்பொழுது, நாம் பார்ப்போம், இவர் தான் அடுத்த நபரா? நீங்கள்... ஜெப வரிசையில் இருக்கிறீர்களா? சரி. 259இப்பொழுது, அந்த அபிஷேகம், என்ன என்று எனக்கு தெரியாத அளவிற்கு அது என்னை பலவீனமடையச் செய்கிறது. இப்பொழுது இயேசு, ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்டபோது, அவர், “என்னிடமிருந்து வல்லமை புறப்பட்டதை நான் அறிவேன்” என்றார். அது சரியா? அப்படியென்றால், வலிமை சக்தி என்று அர்த்தம்; அவர் பலவீனமடைந்தார். ஆகவே அவருக்கே அது வார்த்தையானவருக்கே அவ்விதமாக நேருகிறதென்றால், வார்த்தை யாருக்கு வருகிறதோ அந்த ஒருவரின் நிலைமை எவ்விதமாக இருக்கும்? என்ன ஆகும்... அந்த, தேவனுடைய குமாரனுக்கே அது பலவீனத்தைக் கொண்டு வருமானால், அவருடைய கிருபையால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவியாகிய எனக்கு எப்படியாக இருக்கும்? அது என்னை இங்குமாக சுழற்றி சுழலச் செய்கிறது. பாருங்கள்? ஆனால் இன்னுமாக அவருக்கு பிரதிநிதித்துவப்படுத்தத் தக்கதாக தான் நான் இங்கு இருக்கிறேன். பாருங்கள்? ஆகவே அங்கே... நான் ஒரு பொருட்படுத்த வேண்டியிராத பிரதிநிதியாவேன்; நான் என்னுடைய எல்லா பாவங்களிலிருந்து மனந்திரும்புகிறேன், ஏனென்றால் நான் யாரென்று அவள் பார்க்காதிருப்பாளாக, ஆனால் அவர் யார் என்று பார்க்கட்டும் (பாருங்கள்?) அவள் அந்த விதமாக பார்க்கட்டும். 260இப்பொழுது, ஸ்திரீயே, நான் உனக்கு ஒரு அந்நியனாக உள்ளேன். இந்த ஸ்திரீயையும் எனக்குத் தெரியாது. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். அது சரி. இப்பொழுது, கர்த்தராகிய இயேசு, என்னை உனக்குத் தெரியாது, மற்றும் உன்னை எனக்குத் தெரியாது, நீ இங்கேயிருப்பதற்கான காரணம், நீ செய்திருக்கிற ஒன்று, நீ செய்யக் கூடாத ஒரு காரியம், அல்லது அந்த விதமான ஒன்றை கர்த்தராகிய இயேசு எனக்கு வெளிப்படுத்துவாரானால் அது ஒரு கவனிக்க வேண்டிய அற்புதமாக அது இருக்கும், விவரிக்கப்பட முடியாத ஒரு அற்புதம். எந்த ஒரு நபரும் அதை அறிவார். பாருங்கள்? அது ஒரு கவனிக்கப்பட வேண்டிய அற்புதமாயிருக்கும். இங்கே ஒரு ஸ்திரீ மூட்டு வீக்க கீல்வாத நோயால் மிகவுமாக அவதியுற்று சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பதைக் காட்டிலும் அது இன்னும் ஒரு பெரிய அற்புதமாக அது காணப்படும். நான் அவளிடம், “எழுந்து நட” என்று கூறுவேனானால் அவள் அங்கே நடந்து செல்வாள். அதைப் பார்த்து எல்லோரும் கூச்சலிடுவர். ஆனால் நீங்கள் பாருங்கள், சரியாக, நம்பத் தக்கதாக செய்யும் அவளுடைய விசுவாசம் தான் அவள் எழுந்து கொண்டு நடக்கச் செய்யும். ஆனால் பின்பாகச் சென்று ஏதோ ஒன்றிலிருந்து ஒரு வாழ்க்கையை வெளியே இழுப்பதென்பது, மனிதனை விட மேலான ஒன்றால் தான் செய்ய முடியும். அது தேவன் தான்... நீங்கள் கூறுவதற்கு முன்பாகவே. பாருங்கள்? அது சரியா என்பது உங்களுக்குத் தெரியும். 261இப்பொழுது, ஏதோ ஒன்று எங்கோ சம்பவித்திருக்கிறது. இப்பொழுது, அதற்காக காத்திருந்தேன்... அது ஜனக் கூட்டம் மத்தியில் எங்கோ சென்றிருக்கிறது. எங்கோ... அது சென்றுவிட்டதோ. ஒரு நிமிடம். இந்த ஸ்திரீயுடன் மறுபடியுமாக நான் பேசட்டும். இப்பொழுது பயபக்தியுடன் இதை கவனியுங்கள். ஜெபியுங்கள்; ஜெபித்துக் கொண்டிருங்கள். “கர்த்தாவே, அது நானாக இருக்கட்டும்” என்று நீங்கள் ஜெபிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அங்கே ஜெப வரிசையில் இல்லாத மக்களாகிய நீங்கள், ஜெபியுங்கள். மறுபடியும் நான் உங்களுடன் பேசுகிறேன், அது... இங்கே விசுவாசத்திற்காக, பாருங்கள்? அது அந்த ஸ்திரீக்கு அவ்விதமாகச் செய்யுமானால், உங்களுக்கும் அவ்விதமாகவே ஆகும். அது உங்களுடைய விசுவாசம்; பாருங்கள், அதைச் செய்வது நீங்கள் தான். அது நானல்ல. அது உங்களுடைய விசுவாசமாகும். பாருங்கள், இயேசு, “ஓ, நான் அங்கே அந்த ஸ்திரீயைச் சென்று சந்திக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியும்” என்று கூறவில்லை. இல்லை. ஆனால் லாசருவினுடைய உயிர்ததெழுதல் சமயம் வந்த போது, இப்பொழுது, அவர் செய்ய வேண்டுமென்று தேவன் அவருக்கு காண்பித்தது அதுவே தான். பாருங்கள்? தேவன் “சென்றுவிடு” என்றார். அது அவர் தான் என்று அவர் நிருபித்தார். அப்புறம் சென்றார், பிறகு அவர் திரும்பி வந்து, “லாசரு நித்திரையாயிருக்கிறான்” என்றார், அப்பொழுது அவர் திரும்பி சென்று கல்லறையிலிருந்து லாசருவை உயிரோடெழுப்பினார், அந்த ஆத்துமா சென்று நான்கு நாட்களான பிறகு அதை அவர் அழைத்தார். அங்கே தான் பலவீனமடைந்ததாகக் கூறவில்லை. அங்கே அந்த வரத்தை தேவன் உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார், ஆனால் இங்கே, அந்த ஸ்திரீயானவள் தான் தேவனுடைய வரத்தை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தாள்; அதே காரியம் தான் இங்கேயும் கூட நடக்கிறது. அதைச் செய்து கொண்டிருப்பது நீங்கள் தான். 262இப்பொழுது, அந்த வேட்டைப் பிரயாணத்தில் நான் அந்த கரடியை கண்டபோது பல காரியங்களை நான் அறிந்து, இங்கே முன்னுரைக்கப்பட்டு உரைக்கப்பட்ட இந்த அநேக காரியங்கள் வார்த்தை அப்படியே நடந்தேறுகிறது, அது தேவனாகும், அது என்னைத் தொல்லைப்படுத்துவது கிடையாது. ஆனால் தேவனுடைய வரத்தை ஜனங்கள் உபயோகிக்கத் துவங்கும் போது (பாருங்கள்) நீங்கள் தேவனுடைய பொது ஊழியனாக ஆகுகிறீர்கள். ஏனெனில் நீங்கள் வரிசையில் இருக்கின்ற பொத்தான் ஆகும். பாருங்கள்? அப்பொழுது நீங்கள் அதைக் கொண்டு அவரைத் தொடுவீர்களானால், அப்பொழுது அவர் திரும்பி பேசுவார். இப்பொழுது... ஆம், இப்பொழுது, அந்த ஸ்திரீ தரிசனத்திற்குள் வருகின்றாள். அவள் உள்ளே வருகிறாள், அந்த தரிசனமானது வருகின்றது. அவளைச் சுற்றிலும் அது இருப்பது நீங்கள் காணத் தக்க விதத்தில் இருப்பது போல காணப்படுகிறது. இந்த ஸ்திரீ வியாதிப்பட்டிருக்கிறாள். மிகவுமாக வியாதிப்பட்டிருக்கிறாள். அவள் வேதனைப்படுகிறாள்; ஒரு காரியம், அது மிக மிக மோசமான வயிற்றுக் கோளாறாகும். அது உண்மையென்றால் உங்கள் கையையுர்த்துங்கள். மேலும் உங்களுக்கு சிக்கல்களும் கோளாறுகளும் உள்ளது. அது உண்மை. உங்களுடன் சேர்த்து வேறொருவரும் உள்ளார். அது உங்களுடைய கணவர், அவரும் வியாதிப்பட்டுள்ளார். உங்களுடைய கணவருக்கு என்ன கோளாறு இருக்கிறது என்று தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரென்றால், நான் அவருடைய தீர்க்கதரிசியென்று என்னை நீங்கள் விசுவாசிப்பீர்களா? அந்த மனிதன் கண்களில், மற்றும் அவருடைய காதுகளில் உள்ள கோளாறினால் அவதியுறுகியறார், அவர் மிக மோசமான நிலையில் இருக்கிறார். ஆம் ஐயா. நீங்கள் யார் என்று தேவன் அறிந்திருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் யார் என்று நான் உங்களுக்கு கூறுவேனானால், நான் அவருடைய தீர்க்கதரிசி, எதிர்காலத்தை அறியும் மெய்யுணர்வாளன், என்று என்னை நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? திருமதி. ராபர்ட்சன், நீங்கள் அலபாமாவிலுள்ள, ஹண்ட்ஸ்வில் என்னும் இடத்திலிருந்து வருகிறீர்கள். திரும்பி செல்லுங்கள், நீங்களும் உங்கள் கணவரும் சுகமாகிவிட்டீர்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? யாவும் கைக்கூடும். நீங்கள் விசுவாசித்தால். உங்களுக்கு விசுவாசம், உங்களுடைய ஸ்தானத்தை எடுத்து தேவன் அதைச் செய்கிறாரென்று விசுவாசித்தால். இப்பொழுது, அதைச் சந்தேகப்படாதீர்கள், நீங்கள் எதைக் கேட்டாலும் அதைப் பெற்றுக் கொள்ளலாம். 263சரி, ஐயா, இப்பொழுது மேலே வாருங்கள். அவர்... இங்கே அடுத்த நபர் நீங்கள் தானே? நாம் ஒருவருக்கொருவர் அந்நியாராக இருக்கிறோம், அப்படித்தானே ஐயா? சீமோன் என்னும் பேர் கொண்ட மனிதனிடம் இயேசு வந்து அவனுடைய நிலையைக் குறித்து கூறியிருப்பாரானால், சீமோன் சென்று அவனுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கும் படிக்கு அது செய்ததே, உங்களுக்கும் அதே காரியத்தை நீங்கள் செய்யத் தக்கதாக செய்யும் அல்லவா? அது செய்யுமா? நல்லது, நாம் அந்நியராயிருக்கையில்... இப்பொழுது, தேவனைப் பொறுத்த வரை, ஆண் அல்லது பெண் என்னும் வித்தியாசமே கிடையாது. அவர் அதே தேவனாகத் தான் இருக்கிறார். நீங்கள், இப்பொழுது உங்களைச் சுற்றிலும் இருக்கின்ற அந்த உணர்வு, அவருடைய ஊழியக்காரனான என் மூலமாக நீங்கள் ஏன் இங்குள்ளீர்களென்றும், உங்களிடம் என்ன கோளாறு உள்ளதென்றும், அல்லது எதுவாயிருந்தாலும், தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது உண்மையா அல்லது இல்லையா என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். சரி. அவர் தாமே அதை அருளட்டும். இந்த மனிதன் தரிசனத்திற்குள் வருகிறார், அல்லது அந்த தரிசனம் மனிதனுக்குள் வருகின்றது. இவர் இங்கே வியாதிக்காக இல்லை. இங்கே இவர் பரிசுத்த அபிஷேகத்தைக் கோருகிறார். அதைத் தான் அவர் எதிர்ப் பார்க்கின்றார். அது சரி தானே, ஐயா அது தான். நீங்கள் இந்த இடத்தைச் சார்ந்தவர் அல்ல; இங்கே சாலையைக் கடந்த இண்டியானாவிலுள்ள சேமோர் என்று அழைக்கப்படுகின்ற ஒரு இடத்திலிருந்து வருகிறீர். அங்கேயிருந்து தான் நீங்கள் வருகிறீர்கள். உங்களை பில் என்று அவர்கள் அழைக்கின்றனர். பில் திரும்பிச் செல், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள். 264வாருங்கள் பெண்மணியே. நான் அவருடைய தீர்க்கதரிசியென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, இயேசு கிறிஸ்து ஜீவிக்கின்ற தேவனுடைய குமாரனென்றும், இவைகளை அவர் அனுமதிப்பது எதற்காகவென்றால்... எத்தனை பேர் இதுவரை வந்துள்ளனர்? பாருங்கள், நான் மிக அதிகமாகச் செல்லமாட்டேன். சரி. இல்லை, அது... நீங்கள் இங்கே உங்களுக்காக வரவில்லை. நீங்கள் வேறு யாருக்காகவோ வந்துள்ளீர்கள், அந்த நபர் இங்கில்லை. அந்த நபருக்கு சம்பந்தப்பட்டது என்னவென்று நான் உங்களுக்கு கூறினால், அவர்களுடைய சுகமளிப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டு அதை எடுத்து விசுவாசிப்பீர்களா. அது புற்று நோயாகும். அவர்கள் சுகமாக்கப்படுவார்களென நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் செல்லுங்கள், அவர் சுகமாவாராக. நீங்களெல்லாரும் விசுவாசிக்கிறீர்களா? அந்த வார்த்தையானது நிச்சயமாக கைகூடுகின்ற ஒன்று என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் அற்புதமானவரல்லவா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. இப்பொழுது, நமக்கு எத்தனை இருந்தது? வழக்கமாக இரண்டு - இரண்டு அல்லது மூன்று இருந்தால் உறுதிப்படுத்தப்பட்டது என்பதாகும்... என்ன? நான்கு? இங்கே நின்று கொண்டிருப்பது ஐந்தாவது நபரா? சரி. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்பதை நம்முடைய முழு இருதயத்தோடு நாம் விசுவாசிப்போமாக. 265நீங்கள் அந்த குழந்தைக்காக இங்கே இருக்கிறீர்கள். உங்களுடைய குழந்தையிடம் இருக்கின்ற கோளாறு என்ன என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்துவரானால் தேவன் அதை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கறீர்களா? அந்த சிறு பையனுக்கு கடுமையான இருதயக் கோளாறு உள்ளது. அது சரிதானே. அந்த குழந்தை - நீங்கள்... அந்த குழந்தை இந்த இடத்தை சேர்ந்ததில்லை. இது நகரத்தின் வெளியே இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இது வெளி மாநிலத்தைச் சார்ந்தது. இந்த குழந்தை எங்கிருந்து வந்துள்ளது என்று தேவன் என்னிடம் கூறுவாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது சுகமாகும் என்று நீங்கள் விசுவாசித்து, விசுவாசம் கொண்டிருக்கிறாரா? கெண்டக்கியிலுள்ள பிராங்கிளினுக்கு திரும்ப கொண்டு செல்லுங்கள், நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் செய்ய வேண்டியது அது மாத்திரமே... அவனை இங்கே ஒரு நிமிடம் வரட்டும். நான் அதைக் கடிந்து கொள்கிறேன்... அந்த காரியத்தை, இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, மரணம் தானே அகன்று ஜீவனானது குழந்தைக்கு வருவதாக... வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள்; அவர்கள் சொஸ்தமாவார்கள். விசுவாசிக்க விரும்புகிறீர்கள்? அவரை எடுத்துக் கொண்ட நீங்கள் நலமாக உணர்கிறீர்களா? முன் செல்லுங்கள். அது... 266பெண்களுக்கான கோளாறு உங்களை விட்டுச் செல்லப் போகிறதென்று விசுவாசிக்கிறீர்களா? சரி. உங்கள் இருக்கைக்கு சென்று “உமக்கு நன்றி, கர்த்தாவே” என்று கூறுங்கள். எப்படியுள்ளீர்கள், ஐயா. ஓ, அந்த பிசாசு, ஆஸ்துமா. ஒரு க்ஷணம், இப்பொழுது ஒரு க்ஷணம். ஏதோ தவறு நடந்துள்ளது. தவறு எதுவும் நடக்கவில்லை, அந்த ஒளி... இப்பொழுது, இந்த மனுஷனை அடைந்த ஒன்று அதே நேரத்தில் ஏதோ ஒன்று இங்கே அதே விதமாக இங்குள்ளது. அது என்னவென்பதை மறுபடியும் நான் பார்க்கட்டும். இப்பொழுது, என்னை நோக்கி மாத்திரமே பாருங்கள். அதைப் பேசாதிருங்கள். அது கருப்பர் இன மனிதன், அங்கே உட்கார்ந்து என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அது அவருடைய... அவர் வியாதிப்பட்ட யாரோ ஒருவரைக் கொண்டிருக்கிறார். அது சரி. ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலி... அது சரி. நீங்கள் அவரைத் தொட்டீர்கள். ஐயா, நீங்கள் இந்த இடத்தைச் சார்ந்தவரல்ல. நீங்கள் இந்த பக்கமாக கிழக்கு, வட கிழக்கலிருந்து வருகிறீர்கள். நீங்கள் நியூயார்க்கிலிருந்து வந்துள்ளீர்கள். அது சரி. நீங்கள் திரு. ஹண்ட். இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?... சரி. உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறது உங்கள் நண்பராவார். நான் தேவனுடைய தீர்க்கதரிசியென்று என்னை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா ஐயா? நீங்கள் அவருடன் இங்கு வந்துள்ளீர்கள். உங்கள் பெயர் கோல்மேன். சதை வளர்ச்சியுடைய தந்தைக்காக நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது “கர்த்தர் உரைக்கிறதாவது...” இப்பொழுது நீங்கள் விசுவாசித்து செல்லுங்கள்... 267உங்களுக்கு வயிற்று நரம்பு கோளாராகும். அது சரிதானே? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செல்... அவர் உங்களை சுகமாக்கினாரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? “கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி” என்று கூறி உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசித்துச் செல்லுங்கள். உங்களுக்கு நரம்புத் தளர்ச்சியால் தொல்லையா, மிகவும் உபாதை. உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள்; அவர் உங்களை சுகமாக்கிவிட்டார். திரும்பிச் சென்று சுகமாயிருங்கள். நரம்புத் தளர்ச்சியா, உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள்; தேவன் உங்களை சுகமாக்குவாரென்று விசுவாசியுங்கள். தேவன் அதைச் செய்வார். நரம்புத் தளர்ச்சி மற்றும் இருதயக் கோளாறு. இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவாரென்று விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சென்று சுகமாகு. நரம்புக் கோளாறா, உங்கள் வயிற்றில் வாயுத் தொல்லை உண்டாக்குகின்ற வயிற்றுக் கோளாறு, உங்கள் உணவெல்லாம் புளிப்பா. செல், உங்கள் இருதயத்தில் அதைச் சந்தேகிக்காதே, அது நடந்தேறும், இனியும் அது உங்களுக்கு இருக்காது. உங்கள் முதுகு உங்களுக்கு தொல்லை அளிக்கிறதா? உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் செல்லுங்கள்; இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார். 268ஒரு நிமிடம். ஒரு க்ஷணம் இப்பொழுது பொறுங்கள். ஏதோ சம்பவித்தது. இங்கேயுள்ள இந்த ஸ்திரீ வினோதமானவளாயிருக்கிறாள். அந்த ஒளி இவள் மீது மிக வேகமாகச் சுழன்று இங்கே சென்றுவிட்டது, திரும்பவுமாக வந்துள்ளது. ஏதோ நடந்துள்ளது. ஒரு நிமிடம். அவர் ஒரு கருப்பின மனிதனர். அங்கே இருக்கின்ற கருப்பு சகோதரர் அல்ல, ஏனெனில்அது... ஒரு நமிடம்; இதோ அது. பின்பாக, இதோ அது. இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் மனிதன் தான்: கருப்பர் இன மனிதன். உங்களுக்கும் முதுகு பிரச்சனை தான். அது சரி. நீங்கள் எனக்க ஒரு அந்நியர்; நானும் கூட. உங்களுடைய முதுகு பிரச்சனையை விட மேலான ஒன்று உங்களுக்கு தேவைப்படுகிறது; அது உங்கள் இருதயத்தை கிறிஸ்துவுக்கு அளித்து ஒரு கிறிஸ்தவனாகுங்கள். அல்ல... நீங்கள் அவரை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் ஒஹையோவிலிருந்து வருகிறீர்கள், (அது சரி) ஒஹையோவிலிருந்து, திரும்பிச் செல்லுங்கள்; சுகமாகுங்கள். இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களை மன்னிக்கிறார், நீங்கள் வீடு சென்று சுகமாகலாம்... சரி சகோதரியே, இங்கே வாருங்கள். சிக்கல்கள், நரம்புத் தளர்ச்சி, சோர்வு, தேவன் உங்களை சுகமாக்குவாரென்று உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா?உங்கள் இருக்கைக்குச் சென்று, “நீர் செய்த எல்லாவற்றிற்கும் உமக்கு நன்றி கர்த்தராகிய இயேசுவே” என்று கூறுங்கள். 269சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களை சுகமாக்கி உங்கள் முதுகை சுகமாக்கி, உங்களை சுகப்படுத்தி, என்று விசுவாசிக்கிறீர்களா. “உமக்கு நன்றி கர்த்தராகிய இயேசுவே” என்று களி கூர்ந்து கொண்டு உங்கள் பாதையில் செல்லுங்கள். மகனே, அவர் உன்னை சுகமாக்குகிறார் என்று நீ விசுவாசிக்கிறாயா? “இயேசுவே உமக்கு நன்றி” என்று கூறு. தேவனை துதித்துக் கொண்டுச் செல். சகோதரியே, உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் செல்லுங்கள், இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். ஒரு நிமிடம். இப்பொழுது திரும்ப வேண்டாம். அங்கே இருந்த ஸ்திரீயல்ல... ஒரு நிமிடம். தண்ணீர் இரைக்கப்படுதல் அல்லது ஏதோ ஒன்றைக் காண்கிறேன். யாரோ ஒருவர் கடலைக் கடந்து வந்துள்ளனர். அது ஒரு ஸ்திரீ, அவர்கள் ஹாலந்து தேசத்திலிருந்து வந்துள்ளனர். அவள் எங்கே? அதோ அவர்கள் இருக்கின்றனர். சரி, சகோதரியே. நீங்கள் சுகமளிப்புக்காக நீண்ட தூரத்திலிருந்து வந்திருக்கிறீர்கள். நான் அவருடைய தீர்க்கதரிசியென்று நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் கீல்வாதம், முட்டுவலி, விறைப்பு (stiffness) இவைகளால் அவதியுறுகிறீர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரில் விசுவாசம் வைத்து, செய்தியை உங்கள் மக்களுக்கு கொண்டு செல்லுங்கள். இயேசுவின் நாமத்தில் வீடு செல்லுங்கள்... 270நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்கே, அங்கே பின்னாலே, அங்கே ஒரு ஸ்திரி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பித்தப்பை கோளாறினால் அவதியுறுகிறார்கள். ஓ, அவள்அதை இழக்கப் போகிறாள். தேவனே, எனக்கு உதவி செய்யும். அவள் - அவள் இண்டியானாபோலிலிருந்து வருகிறாள்; அவளுடைய பெயர் கில்பர்ட் ஆகும். பெண்ணே, நீங்கள் இருக்குமிடத்திலேயே எழுந்து நில்லுங்கள். அதோ அவள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமாகு. உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? இயேசு மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டாரா? [தெளிவற்ற வார்த்தைகள்.] நாம் ஜெபிப்போம். கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய பரிசுத்த வல்லமை இந்த இடத்திற்குள் இப்பொழுது வருவதாக. ஒவ்வொருவரும் சுகமாகும்படி அருளும்... சுகமளித்தலை அளியும்... உம்முடைய ஜனங்களை இங்கு சுகமாக்கும். உமக்கே மகிமையை எடுத்துக் கொள்ளும். இதை அருளும் கர்த்தாவே. இங்கே இப்பொழுது இருக்கின்ற இந்த மக்கள், ஒருவர் மீது ஒருவராய் தங்கள் கைகளை வைத்தவர்களாக... இப்பொழுது நாங்கள் வருகிறோம்... இவர்களுக்காக... ஒவ்வொரு நபரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமாவார்களாக (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி) கர்த்தாவே உம்முடைய வார்த்தையை நேராக மரித்துக் கொண்டிருக்கின்ற தந்தைக்கு (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி) இப்பொழுது சாத்தானே, நாற்றமெடுக்கும் பிசாசே, நீ தோற்கடிக்கப்பட்டாய். தேவனுடைய குமாரனை அவர் திரும்ப அளிப்பார் என்று தேவன் கூறினார். உன்னுடைய பலம்... இந்த சபையை திரும்ப அளிப்பதாக வாக்குரைத்திருக்கிறார், சாயங்கால வெளிச்சம் பிரகாசிக்கையில் நாங்கள் அதற்குள் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே திரும்ப அளிக்கப்படுதலினால் எங்களுக்கு உரிமை இருக்கிறது, எங்களுடைய வழக்கறிஞரைக் கொண்டிருக்கிறோம்; எங்களுக்கு ஒரு பிரமாணம் மற்றும் ஒரு பிரதான ஆசாரியர் இருக்கிறார், ஆகவே நாங்கள் ஒன்றை பலவந்தத்தோடு உரிமை கோரப் போகிறோம். நீண்ட காலமாக அவர்களை வைத்துக் கொண்டிருந்தாய். இனியும் உன்னால் முடியாது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் அபிஷேகிக்கப்பட்டிருக்கிறோம். அவருடைய உயிர்த்தெழுதலின் எல்லா வல்லமையும் மற்றும் பரிசுத்த ஆவி...